search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Suryakumar Yadav"

    • சூர்யகுமார் யாதவ் ஒருநாள் கிரிக்கெட்டிலும் டி20 போலவே பேட்டிங் செய்ய விரும்புகிறார்.
    • சூர்யகுமார் யாதவ் ஒருநாள் கிரிக்கெட்டுக்கு ஏற்றார் போன்று அவரது பேட்டிங் ஸ்டைலை நிச்சயம் மாற்ற வேண்டும்.

    மும்பை:

    இந்திய கிரிக்கெட் அணி வெஸ்ட் இண்டீசில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்று ஆடி வருகிறது. இதில் 2 போட்டிகள் நிறைவடைந்த நிலையில் 1-1 என தொடர் சமநிலையில் உள்ளது. இரு அணிகளுக்கும் இடையிலான 3வது ஒருநாள் போட்டி நாளை நடைபெறுகிறது.

    இந்நிலையில் வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான ஒருநாள் போட்டியே சூர்யகுமார் யாதவுக்கு கடைசி வாய்ப்பாக இருக்கலாம் என இந்திய முன்னாள் வீரர் வாசிம் ஜாபர் கருத்து தெரிவித்துள்ளார்.

    இது குறித்து அவர் கூறியதாவது:-

    சூர்யகுமார் யாதவ் மூன்றாவது ஒருநாள் போட்டியில் வாய்ப்பினை பெறுவார். ஆனால் அதுதான் அவரது கடைசி வாய்ப்பாக இருக்கும் என நினைக்கிறேன். ஏனெனில் கே.எல். ராகுல், ஷ்ரேயாஸ் ஐயர் போன்ற பேட்ஸ்மேன்கள் அணிக்குள் வந்துவிட்டால் சூர்யகுமார் யாதவால் அணியில் நீடிக்க முடியாது.

    ஒருநாள் கிரிக்கெட்டில் அவர் பேட்டிங் செய்யும் விதம் அதிக ஆபத்தான வகையில் இருக்கிறது. அவர் ஒவ்வொரு பந்திற்கும் பவுண்டரியை எதிர்நோக்கி விளையாடுகிறார். ஒருநாள் போட்டியில் அதிகமாக பவுண்டரிகளை அடிக்க முயற்சித்தால் எளிதாக விக்கெட்டுகளை இழக்க நேரிடும்.

    50 ஓவர் கிரிக்கெட்டில், நீங்கள் ஆட்டத்தை இறுதி வரை எடுத்து செல்ல வேண்டும். சூர்யகுமார் யாதவ் ஒருநாள் கிரிக்கெட்டுக்கு ஏற்றார் போன்று அவரது பேட்டிங் ஸ்டைலை நிச்சயம் மாற்ற வேண்டும். அவர் ஒருநாள் கிரிக்கெட்டிலும் டி20 போலவே பேட்டிங் செய்ய விரும்புகிறார். அதன் காரணமாகவே அவர் தொடர்ச்சியாக தனது விக்கெட்டுகளை எளிதாக இழந்து வருகிறார்.

    இவ்வாறு வாசிம் ஜாபர் கூறினார்.

    • பேட்டிங் செய்யும் விதத்தை பார்க்கும்போது 4 அல்லது 5-வது வரிசைக்கு ஒரு நல்ல தேர்வாக இருக்க முடியும்.
    • அதேவேளையில் அதிக பந்துகளை எதிர்கொள்ள வேண்டியிருப்பதால் ஒரு நாள் போட்டி வடிவம் வேறுபட்டது.

    மும்பை:

    இந்திய கிரிக்கெட் அணி வீரர் சூர்யகுமார் யாதவ், 20 ஓவர் போட்டியில் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். ஆனால் ஒரு நாள் போட்டிகளில் ரன் குவிக்க திணறி வருகிறார்.

    தற்போது அவர் வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான ஒரு நாள் போட்டி தொடரில் விளையாடி வருகிறார்.

    இந்நிலையில் ஒருநாள் போட்டியில் 4-வது வரிசைக்கு சூர்யகுமார் யாதவ் பொருத்தமானவர் என்று இந்திய அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் ஆர்.பி.சிங் தெரிவித்து உள்ளார். இதுதொடர்பாக அவர் கூறியதாவது:-

    வருகிற 50 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் சூர்யகுமார் யாதவ், ஸ்ரேயாஸ் அய்யருடன் 4-வது இடத்துக்கு ஒரு நல்ல தேர்வாக இருப்பார். சூர்யகுமார் யாதவ் பொருத்தமாக இருந்தால் அவருக்கு போட்டிகளில் விளையாட வாய்ப்பு கொடுக்க வேண்டும். மேலும் நிச்சயமாக ஒரு நல்ல தேர்வாக இருப்பார்.

