search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பெங்களூரு"

    • நகரின் பல்வேறு பகுதிகளில் இருந்து அபராதம் வசூலிக்கப்பட்டது.
    • தென் பகுதியில் இருந்து அதிகபட்சமாக ரூ.80,000 வசூலிக்கப்பட்டது.

    கார்களை கழுவுதல், தோட்டம் அமைத்தல் போன்ற பணிகளுக்கு குடிநீரை பயன்படுத்திய 22 குடும்பங்களுக்கு பெங்களூரு அதிகாரிகள் அபராதம் விதித்துள்ளனர்.

    பெங்களூருவில் கடும் தட்டுப்பாடு நிலவி வரும் நிலையில், தண்ணீரை சேமிக்க வேண்டும் என்ற குடிநீர் வாரியத்தின் உத்தரவை மீறும் ஒவ்வொரு குடும்பமும் ரூ.5,000 அபராதம் செலுத்த உத்தரவிடப்பட்டுள்ளது.

    இந்நிலையில், பெங்களூரு நீர் வழங்கல் மற்றும் கழிவுநீர் வாரியம் (BWSSB) 22 வீடுகளிடம் இருந்து ரூ. 1.1 லட்சம் அபராதம் வசூலித்துள்ளது.

    இதைத்தவிர, நகரின் பல்வேறு பகுதிகளில் இருந்து அபராதம் வசூலிக்கப்பட்டது. தென் பகுதியில் இருந்து அதிகபட்சமாக ரூ.80,000 வசூலிக்கப்பட்டது.

    இந்த மாத தொடக்கத்தில், பெங்களூரு நீர் வழங்கல் மற்றும் கழிவுநீர் வாரியம் குடிநீர் பற்றாக்குறை நெருக்கடியை மனதில் வைத்து, குடிநீரை சிக்கனமாக பயன்படுத்த பரிந்துரைத்தது. வாகனங்களை கழுவுதல், கட்டுமானம் மற்றும் பொழுதுபோக்கு நோக்கங்களுக்காக குடிநீரைப் பயன்படுத்துவதைத் தவிர்க்குமாறு பொது மக்களிடம் வலியுறுத்தப்பட்டது.

    மீண்டும் மீண்டும் தவறு செய்பவர்கள், ஒவ்வொரு முறையும் உத்தரவை மீறும்போது கூடுதலாக ரூ.500 அபராதம் விதிக்க வாரியம் முடிவு செய்துள்ளது.

    கடுமையான தண்ணீர் பற்றாக்குறை பெங்களூருவை விளிம்பிற்குத் தள்ளியுள்ளது. நகரவாசிகள் வீட்டிலிருந்து வேலை செய்ய வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். ஒரு முறை பயன்படுத்தும் தட்டில் சாப்பிடுவதும், மால்களில் கழிப்பறைகளைப் பயன்படுத்துவதும் போன்ற நெருக்கடியில் இருந்த வருகின்றனர்.

    • கணவனை கத்தியால் மனைவி குத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
    • அதிகாலை 1.30 மணியளவில் தூங்கிக்கொண்டிருந்த கணவன் கிரணை, கத்தியால் குத்தியுள்ளார் மனைவி

    கர்நாடக மாநிலம் பெங்களூருவில் திருமண நாளுக்கு பரிசு தராத கணவனை கத்தியால் மனைவி குத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இது பற்றிய விபரம் வருமாறு:-

    பெங்களுருவில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வருபவர் கிரண். இவரது மனைவி சந்தியா (வயது35). சமீபத்தில் இவர்களுக்கு திருமண நாள் வந்துள்ளது. அந்நாளில், மனைவிக்கு கிரண் பரிசு வாங்கித் தரவில்லை என தெரிகிறது. இதனால் ஆத்திரமடைந்த சந்தியா, கணவன் மீது கடும் கோபத்தில் இருந்துள்ளார்.

