search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் 1008 சங்குகளில் புனித நீர் நிரப்பி வழிபாடு
    X

    கார்த்திகை மாத முதல் சோமவாரத்தை முன்னிட்டு மதுரை இம்மையிலும் நன்மை தருவார் கோவிலில் 1,008 சங்குகளில் புனித நீர் நிரப்பி சிவலிங்க வடிவில் வைத்து சிறப்பு ஹோமம் நடந்தது. 

    மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் 1008 சங்குகளில் புனித நீர் நிரப்பி வழிபாடு

    • கார்த்திகை மாத சோம வாரத்தை முன்னிட்டு மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் 1008 சங்குகளில் புனித நீர் நிரப்பி வழிபாடு நடந்தது.
    • இம்மையிலும் நன்மை தருவார் கோவிலிலும் நடந்தது.

    மதுரை

    ஒவ்வொரு ஆண்டும் கார்த்திகை மாதம் வரும் திங்கட்கிழமைகளில் கார்த்திகை சோமவார வழிபாடு நடைபெறுவது வழக்கம்.

    இந்த ஆண்டுக்கான கார்த்திகை முதல் சோம வார தினமான இன்று மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் உள்ள சுந்தரேசு வரர் சன்னதி முன்பு 1,008 சங்குகளில் புனித நீர் நிரப்பி சிவலிங்க வடிவில் வைத்து சிறப்பு ஹோமம் நடந்தது.

    இதைத்தொடர்ந்து இன்று மாலை சுந்தரேசுவர ருக்கு 1,008 சங்குகளில் நிரப்பப்பட்ட புனித நீரை கொண்டு சிறப்பு அபி ஷேகம் நடக்கிறது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொள்வார்கள்.

    இதேபோல் மதுரை இம்மையிலும் நன்மை தருவார்- கோவிலில் ஸ்தல அர்ச்சகர் தர்மராஜ் சிவம் தலைமையில் சோம வார வழிபாடுகள் நடைபெற்றது.

    இைதயொட்டி 1,008 வலம்புரி சங்குகளில் புனித நீர் நிரப்பப்பட்டு சிவலிங்க வடிவில் வைத்து சிறப்பு ஹோமம் நடைபெற்றது. இதைத்தொடர்ந்து இன்று மாலை சங்குகளில் நிரப்பப்பட்ட புனித நீரை சிவலிங்கத்திற்கு சிறப்பு அபி ஷேகம் நடைபெறுகிறது. அதன்பின் அலங்காரம், மகாதீபாராதனை நடக்கிறது.

    அபிஷேக பிரியரான சிவபெருமானை கார்த்திகை சோமவாரத்தில் விரதம் இருந்து வழிபடுவதும் சிறப்புக்குரியதாக கருதப்படுகிறது. எனவே இன்று பல பக்தர்கள் விரதம் கடைபிடித்து சோம வார வழிபாட்டில் கலந்து கொள்வார்கள்.

    இேதபோல் கார்த்திகை மாதத்தின் ஒவ்வொரு திங்கட்கிழமையும் இந்த வழிபாடுகள் தொடர்ந்து நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.

    ராமேசுவரம் ராமநாத சுவாமி கோவில், உத்தர கோசமங்கை சிவன் கோவில், திருவாதவூர் சிவன் கோவில், மதுரை தெப்பக்குளம் முக்தீஸ்வரர் சிவன் கோவில் உள்ளிட்ட பல கோவில்களில் சோம வார சிறப்பு வழிபாடுகள் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

    Next Story
    ×