    அவர் பேட்டிங் செய்யும் விதத்தை பார்க்கும்போது 4 அல்லது 5-வது வரிசைக்கு ஒரு நல்ல தேர்வாக இருக்க முடியும். 20 ஓவர் கிரிக்கெட்டில் சூர்யகுமார் யாதவின் தற்போதைய ஆட்டம் மிகவும் சிறப்பாக உள்ளது.

    அதேவேளையில் அதிக பந்துகளை எதிர்கொள்ள வேண்டியிருப்பதால் ஒரு நாள் போட்டி வடிவம் வேறுபட்டது. இதனால் சூர்யகுமார் யாதவ் தனது ஆட்ட திட்டத்தை கொஞ்சம் மாற்ற வேண்டும்.

    அவருக்கு ஒருநாள் போட்டிகளில் அனுபவம் இல்லாவிட்டாலும் அவரது திறமையை வெளிப்படுத்த போதுமான வாய்ப்புகளை வழங்குவது முக்கியம். வேகப்பந்து வீச்சாளர் உம்ரான் மாலிக்கை நீண்ட கால விருப்ப வீரராக நீங்கள் நினைத்தால் அதற்கேற்ப அவர் மெருகூட்டப்பட வேண்டும். ஒருவரை ஒரு போட்டியில் விளையாட வைத்துவிட்டு இரண்டு போட்டிகளுக்கு வெளியே உட்கார வைக்க முடியாது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • இப்போதே எங்கள் இருவரையும் வைத்து ஒப்பீடு செய்யக்கூடாது.
    • சூர்யாவுக்கு 32-33 வயதாகிவிட்டது. நான் இன்னமும் 22 வயதான சிறுவன்.

    பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் வளர்ந்து வரும் வீரர் தான் முகமது ஹாரிஸ். சர்வதேச கிரிக்கெட்டின் தனது முதல் போட்டியில் சரியாக விளையாடவில்லை என்ற போதிலும், தனது அதிரடியான ஆட்டம் காரணமாக தனித்து விளங்குகிறார்.

    தற்போது இலங்கையில் நடைபெற்று வரும் ஏ.சி.சி. எமர்ஜிங் ஆசிய கோப்பை தொடருக்காக பாகிஸ்தான் அணியில் முகமுது ஹாரிஸ் விளையாடி வருகிறார். இந்த தொடரில் பாகிஸ்தான் விளையாடிய இரண்டு போட்டிகளிலும் அந்த அணி வெற்றி பெற்றுள்ளது. வித்தியாசமான ஷாட்களை விளையாடி வரும் அவரை இந்திய அணியின் 360 டிகிரி என அழைக்கப்படும் சூர்யகுமார் யாதவுடன் உடன் ஒப்பிட்டு கருத்துகள் வெளிவந்த வண்ணம் உள்ளது.

    இந்நிலையில் சூர்யகுமார் யாதவ், டிவில்லியர்ஸ் பெயருடன் ஒப்பிட விரும்பவில்லை என இளம் பாகிஸ்தான் வீரர் முகமது ஹாரிஸ் தெரிவித்துள்ளார்.

    இது குறித்து அவர் கூறியதாவது:-

    இப்போதே எங்கள் இருவரையும் வைத்து ஒப்பீடு செய்யக்கூடாது. சூர்யாவுக்கு 32-33 வயதாகிவிட்டது. நான் இன்னமும் 22 வயதான சிறுவன். அந்த இடத்தை அடைவதற்கு நான், இன்னும் அதிகமாக உழைக்க வேண்டும்.

    மேலும் சூர்யா தனக்கென ஒரு இடத்திலும், ஏ.பி. டி வில்லியர்ஸ் தனது சொந்த அளவிலும், நான் எனது சொந்த அளவில் இருக்கிறேன். நான் எனக்கென 360 டிகிரி கிரிக்கெட்டர் என்ற பெயரை எடுக்க விரும்புகிறேன். அவர்களின் பெயரை பயன்படுத்திக் கொள்ள விரும்பவில்லை.

    • அவருடைய இந்த தன்னம்பிக்கை கூட இருக்கும் பேட்ஸ்மேன்களுக்கும் உற்சாகத்தை கொடுக்கிறது.
    • சிலர் நாம் தான் சிறப்பாக விளையாடி விட்டோமே என்ற பெருமையில் இருந்து விடுவார்கள். ஆனால் சூர்யகுமார் அப்படி அல்ல.

    ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 57-வது லீக் போட்டியானது நேற்று மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்று முடிந்தது. இந்த போட்டியில் ரோகித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியும், ஹார்டிக் பாண்டியா தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணியும் மோதின.

    இதில் முதலில் விளையாடிய மும்பை இந்தியன்ஸ் அணியானது நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 218 ரன்களை குவித்தது. பின்னர் 219 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய குஜராத் அணியானது 20 ஓவர்களின் முடிவில் 8 விக்கெடுகளை இழந்து 191 ரன்கள் குவித்தது. இதனால் 27 ரன்கள் வித்தியாசத்தில் மும்பை அணி வெற்றி பெற்றது.