    மேலும் இதுதொடர்பாக இருவருக்கும் இடையே சண்டையும் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் சம்பவத்தன்று இரவு கணவன் கிரண் தூங்க சென்றார். அதிகாலை 1.30 மணியளவில் தூங்கிக்கொண்டிருந்த கணவன் கிரணை, கத்தியால் ஆத்திரத்தில் குத்தியுள்ளார் மனைவி சந்தியா.

    இதனால் ரத்த வெள்ளத்தில் அலறிய கணவன் கிரணை அக்கம் பக்கத்தினர் ஒரு தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து போலீசாருக்கு மருத்துவமனை நிர்வாகம் தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. போலீசார் விரைந்து சென்று விசாரணை செய்து வருகின்றனர்.

    கிரணின் தாத்தா சம்பவ தினத்துக்கு முந்தைய நாள்தான் இறந்துள்ளார் எனக் கூறப்படுகிறது. இதனால், மனைவிக்கு மணநாள் பரிசு வாங்கித் தரவில்லை என்பதும் தெரியவந்துள்ளது. இந்நிலையில், கணவனை கத்தியால் குத்திய மனைவியை போலீசார் கைது செய்தனர் .மேலும் அவருக்கு மனநல சிகிச்சையும் அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் பெங்களூருவில் அதிர்ச்சியை ஏற்படுத்தி  உள்ளது.

    • தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு மாநகர காவல் ஆணையர் விரைந்து ஆய்வு.
    • 10 விநாடிகளில் இரண்டு முறை வெடி சத்தம் கேட்டதாக தகவல்.

    கர்நாடகா மாநிலம், பெங்களூரு வைட் பீல்ட் பகுதியில் உள்ள ராமேஸ்வரம் கஃபே உணவகத்தில் இன்று வெடி விபத்து ஏற்பட்டது. வெடி விபத்தில், உணவகத்தில் இருந்த 3 ஊழியர்கள் மற்றும் ஒரு வாடிக்கையாளர் என 4 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.

    இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு மாநகர காவல் ஆணையர் விரைந்து ஆய்வு செய்தார். மேலும், வெடிகுண்டு நிபுணர்கள் மற்றும் தேசிய புலனாய்வு முகமை அமைப்பினர் ஆய்வு நடத்தியுள்ளனர்.

    இதில், சிலிண்டர் வெடிக்கவில்லை என்று முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது. 10 விநாடிகளில் இரண்டு முறை வெடி சத்தம் கேட்டதாக கூறப்படுகிறது.

    இந்த சம்பவம், கை கழுவும் இடத்தில் நடந்துள்ளதாக தகவல் வெளியானது. வாடிக்கையாளர் விட்டுச் சென்ற பையில் வெடித்ததாக உணவகத்தின் உரிமையாளர் கூறியதாக எம்.பி தேஜஸ்வி சூர்யா எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். 

    மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள காயம் அடைந்தவர்களிடமும் தேசிய புலனாய்வு முகமே அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    பெங்களூரு ராமேஸ்வரம் கஃபே உணவகத்தில் நடந்தது குண்டுவெடிப்புதான் என கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து அவர்,"முதற்கட்ட விசாரணையில் மேலோட்டமாக பார்க்கும் போது IED குண்டு வெடிப்பு போல் தெரிகிறது. ஆனால், இது சிலிண்டர் இல்லை. காவல்துறை முறையான அறிக்கை வழங்கிய பிறகுதான் எந்த தகவலும் தெரிவிக்க முடியும்" என்றார்.

    • காவல்துறை உயர் அதிகாரிகள் விசாரணை நடத்துகின்றனர்.
    • 3 ஊழியர்கள் மற்றும் ஒரு வாடிக்கையாளர் படுகாயம்.

    கர்நாடகா மாநிலம்,பெங்களூரு வைட் பீல்ட் பகுதியில் உள்ள ராமேஸ்வரம் கஃபே உணவகத்தில் வெடி விபத்து ஏற்பட்டுள்ளது.

    வெடி விபத்தில், உணவகத்தில் இருந்த 3 ஊழியர்கள் மற்றும் ஒரு வாடிக்கையாளர் என 4 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.

    இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு காவல்துறை உயர் அதிகாரிகள் விசாரணை நடத்துகின்றனர்.

    மேலும், உணவத்தில் சிலிண்டர் வெடித்ததா ? அல்லது வேறு ஏதேனுமா என்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • உலகளவில் போக்குவரத்து நெரிசல் மிக்க நகர பட்டியலில் லண்டன் முதல் இடம்.
    • இந்தியாவில் இருந்து பெங்களூரு, புனே நகரங்கள் மட்டுமே இடம்.

    உலகளவில் போக்குவரத்து நெருக்கடி மிக்க நகரங்கள் பட்டியலில் 2வது இடத்தில் இருந்த பெங்களூரு, 2023ம் ஆண்டு பட்டியலில் 6வது இடத்திற்கு இறங்கி முன்னேற்றம் கண்டுள்ளது.

    லண்டன் முதல் இடத்தை பிடித்துள்ளது. சமீபத்திய ஆய்வு பட்டியலின்படி, பெங்களூருவில் 10 கி.மீ தூரத்தைக் கடக்க சராசரியாக 28.10 நிமிடம் ஆகிறது.

    டாப் 10 நகரங்களில் இந்தியாவில் இருந்து பெங்களூரு, புனே நகரங்கள் மட்டுமே இடம் பெற்றுள்ளன.

    • உலகளவில் போக்குவரத்து நெரிசல் மிகுந்த நகரங்களின் பட்டியல் வெளியாகியுள்ளது.
    • இந்தப் பட்டியலில் இங்கிலாந்து தலைநகர் லண்டன் முதல் இடம் பிடித்துள்ளது.

    ஆம்ஸ்டர்டாம்:

    உலகளவில் போக்குவரத்து நெரிசல் அதிகமாக உள்ள நகரங்கள் குறித்து ஆய்வு ஒன்று நடத்தப்பட்டது. நெதர்லாந்தைச் சேர்ந்த டாம் டாம் என்ற நிறுவனம் இந்த ஆய்வை நடத்தியது.

    இந்நிலையில், 2023-ம் ஆண்டுக்கான ஆய்வு பட்டியல் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. இதில், உலகளவில் அதிக நெரிசல் மிகுந்த நகரமாக 6வது இடத்தை இந்தியாவின் பெங்களூரு பிடித்துள்ளது. பெங்களூருவில் 10 கிலோமீட்டர் தூரம் பயணிக்க 28 நிமிடங்கள் 10 நொடிகள் ஆகிறது என கணக்கிடப்பட்டுள்ளது. இது கடந்த ஆண்டுடன் ஒப்பிடும் போது ஒரு நிமிடம் குறைவாகும். அதிகரித்துவரும் போக்குவரத்து நெரிசல் காரணமாக பெங்களூருவாசிகள் கடும் சிரமத்துக்கு ஆளாகின்றனர்.

    கடந்த ஆண்டு 2-வது இடத்தில் இருந்த பெங்களூரு இந்த ஆண்டு 6ம் இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது.

    இந்தப் பட்டியலில் இங்கிலாந்து தலைநகர் லண்டன் முதல் இடம் பிடித்துள்ளது. அங்கு ஒரு மணி நேரத்திற்கு 14 கிலோமீட்டர் மட்டுமே நெரிசல் மிகுந்த நேரத்தில் பயணிக்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    அயர்லாந்தின் டப்ளின் 2-வது இடத்திலும், கனடாவின் டொரண்டோ 3-வது இடத்திலும், இத்தாலியின் மிலன் 4-வது இடத்திலும், பெரு தலைநகர் லிமா 5-வது இடத்திலும் உள்ளன. மகாராஷ்டிராவின் புனே 7வது இடத்தில் உள்ளது.

    முறையான சாலை இணைப்பு இல்லாத காரணத்தாலே இந்த நகரங்களில் மிகப்பெரிய அளவுக்கு போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது எனவும் அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.

