

மதுரை
மதுரை ராயப்பா நகரை சேர்ந்தவர் நிரஞ்சன் (வயது 32). இவரது மனைவி மல்லிகா.
இவர்களுக்கு குழந்தை இல்லை. எனவே குடும்பத்தில் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இதன் காரணமாக வாழ்க்கையில் விரக்தி அடைந்த நிரஞ்சன் நேற்று திருப்பரங்குன்றம்- விளாச்சேரி ரோட்டில் உள்ள தென்னந்தோப்பு அருகே தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இது தொடர்பாக திருநகர் போலீசார் வழக்கு பதிவு செய்து உடலை மீட்டு பிரேத பரி சோத னைக்கு அனுப்பி வைத்து, இது தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர்.