என் மலர்

  நீங்கள் தேடியது "Teenage"

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • செவிலியர்களுக்கு 4 கட்டமாக பயிற்சி அளிக்கும் முகாம் இன்று தொடங்கி நடைபெற்று வருகிறது.
  • நெல்லை மாவட்டத்தில் பதின் பருவ கர்ப்பம் மற்றும் இளம் வயது திருமணம் அதிக அளவில் நடந்து வருகிறது.

  நெல்லை:

  மத்திய அரசின் சமூக நீதி மற்றும் அதிகாரம் அளித்தல் துறை சார்பில் போதை இல்லா இந்தியாவை உருவாக்கும் திட்டத்திற்கான கிராம செவிலியர்களுக்கு பயிற்சி மற்றும் ஆலோசனை வழங்கும் கூட்டம் நெல்லை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் சுகாதாரத் துறை துணை இயக்குனர் கிருஷ்ணலீலா தலைமையில் நடைபெற்றது.

  மாவட்டத்தில் உள்ள 400-க்கும் மேற்பட்ட சுகாதார செவிலியர்களுக்கு 4 கட்டமாக பயிற்சி அளிக்கும் முகாம் இன்று தொடங்கி நடைபெற்று வருகிறது.

  கிராம சுகாதார செவிலியர்கள் கிராமப்புற மக்களின் அனைத்து மருத்துவ தேவைகளையும் அறிந்து செயல்பட்டு வரும் சூழலின் காரணமாக அவர்களிடம் இணக்கமாக பழகும் நிலை உருவாகும் என்பதால் போதை இல்லா இந்தியாவை உருவாக்க கிராம பகுதியில் வீடு வீடாக சென்று பரப்புரை மேற்கொள்வதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.

  இந்த ஆலோசனைக் கூட்டத்தில் பதின் பருவ கர்ப்பம், இளம் வயது திருமணம் உள்ளிட்டவைகளை கண்டறிந்தால் அவர்களுக்கு மருத்துவ ரீதியாக ஆலோசனை வழங்குவதுடன் பாதுகாப்பு வழங்வகுதற்கான முயற்சி களை அரசு சார்பில் மேற்கொள்ள உதவுவது எப்படி என்பது குறித்து ஆலோசனை வழங்கப்பட்டது.

  கூட்டத்தில் பேசிய மாவட்ட குழந்தைகள் நல குழும தலைவர் சந்திரகுமார், நெல்லை மாவட்டத்தில் பதின் பருவ கர்ப்பம் மற்றும் இளம் வயது திருமணம் அதிக அளவில் நடந்து வருகிறது. இந்த தகவலை கலெக்டர் விஷ்ணு தலைமையில் நடந்த ஆலோசனை கூட்டத்தில் தெரிவித்துள்ளேன்.

  அதனை தடுக்கும் முயற்சியை மேற்கொள்வதுடன் பதின் பருவ கர்ப்பம் அடைந்த நபர்களை கண்டறிந்தால் அவர்களுக்கு தேவையான நடவடிக்கைகளை மேற் கொள்ளவும் மருத்துவ சிகிச்சை உள்ளிட்ட வைகளை அளிப்பதற்கு உதவி செய்யவும் குழந்தைகள் பாதுகாப்பு பிரிவுக்கு தகவல் தெரிவித்து அவர்களையும் சமூகத்தில் நல்ல நிலைக்கு கொண்டு செல்ல கிராம சுகாதர செவிலியர்கள் உதவிட வேண்டும் என பேசினார்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • வழிப்பறியில் ஈடுபட்ட 2 வாலிபர்கள் கைது செய்யப்பட்டது.
  • இது தொடர்பாக அருண்பாண்டி ஜெய்ஹிந்த்புரம் போலீசில் புகார் கொடுத்தார்.

  மதுரை

  மதுரை சோலை அழகுபுரம், இந்திரா நகரை சேர்ந்தவர் அருண்பாண்டி (வயது 25). இவர் நேற்று ஜெய்ஹிந்த் புரம் எல்.எல். ரோடு சந்திப்பில் நடந்து சென்றார். அப்போது அங்கு வந்த 2 பேர் கும்பல் கத்தியை காட்டி மிரட்டி, 435 ரூபாயை பறித்து சென்றது. இது தொடர்பாக அருண்பாண்டி ஜெய்ஹிந்த்புரம் போலீசில் புகார் கொடுத்தார். இதன் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து வழிப்பறியில் ஈடுபட்ட கீரைத்துறை அருமை நாயகம் (27), ஜெய்ஹிந்த்புரம், பாரதியார் ரோடு கருப்பசாமி மகன் கண்ணன் (23) ஆகிய 2 பேரையும் கைது செய்தனர்.

