search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "locomotives"

    • வருகிற 1-ந்தேதி முதல் செங்கோட்டை ரெயில்கள் மின்சார என்ஜினில் இயக்கப்படுகிறது.
    • மின்சார என்ஜின்கள் இணைக்கப்பட இருக்கின்றன.

    மதுரை

    தெற்கு ரெயில்வே மதுரை கோட்ட அலுவலகம் விடுத்துள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்ப தாவது:-

    விருதுநகர்- செங்கோட்டை ரெயில்வே பிரிவு மின்மயமாக்கல் பணிகள் முழுமையாக நிறைவு பெற்று விட்டன. இதையடுத்து வருகிற நவ.1 முதல் செங்கோட்டையில் இருந்து புறப்படும் பொதிகை, சிலம்பு மற்றும் மயிலாடு துறை விரைவு ரெயில்கள் மின்சார என்ஜின் மூலம் இயக்கப்பட இருக்கிறது.

    இதற்காக இந்த பிரிவில் அமைக்கப்பட்டுள்ள மின் வழித்தடத்தில் 25 ஆயிரம் வோல்ட் மின்சாரம் பாய்ச்சப்பட இருக்கிறது. ஆகவே இந்த ரெயில் தடம் செல்லும் பகுதியில் உள்ள பொதுமக்கள் மின் வழித்தடத்தை நெருங்கவோ, தொடவோ முயற்சிக்க வேண்டாம் என ரெயில்வே நிர்வாகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

    மழை மற்றும் மின்னல் வெட்டும் நேரங்களில் குடையுடன் மின் வழித் தடத்தின் கீழே கடப்பதும் ஆபத்தை விளைவிக்கும். மேம்பாலங்களில் இருந்து மின்வழித்தடத்தின் மேல் ஏதாவது ஒரு பொருளை எறிந்தாலும் கடும் மின்சார தாக்குதலுக்கு ஆளாக நேரிடும். ரெயில்வே நிர்வா கத்தின் அனுமதியில்லாமல் மின் வழித்தடத்தின் அருகில் உள்ள மரங்களை வெட்டு வது, மரக்கிளைகளை செம்மைப்படுத்துவது ஆபத்தை விளைவிக்கும்.

    லெவல் கிராசிங்குகளில் போதிய பாதுகாப்பு ஏற்பாடுகளை ரெயில்வே நிர்வாகம் செய்திருந்த போதிலும், ரெயில்வே லெவல் கிராசிங்குகளை கடக்கும்போது நீண்ட இரும்பு கம்பிகளை செங்குத்தாக வைத்துக் கொண்டு நடப்பதும், வாகனங்கள் மேல் பகுதியில் அமர்ந்து பய ணிப்பதும், வாகனங்களில் சரக்குகளை உயரமாக அளவுக்கு அதிகமாக வைத்து செல்வதும் ஆபத்தை விளைவிக்க கூடிய செயல்கள் ஆகும்.

    நாளை மறுநாள் 31-ந் தேதி சென்னையில் இருந்து புறப்படும் பொதிகை எக்ஸ்பிரஸ், 1-ந்தேதி சென்னையில் இருந்து புறப்படும் சிலம்பு எக்ஸ்பிரஸ் மற்றும் மயிலாடுதுறை இருந்து புறப்படும் செங்கோட்டை விரைவு ரெயில் ஆகியவற்றில் மின்சார என்ஜின்கள் இணைக்கப்பட உள்ளன.

    அதேபோல் வருகிற 1-ந்தேதி செங்கோட்டையில் இருந்து புறப்படும் பொதிகை எக்ஸ்பிரஸ், 2 -ந்தேதி செங்கோட்டையில் இருந்து புறப்படும் சிலம்பு எக்ஸ்பிரஸ் மற்றும் மயிலாடுதுறை எக்ஸ்பிரஸ் ரெயில் ஆகியவற்றில் மின்சார என்ஜின்கள் இணைக்கப்பட இருக்கின்றன.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    ×