search icon
என் மலர்tooltip icon

  நீங்கள் தேடியது "Meenakshi Amman Temple"

  இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
  • கோவில் நிர்வாகம் சார்பில் பூரண கும்ப மரியாதை அளிக்கப்பட்டது.
  • ராஜ்நாத் சிங் முருகப்பெருமானின் முதலாம் படை வீடான திருப்பரங்குன்றம் கோவிலுக்கும் சென்று தரிசனம் செய்தார்.

  மதுரை:

  தமிழகத்திற்கு இரண்டு நாள் பயணமாக வருகை தந்த இந்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் நாமக்கல், திருவாரூர், ராஜபாளையம் உள்ளிட்ட பகுதிகளில் தேர்தல் பரப்புரையை முடித்துவிட்டு நேற்றிரவு மதுரை வந்தார். அப்போது அவரை பா.ஜ.க. நிர்வாகிகள் வரவேற்றனர். தொடர்ந்து அவர் இரவு அழகர்கோவில் சாலையில் உள்ள தங்குவிடுதியில் தங்கினார்.

  இதனையடுத்து இன்று காலை உலகப்புகழ்பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் சாமி தரிசனம் செய்ய வருகை தந்தார். அப்போது அவருக்கு கோவில் நிர்வாகம் சார்பில் பூரண கும்ப மரியாதை அளிக்கப்பட்டது. மீனாட்சியம்மன் கோவிலுக்கு சென்ற பின்னா் முக்குறுணி விநாயகரை தரிசனம் செய்தார்.

  பின்னர் மீனாட்சியம்மன் சன்னதி, சுந்தரேஸ்வரர் சன்னதிகளுக்கு சென்று பயபக்தியுடன் சுவாமி தரிசனத்தில் ஈடுபட்டார். பின்னர் கோவிலில் உள்ள பொற்றாமரை குளத்தில் முன்பாக நின்று புகைப்படம் எடுத்துக் கொண்டார்

  முன்னதாக அமைச்சரின் வருகையை முன்னிட்டு பாதுகாப்பு காரணங்களுக்காக அஷ்டசக்தி மண்டபம் வழியாக ஒரு மணி நேரத்திற்கும் மேலாக பக்தர்கள் அனுமதிக்கப்படவில்லை. தொடர்ந்து அமைச்சர் தங்கிய தங்கு விடுதியில் இருந்து கோவில் வரை பலத்த பாதுகாப்பு போடப் பட்டதோடு, கோவிலை சுற்றிய பகுதிகளிலும் பொதுமக்கள் செல்ல தடை விதிக்கப்பட்டு முழுமையான கண்காணிப்பில் கொண்டு வரப்பட்டது.

  மீனாட்சியம்மன் கோவிலில் 30 நிமிட சாமி தரிசனம் முடித்த பின்னர் மதுரை விமான நிலையத்திற்கு பலத்த பாதுகாப்புடன் புறப்பட்டுசென்றார். அங்கிருந்து தனி விமானம் மூலமாக அசாம் புறப்பட்டுசென்றார்.

  முன்னதாக காலையில் ராஜ்நாத் சிங் முருகப்பெருமானின் முதலாம் படை வீடான திருப்பரங்குன்றம் கோவிலுக்கும் சென்று தரிசனம் செய்தார். அங்கும் கோவில் நிர்வாகம் சார்பில் பூரண கும்ப மரியாதை அளிக்கப்பட்டு பிரசாதம் வழங்கப்பட்டது. 

  • பிரதமர் மோடி, தமிழில் பேசி தனது உரையை துவங்கினார்.
  • மதுரை நகரில் போக்குவரத்து மாற்றங்கள் செய்யப்பட்டன.

  தமிழ்நாடு பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை மேற்கொண்ட என் மண் என் மக்கள் நடைபயணத்தின் நிறைவு விழா மற்றும் பாராளுமன்ற தேர்தல் பிரசார கூட்டம் பல்லடத்தில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கலந்து கொண்டு பிரதமர் மோடி, தமிழில் பேசி தனது உரையை துவங்கினார்.

  பிரசார கூட்டத்தை தொடர்ந்து ஹெலிகாப்டர் மூலம் மதுரை வந்த பிரதமர் மோடி சிறு, குறு தொழிலதிபர்கள் மாநாட்டில் கலந்து கொண்டார். அப்போது, தொழில் முனைவோருக்கான ஸ்டார்ட்அப் திட்டம், மத்திய அரசின் மானியம், கடன் உதவி, சிறு-குறு தொழில்கள் வளர்ச்சி என பல்வேறு அம்சங்கள் குறித்து பேசினார்.

