search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மதுரை"

    • மதுரையில் எஸ்.பி.ஐ. கட்சி சார்பில் மதச்சார்பின்மை பாதுகாப்பு மாநாட்டு அலுவலக திறப்பு நிகழ்ச்சி நடந்தது.
    • கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    மதுரை

    மதுரையில் எஸ்.டிபி.ஐ. கட்சி சார்பில் ஜன.7-ந் தேதி மதச்சார்பின்மை பாதுகாப்பு மாநாடு நடைபெற உள்ளது, இதை முன்னிட்டு கோரிப்பா ளையம் பகுதியில் மாநாட்டு அலுவலகம் திறப்பு நிகழ்ச்சி நடந்தது. மாநில செயலாளர் அபு பக்கர் சித்திக் தலைமை தாங்கி னார்.

    மாநில பொதுச் செயலா ளர் நஸ்ரூதீன், செயலாளர் நஜ்மா பேகம், செயற்குழு உறுப்பினர்ஷபீக் அகமது, மதுரை தெற்கு மாவட்ட தலைவர் சீமான் சிக்கந்தர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநில செயற் குழு உறுப்பினர் முஜிபுர் ரகுமான் வரவேற்றார், உமன்ஸ் இந்தியா மூவ் மெண்்ட் மாநில தலைவர் ஃபாத்திமா கனி வாழ்த்தி பேசினார்.

    மாநாட்டு அலுவலகத்தை மாநில பொதுச் செயலாளர், மாநாட்டு குழு தலைவர் நிஜாம் முகைதீன், மாநில பொதுச் செயலாளர் அகமது நவ்வி ஆகியோர் திறந்து வைத்தனர்.

    முடிவில் வடக்கு மாவட்ட தலைவர் பிலால் தீன் நன்றி கூறினார்.

    இதில் மதுரை முஸ்லிம் ஐக்கிய ஜமாத் மற்றும் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    • யாகசாலை பணிகள் இரண்டு நாட்களாக தொடங்கி நடைபெற்றது.
    • புனிதநீர் ஊற்றி கும்பாபிஷேகம் விமரிசையாக நடைபெற்றது.

    அலங்காநல்லூர்:

    மதுரை மாவட்டம் அழகர்கோவிலில் அமைந்துள்ள கள்ளழகர் கோவில் ராஜகோபுரத்துக்கு இன்று கும்பாபிஷேகம் வெகு விமரிசையாக நடைபெற்றது. பதினெட்டாம்படி ராஜகோபுரத்திற்கு கடந்த 2011-ம் ஆண்டு கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது.

    12 ஆண்டுகளுக்குப் பிறகு ராஜகோபுரத்திற்கு கும்பாபிஷேகம் இன்று நடைபெற்றது. இதற்காக நேற்று முன்தினம் கோவிலில் உள்ள திருக்கல்யாண மண்டப வளாகத்தில் யாக சாலை பூஜைகளுடன் கும்பாபிஷேக விழா தொடங்கியது. நேற்றும் 2-வது நாளாக 40 வேத விற்பன்னர்கள் கொண்ட குழுவினர், ஒரே நேரத்தில் 8 யாக குண்டங்களில் வேத மந்திரங்களுடன் யாக பூஜைகள் நடத்தினர்.

    இதையடுத்து விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக கும்பாபிஷேக விழா இன்று காலை நடைபெற்றது. காலை 9.15 மணிக்கு மேல் 10 மணிக்குள் மகா கும்பாபிஷேக விழா நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு `கோவிந்தா' கோவிந்தா என்று கோஷம் எழுப்பினர். முன்னதாக நேற்று இரவு கள்ளழகர் கோவில் பதினெட்டாம்படி 7 நிலை கொண்ட ராஜகோபுரம், முழுக்க முழுக்க வண்ண விளக்குகளால், அலங்கரிக்கப்பட்டிருந்தது.

    பக்தர்கள் பாதுகாப்புடன் நின்று கும்பாபிஷேக விழாவை காண, தனித்தனியாக, இரும்பு கம்பிகளான தடுப்புகள் மாவட்ட காவல் துறை மூலம் பல்வேறு இடங்களில் அமைக்கப்பட்டிருந்தது. பதினெட்டாம்படி கருப்பணசுவாமி கோவில் முன்பு மிகப் பழமையான திருப்பவுத்திர புஷ்கரணி தெப்பக்குளத்திற்கு அழகர் மலையில் இருந்து வழிந்து நூபுர கங்கை தீர்த்த தண்ணீர், மற்றும் தற்போது பெய்யும்மழை நீர் சேர்ந்து தெப்பக்குளம் நிரம்பி வழியும் நிலையில் உள்ளது.

