என் மலர்tooltip icon

    உலகம்

    போக்குவரத்து நெரிசல் மிகுந்த நகரங்கள்: பெங்களூருக்கு எந்த இடம் தெரியுமா?
    X

    போக்குவரத்து நெரிசல் மிகுந்த நகரங்கள்: பெங்களூருக்கு எந்த இடம் தெரியுமா?

    • உலகளவில் போக்குவரத்து நெரிசல் மிகுந்த நகரங்களின் பட்டியல் வெளியாகியுள்ளது.
    • இந்தப் பட்டியலில் இங்கிலாந்து தலைநகர் லண்டன் முதல் இடம் பிடித்துள்ளது.

    ஆம்ஸ்டர்டாம்:

    உலகளவில் போக்குவரத்து நெரிசல் அதிகமாக உள்ள நகரங்கள் குறித்து ஆய்வு ஒன்று நடத்தப்பட்டது. நெதர்லாந்தைச் சேர்ந்த டாம் டாம் என்ற நிறுவனம் இந்த ஆய்வை நடத்தியது.

    இந்நிலையில், 2023-ம் ஆண்டுக்கான ஆய்வு பட்டியல் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. இதில், உலகளவில் அதிக நெரிசல் மிகுந்த நகரமாக 6வது இடத்தை இந்தியாவின் பெங்களூரு பிடித்துள்ளது. பெங்களூருவில் 10 கிலோமீட்டர் தூரம் பயணிக்க 28 நிமிடங்கள் 10 நொடிகள் ஆகிறது என கணக்கிடப்பட்டுள்ளது. இது கடந்த ஆண்டுடன் ஒப்பிடும் போது ஒரு நிமிடம் குறைவாகும். அதிகரித்துவரும் போக்குவரத்து நெரிசல் காரணமாக பெங்களூருவாசிகள் கடும் சிரமத்துக்கு ஆளாகின்றனர்.

    கடந்த ஆண்டு 2-வது இடத்தில் இருந்த பெங்களூரு இந்த ஆண்டு 6ம் இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது.

    இந்தப் பட்டியலில் இங்கிலாந்து தலைநகர் லண்டன் முதல் இடம் பிடித்துள்ளது. அங்கு ஒரு மணி நேரத்திற்கு 14 கிலோமீட்டர் மட்டுமே நெரிசல் மிகுந்த நேரத்தில் பயணிக்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    அயர்லாந்தின் டப்ளின் 2-வது இடத்திலும், கனடாவின் டொரண்டோ 3-வது இடத்திலும், இத்தாலியின் மிலன் 4-வது இடத்திலும், பெரு தலைநகர் லிமா 5-வது இடத்திலும் உள்ளன. மகாராஷ்டிராவின் புனே 7வது இடத்தில் உள்ளது.

    முறையான சாலை இணைப்பு இல்லாத காரணத்தாலே இந்த நகரங்களில் மிகப்பெரிய அளவுக்கு போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது எனவும் அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.

    Next Story
    ×