   


  இதைத் தொடர்ந்து தனியார் நட்சத்திர விடுதியில் சிறிது நேரம் ஓய்வெடுத்த பிரதமர் மோடி அங்கிருந்து காரில் பயணம் செய்து மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு வந்தார். மீனாட்சி அம்மன் கோவிலில் சாமி சன்னதி, அம்மன் சன்னதியில் தரிசனம் செய்தார். இதைத் தொடர்ந்து கோவிலில் வழக்கமாக நடைபெறும் பள்ளியறை பூஜையில் பிரதமர் மோடி கலந்து கொண்டு வழிபாடு செய்தார்.

   


  முன்னதாக பிரதமர் மோடி வருகையை ஒட்டி மதுரை நகரில் போக்குவரத்து மாற்றங்கள் செய்யப்பட்டன. மேலும் பிரதமர் கோவிலில் சாமி தரிசனம் செய்வதால், பாதுகாப்பு காரணங்களால் இன்று மாலையில் இருந்து பொது மக்கள் கோவிலுக்குள் அனுமதிக்கப்படவில்லை. கோவிலில் சாமி தரிசனம் செய்த பிரதமர் இன்று இரவு பசுமலை நட்சத்திர விடுதியில் தங்கி ஓய்வெடுக்கிறார்.

  • பக்தர்கள் கொலு அரங்குகளை பார்வையிட்டு மீனாட்சி அம்மனை தரிசித்தனர்.
  • சகஸ்ரநாம பூஜை போன்ற விஷேச பூஜைகள் நடைபெறும்.

  மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் நவராத்திரி திருவிழா நேற்று தொடங்கியது. முதல் நாளில், மீனாட்சி அம்மன் ராஜராஜேஸ்வரி அலங்காரத்தில் கொலு மண்டபத்தில் கொலு வீற்றிருந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதனை காண ஏராளமான பக்தர்கள் மீனாட்சி அம்மன் கோவிலுக்கு வந்திருந்தனர். இதனால் கோவில் உள் வளாகத்தில் கூட்டம் அதிகமாக இருந்தது. பக்தர்கள் கொலு அரங்குகளை பார்வையிட்டு மீனாட்சி அம்மனை தரிசித்தனர்.

  நேற்று தொடங்கிய இந்த விழா வருகிற 24-ந்தேதி வரை நடக்கிறது. நவராத்திரி திருவிழா நாட்களில் தினசரி மாலை 6 மணி முதல் இரவு 8.30 மணி வரை மூலஸ்தான சன்னதியில் உள்ள மீனாட்சி அம்மனுக்கு திரை போட்டு அபிஷேகம், அலங்காரம் செய்து கல்பபூஜை மற்றும் சகஸ்ரநாம பூஜை போன்ற விஷேச பூஜைகள் நடைபெறும். அந்த நேரத்தில் பக்தர்களுக்கு அர்ச்சனைகள், மூலஸ்தான தரிசனத்திற்கு அனுமதி கிடையாது. கொலு மண்டபத்தில் எழுந்தருளும் உற்சவ அம்மனுக்குதான் அர்ச்சனைகள் செய்யப்படும்.

  விழாவின் தொடர்ச்சியாக, கோலாட்ட அலங்காரமும், அர்ஜூனனுக்கு பாசுபதம் அருளியது, ஏகபாதமூர்த்தி, கால்மாறி ஆடிய படலம், தபசு காட்சி, ஊஞ்சல், சண்டேசா அனுக்கிரஹமூர்த்தி, மகிஷாசுரமர்த்தினி அலங்காரமும், சிவபூஜை செய்யும் அலங்காரத்தில் அம்மன் கொலு வீற்றிருந்து அருள்பாலிப்பார். தினமும் சிறப்பு பூஜை நடக்கிறது.

  திருவிழா நடைபெறும் நாட்களில் கோவிலில் உள்ள திருக்கல்யாண மண்டபத்தில் காலை 9 மணி முதல் பகல் 1 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் இரவு 10 மணி வரையிலும் ஆன்மிக சொற்பொழிவு, பரதநாட்டியம், வீணை இசைக் கச்சேரி, கர்நாடக சங்கீதம், தோற்பாவை கூத்து, பொம்மலாட்டம், வில்லுப்பாட்டு ஆகிய கலைநிகழ்ச்சிகள் நடைபெறும்.

  • 12 ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில் கும்பாபிஷேகம் நடத்துவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.
  • பாலாலய பூஜையை முன்னிட்டு நவக்கிரக சன்னதி அருகே 5 கோபுரங்களுக்காக 5 யாக குண்டங்கள் அமைக்கப்பட்டு இருந்தன.