    இந்த கும்பாபிஷேக நேரத்தில் இந்த தெப்பக்குளம் நிரம்பி உள்ளது பக்தர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. முழுக்க முழுக்க நூபுர கங்கை புனித தீர்த்தக் குடங்களிலுருந்து, கும்ப கலசங்களில் குடம் குடமாக ஊற்றி பட்டர்களின் வேத மந்திரங்கள் முழங்க வானத்தில் கருடன் வட்டமிட கும்பாபிஷேக விழா நடை பெற்றது. அப்போது ஹெலிகாப்டரில் இருந்து பூ மழை தூவியது பக்தர்களிடையே பரவசத்தை ஏற்படுத்தியது.

    விழா ஏற்பாடுகளை அறங்காவலர் குழு தலைவர் வெங்கடாசலம், துணை ஆணையர் ராமசாமி மற்றும் அறங்காவலர் குழுவினர், திருக்கோவில் கண்காணிப்பாளர்கள், உள்துறை அலுவலர்கள், கோவில் பணியாளர்கள் செய்திருந்தனர்.

    • மதுரை எழுமலை பகுதியில் நாளை மின் தடை ஏற்படும்.
    • இந்த தகவலை உசிலம்பட்டி மின் செயற்பொறியாளர் தெரிவித்துள்ளார்.

    மதுரை

    மதுரை உசிலம்பட்டி எழுமலை பகுதிகளில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் நாளை (16-ந்தேதி) காலை 9 மணி முதல் மாலை 3 மணி வரை எழுமலை, ஜோதில் நாயக்கனூர், உத்தப்புரம், எ.கோட்டைப்பட்டி, கோடநாயக்கன்பட்டி, ராஜக்காபட்டி, எருமார் பட்டி, ஜோதில் நாயக்கனூர் அகிய பகுதிகளில் மின் தடை ஏற்படும்.

    இந்த தகவலை உசிலம்பட்டி மின் செயற்பொறியாளர் வெங்கடேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

    • மதுரையில் நடந்த நடப்போம், நலம் பெறுவோம் திட்டம் தொடக்க நிகழ்ச்சியில் அமைச்சர்கள் பங்கேற்றனர்.
    • அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

    மதுரை

    மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறையின் சார்பில் இன்று சென்னை, பெசண்ட் நகரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் காணொளி காட்சி வாயிலாக அனைத்து மாவட்டங்களிலும் "நடப்போம் நலம் பெறுவோம்" திட்டத்தை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

    இதையடுத்து மதுரை ரேஸ்கோர்ஸ் மைதானத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் "நடப்போம் – நலம் பெறுவோம்" ஆரோக்கிய நடைபயண திட்டத்தை அமைச்சர்கள் மூர்த்தி, பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

    மதுரை மாவட்டத்தில் நடைப்பயிற்சியை ஊக்குவிக்கும் வகையில் மதுரை ரேஸ்கோர்ஸ் மைதானம் நுழைவு வாயில் முதல் தொடங்கி ஐய்யர் பங்களா சந்திப்பு வழியாக மீண்டும் ரேஸ்கோர்ஸ் மைதானம் நுழைவு வாயில் வரை மொத்தம் (8கி.மி) தூரம் ஆரோக்கியம் நடை பயண பகுதியாக தேர்வு செய்யப்பட்டுள்ளது. இந்த நடைபாதையில் பயணிப்பவர்களுக்கு வாகனங்கள் நிறுத்த போதிய இடவசதி, ஓய்வறை கள், இருக்கை வசதிகள், கழிப்பறை மற்றும் பாதுகாப்பு வசதி களுடன் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

    நிகழ்ச்சியில் கலெக்டர் சங்கீதா, மாநகர போலீஸ் கமிஷனர் லோகநாதன், மேயர் இந்திராணி, மாநகராட்சி ஆணையாளர் மதுபாலன், கூடுதல் கலெக்டர் மோனிகா ராணா, மதுரை அரசு ஆஸ்பத்திரி டீன் ரத்தினவேல், துணை மேயர்நாகராஜன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • மதுரையில் இளம்பெண்கள் தற்கொலை செய்துகொண்டார்.
    • 10 ஆண்டுகள் தண்டனை பெற்று தற்போது சிறையில் இருந்து வருகிறார்.

