search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள்"

    • அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியினர் முன்னிலையில் 8 பெல் என்ஜினீயர்கள் மூலமாக மேற்கொள்ளப்பட்டு நிறைவு பெற்றது.
    • ரிஜக்டடு எந்திரங்கள் 7 தினங்களுக்குள் பெங்களூர் பெல் நிறுவனத்தினருக்கு அனுப்பி வைக்கப்படும்

    திருப்பூர்:

    திருப்பூர் கலெக்டர் அலுவலக வளாகத்தில் அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியினர் முன்னிலையில் திருப்பூர் மாவட்டத்தில் இருப்பில் உள்ள மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களின் முதல் நிலை சரிபார்ப்பு பணியை கலெக்டர் கிறிஸ்துராஜ் தொடங்கி வைத்தார். பின்னர் அவர் கூறியதாவது:-

    இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவுரைப்படி, சென்னை தலைமை தேர்தல்அலுவலர் - அரசு முதன்மை செயலர் கடிதத்துடன் வரப்பெற்ற கால அட்டவணையின் படி திருப்பூர் மாவட்டத்தில் இருப்பில் உள்ள மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களின் முதல் நிலை சரிபார்ப்பு பணியானது அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியினர் முன்னிலையில் 8 பெல் என்ஜினீயர்கள் மூலமாக மேற்கொள்ளப்பட்டு நிறைவு பெற்றது.

    முதல் நிலை சரிபார்ப்பு பணியின் ஒரு பகுதியாக மாதிரி வாக்குப்பதிவு 8.8.2023 மற்றும் 9.8.2023 ஆகிய இரு தினங்களில் அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியினர் முன்னிலையில் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.

    4.7.2023 அன்று திருப்பூர் மாவட்ட இருப்பு விபரம் 5698 பேலட் யூனிட் எந்திரங்களும், 3600 கண்ட்ரோல் யூனிட் எந்திரங்களும், 3876 விவிபேட் எந்திரங்களும் உள்ளது. இந்திய தேர்தல் ஆணைய அறிவுரைப்படி எப்எல்சி. ரிஜக்டடு எந்திரங்கள் 7 தினங்களுக்குள் பெங்களூர் பெல் நிறுவனத்தினருக்கு அனுப்பி வைக்கப்படும் என்றார்.

    அப்போது மாவட்ட வழங்கல் அலுவலர் ரவிச்சந்திரன் மற்றும் அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியினர் பலர் உடனிருந்தனர். 

    • பெங்களூரில் இருந்து வந்த என்ஜினீயர் குழுவினர் சோதனை
    • மின்னணு வாக்குப்பதிவு எந்திர அறையின் சீலை அரசியல் கட்சியினர் முன்னிலையில் திறக்கப்ப ட்டது.

    நாகர்கோவில் :

    குமரி மாவட்டத்தில் சட்டமன்ற மற்றும் பாராளு மன்ற தொகுதி தேர்தலுக்கு பயன்படுத்தப்படும் மின்னணு எந்திரங்கள் நாகர்கோவில் கலெக்டர் அலுவலகத்தில் உள்ள மின்னணு வாக்குப்பதிவு எந்திர கிடங்கில் வைக்கப்பட்டுள்ளது.

    5,204 மின்னணு எந்திரங்கள், 3,760 கட்டுப்பாட்டு கருவிகள், 2,612 வி.வி. பேட் என மொத்தம் 11 ஆயிரத்து 582 கருவிகள் 3 தளங்களில் பாதுகாப்பாக வைக்கப்பட்டு சீல் வைக்கப்பட்டுள்ளது. வாக்குப்பதிவு எந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள கட்டிடத்திற்கு துப்பாக்கிய ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

    இந்த நிலையில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் சரிபார்க்கும் பணி இன்று தொடங்கியது. இதையடுத்து நாகர்கோவில் கலெக்டர் அலுவலகத்தில் உள்ள மின்னணு வாக்குப்பதிவு எந்திர கிடங்கில் வைக்கப்பட்டிருந்த மின்னணு வாக்குப்பதிவு எந்திர அறையின் சீலை அரசியல் கட்சியினர் முன்னிலையில் திறக்கப்பட்டது.

