இளம்பெண் சித்ரவதை

கூடுதல் வரதட்சணை கேட்டு இளம்பெண் சித்ரவதை செய்யப்பட்டார்.கணவர் உள்பட 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
இளம்பெண் சித்ரவதை
Published on

திருமங்கலம்

மதுரை மாவட்டம் பேரையூர் அருகே உள்ள அல்லிகுண்டத்தை சேர்ந்தவர் மகாராணி (வயது 32). இவருக்கும், குமாரலிங்கபுரத்தை சேர்ந்த டிரைவர் செல்லக்காளை என்பவருக்கும் 2019-ம் ஆண்டு திருமணம் நடை பெற்றது. இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். கடந்த சில மாதங்களுக்கு முன்பு கணவருடன் ஏற்பட்ட பிரச்சினை காரணமாக குழந்தைகளுடன் தந்தை வீட்டு வந்து விட்டார்.

இந்த நிலையில் மகா ராணி திருமங்கலம் அனைத்து மகளிர் போலீசில் புகார் கொடுத்துள்ளார். அதில், எனக்கும், செல்ல க்காளைக்கு திருமணம் நடந்தபோது 23 பவுன் நகை, ரூ.2 லட்சம் ரொக்கம் மற்றும் சீர்வரிசை பொருட்கள் வரதட்சணையாக கொடு க்கப்பட்டன.

இந்த நிலையில் பணம் கேட்டு அடிக்கடி கணவர் தொந்தரவு செய்து வந்தார். இதன் காரணமாக தந்தையிடம் இருந்து ரூ.80 ஆயிரம் வாங்கி கொடுத்தேன். ஆனால் மீண்டும் பணம் கேட்டு துன்புறுத்துகின்றனர்.

இதற்கு உடந்தையாக கணவரின் பெற்றோர் செல்வராஜ்-லிங்க ம்மாள், சகோதரர் சுந்தரபாண்டி, அவரது மனைவி ஆனந்தவல்லி ஆகியோர் உள்ளனர் என குறிப்பிட்டுள்ளார். இந்த புகாரின் அடி ப்படையில் வரதட்சணை கேட்டு துன்புறுத்தியதாக செல்லக்காளை உள்பட 5 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com