    மதுரை

    மதுரை அண்ணாநகர் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் முருகன். இவரது மனைவி கவிதா (வயது37). 10 ஆண்டுகளுக்கு முன்பு குடும்ப பிரச்சினையில் மகள் மீது கணவர் ஆசிட் ஊற்ற முயன்றுள்ளார். இது தொடர்பான வழக்கில் 10 ஆண்டுகள் தண்டனை பெற்று தற்போது சிறையில் இருந்து வருகிறார்.

    இந்த நிலையில் கணவரை ஜாமீனில் கொண்டுவர கவிதா ப லமுறை முயற்சித்துள்ளார். ஆனால் கணவரை அவரால் ஜாமீனில் எடுக்க முடியவில்லை. இதனால் மன விரக்தியில் இருந்த அவர் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் உடலில் மண்எண்ணை ஊற்றி தீ வைத்துக் கொண்டார்.உயிருக்கு போராடிய அவரை சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி கவிதா பரிதாபமாக இறந்தார். இது குறித்து அண்ணா நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மதுரை ஆரப்பாளையம் கிராஸ் ரோடு கிருஷ்ணபாளையம் பகுதியை சேர்ந்தவர் சதீஷ்குமார். இவரது மனைவி பிரியா (27). இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். கணவன்-மனைவி இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் கணவர் வீட்டில் பிரியா வசித்து வந்தார். இதனால் மன விரக்தியில் இருந்த அவர் விஷம் குடித்து மயங்கி கிடந்தார். உறவினர்கள் அவரை மீட்டு மதுரை அரசு மருத்துவ மனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே பிரியா இறந்தார். இது குறித்து கரிமேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • வருகிற 1-ந்தேதி முதல் செங்கோட்டை ரெயில்கள் மின்சார என்ஜினில் இயக்கப்படுகிறது.
    • மின்சார என்ஜின்கள் இணைக்கப்பட இருக்கின்றன.

    மதுரை

    தெற்கு ரெயில்வே மதுரை கோட்ட அலுவலகம் விடுத்துள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்ப தாவது:-

    விருதுநகர்- செங்கோட்டை ரெயில்வே பிரிவு மின்மயமாக்கல் பணிகள் முழுமையாக நிறைவு பெற்று விட்டன. இதையடுத்து வருகிற நவ.1 முதல் செங்கோட்டையில் இருந்து புறப்படும் பொதிகை, சிலம்பு மற்றும் மயிலாடு துறை விரைவு ரெயில்கள் மின்சார என்ஜின் மூலம் இயக்கப்பட இருக்கிறது.

    இதற்காக இந்த பிரிவில் அமைக்கப்பட்டுள்ள மின் வழித்தடத்தில் 25 ஆயிரம் வோல்ட் மின்சாரம் பாய்ச்சப்பட இருக்கிறது. ஆகவே இந்த ரெயில் தடம் செல்லும் பகுதியில் உள்ள பொதுமக்கள் மின் வழித்தடத்தை நெருங்கவோ, தொடவோ முயற்சிக்க வேண்டாம் என ரெயில்வே நிர்வாகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

    மழை மற்றும் மின்னல் வெட்டும் நேரங்களில் குடையுடன் மின் வழித் தடத்தின் கீழே கடப்பதும் ஆபத்தை விளைவிக்கும். மேம்பாலங்களில் இருந்து மின்வழித்தடத்தின் மேல் ஏதாவது ஒரு பொருளை எறிந்தாலும் கடும் மின்சார தாக்குதலுக்கு ஆளாக நேரிடும். ரெயில்வே நிர்வா கத்தின் அனுமதியில்லாமல் மின் வழித்தடத்தின் அருகில் உள்ள மரங்களை வெட்டு வது, மரக்கிளைகளை செம்மைப்படுத்துவது ஆபத்தை விளைவிக்கும்.

