என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    மீனாட்சி அம்மன் கோவிலை சுற்றி புதிய பாதாள சாக்கடை திட்டம்- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
    X

    மீனாட்சி அம்மன் கோவிலை சுற்றி புதிய பாதாள சாக்கடை திட்டம்- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

    • மேலூர் வட்டம் சூரப்பட்டி அருகே பாலாற்றின் குறுக்கே 9 கோடியே 50 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் புதிய தடுப்பணை கட்டப்படும்.
    • உத்தங்குடி உபரி நீர்க் கால்வாயில் 7 கோடி ரூபாய் செலவில், தடுப்புச் சுவர் கட்டப்பட்டு, நிரந்தர வெள்ளத் தடுப்புப் பணிகள் மேற்கொள்ளப்படும்.

    மதுரை:

    மதுரையில் நடைபெற்ற அரசு விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 6 புதிய அறிவிப்புகளை வெளியிட்டார். அவை வருமாறு:-

    * மதுரை மாநகரில், போக்குவரத்து நெரிசலைக் குறைக்க, பல காலமாக எதிர்பார்க்கப்பட்ட வைகை ஆற்றின் வடகரையில், விரகனூர் சுற்றுச்சாலை முதல் சக்குடி வரை 8.4 கிலோமீட்டர் நீளத்துக்கு 130 கோடி ரூபாய் செலவில் புதிய சாலை அமைக்கப்படும்.

    * மதுரை மாநகரின் முக்கிய பகுதிகளான, மீனாட்சி அம்மன் கோவிலைச் சுற்றி இருக்கின்ற 4 மாசி வீதிகள், வெளி வீதிகள், புதூர், அண்ணா நகர், சந்தைப்பேட்டை, தெற்கு வாசல், எஸ்.எஸ்.காலனி, ஆரப்பாளையம், அரசரடி, பழங்காநத்தம், பைக்காரா உள்ளிட்ட பகுதிகளில், இப்போது இருக்கின்ற பழைய பாதாளசாக்கடைக் குழாய்கள் அகற்றப்பட்டு, புதிய திட்டம் செயல்படுத்தப்படும்.

    * மதுரை கிழக்கு வட்டத்தில் இருக்கின்ற உத்தங்குடி உபரி நீர்க் கால்வாயில் 7 கோடி ரூபாய் செலவில், தடுப்புச் சுவர் கட்டப்பட்டு, நிரந்தர வெள்ளத் தடுப்புப் பணிகள் மேற்கொள்ளப்படும்.

    * மேலூர் வட்டத்தில் இருக்கின்ற கேசம்பட்டி கிராமம்-பெரிய அருவி நீர்த்தேக்கம் மற்றும் அதைச் சார்ந்த கண்மாய்கள் 2 கோடியே 60 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் புனரமைக்கப்படும்.

    மேலும், மேலூர் வட்டம் சூரப்பட்டி அருகே பாலாற்றின் குறுக்கே 9 கோடியே 50 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் புதிய தடுப்பணை கட்டப்படும்.

    * மதுரை மேற்கு வட்டத்தில் இருக்கின்ற கொடி மங்கலம், மேலமாத்தூர், புதுக்குளம் மற்றும் விளாச்சேரி கிராமங்களில் இருக்கின்ற பல்வேறு ஏரிகள் மற்றும் கால்வாய்கள் 10 கோடி ரூபாய் செலவில் மேம்படுத்தப்படும்.

    இவை உள்ளிட்ட 6 புதிய அறிவிப்புகளுக்கான பணிகள் விரைவில் தொடங்கப்படும்.

    Next Story
    ×