search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் முழு நேர அன்னதான திட்டம்
    X

    மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் நடந்த முழுநேர அன்னதான திட்ட தொடக்க நிகழ்ச்சியில் பக்தர்களுக்கு அமைச்சர் மூர்த்தி உணவு பரிமாறினார். 

    மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் முழு நேர அன்னதான திட்டம்

    • மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் முழு நேர அன்னதான திட்டத்தை காணொலி காட்சி மூலம் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
    • தினந்தோறும் காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை அன்னதானம் வழங்கப்படும்

    மதுரை

    தமிழகத்தில் பழனி தண்டாயுதபாணி கோவில், ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவில்களில் முழுநேர அன்னதானம் திட்டம் தொடங்கி நடந்து வருகிறது.

    இந்த திட்டம் தற்போது திருச்செந்தூர் முருகன் கோவில், சமயபுரம் மாரியம்மன் கோவில், திருத்தணி சுப்பிரமணியர் கோவில் ஆகிய தலங்களுக்கு விரிவுபடுத்தப்பட்டது.

    இந்த நிலையில் "தமிழக இந்து அறநிலையத்துறை சார்பில் மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோவில், ராமேசுவரம் ராமநாதசுவாமி கோவில், திருவண்ணா மலை அருணாசலேசுவரர் கோவில் ஆகிய ஆன்மீக தலங்களில் நாள் முழுவதும் அன்னதானம் வழங்கும் திட்டம் தொடங்கி வைக்கப்படும் என்று முதல்வர் மு.க. ஸ்டாலின் சமீபத்தில் அறிவித்து இருந்தார்.

    அதற்கான விழா இன்று காலை மீனாட்சி அம்மன் கோவில் வளாகத்தில் நடந்தது. நிகழ்ச்சியில் தமிழக பத்திர பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி, எம்.எல்.ஏ.க்கள் பூமிநாதன், வெங்கடேசன், மதுரை மாவட்ட கலெக்டர் அனீஸ் சேகர் மற்றும் கோவில் அதிகாரிகள் செல்லத்துரை, அருணாசலம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் சென்னை தலைமை செயலகத்தில் இருந்தபடி காணொலி காட்சி வாயிலாக, மதுரை மீனாட்சி அம்மன் கோவி லில் நாள் முழுவதும் அன்னதானம் திட்டத்தை தொடங்கி வைத்தார்.

    இதன்படி அங்கு தினந்தோறும் காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை அன்னதானம் வழங்கப்படும் என்று கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

    Next Story
    ×