    லெவல் கிராசிங்குகளில் போதிய பாதுகாப்பு ஏற்பாடுகளை ரெயில்வே நிர்வாகம் செய்திருந்த போதிலும், ரெயில்வே லெவல் கிராசிங்குகளை கடக்கும்போது நீண்ட இரும்பு கம்பிகளை செங்குத்தாக வைத்துக் கொண்டு நடப்பதும், வாகனங்கள் மேல் பகுதியில் அமர்ந்து பய ணிப்பதும், வாகனங்களில் சரக்குகளை உயரமாக அளவுக்கு அதிகமாக வைத்து செல்வதும் ஆபத்தை விளைவிக்க கூடிய செயல்கள் ஆகும்.

    நாளை மறுநாள் 31-ந் தேதி சென்னையில் இருந்து புறப்படும் பொதிகை எக்ஸ்பிரஸ், 1-ந்தேதி சென்னையில் இருந்து புறப்படும் சிலம்பு எக்ஸ்பிரஸ் மற்றும் மயிலாடுதுறை இருந்து புறப்படும் செங்கோட்டை விரைவு ரெயில் ஆகியவற்றில் மின்சார என்ஜின்கள் இணைக்கப்பட உள்ளன.

    அதேபோல் வருகிற 1-ந்தேதி செங்கோட்டையில் இருந்து புறப்படும் பொதிகை எக்ஸ்பிரஸ், 2 -ந்தேதி செங்கோட்டையில் இருந்து புறப்படும் சிலம்பு எக்ஸ்பிரஸ் மற்றும் மயிலாடுதுறை எக்ஸ்பிரஸ் ரெயில் ஆகியவற்றில் மின்சார என்ஜின்கள் இணைக்கப்பட இருக்கின்றன.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • சோழவந்தானில் மருதுபாண்டியர் குருபூஜை விழா நடந்தது.
    • நிர்வாகிகள் மரியாதை செலுத்தினர்.

    சோழவந்தான்

    சோழவந்தானில் மருதுபாண்டியர் 222-வது குருபூஜை விழா நடந்தது. சோழ வந்தான் பஸ் நிலையம் முன்பு மருது பாண்டியர் படம் வைக்கப் பட்டு அனைத்து கட்சியினர் சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப் பட்டது.தி.மு.க. சார்பில் வெங்க டேசன் எம்.எல்.ஏ. தலைமை யில் மரியாதை செலுத்தப் பட்டது. பின்னர் அன்ன தானம் வழங்கப்பட்டது.

    நகர செயலாளர் மாவட்ட திட்ட குழு உறுப்பினர் வக்கீல் சத்யபிரகாஷ், பேரூராட்சி தலைவர் ஜெய ராமன், துணைத் தலைவர் லதா கண்ணன், ஒன்றிய செயலாளர் பசும்பொன் மாறன், பேரூர் துணை செயலாளர் ஸ்டாலின் ஆகியோர் கலந்து கொண்ட னர்.

    அ.தி.மு.க. சார்பில் ஒன்றிய செயலாளர் கொரி யர் கணேசன், ஒன்றிய தலைவர் மகாலட்சுமி ராஜேஷ் கண்ணா, மாவட்ட கவுன்சிலர் அகிலா ஜெய குமார், இளைஞரணி கேபிள் மணி, நிர்வாகிகள், தொண்டர்களுடன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

    பா.ஜ.க. சார்பில் மண்டல தலைவர்கள் கதிர்வேல், அழகர்சாமி ஆகியோர் தலைமையில் மரியாதை செலுத்தப் பட்டது.

    காங்கிரஸ் கமிட்டி சார்பில் நகரத் தலைவர் முத்துப்பாண்டி, முன்னாள் வட்டார தலைவர் ராமன், மற்றும் நிர்வாகிகள் மரியாதை செலுத்தினர்.

    தே.மு.தி.க. சார்பில்பேரூர் செயலாளர் கிருஷ்ணன், தெற்கு ஒன்றிய செயலாளர் முத்துப்பாண்டி, குருநாதன் தேவேந்திரன், நிர்வாகிகள் மரியாதை செலுத்தினர்.

    சங்கங்கோட்டை கிராம கமிட்டி தலைவர் வக்கீல் சிவகுமார் மரியாதை செலுத்தினார்.

    சோழவந்தான் சப்-இன்ஸ்பெக்டர் முத்து தலைமையில் போலீசார் பாதுகாப்பு ஏற்பாடு செய்திருந்தனர்.

