திருப்பூரில் இருந்து மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் பெங்களூருக்கு அனுப்பி வைப்பு

15 ஆண்டுகளான வாக்குப்பதிவு எந்திரங்கள் மீண்டும் திருப்பி அனுப்புவதற்கான பணிகள் நடைபெற்றது. பலத்த போலீஸ் பாதுகாப்புடன் பெங்களூருக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
கண்டெய்னர் லாரிகள் மூலம் அனுப்பி வைக்கப்பட்ட காட்சி.
கண்டெய்னர் லாரிகள் மூலம் அனுப்பி வைக்கப்பட்ட காட்சி.
Published on

திருப்பூர் :

திருப்பூர் மாவட்ட த்தின் பல்வேறு பகுதிகளில் நகர்ப்புற உள்ளாட்சித் தே ர்தலுக்கு பயன்படுத்தப்பட்ட வாக்குப்பதிவு எந்திரங்கள் ராயபுரம் பகுதியில் உள்ள நஞ்சப்பா மாநகராட்சி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் பலத்த பாதுகா ப்புடன் வைக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் தேர்தல் ஆணை யத்தின் உத்தரவுப்படி 15 ஆண்டுகளான வாக்குப்பதிவு எந்திரங்கள் மீண்டும் திருப்பி அனுப்புவதற்கான பணிகள் நடைபெற்றது. இதனை தொடர்ந்து மாநகராட்சி மேல்நிலைப் பள்ளியில் வைக்கப்பட்டிருந்த வாக்குப்பதிவு எந்திரங்களில் 15 வருடங்களுக்கு மேலான வாக்குப்பதிவு எந்திரங்கள் அனைத்து அரசியல் கட்சியினர் முன்னிலையில் சரிபார்க்க ப்பட்டு கண்டெய்னர் லாரிகள் மூலம் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் பெங்களூருக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com