  மதுரை:

  மதுரையில் உள்ள பிரசித்தி பெற்ற மீனாட்சி அம்மன் கோவிலில் ஆண்டின் அனைத்து மாதங்களிலும் பல்வேறு திருவிழாக்கள், வைபவங்கள், உற்சவங்கள் நடைபெறும் இந்த கோவிலுக்கு தமிழகம் மட்டுமின்றி வெளிமாநிலங்கள், வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வந்து செல்கிறார்கள்.

  ஆகம விதிகளின் படி 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை கோவில்களில் கும்பாபிஷேகம் நடத்தப்பட வேண்டும். அந்த வகையில் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் கடந்த 8.4.2009 அன்று குடமுழுக்கு நடைபெற்றது. தற்போது 12 ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில் கும்பாபிஷேகம் நடத்துவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.

  இதற்கான திருப்பணிகள் மேற்கொள்ள வசதியாக முதற்கட்டமாக கோவிலின் கிழக்கு ராஜகோபுரம், மேற்கு, வடக்கு, தெற்கு ஆகிய 3 ஒன்பது நிலை கோபுரங்கள் மற்றும் அம்மன் ஏழுநிலை கோபுரம் ஆகிய 5 கோபுரங்களுக்கும் இன்று (திங்கட்கிழமை) பாலாலயம் நடைபெற உள்ளது.

  முன்னதாக கடந்த 2018-ல் மீனாட்சி அம்மன் கோவிலில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் சுவாமி சன்னதியில் உள்ள வீரவசந்தராயர் மண்டபம் கடுமையான சேதம் அடைந்தது. இதனை சீரமைக்கும் பணிகள் தற்போது முழுவீச்சில் நடைபெறுகிறது. இதற்கிடையே மீனாட்சி அம்மன் கோவிலில் ரூ.25 கோடியில் திருப்பணிகள் நடத்தவும், வீரவசந்தராயர் மண்டபம் ரூ.18 கோடியில் சீரமைக்கப்படும் என்றும், பணிகள் அனைத்தும் முடிந்து 2 ஆண்டுகளில் கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்யப்பட்டது.

  அதன்படி பாலஸ்தாபன நிகழ்ச்சிகள் நேற்று (3-ந் தேதி) தொடங்கியது. அன்று காலை 8.30 மணி முதல் 11 மணி வரை அனுக்ஞை, யஜமான சங்கல்பம், விக்னேஸ் வர பூஜை, புண்யாகவாசனம், மகாகணபதி ஹோமம், நவக்கிரஹ ஹோமம், திரவ்யாஹூதி, பூர்ணா ஹூதி, தீபாராதனை நடைபெற்றது.

  மாலை 6 மணி முதல் இரவு 8.30 மணி வரை விக்னேஸ்வர பூஜை, புண் யாகவாசனம், அங்குரார்ப்பணம், ரக்ஷாபந்தனம், கும்பாலங்காரம், ராஜகோபுரங்கள் கலாகர்ஷணம், முதற்கால யாக பூஜை, திரவ்யாஹூதி, பூர்ணா ஹூதி, தீபாராதனை நடைபெற்றது.

  இன்று (4-ந்தேதி) காலை 7.15 மணிக்கு மேல் 9.05 மணிக்குள் விக்னேஸ்வர பூஜை, புண்யாகவாசனம், இரண்டாம் கால யாக பூஜை, திரவ்யாஹூதி, மகா பூர்ணாஹூதி, தீபாராதனையுடன் கலசங்கள் புறப்பாடு, 9.30 மணிக்கு மேல் 10.15 மணிக்குள் மீனாட்சி சுந்தரேஸ்வரர் சுவாமி கோவில் ராஜகோபுர பாலஸ்தாபன மகா கும்பா பிஷேகம், மகா தீபாராதனை நடைபெற்றது.

  முன்னதாக பாலாலய பூஜையை முன்னிட்டு நவக்கிரக சன்னதி அருகே 5 கோபுரங்களுக்காக 5 யாக குண்டங்கள் அமைக்கப்பட்டு இருந்தன. இதையடுத்து யாகசாலை பூஜைகள் நிறைவடைந்ததும் புனித நீர் கலசங்கள் 2-ம் பிரகாரம் வழியாக வலம் வந்தது. பின்னர் உற்சவர் சாமி சன்னதியில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.

  இதையடுத்து அங்கு மாம்பலகையில் கும்பாபிஷேகம் நடைபெற உள்ள 5 கோபுரங்களும் வரையப்பட்டு அதற்கு பூஜை செய்து புனிதநீர் ஊற்றி பாலாலயம் நடைபெற்றது.

  இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு வழிபட்டனர்.

