search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    இந்திய அணியில் இதுபோன்ற வேகப்பந்து யுனிட்டை நான் பார்த்ததில்லை- அலஸ்டைர் குக்
    X

    இந்திய அணியில் இதுபோன்ற வேகப்பந்து யுனிட்டை நான் பார்த்ததில்லை- அலஸ்டைர் குக்

    இந்தியாவுடன் நான் கடந்த 10 ஆண்டுகள் விளையாடியதில் இதுபோன்ற வேகப்பந்து யுனிட்டை நான் பார்த்ததில்லை என்று அலஸ்டைர் குக் தெரிவித்துள்ளார். #ENGvIND
    இங்கிலாந்து - இந்தியா அணிகளுக்கு இடையிலான ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நாளை தொடங்குகிறது. இந்த தொடருகான இந்திய அணியில் பும்ரா, புவனேஸ்வர் குமார், இஷாந்த் ஷர்மா, உமேஷ் யாதவ், முகமது ஷமி ஆகிய ஐந்து வேகப்பந்து வீச்சாளர்கள் உள்ளனர்.



    இந்த ஐந்து பேரும் மாறுபட்ட திறமைகளை கொண்டவர். இப்படிப்பட்ட ஒரு பந்து வீச்சு யுனிட்டை நான் பார்த்ததில்லை என்று இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டனும், தொடக்க வீரரும் ஆன அலஸ்டைர் குக் தெரிவித்துள்ளார்.



    இதுகுறித்து குக் கூறுகையில் ‘‘இந்திய அணி பலவகையான பந்து வீச்சாளர்கள், வேகப்பந்து வீச்சாளர்களை கொண்டுள்ளது. வேகப்பந்து வீச்சின் பலம் எப்போதும் இல்லாத வகையில் வழக்கத்திற்கு மாறானது.



    கடந்த ஐந்தாறு ஆண்டுகளாக, குறிப்பாக கடைசி 10 வருடத்தில் நான் இந்திய அணியுடன் விளையாடியுள்ளேன். அவர்கள் ஐந்து முதல் ஆறு மாறுபட்ட குணம் கொண்ட வேகப்பந்து வீச்சாளர்கள் கொண்டதில்லை. என்னுடைய கடந்த கால அனுபவத்தில் இருந்து முற்றிலும் மாறுபட்டது. அடுத்த 6 வாரங்களில் அவர்கள் என்ன செய்யப் போகிறார்கள் என்று பார்ப்போம்’’ என்றார்.
    Next Story
    ×