    • எக்ஸ் தளத்தில் பதிவிட்டு தனது கண்டனத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
    • ஏராளமான கமென்ட்கள் விளம்பரத்திற்கு எதிராக இருந்தது.

    பெங்களூரு பேருந்தின் பின்புறம் ஒட்டப்பட்ட உடனடி ரசம் தயாரிக்கும் பேஸ்ட்-க்கான விளம்பரம் இணையத்தில் பேசு பொருளாக மாறி இருக்கிறது. இந்த விளம்பர படத்தில், மனைவி வட இந்தியரா? என்ற வாசகமும், அருகில் ஒருவர் கையை நீட்டிய படி நிற்கும் படமும் இடம்பெற்று இருக்கிறது.

    விளம்பர படத்தை பார்க்கும் போது, வட இந்திய பெண்களுக்கு ரசம் வைக்க தெரியாதபடியும், குறிப்பிட்ட நிறுவனத்தின் உடனடி ரசம் பேஸ்ட் கொண்டு யாரும் எளிதில் ரசம் வைக்க முடியும் என்றும் புரிந்து கொள்ளும் வகையில் உள்ளது. இந்த விளம்பரத்தின் புகைப்படத்தை ஒருவர் எக்ஸ் தளத்தில் பதிவிட்டு தனது கண்டனத்தை வெளிப்படுத்தியுள்ளார்.




     


    விளமபர படம் தொடர்பாக பலர் பதில் அளித்துள்ளனர். இதில் ஏராளமான கமென்ட்கள் விளம்பரத்திற்கு எதிராகவும், இந்த விளம்பரம் வட இந்தியா மற்றும் தென்னிந்தியா இடையிலான திருமண உறவை ஊக்குவிக்கும் வகையில் இருந்தன. சிலர் இந்த விளம்பரத்திற்கு கண்டனம் தெரிவித்த நிலையில், சிலர் இந்த விளிம்பரம் திருமண உறவை மாநிலங்கள் கடந்து எடுத்து செல்ல உதவும் என்றும் தெரிவித்துள்ளனர். 


    • முதல் இலகுரக தேஜாஸ் இரட்டை இருக்கை கொண்ட போர் விமானம் விமானப்படையில் சமீபத்தில் ஒப்படைக்கப்பட்டது.
    • பிரதமர் மோடி பெங்களூருவில் இந்துஸ்தான் ஏரோனாட்டிக்கல்ஸ் நிறுவனத்துக்கு இன்று சென்றார்.

    கர்நாடக மாநிலம் பெங்களூருவை தலைமையிடமாகக் கொண்டு இந்துஸ்தான் ஏரோனாட்டிக்கல்ஸ் (எச்.ஏ.எல்.) நிறுவனம் செயல்பட்டு வருகிறது.

    இந்த நிறுவனம் சார்பில் இந்திய விமானப்படைக்கு வேண்டிய விமான உதிரிபாகங்கள், எந்திரங்கள் உள்ளிட்டவை தயாரிக்கப்பட்டு வருகிறது. சுயசார்பு இந்தியா திட்டத்தின் கீழ் இலகுரக போர் விமானம் தயாரிப்பில் எச்.ஏ.எல். நிறுவனம் ஈடுபட்டு வருகிறது. 

    இதற்கிடையே, புதிதாக தயாரிக்கப்பட்ட முதல் இலகுரக தேஜாஸ் இரட்டை இருக்கை கொண்ட போர் விமானம் விமானப்படையில் சமீபத்தில் ஒப்படைக்கப்பட்டது.

    இந்நிலையில், பிரதமர் மோடி பெங்களூருவில் இந்துஸ்தான் ஏரோனாட்டிக்கல்ஸ் நிறுவனத்துக்கு இன்று சென்றார். அங்கு தயாரிக்கப்படும் போர் விமானங்கள் குறித்து ஆய்வு நடத்தினார். அப்போது இந்தியாவில் தயாரிக்கப்பட்ட தேஜாஸ் போர் விமானத்தில் ஏறி பறந்தார்.