  • மீனாட்சி அம்மன் கோவில் கோபுரங்களுக்கு கும்பாபிஷேகம் நடத்த 4-ந்தேதி பாலாலயம் நடக்கிறது.
  • வெளிநாடுகளில் இருந் தும் ஏராளமான பக்தர்கள் வந்து செல்கிறார்கள்

  மதுரை

  கோவில் மாநகரமாக போற்றப்படும் மதுரையின் அடையாளமாக திகழ்வது மீனாட்சி அம்மன் கோவில். ஆண்டின் அனைத்து மாதங் களிலும் பல்வேறு திரு–விழாக்கள், வைபவங்கள், உற்சவங்கள் நடைபெறும் இந்த கோவிலுக்கு தமிழகம் மட்டுமின்றி வெளிமாநிலங் கள், வெளிநாடுகளில் இருந் தும் ஏராளமான பக்தர்கள் வந்து செல்கிறார்கள்.

  ஆகம விதிகளின் படி 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை கோவில்களில் கும்பாபிஷே–கம் நடத்தப்படும். அந்த வகையில் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் கடந்த 8.4.2009 அன்று குடமுழுக்கு நடைபெற்றது. தற்போது 12 ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில் கும்பாபிஷேகம் நடத்துவதற்கான ஏற்பாடு–கள் செய்யப்பட்டு வருகின் றன.இதற்கான திருப்பணிகள் மேற்கொள்ள வசதியாக முதற்கட்டமாக கோவிலின் கிழக்கு ராஜகோபுரம், மேற்கு, வடக்கு, தெற்கு ஆகிய 3 ஒன்பது நிலை கோபுரங்கள் மற்றும் அம் மன் ஏழுநிலை கோபுரம் ஆகிய 5 கோபுரங்களுக்கும் வருகிற 4-ந்தேதி பாலாலயம் நடைபெற உள்ளது.

  முன்னதாக கடந்த 2018-ல் மீனாட்சி அம்மன் கோவி–லில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் சுவாமி சன்னதி–யில் உள்ள வீரவசந்தராயர் மண்டபம் கடுமையான சேதம் அடைந்தது. இதனை சீரமைக்கும் பணிகள் தற்போது முழுவீச்சில் நடை–பெறுகிறது. இதற்கிடையே மீனாட்சி அம்மன் கோவி–லில் ரூ.25 கோடியில் திருப் பணிகள் நடத்தவும், வீர–வசந்தராயர் மண்டபம் ரூ.18 கோடியில் சீரமைக்கப்படும் என்றும், பணிகள் அனைத் தும் முடிந்து 2 ஆண்டுகளில் கும்பாபிஷேகம் நடத்தப் படும் என்றும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.

  அதன்படி பாலஸ்தாபன நிகழ்ச்சிகள் வருகிற 3-ந் தேதி தொடங்குகிறது. அன்று காலை 8.30 மணி முதல் 11 மணி வரை அனுக்ஞை, யஜமான சங்கல்பம், விக்னேஸ்வர பூஜை, புண்யாகவாசனம், மகாகணபதி ஹோமம், நவக்கிரஹ ஹோமம், திரவ்யாஹூதி, பூர்ணா ஹூதி, தீபாராதனை நடை பெறும்.

  மாலை 6 மணி முதல் இரவு 8.30 மணி வரை விக்னேஸ்வர பூஜை, புண் யாகவாசனம், அங்கு ரார்ப் பணம், ரக்ஷாபந்தனம், கும்பாலங்காரம், ராஜ–கோபுரங்கள் கலாகர்ஷணம், முதற்கால யாக பூஜை, திரவ்யாஹூதி, பூர்ணா ஹூதி, தீபாராதனை நடை பெறும்.

  4-ந்தேதி காலை 7.15 மணிக்கு மேல் 9.05 மணிக் குள் விக்னேஸ்வர பூஜை, புண்யாகவாசனம், இரண் டாம் கால யாக பூஜை, திரவ்யாஹூதி, மகா பூர் ணாஹூதி, தீபாராதனையு–டன் கலசங்கள் புறப்பாடு, 9.30 மணிக்கு மேல் 10.15 மணிக்குள் மீனாட்சி சுந்த–ரேஸ்வரர் சுவாமி கோவில் ராஜகோபுர பாலஸ்தாபன மகா கும்பாபிஷேகம், மகா தீபாராதனை நடைபெறும்.

  இந்த நிகழ்ச்சிகள் 12 ஆண்டுகளுக்கு பிறகு நடை பெற இருப்பதால் பக்தர்கள் அனைவரும் திரளாக கலந்துகொள்ளுமாறு கோவில் இணை ஆணையர் ச.கிருஷ்ணன், கண்காணிப் பாளர் பானுமதி ஆகியோர் கேட்டுக்கொண்டுள்ளனர்.