    இதில் தி.மு.க. சார்பில் வர்கீஸ், பாரதிய ஜனதா சார்பில் ஜெகநாதன், இந்திய கம்யூனிஸ்ட் சார்பில் இசக்கி முத்து மற்றும் அரசியல் கட்சியினர், கலெக்டர் ஸ்ரீதர், மாவட்ட வருவாய் அதிகாரி பாலசுப்ரமணியம், ஆர்.டி.ஓ. சேதுராமலிங்கம், தேர்தல் தாசில்தார் சுசீலா உட்பட பலர் கலந்துகொ ண்டனர்.

    அரசியல் கட்சியினர் அங்கு வைக்கப்பட்டிருந்த மின்னணு எந்திரங்களை பார்வையிட்டனர். இதைத்தொடர்ந்து பெங்களூரில் இருந்து வந்த என்ஜினீயர் குழுவினர் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களை சரி பார்க்கும் பணியை மேற்கொண்டுள்ளனர். இன்று தொடங்கிய சரி பார்க்கும் பணி ஒரு மாத காலம் ஆகலாம் என்று கூறப்படுகிறது.

    • 15 ஆண்டுகளான வாக்குப்பதிவு எந்திரங்கள் மீண்டும் திருப்பி அனுப்புவதற்கான பணிகள் நடைபெற்றது.
    • பலத்த போலீஸ் பாதுகாப்புடன் பெங்களூருக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

    திருப்பூர் :

    திருப்பூர் மாவட்ட த்தின் பல்வேறு பகுதிகளில் நகர்ப்புற உள்ளாட்சித் தே ர்தலுக்கு பயன்படுத்தப்பட்ட வாக்குப்பதிவு எந்திரங்கள் ராயபுரம் பகுதியில் உள்ள நஞ்சப்பா மாநகராட்சி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் பலத்த பாதுகா ப்புடன் வைக்கப்பட்டிருந்தது.

    இந்நிலையில் தேர்தல் ஆணை யத்தின் உத்தரவுப்படி 15 ஆண்டுகளான வாக்குப்பதிவு எந்திரங்கள் மீண்டும் திருப்பி அனுப்புவதற்கான பணிகள் நடைபெற்றது. இதனை தொடர்ந்து மாநகராட்சி மேல்நிலைப் பள்ளியில் வைக்கப்பட்டிருந்த வாக்குப்பதிவு எந்திரங்களில் 15 வருடங்களுக்கு மேலான வாக்குப்பதிவு எந்திரங்கள் அனைத்து அரசியல் கட்சியினர் முன்னிலையில் சரிபார்க்க ப்பட்டு கண்டெய்னர் லாரிகள் மூலம் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் பெங்களூருக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

    • மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் மொத்தம் 3 ஆயிரத்து 193 எந்திரங்கள் உள்ளன.
    • 15 ஆண்டுகள் நிறைவடைந்த எந்திரங்கள் மீண்டும் பயன்படுத்தாமல் அவற்றை அழிக்கப்பட உள்ளது.

    திருப்பூர் :

    திருப்பூர் மாவட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கு பயன்படுத்தப்பட்ட மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் திருப்பூர் நஞ்சப்பா மாநகராட்சி ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் உள்ள ஒரு அறையில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது. மொத்தம் 3 ஆயிரத்து 193 எந்திரங்கள் உள்ளன. தேர்தல் ஆணையத்தின் விதிமுறைப்படி 2008-ம் ஆண்டுக்கு பிறகு தயாரிக்கப்பட்டு 15 ஆண்டுகள் நிறைவடைந்த எந்திரங்கள் மீண்டும் பயன்படுத்தா–மல் அவற்றை அழிக்கப்பட உள்ளது.