    • வாடிப்பட்டி ஒன்றிய கலைத்திருவிழா நடந்தது.
    • ஆசிரியர் பயிற்றுநர் பெரியகருப்பன் நன்றி கூறினார்.

    வாடிப்பட்டி

    மதுரை மாவட்டம் வாடிப்பட்டியில் ஒன்றிய அளவிலான கலைத்திருவிழா அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் உள்ள வட்டாரவளமையத்தில் நடந்தது. கவுன்சிலர் ஜெயகாந்தன் தலைமை தாங்கினார்.

    தலைமை ஆசிரியர்கள் இனிகோ எட்வர்ட்ராஜா, திலகவதி, விஜயகுமார், மலர்விழி, வேல்முருகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். வட்டார வள மைய பொறுப்பாளர் கலைச்செல்வி வரவேற்றார்.

    இந்த போட்டிகளை பள்ளி மேலாண்மைக்குழு தலைவர் வாசுகி தொடங்கி வைத்தார். இதில் வாடிப்பட்டி ஒன்றிய அளவில் உள்ள அரசு பள்ளி மாணவ-மாணவிகள் இசை, கிராமிய நடனம், வில்லுப்பாட்டு, பேச்சு, கட்டுரை போட்டி, நாடகம், குழு நடனம், இசைசங்கமம், பலகுரல், வண்ணம் தீட்டுதல், கேலிசித்திரம், வரைந்துவண்ணம் தீட்டுதல், தலைப்பை ஒட்டிவரைதல், கையெழுத்து போட்டி, புகைப்படம் எடுத்தல், களிமண் பொம்மை செய்தல் உள்ளிட்ட போட்டிகளில் பங்கேற்று தங்கள் திறமையை வெளிப்படுத்தினர்.

    வட்டார கல்வி அலுவலர்கள் அகிலத்து இளவரசி, ஷாஜகான் கலந்துகொண்டனர். முடிவில் ஆசிரியர் பயிற்றுநர் பெரியகருப்பன் நன்றி கூறினார்.

    • தி.மு.க. இளைஞரணி செயல் வீரர்கள் கூட்டம் நடந்தது.
    • கூட்டத்திற்கு சோழவந்தான் வெங்கடேசன் எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார்.

    சோழவந்தான்

    தி.மு.க. இளைஞரண சார்பில் வருகின்ற டிசம்பர் 17-ந் தேதி சேலத்தில் மாநில மாநாடு நடைபெற உள்ள நிலையில் தமிழகத்தின் பல் வேறு பகுதிகளில் தி.மு.க. சார்பில் இளைஞர் அணி ஆலோசனை கூட்டம் நடந்து வருகிறது.

    இந்த நிலையில் மதுரை புறநகர் வடக்கு மாவட்டம் சோழவந்தான் பேரூர் சார்பில் சோழவந்தானில் நடைபெற்ற இளைஞரணி செயல் வீரர்கள் ஆலோ சனை கூட்டம் மற்றும்

    2024-ம் ஆண்டு பாராளு மன்ற தேர்தலில் தி.மு.க. வேட்பாளர்களை வெற்றி பெற செய்வதற்கான ஆலோ சனை கூட்டம் நடந்தது.

    இந்த கூட்டத்திற்கு சோழ வந்தான் வெங்கடேசன் எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். சோழவந்தான் பேரூர் செயலாளர் வழக்கறிஞர் சத்திய பிரகாஷ், பேரூராட்சி தலைவர் ஜெயராமன், துணைத் தலைவர் லதா கண்ணன், பொதுக்குழு உறுப்பினர் ஸ்ரீதர், பேரூர் துணைச் செயலாளர் ஸ்டாலின் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    கூட்டத்தில் மதுரை வடக்கு மாவட்ட செயலா ளருமான, அமைச்சருமான மூர்த்தி கலந்து கொண்டு பேசியதாவது:-