  • தீயின் தாக்கம் அதிகமாக இருந்ததால் சுமார் மூன்று மணி நேரத்துக்கு மேலாகவும் போராடியும் தீயை அணைக்க முடியவில்லை.
  • கடந்த இரண்டு ஆண்டுகளில் அடிக்கடி தீ விபத்து நடந்து வருவது வாடிக்கையாகிவிட்டது.

  மதுரை:

  மதுரை மீனாட்சி அம்மன் கோவில் அருகே தெற்கு மாசி வீதி மறவர் சாவடி பகுதியில் தனியாருக்கு சொந்தமான பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனை கடை மற்றும் அதனை சார்ந்த குடோன் ஒன்றும் உள்ளது.

  இதனை கேரளா மாநிலத்தை பூர்வீகமாக கொண்ட ஜகிஸ் என்பவர் நடத்தி வருகிறார். இந்த கடை கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக அந்த பகுதியில் இயங்கி வருகிறது.

  இந்நிலையில் கடையின் மேல் பரப்பில் உள்ள குடோனில் இருந்து இன்று காலை 8.15 மணி அளவில் திடீரென்று கரும்புகை வெளியேறியது. இதைப் பார்த்த அப்பகுதியினர் மற்றும் கோவிலுக்கு வந்த பக்தர்கள் கடும் அதிர்ச்சி அடைந்தனர். அந்த கடைக்கு அருகாமையில் வணிக நிறுவனங்கள் நடத்தி வந்தவர்கள் தங்களது கடைகளை பூட்டிவிட்டு வெளியே வந்தனர்.

  இதற்கிடையே ஒரு சில விநாடிகளில் கரும்புகை வெளியேறிய குடோனில் தீ பற்றியது. உடனடியாக அருகில் இருந்தவர்கள் போலீசார் மற்றும் தீயணைப்பு படையினருக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் மதுரை அனுப்பானடி, தல்லாகுளம், திடீர் நகர் ஆகிய பகுதிகளில் இருந்து தீயணைப்பு வாகனங்கள் மின்னல் வேகத்தில் விபத்து நடந்த பகுதிக்கு வந்தன.

  அதில் வந்த வீரர்கள் அதிரடியாக செயல்பட்டு தண்ணீரை பீய்ச்சி தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். இருந்தபோதிலும் தீயின் தாக்கம் அதிகமாக இருந்ததால் சுமார் மூன்று மணி நேரத்துக்கு மேலாகவும் போராடியும் தீயை அணைக்க முடியவில்லை. மேலும் 2 தீயணைப்பு நிலையங்களில் இருந்து வாகனங்கள் கொண்டு வரப்பட்டன. நெரிசல் மிக்க பகுதி என்பதால் தீயை அணைப்பதில் சிரமம் ஏற்பட்டது.

  பின்னர் கடுமையான போராட்டத்திற்கு பின்னர் தீயானது கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. இதனால் அந்த பகுதிக்கு தடுப்பு ஏற்படுத்திய போலீசார் பொதுமக்கள், பக்தர்கள் மற்றும் மாணவ, மாணவிகளை அனுமதிக்கவில்லை. போக்குவரத்தும் நிறுத்தப்பட்டது. தீயணைப்பு வாகனங்களுக்கு தேவையான தண்ணீர் மாநகராட்சி லாரிகள் மூலம் வழங்கப் பட்டது. இந்த தீ விபத்தில் சுமார் ரூ.50 லட்சம் மதிப்பிலான பிளாஸ்டிக் பொருட்கள் எரிந்து சேதமானது. தீ விபத்துக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

  மீனாட்சி அம்மன் கோவிலை சுற்றியுள்ள பழமையான கட்டிடங்கள் மற்றும் சில இடங்களில் கடந்த இரண்டு ஆண்டுகளில் அடிக்கடி தீ விபத்து நடந்து வருவது வாடிக்கையாகிவிட்டது. தீயணைப்பு துறையினர் மாநகராட்சி சார்பாக பழமையான கட்டிடங்களை கண்டறிந்து ஏற்கனவே நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

  இந்த தீ விபத்தால் இப்பகுதி மூன்று மணி நேரத்திற்கும் மேலாக பெரும் பரபரப்புடன் காணப்பட்டது. தீ அணைக் கப்பட்ட நிலையில் மீண்டும் அந்த குடோனில் தீப்பிடிக்க தொடங்கியது. இதையடுத்து மதுரை விமான நிலையத்தில் இருந்து கூடுதல் திறன் கொண்ட தீயணைப்பு வாகனம் விரைந்து வந்து தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டது.