    இதற்காக இன்று நஞ்சப்பா மாநகராட்சி பள்ளியில் இருந்து மின்னணு எந்திரங்கள் அனைத்து அரசியல் கட்சியினர் முன்னிலையில் எடுக்கப்பட்டு, கண்டெய்னர் லாரி மூலமாக பெங்களூருவில் உள்ள பெல் நிறுவனத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை மாவட்ட நிர்வாக வளர்ச்சி பிரிவு மற்றும் தேர்தல் பிரிவு அதிகாரிகள் செய்திருந்தனர். 

    • தேர்தல் ஆணையத்தின் சார்பில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் அனுப்பிவைக்கப்பட இருக்கின்றன
    • 2515 மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் சோதனை செய்யப்பட்டன.

     திருப்பூர் :

    வடமாநிலங்களில் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், இதற்கு தேர்தல் ஆணையம் சார்பில் வாக்குப்பதிவு எந்திரங்கள் உள்ளிட்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக திருப்பூரில் இருந்து மாநில தேர்தல் ஆணையத்தின் சார்பில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் அனுப்பிவைக்கப்பட இருக்கின்றன. இதன் காரணமாக திருப்பூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் மற்றும் நஞ்சப்பா பள்ளி உள்ளிட்ட பகுதிகளில் வைக்கப்பட்டிருந்த 2515 மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் சோதனை செய்யப்பட்டன.

    இந்த வாக்குப்பதிவு எந்திரங்கள் சரி பார்க்கப்பட்டு, நஞ்சப்பா பள்ளியில் வைக்கப்பட இருக்கின்றன. இதன் பின்னர் மாநில தேர்தல் ஆணையம் அறிவுறுத்தலின் பேரில், வருவாய்த்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டு, தேவையான மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் அனுப்பிவைக்கப்பட இருக்கின்றன.

    • கண்ட்ரோல் யூனிட், 1,698 மற்றும் விவிபேட் 1,836 எந்திரங்கள் ஆகியவை கொண்டு வரப்பட்டுள்ளன.
    • துப்பாக்கி ஏந்திய போலீஸ் காவலும் போடப்பட்டுள்ளது.

    பல்லடம்:

    தமிழகத்தில் கடந்த ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நடைபெற்றது. இதற்காக திருப்பூர் மாவட்டத்தில் உள்ள உடுமலை, மடத்துக்குளம், தாராபுரம், உள்ளிட்ட சட்டமன்ற தொகுதிகளில் பயன்படுத்தப்பட்ட மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் பல்லடம் தாலுகா அலுவலகத்திற்கு கொண்டு வரப்பட்டன. இதனை மாவட்ட வழங்கல் அலுவலர் முருகன், பல்லடம் தாசில்தார் நந்தகுமார் உள்ளிட்ட அதிகாரிகள் ஆய்வு செய்தனர். முன்னதாக அனைத்து அரசியல் கட்சியினர் முன்னிலையில் வாக்குப்பதிவு எந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறை திறக்கப்பட்டது.

    இது குறித்து மாவட்ட வழங்கல் அலுவலர் முருகன் கூறியதாவது: -

    உடுமலை, மடத்துக்குளம், தாராபுரம் உள்ளிட்ட திருப்பூர் மாவட்டத்தில் பயன்படுத்தப்பட்ட பேலட் யூனிட் 3,280, கண்ட்ரோல் யூனிட், 1,698 மற்றும் விவிபேட் 1,836 எந்திரங்கள் ஆகியவை கொண்டு வரப்பட்டுள்ளன. இவைகளில் பழுதான வாக்குப்பதிவு எந்திரங்கள் தனியாக பிரிக்கப்பட்டு வருகின்றன. பழுது பார்த்து அவைகளை சரிசெய்ய பெங்களூர் பெல் நிறுவனத்துக்கு அனுப்பி வைக்கப்படும்.மற்ற மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மற்றும் கட்டுப்பாட்டு இயந்திரங்கள் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது. இதற்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் காவலும் போடப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    ×