என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

மீனாட்சி அம்மன் கோவிலில் பொதுமக்களுக்கு ஒரு விதி, அமித்ஷாவுக்கு ஒரு விதியா? - மாணிக்கம் தாகூர் கேள்வி
- நீங்கள் மீனாட்சி அம்மன் கோயிலுக்குச் சென்றது நல்லது.
- இந்த விதிமீறல் குறித்து கோவில் நிர்வாகம் விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளதா?
மதுரை வந்த மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கடந்த 8-ந்தேதி மீனாட்சி அம்மன் கோவிலில் சாமி தரிசனம் செய்தார். கோவில் நிர்வாகம் சார்பில் அமித்ஷாவுக்கு பூரண கும்ப மரியாதை அளிக்கப்பட்ட வீடியோ வெளியிடப்பட்டது.
இதுதொடர்பாக காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாகூர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,
நீங்கள் மீனாட்சி அம்மன் கோயிலுக்குச் சென்றது நல்லது. ஆனால் ஏன் எல்லா விதிகளையும் மீற வேண்டும்? தாமரை குளம் பகுதியைத் தவிர, உள்ளே மொபைல்கள் மற்றும் கேமராக்கள் கண்டிப்பாக தடைசெய்யப்பட்டுள்ளன. பொதுமக்களுக்கு ஒரு விதி, ஒன்றிய உள்துறை அமைச்சருக்கு ஒரு விதி என பாகுபாடுகள் ஏன்? இந்த விதிமீறல் குறித்து கோவில் நிர்வாகம் விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளதா? என்று கேள்வி எழுப்பி உள்ளார்.
Next Story