  • வெளிநாட்டில் இருந்து கால்நடை டாக்டர்களை அழைத்து வந்து சிகிச்சை அளிக்கப்படுகிறது.
  • கடந்த 5 ஆண்டுகளுக்கும் மேலாக பார்வதியின் கண் பிரச்சினைக்கு சிகிச்சை அளித்து வருவதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.

  மதுரை:

  மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு சொந்தமான யானை பார்வதி கோவில் வளாகத்தில் வைத்து பராமரிக்கப்பட்டு வருகிறது. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு அந்த யானைக்கு பார்வை குறைபாடு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அதற்கு உரிய பல்வேறு சிகிச்சைகளும் கால்நடைத்துறை சார்பில் தொடர்ந்து அளிக்கப்பட்டு வருகிறது.

  இதற்கிடையே யானையின் ஆரோக்கியம் மற்றும் பராமரிப்பு குறித்து நமது கோவில், நமது பெருமை, நமது உரிமைகள் அறக்கட்டளையின் நிறுவனர் ரங்கராஜன் நரசிம்மன் டுவிட் ஒன்று வெளியிட்டுள்ளார். அதில் யானைக்கு அளிக்கப்படும் சிகிச்சை மற்றும் பராமரிப்பு முறைகள் குறித்தும், குறைகள் இருப்பதாகவும் குறிப்பிட்டு இருந்தார்.

  இதற்கு பதில் அளித்துள்ள தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சரும், மதுரை மத்திய தொகுதி எம்.எல்.ஏ.வுமான பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் கூறியிருப்பதாவது:-

  யானை பார்வதிக்கு ஏற்பட்டுள்ள கண் நிலை குணப்படுத்த முடியாதது என்ற நிலை இருந்தபோதிலும், அந்த குறைபாடு தெரியாத அளவுக்கு உரிய சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வருகிறது. இதற்காக வெளிநாட்டில் இருந்து கால்நடை டாக்டர்களை அழைத்து வந்து சிகிச்சை அளிக்கப்படுகிறது.

  பார்வதியை கவனிக்க கூடுதலாக நிரந்தர உதவியாளர் ஒருவர் நியமிக்கப்பட்டு உள்ளார். அன்னை மீனாட்சி அம்மன் மீது உண்மையான அன்பையும், நம்பிக்கையையும் வெளிப்படுத்த யானை பார்வதிக்கு கண்புரை நோய் சிகிச்சை உரிய முறையில் வழங்கப்படுகிறது. இதற்காக கடந்த 5 ஆண்டுகளுக்கும் மேலாக பார்வதியின் கண் பிரச்சினைக்கு சிகிச்சை அளித்து வருவதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.

  இதற்கெல்லாம் மேலாக கடந்த ஆண்டு, தாய்லாந்தில் இருந்து கால்நடை மருத்துவர்கள் குழு ஒன்று தாய்லாந்து தூதரக துணையுடன் சென்னைக்கு அழைத்து வரப்பட்டனர். அவர்கள் யானையின் கண்களை சோதனை செய்தனர். யானையின் கண் நிலை குணப்படுத்த முடியாதது என்றும், ஆனால் மோசமடைவதற்கான சாத்தியக்கூறுகளைக் குறைக்க தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் டாக்டர்கள் குழுவினர் தெரிவித்ததாக அமைச்சர் கூறியுள்ளார்.

  அதேபோல் ரூ.23.5 லட்சம் செலவில் யானை குளித்து மகிழகுளம் கட்டப்பட்டது. 2021-ம் ஆண்டு தி.மு.க. ஆட்சிக்கு வந்த பிறகு யானையின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் முயற்சியின் ஒரு பகுதி இது என்றார்.

  நான் யானை பார்வதிக்கு உணவளிக்கிறேன் (எனது நலனுக்காக, விளம்பரத்திற்கு மாறாக) மற்றும் நான் வழக்கமாக கோவிலுக்குச் செல்லும் போது அவளுடைய நிலையை பார்த்தும், கேட்டும் தெரிந்துகொள்கிறேன். அவளது பொது உடல்நலம் குறித்த வழக்கமான அறிவிப்புகளையும் நான் அறிகிறேன்.

  எனவே ரங்கராஜன் நரசிம்மன் உண்மைகளை சரிபார்த்து, யானையின் மீது கவனம் அல்லது கவனிப்பு இல்லை என்று குற்றம் சாட்டுவதற்கு முன்பு கடந்த கால முயற்சிகளைப் படிக்கும்படி தெரிவித்துள்ளார்.