  மதுரை அண்ணாநகர், சூ மேக்கர் காலனியை சேர்ந்தவர் ராஜரத்தினம் (50). இவர் நேற்று காலை குருவித்துறை, ஒயின்ஷாப் பகுதியில் நடந்து சென்றார். அப்போது அங்கு வந்த வாலிபர் கத்தியை காட்டி மிரட்டி 500 ரூபாயை பறித்து சென்றார். இது தொடர்பாக ராஜரத்தினம், அண்ணா நகர் போலீசில் புகார் கொடுத்தார். இதன் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்ததில் பணம் பறித்தது முந்திரிதோப்பு, லால்பகதூர் சாஸ்திரி தெருவை சேர்ந்த வினோத்ராஜா (33) என தெரியவந்தது. அவரை போலீசார் கைது செய்தனர்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • மதுரை அருகே வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
  • குழந்தை இல்லாததால் குடும்பத்தில் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.

  மதுரை

  மதுரை ராயப்பா நகரை சேர்ந்தவர் நிரஞ்சன் (வயது 32). இவரது மனைவி மல்லிகா.

  இவர்களுக்கு குழந்தை இல்லை. எனவே குடும்பத்தில் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இதன் காரணமாக வாழ்க்கையில் விரக்தி அடைந்த நிரஞ்சன் நேற்று திருப்பரங்குன்றம்- விளாச்சேரி ரோட்டில் உள்ள தென்னந்தோப்பு அருகே தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

  இது தொடர்பாக திருநகர் போலீசார் வழக்கு பதிவு செய்து உடலை மீட்டு பிரேத பரி சோத னைக்கு அனுப்பி வைத்து, இது தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • கூடுதல் வரதட்சணை கேட்டு இளம்பெண் சித்ரவதை செய்யப்பட்டார்.
  • கணவர் உள்பட 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

  திருமங்கலம்

  மதுரை மாவட்டம் பேரையூர் அருகே உள்ள அல்லிகுண்டத்தை சேர்ந்தவர் மகாராணி (வயது 32). இவருக்கும், குமாரலிங்கபுரத்தை சேர்ந்த டிரைவர் செல்லக்காளை என்பவருக்கும் 2019-ம் ஆண்டு திருமணம் நடை பெற்றது. இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். கடந்த சில மாதங்களுக்கு முன்பு கணவருடன் ஏற்பட்ட பிரச்சினை காரணமாக குழந்தைகளுடன் தந்தை வீட்டு வந்து விட்டார்.

  இந்த நிலையில் மகா ராணி திருமங்கலம் அனைத்து மகளிர் போலீசில் புகார் கொடுத்துள்ளார். அதில், எனக்கும், செல்ல க்காளைக்கு திருமணம் நடந்தபோது 23 பவுன் நகை, ரூ.2 லட்சம் ரொக்கம் மற்றும் சீர்வரிசை பொருட்கள் வரதட்சணையாக கொடு க்கப்பட்டன.

  இந்த நிலையில் பணம் கேட்டு அடிக்கடி கணவர் தொந்தரவு செய்து வந்தார். இதன் காரணமாக தந்தையிடம் இருந்து ரூ.80 ஆயிரம் வாங்கி கொடுத்தேன். ஆனால் மீண்டும் பணம் கேட்டு துன்புறுத்துகின்றனர்.

  இதற்கு உடந்தையாக கணவரின் பெற்றோர் செல்வராஜ்-லிங்க ம்மாள், சகோதரர் சுந்தரபாண்டி, அவரது மனைவி ஆனந்தவல்லி ஆகியோர் உள்ளனர் என குறிப்பிட்டுள்ளார். இந்த புகாரின் அடி ப்படையில் வரதட்சணை கேட்டு துன்புறுத்தியதாக செல்லக்காளை உள்பட 5 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  பாலியல் வன்முறை ரீதியாக பெண்கள் வஞ்சிக்கப்படும் சம்பவங்கள் நடக்கும்போது, அந்த சம்பவம் எப்படி நடந்தது, ஏன் நடந்தது என்று அம்மாக்கள் மகள்களுக்கு சொல்லிக் கொடுக்கவேண்டும்.
  சிறுமிகள், டீன்ஏஜ் பெண்கள் பாலியல் தொடர்புடைய சிக்கல்களில் எளிதாக மாட்டிக் கொள்கிறார்கள். செல்போன், இன்டர்நெட் போன்றவை அதற்கு காரணமாக இருக்கின்றன.

