search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "போக்குவரத்து நெரிசல்"

    • உலகளவில் போக்குவரத்து நெரிசல் மிக்க நகர பட்டியலில் லண்டன் முதல் இடம்.
    • இந்தியாவில் இருந்து பெங்களூரு, புனே நகரங்கள் மட்டுமே இடம்.

    உலகளவில் போக்குவரத்து நெருக்கடி மிக்க நகரங்கள் பட்டியலில் 2வது இடத்தில் இருந்த பெங்களூரு, 2023ம் ஆண்டு பட்டியலில் 6வது இடத்திற்கு இறங்கி முன்னேற்றம் கண்டுள்ளது.

    லண்டன் முதல் இடத்தை பிடித்துள்ளது. சமீபத்திய ஆய்வு பட்டியலின்படி, பெங்களூருவில் 10 கி.மீ தூரத்தைக் கடக்க சராசரியாக 28.10 நிமிடம் ஆகிறது.

    டாப் 10 நகரங்களில் இந்தியாவில் இருந்து பெங்களூரு, புனே நகரங்கள் மட்டுமே இடம் பெற்றுள்ளன.

    • சாலை ஆக்கிரமிப்பு காரணமாக ஆம்புலன்ஸ்கள் செல்ல சிரமம் ஏற்படுகிறது
    • ரெட்டியார் பட்டி சந்தை சனிக்கிழமை தோறும் இயங்கி வருகிறது.

    தென்காசி:

    வீ.கே. புதூர் தாலுகாவிற்கு உட்பட்ட ரெட்டியார்பட்டி கிராமத்தில் உள்ள முக்கிய சாலைகள் எங்கும் ஆக்கிரமிப்புகள் அதிகம் காணப்படுவதால் அவ்வழியே மருத்துவமனை செல்லும் ஆம்புலன்ஸ்கள் சாலைகளை கடந்து செல்ல மிகுந்த சிரமம் அடைந்து வருகிறது. மேலும் கடையநல்லூர், சுரண்டை பகுதிகளில் இருந்து பொதுமக்கள் அதிகளவில் அவசர தேவைகளுக்கு நெல்லை செல்வதற்கு இந்த ரெட்டியார்பட்டி சாலையை பயன்படுத்தி வருகின்றனர்.

    மாலை நேரங்களில் ரெட்டியார்பட்டி பிரதான சாலை ஓரங்களில் இருசக்கர வாகனங்கள் அதிகளவில் அணி வகுத்து நிற்பதால் பெரும் போக்குவரத்து நெருக்கடி ஏற்படுகிறது. வாரத்தில் இறுதிநாளான சனிக்கிழமை தோறும் ரெட்டியார் பட்டி சந்தை இயங்கி வருகிறது.

    சந்தை இயங்கும் நாட்களில் சாலைகளில் ஒரு சில வியாபாரிகள் மிகப்பெரிய அளவில் ஆக்கிரமிப்பு செய்து வியாபாரம் நடத்தி வருவதால் அன்றைய நாட்களிலும் போக்குவரத்து நெருக்கடி தொடர்வதாகவும், சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் இதனை கவனத்தில் கொண்டு ரெட்டியார்பட்டியில் சாலை ஓரங்களில் ஆக்கிரமிப்புகளில் ஈடுபட்டுள்ள கடைகள், கட்டிட ங்களை ஆய்வு செய்து அதன் மீது நடவடிக்கை எடுத்து போக்குவரத்து நெருக்கடிக்கு தீர்வு காண வேண்டும் என அப்பகுதி மக்களின் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • நெடுஞ்சாலையில் தினசரி நூற்றுக்கணக்கான கனரக வாகனங்கள் இந்த சாலையில் சென்று வருகின்றனர்.
    • சாலை குறுகலாக உள்ள–தால் அடிக்கடி போக்கு–வரத்து நெரிசல் ஏற்படுகிறது.