  • தங்களுக்கு இஷ்டபடியாகவோ அல்லது இடத்திற்கு தகுந்தபடியாகவோ பல்வேறு பெயர்களில் பெயரை சூட்டி விநாயகரை வணங்கி வந்தனர்.
  • விநாயகரை வணங்கினால் கண் திருஷ்டி விலகும். இடையூறுகள் விலகி காரியம் ஜெயம் ஆகும்.

  அனைவருக்கும் பிடித்த கடவுள் விநாயகர் என்றால் அது மிகையில்லை. வித்தியாசமான உருவம் கொண்ட இவரை வணங்கினால் 16 வகையான செல்வங்களும் (பொருட்கள்) பெற்று சிறப்பாக வாழலாம் என்பது ஐதீகம். இதனால்தான் புராணத்தில் 16 வகையான விநாயகர் பற்றி சொல்லப்பட்டுள்ளது. அதன் பின்னர் வந்தவர்கள் தங்களுக்கு இஷ்டபடியாகவோ அல்லது இடத்திற்கு தகுந்தபடியாகவோ பல்வேறு பெயர்களில் பெயரை சூட்டி விநாயகரை வணங்கி வந்தனர்.

  இதில் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் புகழ் பெற்ற விநாயகர்களில் கன்னிமூல உச்சிஷ்ட கணபதி, வ்யாக்ர சக்தி விநாயகர், வன்னி மரத்தடி விநாயகர், முக்குருணி விநாயகர் ஆகிய 4 வகையான விநாயகர் சிறப்பு பெற்றவையாகும்.

  இப்பெயர்கள் வந்ததற்கான காரணம், வணங்கினால் கிடைக்க கூடிய பலன்கள் என்னென்ன என்பது பற்றி மீனாட்சி அம்மன் கோவில் பட்டர்கள் சங்கரன் சிவச்சாரியார், சுரேஷ் ஆகியோர் கூறுவதை பார்ப்போம்.

  1. கன்னிமூல உச்சிஷ்ட கணபதி

  இவர் ஆலயங்களில் தென்மேற்கு மூலையில் அமர்ந்து (கன்னிமூலை) பக்தர்களுக்கு காட்சி அளிப்பார். பூமியில் தாழ்வான மேடான பகுதிகள் உண்டு. ஈசானி மூலை தாழ்வாக இருப்பதால் அதை சமன் செய்யும் வகையில் கன்னிமூலையில் அமர்ந்திருப்பதாக சொல்லப்படுகிறது.

  பலன்: இவரை வழிபட்டால் யோகா சம்பந்தப்பட்ட அறிவை மேம்படுத்தும். வியாபாரம், தொழில் அபிவிருத்தியையும், மேலான நல்லெண்ணத்தையும் சக்தியையும் அதிகரிப்பார். எதிர்காலத்தை அறியக்கூடிய ஞானத்தையும் கொடுப்பார்.

  2. வ்யாகர சக்தி விநாயகர்

  இவருடைய உருவம் மற்ற விநாயகரை விட வித்தியாசமானது. கால் பாதத்தில் இருந்து இடுப்பு வரை புலி கால்களையும் இடுப்பு முதல் கழுத்து வரை சக்தி (அம்பாள்) உருவிலும், கழுத்துக்கு மேல் விநாயகர் தலையுடனும் காட்சி அளிப்பார். அசுரர்களை சம்காரம் செய்ய இந்த உருவத்தில் தோன்றியதாக சொல்லப்படுகிறது.

  பலன்: பக்தர்களுக்கு மோட்சம் கொடுப்பார். இன்னல்களை தீர்த்து வைப்பார்.

  3. வன்னிமரத்தடி விநாயகர்

  பஞ்சபாண்டவர்கள் வனவாசம் சென்றபோது ஆயுதங்களை வன்னிமரத்தடி விநாயகர் பக்கத்தில் மறைத்து வைத்ததாகவும் போர் முடிந்து நாடு திரும்பியபோது களவுபோகாமல் அந்த ஆயுதம் அப்படியே இருந்ததாகவும் அதை விநாயகர் காத்ததாகவும் கூறப்படுகிறது. வன்னிமரம் சனி பகவானுக்கு உகந்த மரமாகும். சனிதோஷம் ஏற்படாமல் இருக்க இவர் இந்த மரத்தடியில் அமர்ந்து பக்தர்களுக்கு தரிசனம் அளிப்பதாகவும் கூறுகிறார்கள்.

  பலன்: சனி திசை, சனி தோஷம் உள்ளவர்கள் இங்கு வந்து வன்னி இலையால் அர்ச்சனை செய்தால் நிவர்த்தியாகும்.