    வருகிற டிசம்பர் 17-ந் தேதி சேலத்தில் நடைபெறும் இளைஞரணி 2-வது மாநில மாநாட்டில் மதுரை புறநகர் வடக்கு மாவட்டத்தின் சார்பில் இளைஞர்கள் அதிக அளவில் கலந்து கொள்ள வேண்டும் என்றும் 2024 நடைபெறுகின்ற பாராளுமன்றத் தேர்தலில் சோழவந்தான் பேரூர் சார்பில் அதிகமான வாக்கு களை பெற பூத் கமிட்டி அமைக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.இதில் மாவட்ட பொருளா ளர் சோமசுந்தர பாண்டியன், மாவட்ட இலக்கிய அணி துணை செயலாளர் நேரு, ஒன்றிய செயலாளர் சிறைச் செல்வன், இளைஞரணி மாவட்ட துணை செயலாளர் வெற்றி செல்வன், சோழவந்தான் பேரூர் நிர்வாகிகள், வார்டு உறுப்பி னர்கள் மாவட்ட பிரதி நிதிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • பக்தர்கள் கொலு அரங்குகளை பார்வையிட்டு மீனாட்சி அம்மனை தரிசித்தனர்.
    • சகஸ்ரநாம பூஜை போன்ற விஷேச பூஜைகள் நடைபெறும்.

    மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் நவராத்திரி திருவிழா நேற்று தொடங்கியது. முதல் நாளில், மீனாட்சி அம்மன் ராஜராஜேஸ்வரி அலங்காரத்தில் கொலு மண்டபத்தில் கொலு வீற்றிருந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதனை காண ஏராளமான பக்தர்கள் மீனாட்சி அம்மன் கோவிலுக்கு வந்திருந்தனர். இதனால் கோவில் உள் வளாகத்தில் கூட்டம் அதிகமாக இருந்தது. பக்தர்கள் கொலு அரங்குகளை பார்வையிட்டு மீனாட்சி அம்மனை தரிசித்தனர்.

    நேற்று தொடங்கிய இந்த விழா வருகிற 24-ந்தேதி வரை நடக்கிறது. நவராத்திரி திருவிழா நாட்களில் தினசரி மாலை 6 மணி முதல் இரவு 8.30 மணி வரை மூலஸ்தான சன்னதியில் உள்ள மீனாட்சி அம்மனுக்கு திரை போட்டு அபிஷேகம், அலங்காரம் செய்து கல்பபூஜை மற்றும் சகஸ்ரநாம பூஜை போன்ற விஷேச பூஜைகள் நடைபெறும். அந்த நேரத்தில் பக்தர்களுக்கு அர்ச்சனைகள், மூலஸ்தான தரிசனத்திற்கு அனுமதி கிடையாது. கொலு மண்டபத்தில் எழுந்தருளும் உற்சவ அம்மனுக்குதான் அர்ச்சனைகள் செய்யப்படும்.

    விழாவின் தொடர்ச்சியாக, கோலாட்ட அலங்காரமும், அர்ஜூனனுக்கு பாசுபதம் அருளியது, ஏகபாதமூர்த்தி, கால்மாறி ஆடிய படலம், தபசு காட்சி, ஊஞ்சல், சண்டேசா அனுக்கிரஹமூர்த்தி, மகிஷாசுரமர்த்தினி அலங்காரமும், சிவபூஜை செய்யும் அலங்காரத்தில் அம்மன் கொலு வீற்றிருந்து அருள்பாலிப்பார். தினமும் சிறப்பு பூஜை நடக்கிறது.

    திருவிழா நடைபெறும் நாட்களில் கோவிலில் உள்ள திருக்கல்யாண மண்டபத்தில் காலை 9 மணி முதல் பகல் 1 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் இரவு 10 மணி வரையிலும் ஆன்மிக சொற்பொழிவு, பரதநாட்டியம், வீணை இசைக் கச்சேரி, கர்நாடக சங்கீதம், தோற்பாவை கூத்து, பொம்மலாட்டம், வில்லுப்பாட்டு ஆகிய கலைநிகழ்ச்சிகள் நடைபெறும்.

    • புனித மண் டெல்லி செல்கிறது
    • பின் ஒரே கலசத்தில் அந்த மண்கள் சேர்க்கப்பட்டு புதுடெல்லிக்கு எடுத்து செல்லப்படுகிறது.

    மதுரை

    நேரு யுவகேந்திரா சார்பில் என் மண் என் தேசம் என்ற பெயரில் சுதந்திர போராட்ட தியாகிகளை கவுரவிக்கும் இயக்கம் நடத்தப்பட்டு வருகிறது. இதையடுத்து புதுடெல்லியில் உள்ள தியாகிகள் நினைவிடத்தில் பூங்கா அமைக்கப்பட உள்ளது.