    போர் விமான பயணித்திற்கு பிறகு பிரதமர் மோடி தனது அனுபவம் குறித்து எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். 

    அந்த பதிவில் அவர் கூறியிருப்பதாவது:-

    தேஜஸ் போர் விமானத்தில் பயணம் வெற்றிகரமாக முடிந்தது. இந்த அனுபவம் நம்பமுடியாத அளவிற்கு செழுமைப்படுத்தியது. நமது நாட்டின் உள்நாட்டுத் திறன்கள் மீதான எனது நம்பிக்கையை கணிசமாக உயர்த்தியது. மேலும், நமது தேசிய திறன் பற்றிய புதிய பெருமை மற்றும் நம்பிக்கையை எனக்கு ஏற்படுத்தியது.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • பெங்களூரு நகரின் அவுட்டர் ரிங் ரோட் பகுதியில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
    • போக்குவரத்து நெரிசலின் போது பசியை போக்க நபர் ஒருவர் டோமினோஸ்-ஐ அழைத்தார்.

    இந்தியாவில் பல்வேறு நகரங்களில் போக்குவரத்து நெரிசல் மிகவும் சாதாரண விஷயமாகவே மாறி விட்டது. மக்கள் நீண்ட நேரம் போக்குவரத்து நெரிசலில் செலவிட வேண்டியிருப்பதால், அதற்கு ஏற்றார் போல் தங்களது அலுவல்களை திட்டமிட வேண்டிய சூழல் நிலவுகிறது. அந்த வகையில், பெங்களூரு, போக்குவரத்து நெரிசலுக்கு பெயர் போன நகரமாக இருக்கிறது.

    அப்படியாக பெங்களூரு நகரின் அவுட்டர் ரிங் ரோட் பகுதியில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. மற்றவர்களை போன்றே போக்குவரத்து நெரிசலில் என்ன செய்வது என்று தெரியாமல், நபர் ஒருவர் தனது எக்ஸ் தளத்தில் வீடியோ ஒன்றை பதிவேற்றம் செய்தார். 30 நொடிகள் மட்டுமே ஓடக்கூடிய வீடியோ, ஒட்டுமொத்த இணையவாசிகளிடையே வேகமாக பரவி, உடனே வைரல் ஆனது.

    வைரல் வீடியோவில் என்னதான் இருந்தது? என்ற எண்ணத்தில் அதனை பார்த்த அனைவரும், அட இப்படியும் செய்யலாமா? என்றும், பெங்களூருவில் இதெல்லாம் சகஜம் தானப்பா? என்றும் கமெண்ட்களை பதிவிட்டு வருகின்றனர். அப்படியாக வீடியோவை வெளியிட்ட நபர், போக்குவரத்து நெரிசலின் போது, தனக்கு ஏற்பட்ட பசியை போக்க, டோமினோஸ்-ஐ அழைத்தார்.

    வாடிக்கையாளரை காக்க வைப்போமா? என்ற நினைப்பில் டோமினோஸ்-ம் தனது வாடிக்கையாளருக்கு சுடச்சுட பீட்சாவை பேக் செய்து, தனது டெலிவரி ஊழியர்களை களத்தில் இறக்கியது. டெலிவரி ஊழியர்கள் கடுமையான போக்குவரத்து நெரிசலிலும், ஆர்டர் செய்த வாடிக்கையாளரின் லைவ் லொகேஷனை பார்த்து, அவரின் காரில் வைத்து சூடான பீட்சாவை டெலிவரி செய்தனர்.

    போக்குவரத்து நெரிசலில் பீட்சா பெறும் வீடியோவைத் தான் அந்த நபர் தனது எக்ஸ் தளத்தில் பதிவேற்றம் செய்தார். அந்த வீடியோவை பார்த்த பலரும் டெலிவரி செய்த ஊழியர்களை பாராட்டியும், பெங்களூருவில் போக்குவரத்து நெரிசல் எப்போ தான் சரியாகுமோ? என்றும் கமெண்ட் செய்தனர்.