  4. முக்குருணி விநாயகர்

  மதுரை தெப்பக்குளம், வண்டியூர், அனுப்பானடி ஆகிய 3 சந்திகள் (முக்கு தெருக்கள்) கூடும் இடத்தில் ஊரணி தோண்டும்போது 7 அடி உயரமுள்ள ராட்சத விநாயகர் சிலை கண்டெடுக்கப்பட்டதாகவும், அதை மன்னர் திருமலை நாயக்கர் மீனாட்சி அம்மன் கோவிலில் பிரதிஷ்டை செய்ததாகவும் கூறப்படுகிறது. (முக்கு தெருக்களில் ஊரணி தோண்டும்போது கிடைத்ததால் முக்குருணி விநாயகராக வணங்கப்பட்டார்) 3 குருணி அரிசியால் செய்யப்பட்ட கொழுக்கட்டை படைத்து விநாயகர் சதுர்த்தியின்போது வழிப்படுவதால் முக்குருணி விநாயகர் என பெயர் வந்ததாகவும் கூறப்படுகிறது.

  பலன்: இவ்விநாயகர் தெற்கு நோக்கி காட்சி அளிக்கிறார். இவரை வணங்கினால் கண் திருஷ்டி விலகும். இடையூறுகள் விலகி காரியம் ஜெயம் ஆகும்.

  இவ்வாறு அவர்கள் கூறினர்.

  • பெங்களூருவை சேர்ந்த 2 பெண் என்ஜினீயர்கள் மீனாட்சி அம்மன் கோவிலுக்கு வந்திருந்தனர்.
  • கோவிலானது பாதுகாப்பிற்கு உட்பட்ட பகுதி என்பதால் கோவிலை சுற்றிலும், மேற்பரப்பிலும் டிரோன் இயக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

  மதுரை:

  உலகப்புகழ் பெற்ற மதுரை மீனாட்சி அம்மன்-சுந்தரேசுவரர் கோவிலுக்குள், மெட்டல் டிடெக்டர் பரிசோதனை மற்றும் பலத்த சோதனைக்கு பிறகே பக்தர்கள் உள்ளே அனுமதிக்கப்படுகிறார்கள். கோவிலுக்கு வெளியேயும் போலீசார் தீவிர ரோந்து, கண்காணிப்பு பணியை மேற்கொண்டு வருகிறார்கள். கோவில் பாதுகாப்புக்கு உட்பட்ட பகுதி என்பதால் கோவில் கோபுரத்தின் மேற்பரப்பில் டிரோன் இயக்குவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

  இந்த நிலையில் பெங்களூருவை சேர்ந்த 2 பெண் என்ஜினீயர்கள் மீனாட்சி அம்மன் கோவிலுக்கு வந்திருந்தனர். அவர்கள் கோவிலின் மேற்கு கோபுரம் எதிரே உள்ள கோவிலுக்கான பிர்லா விடுதியில் தங்கியிருந்தனர். நேற்று மதியம் அங்கிருந்தபடி அவர்கள் வைத்திருந்த டிரோனை இயக்கினர்.

  அந்த டிரோன் எதிர்பாராத விதமாக மேற்கு கோபுரத்தின் மீது மோதி கீழே விழுந்து நொறுங்கியது. இதை அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் பார்த்து அந்த டிரோன் பாகங்களை கைப்பற்றினர். பின்னர் அதனை இயக்கிய 2 பெண் என்ஜினீயர்களை பிடித்து விசாரணை நடத்தினர்.

  அப்போது கோவிலானது பாதுகாப்பிற்கு உட்பட்ட பகுதி என்பதால் கோவிலை சுற்றிலும், மேற்பரப்பிலும் டிரோன் இயக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. அதை மீறி நீங்கள் எப்படி இயக்கினீர்கள்? போலீசாரிடம் அனுமதி வாங்கி இருக்கிறீர்களா? என அவர்களிடம் தீவிர விசாரணை நடத்தினர்.

  அதற்கு அவர்கள் தங்களுக்கு இதுபற்றி எதுவும் தெரியாது எனவும், 4 ஆண்டுகளாக பல்வேறு கோவில்களுக்கு சென்று டிரோன் மூலம் படம் எடுத்து வருவதாகவும், மீனாட்சி அம்மன் கோவில் பகுதியில் டிரோன் இயக்கியபோது அது தவறி விழுந்து நொறுங்கியதாகவும் தெரிவித்தனர். தொடர்ந்து போலீசார் அவர்கள் வைத்திருந்த மடிக்கணினி மற்றும் செல்போன்களில் டிரோன் மூலம் எதுவும் பதிவு செய்துள்ளார்களா? என்று ஆய்வு செய்தனர்.

  அதை தொடர்ந்து போலீசார் அவர்கள் இருவரிடமும் எழுதி வாங்கிக்கொண்டு, எச்சரித்து அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.