  அம்மாக்கள் கவனமாக இருந்தால், பெண்களுக்கு சிக்கல் ஏற்படாமல் பார்த்துக்கொள்ளலாம்!

  அதாவது, பாலியல் வன்முறை ரீதியாக பெண்கள் வஞ்சிக்கப்படும் சம்பவங்கள் நடக்கும்போது, அந்த சம்பவம் எப்படி நடந்தது, ஏன் நடந்தது என்று அம்மாக்கள் மகள்களுக்கு சொல்லிக் கொடுக்கவேண்டும். அப்படி ஒரு சம்பவம் நடந்தால் எப்படி அதில் இருந்து தப்பிக்கவேண்டும் என்று சொல்லிக்கொடுக்கவேண்டும்.

  அறிமுகமற்ற ஆண்களோடு பேசும்போது எப்படி எல்லாம் முன்னெச்சரிக்கையாக நடந்து கொள்ளவேண்டும் என்பதை மகள்களுக்கு கற்றுக்கொடுங்கள். செல்போன், இன்டர்நெட் போன்றவை மூலம்தான் சிக்கலுக்குரிய பந்தங்கள் உருவாகின்றன. அதனால் மகள் எதற்காக செல்போன், இன்டர்நெட் போன்றவைகளை பயன்படுத்துகிறாள் என்பதை எப்போதும் அம்மா கண்காணிக்கவேண்டும்.

  அவளது நண்பர்கள் யார், அவர்களது நடவடிக்கைகள் எப்படி இருக்கின்றன என்பதை எல்லாம் அம்மா அறிந்திருக்கவேண்டும். காதல் தொடர்பு ஏதாவது இருப்பதாக அறிந்தால் டென்ஷம் ஆகாதீர்கள். மகளை அடக்குதல், அடித்தல், முடக்கிப்போடுதல் போன்றவை எதிர்விளைவுகளையும், பழிவாங்கும் உணர்வுகளையும் தோற்றுவித்துவிடும். சரியான பருவத்தில் ஏற்படும், சரியான காதலுக்கு தான் ஒருபோதும் எதிரியல்ல என்பதை புரியவைத்து, பிரச்சினையை சுமூகமாக தீர்க்க முன்வரவேண்டும்.  டீன்ஏஜ் பருவத்தில் மாடர்ன் டிரஸ் அணியும் ஆர்வம் அதிகரிக்கும். ஆனால் அது அவள் உடலுக்கு பொருத்தமாக இருக்கிறதா என்பதைப் பார்த்து சரியான முறையில் அணியச் செய்ய வேண்டும். உடல் உறுப்புகளை பாதுகாப்பதில் உடையின் பங்கு என்ன என்பதை மகள்களுக்கு புரிய வைக்கவேண்டும்.

  ஆண் ஒருவர் அனாவசியமாக பெண்ணின் உடலைத் தொடுதல், உடலை வர்ணித்தல், அனாவசிய அழைப்பு விடுத்தல் போன்ற எதிலாவது ஈடுபட்டால் அந்த நிமிடத்திலே விழிப்படைந்து கோபத்தையும், ஆக்ரோஷத்தையும் காட்டத் தெரியவேண்டும்.

  ‘இந்த மாதிரி வேலைகளை எல்லாம் என்னிடம் வைத்துக்கொள்ளாதே’ என்று தைரியமாக சொல்லவேண்டும். அவ்வாறு தைரியமாக சொன்னால், ‘இந்தப் பெண்ணிடம் தன் எதிர்பார்ப்பு எதுவும் நடக்காது’ என்று அவன் ஒதுங்கிவிடுவான்.

  எதை வேண்டுமானாலும் என் அம்மாவிடம் என்னால் பேச முடியும் என்ற நம்பிக்கையை மகளுக்கு கொடுங்கள். அப்படி ஒரு நம்பிக்கை அவளுக்கு ஏற்பட்டுவிட்டால், எந்த விஷயத்தையும் அவள் மனதில் வைக்கமாட்டாள். எல்லாவற்றையும் மனந்திறந்து பேசத் தொடங்கி விடுவாள்.

  டீன்ஏஜில் ஒரு பெண் செக்ஸ் பற்றி எதை எல்லாம் தெரிந்துகொள்ள வேண்டுமோ அதை எல்லாம் அவள் தன் தாய் மூலம் தெரிந்துகொள்வது நல்லது. தவறான புத்தகங்கள், தோழிகள், படங்கள் மூலம் அவள் தெரிந்துகொள்ள விரும்புவது நல்லதாக இருக்காது.

  ×