    • 15 ஆண்டுகளான வாக்குப்பதிவு எந்திரங்கள் மீண்டும் திருப்பி அனுப்புவதற்கான பணிகள் நடைபெற்றது.
    • பலத்த போலீஸ் பாதுகாப்புடன் பெங்களூருக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

    திருப்பூர் :

    திருப்பூர் மாவட்ட த்தின் பல்வேறு பகுதிகளில் நகர்ப்புற உள்ளாட்சித் தே ர்தலுக்கு பயன்படுத்தப்பட்ட வாக்குப்பதிவு எந்திரங்கள் ராயபுரம் பகுதியில் உள்ள நஞ்சப்பா மாநகராட்சி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் பலத்த பாதுகா ப்புடன் வைக்கப்பட்டிருந்தது.

    இந்நிலையில் தேர்தல் ஆணை யத்தின் உத்தரவுப்படி 15 ஆண்டுகளான வாக்குப்பதிவு எந்திரங்கள் மீண்டும் திருப்பி அனுப்புவதற்கான பணிகள் நடைபெற்றது. இதனை தொடர்ந்து மாநகராட்சி மேல்நிலைப் பள்ளியில் வைக்கப்பட்டிருந்த வாக்குப்பதிவு எந்திரங்களில் 15 வருடங்களுக்கு மேலான வாக்குப்பதிவு எந்திரங்கள் அனைத்து அரசியல் கட்சியினர் முன்னிலையில் சரிபார்க்க ப்பட்டு கண்டெய்னர் லாரிகள் மூலம் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் பெங்களூருக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

    சேலம்-பெங்களூர் பைபாஸ் சாலையில் லிப்ட் கேட்டு வாலிபரிடம் மொபட்டை மர்ம நபர்கள் பறித்து சென்றனர்.

    சேலம்:

    சேலம் சூரமங்கலம் சுந்தர் நகர் பகுதியை சேர்ந்தவர் செல்வம். இவரது மகன் விக்னேஷ் (வயது 22). இவர் நேற்று இரவு 10 மணியளவில் சேலம் பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் டால்மியா போர்டு அருகே மொபட்டில் வந்து கொண்டிருந்தார்.

    அப்போது அந்த பகுதியில் ரோட்டில் மோட்டார் சைக்கிளை நிறுத்தி விட்டு நின்றுகொண்டிருந்த 2 பேர் விக்னேசை நிறுத்தி தங்களது வண்டியில் பெட்ரோல் தீர்ந்துவிட்டதாகவும், அதனால் விக்னேஷ் வண்டியில் அமர்ந்து கொண்டு வண்டியை இழுத்துச் செல்வதாக கூறியுள்ளனர்.இதற்கு சம்மதம் தெரிவித்த விக்னேஷ் தனது வண்டியை லிப்ட் கேட்டவர்களிடம் கொடுத்து ஓட்டச் சொல்லிக் விட்டு பெட்ரோல் தீர்ந்த வண்டியில் அமர்ந்துகொண்டார்.

    அவர்கள் மொபட்டை ஓட்டிக் கொண்டு காலால் மோட்டார் சைக்கிளை தள்ளிக் கொண்டு சென்றனர்.பெட்ரோல் பங்க் அருகே வந்ததும் மொபட்டை ஓட்டி வந்த நபர்கள் திடீரென மின்னல் வேகத்தில் தப்பி மறந்தனர். இதனால் அதிர்ச்சி அடைந்த விக்னேஷ் இதுகுறித்து உடனடியாக சூரமங்கலம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார்.

    நூதன முறையில் மொபட்டை திருடிச் சென்ற நபர்களை போலீசார் வலைவீசி தேடிவருகிறார்கள். அந்த நபர்கள் விட்டுச் சென்ற மோட்டார் சைக்கிளும் வேறு எங்கேயும் திருடி வந்து இருக்கலாம் என்று கருதி போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர். 

    ×