வழிப்பறியில் ஈடுபட்ட 2 வாலிபர்கள் கைது

வழிப்பறியில் ஈடுபட்ட 2 வாலிபர்கள் கைது செய்யப்பட்டது. இது தொடர்பாக அருண்பாண்டி ஜெய்ஹிந்த்புரம் போலீசில் புகார் கொடுத்தார்.
வழிப்பறியில் ஈடுபட்ட 2 வாலிபர்கள் கைது
Published on

மதுரை

மதுரை சோலை அழகுபுரம், இந்திரா நகரை சேர்ந்தவர் அருண்பாண்டி (வயது 25). இவர் நேற்று ஜெய்ஹிந்த் புரம் எல்.எல். ரோடு சந்திப்பில் நடந்து சென்றார். அப்போது அங்கு வந்த 2 பேர் கும்பல் கத்தியை காட்டி மிரட்டி, 435 ரூபாயை பறித்து சென்றது. இது தொடர்பாக அருண்பாண்டி ஜெய்ஹிந்த்புரம் போலீசில் புகார் கொடுத்தார். இதன் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து வழிப்பறியில் ஈடுபட்ட கீரைத்துறை அருமை நாயகம் (27), ஜெய்ஹிந்த்புரம், பாரதியார் ரோடு கருப்பசாமி மகன் கண்ணன் (23) ஆகிய 2 பேரையும் கைது செய்தனர்.

மதுரை அண்ணாநகர், சூ மேக்கர் காலனியை சேர்ந்தவர் ராஜரத்தினம் (50). இவர் நேற்று காலை குருவித்துறை, ஒயின்ஷாப் பகுதியில் நடந்து சென்றார். அப்போது அங்கு வந்த வாலிபர் கத்தியை காட்டி மிரட்டி 500 ரூபாயை பறித்து சென்றார். இது தொடர்பாக ராஜரத்தினம், அண்ணா நகர் போலீசில் புகார் கொடுத்தார். இதன் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்ததில் பணம் பறித்தது முந்திரிதோப்பு, லால்பகதூர் சாஸ்திரி தெருவை சேர்ந்த வினோத்ராஜா (33) என தெரியவந்தது. அவரை போலீசார் கைது செய்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com