    மெலட்டூர்:

    தஞ்சையில் இருந்து திட்டை, மெலட்டூர் வழியாக திருக்கருகாவூர் வரையிலான நெடுஞ்சாலையில் தினசரி நூற்றுக்கணக்கான கனரக வாகனங்கள், வெளியூரிலிருந்து காரில் தினசரி எண்ணற்ற சுற்றுலா வாகனங்கள் மற்றும் திட்டை வசிஷ்டேஸ்வரர் கோயில், திருக்கருகாவூர் கர்ப்பரட்சாம்பிகை அம்பாள் கோயில், புன்னைநல்லூர் மாரியம்மன் கோயில் உள்பட பல்வேறு கோயி லுக்கு வந்து செல்லும் ஏராளமான பக்தர்கள் இந்த சாலையில் சென்று வருகின்றனர்.

    மெலட்டூர் கடைவீதி உள்ள நெடுஞ்சாலை மிகவும் குறுகலாக உள்ளதால் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்படுவதால் மெலட்டூர் கடைவீதியில் நெடுஞ் சாலையில் போக்குவரத்துக்கு இடையூறாக உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி சாலையை அகலப்படுத்த வேண்டும் அல்லது புறவழிச்சாலை ஏற்படுத்த அரசு நடவடிக்கை டுக்க வேண்டுமென வாகன ஓட்டிகள், பொதுமக்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர்.

    • பாதாள சாக்கடை திட்ட பணிகளை மாவட்ட கலெக்டர் செந்தில் ராஜ் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
    • சாலைகளில் சுற்றித் திரியும் கால்நடைகளால் பொதுமக்கள் பாதிக்கப்படுகிறார்கள்.

    திருச்செந்தூர்:

    திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் வளாகத்தில் ரூ.300 கோடி மதிப்பில் பெருந்திட்ட வளாகம் கட்டுமான பணி கள் நடைபெற்று வருகிறது.

    கலெக்டர் ஆய்வு

    அந்த பணி மற்றும் பொதுப்பணித்துறை மூலம் நடைபெற்று வரும் பாதாள சாக்கடை திட்ட பணிகளை மாவட்ட கலெக்டர் செந்தில் ராஜ் பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறிய தாவது:-

    திருச்செந்தூர் சுப்பிர மணியசாமி கோவிலில் ரூ.300 கோடி மதிப்பிலான பெரும் திட்ட வளாக பணியை கடந்த அக்டோபர் மாதம் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

    போக்குவரத்து நெரிசல்

    சூரசம்ஹாரம் நிகழ்ச் சிக்கு பிறகு தொடர்ந்து வேலை நடைபெற்று வருகி றது. அதையும் திருச்செந்தூர் நகராட்சி மற்றும் பொதுப் பணித்துறை மூலம் நடை பெறும் பாதாள சாக்கடை திட்டப் பணியையும் ஆய்வு செய்தோம்.

    திருச்செந்தூரில் போக்குவரத்து நெரிசல் பிரச்சினைக்கு தீர்வு காண விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும். தேர் திரு விழா நடைபெற உள்ள நிலையில் அதற்கு முன்பாக அனைத்து சாலைகளும் சீரமைக்கப்படும்.

    சாலைகளில் சுற்றித் திரியும் கால்நடைகளால் பொதுமக்கள் பாதிக்கப்படு கிறார்கள். எனவே சாலைகளில் மாடுகளை சுற்றி திரிய விடாமல் வீட்டிலேயே வைத்து வளர்க்க வேண்டும். மீறி கால்நடைகள் சாலைக்கு வரும்போது அதிகாரிகளால் நடவடிக்கை எடுக்கப்படும்.

    மேலும் கோவில் வளா கத்தில் உள்ள குப்பைகளை மக்கும் குப்பைகள், மக்காத குப்பைகள் என பிரித்து அப்புறப்படுத்த நகராட்சி மூலம் நடவடிக்கை எடுக் கப்பட்டு வருகிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    அப்போது மாவட்ட வருவாய் அலுவலர் கண்ண பிரான், அறங்காவலர் குழு தலைவர் அருள் முருகன், திருச்செந்தூர் ஆர்.டி.ஓ. புஹாரி, சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் இணை ஆணையர் கார்த்திக், நகராட்சி தலைவர் சிவ ஆனந்தி, துணைத்தலைவர் ரமேஷ் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    தொடர்ந்து கலெக்டர் செந்தில்ராஜ் திருச்செந்தூர் தெப்பக்குளம் மற்றும் அதன் அருகில் உள்ள ஆவுடையார் குளத்தையும் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    ×