    இந்த பூங்காவிற்கு நாடு முழுவதும் தியாகிகள் வாழ்ந்த பகுதிகளில் மண் சேகரிக்கப்பட்டு கொண்டு செல்லப்படுகிறது. அதன்படி மதுரை மாவட்டத்தில் 13 ஒன்றியங்களில் இருந்து தியாகிகள் வாழ்ந்த இடங்களில் புனித மண் கலசங்களில் சேகரிக்கப்படுகிறது. இந்த மண்ணை ஒவ்வொரு ஒன்றியத்திலும் ஒரு இளைஞர் தேர்வு செய்யப்பட்டு அவர்கள் அந்த கலசத்தை கொண்டு வருவர். பின் ஒரே கலசத்தில் அந்த மண்கள் சேர்க்கப்பட்டு புதுடெல்லிக்கு எடுத்து செல்லப்படுகிறது.

    வருகிற 28-30-ந் தேதிகளில் புதுடெல்லியில் நடைபெற உள்ள நிகழ்ச்சியில் நாடு முழுவதிலும் இருந்து சுமார் 75 ஆயிரம் கலசங்களில் கொண்டு செல்லப்படும் மண் சேர்க்கப்பட்டு பூங்காவில் வைக்கப்படும்.

    மதுரையில் நடைபெற்ற புனித மண் சேகரிப்பு நிகழ்ச்சியில் நேரு யுவகேந்திரா இணை இயக்குனர் செந்தில்குமார், அனில்குமார், தேசிய சேவை தொண்டர்கள் மீனாட்சி, பிரியங்கா, அபிதா, மணிமொழி, தனசேகரன், கணேசன், ராகவ், என்.எம்.ஆர்.மதுரை காந்தி கல்லூரி முதல்வர் கோமதி, மகிமா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • மதுரையில் வைகை கால்வாய்களை தூர்வார நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆர்.பி.உதயகுமார் கோரிக்கை விடுத்துள்ளர்.
    • ஒரேநாள் மழைக்கு மதுரை தத்தளித்துள்ளது.

    மதுரை

    முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் இன்று வெளியிட்டுள்ள அறிக்கை யில் கூறியிருப்பதாவது:-

    ஒரு நாள் மழைக்கே தாங்காத மதுரை தத்தளிக்கி றது . வடகிழக்கு பருவமழை தொடர்வதற்கு முன்பாகவே நேற்று முன்தினம் பெய்த மழையின் காரணமாக கார், இருசக்கர வாகனங்களை மூழ்கடிக்கும் அளவிலே சாலைகளில் தண்ணீர் ஓடியதால், பொதுமக்கள் தங்களது வீடுகளுக்கு செல்ல முடியாமல் திரும்ப முடியாமல் பலரது வாக னங்கள் தண்ணீரிலே மூழ்கி செயலிழந்தது. அதற்கு சாட்சியாக சிலர் வாக னத்துடன் கீழே விழுந்து படுகாயம் அடைந்த நிகழ்வு களும் ஆங்காங்கே நடை பெற்றது.

    சாலைகளை எல்லாம் சீர் செய்ய வேண்டும். அதே போல் நீர்வரத்தை தொடர்ந்து கண்காணிக்க வேண்டும். மாவட்ட கலெக்டர் மற்றும் மதுரை மாவட்ட அமைச்சர்கள் இதுகுறித்து ஆய்வு மேற்கொள்ள வேண்டும்.

    ஒரே நாள் மழைக்கு மதுரை தத்தளித்துள்ளது.இந்த ஆண்டு அதிகமாக வடகிழக்கு பருவமழை இருப்பதாக கூட வானிலை ஆய்வு மையங்களுடைய கருத்துக்கள் சொல்லப்படு கிறது. வானிலை ஆராய்ச்சி மையத்தியின் எச்ச ரிக்கையை நாம் கவனிக்க வேண்டும். ஆகவே வைகை ஆற்று வரத்து கால்வாய் களை தூர்வார நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    முதலமைச்சர் இன்றைக்கு, ஒரு நாள் மழைக்கு சாலையில் ஆறுகள் போல ஓடும் தண்ணீரை சரி செய்ய உரிய முன் எச்சரிக்கை நட வடிக்கை எடுக்க வேண்டும். அதேபோல் மாவட்ட அமைச்சர்கள் போர்க்கால நடவடிக்கை எடுத்திட ஆய்வு கூட்டத்தை நடத்த முன்வர வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

    ×