    இந்நிலையில் இந்த போட்டி ஒரு இன்ட்ரஸ்டிங்கான போட்டியாக அமைந்தது என மும்பை அணியின் கேப்டன் ரோகித் சர்மா கூறியுள்ளார்.

    இது குறித்து அவர் கூறியதாவது:-

    முதலில் பேட்டிங் செய்து பெரிய ரன்களை குவித்தால் நிச்சயம் அவர்களை எங்களால் தடுத்து நிறுத்த முடியும் என்று நினைத்தோம். அந்த வகையில் நாங்கள் இரண்டாவதாக பந்துவீசும் போது பவர் பிளேவில் சிறப்பாக பந்து வீசி விக்கெட்டுகளை எடுத்தோம். ஏனென்றால் போகப் போக பந்துவீச்சுக்கு கடினமான சூழல் ஏற்பட்டது. பணிப் பொழிவு அதிகமாக இருந்ததால் பந்துவீச்சாளர்கள் அதிக ரன்கள் கொடுத்தனர். இருப்பினும் எங்களுடைய செயல்பாடு சிறப்பாக இருந்தது.

    சூர்யகுமார் யாதவுக்கு இருக்கின்ற தன்னம்பிக்கை நிச்சயமாக பாராட்டப்பட வேண்டியது. நாங்கள் தொடரின் தொடக்கத்தில் இடது கை வலது கை பேட்ஸ்மேன்கள் களத்தில் இருப்பது போல் பார்த்துக் கொள்ள வேண்டும் என்று கூறினோம். ஆனால் இன்று சூர்ய குமார் அடம்பிடித்து தான் களத்துக்கு செல்வேன் என்று உறுதியாக கூறினார். இது போன்ற தன்னம்பிக்கை தான் ஒவ்வொரு பேட்ஸ்மேனுக்கும் தேவை.

    அவருடைய இந்த தன்னம்பிக்கை கூட இருக்கும் பேட்ஸ்மேன்களுக்கும் உற்சாகத்தை கொடுக்கிறது. இது நல்ல விஷயம் என்னவென்றால் ஒவ்வொரு ஆட்டத்தையும் புதிய ஆட்டமாக அவர் தொடங்குகிறார். ஒவ்வொரு கிரிக்கெட் வீரரும் இப்படித்தான் யோசிக்க வேண்டும். சிலர் நாம் தான் சிறப்பாக விளையாடி விட்டோமே என்ற பெருமையில் இருந்து விடுவார்கள். ஆனால் சூர்யகுமார் அப்படி அல்ல.

    என ரோகித் சர்மா கூறினார்.

    • முகமது ஷமி வீசிய பந்தை சூர்யகுமார் யாதவ் தேர்ட் மேன் திசையில் சிக்சர் அடித்தார்.
    • இந்த சிக்சரை அனைவரும் ஆச்சரியத்தில் பார்த்தனர்.

    குஜராத் அணிக்கு எதிரான போட்டியில் மும்பை அணி 27 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியை பெற்றுள்ளது. இந்த வெற்றியின் மூலம் மும்பை அணியின் பிளே ஆஃப் வாய்ப்பு பிரகாசமாகியுள்ளது. இந்த வெற்றிக்கு சூர்யகுமார் யாதவின் அபார சதமே முக்கிய காரணமாக அமைந்துள்ளது.

    இந்த நிலையில் நேற்றையப் போட்டியில் சூர்யகுமார் யாதவ் விளாசிய சிக்சர் ஒன்று ரசிகர்கள் மட்டுமல்லாமல் கிரிக்கெட் கடவுள் என்று கொண்டாடப்படும் சச்சின் டெண்டுல்கரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளது. முகமது ஷமி வீசிய பந்தை சூர்யகுமார் யாதவ் தேர்ட் மேன் திசையில் சிக்சராக்கினார்.


    இந்த சிக்சரை அனைவரும் ஆச்சரியத்தில் பார்த்தனர். பந்து வீசிய முகமது சமி கூட திகைத்து போனார் என்றே சொல்லலாம். இதனை நேரில் பார்த்த சச்சின் டெண்டுல்கரே, மிரண்டு போய் சாவ்லாவிடம் அந்த ஷாட் எப்படி அடித்தார் என்பதை சைகை மூலம் செய்து காட்டி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

    இந்த புகைப்படத்தை வைத்து நெட்டிசன்கள் அது எப்படி திமிங்கலம் என்ற சந்தானம் காமெடி டெம்லேட்டை வைத்து மீம்ஸ் போட்டு வருகின்றனர்.

    • மும்பை அணிக்காக முதல் சத்தத்தை பதிவு செய்தவர் இலங்கை அணியின் அதிரடி ஆட்டக்காரர் ஜெயசூர்யா ஆவார்.
    • மும்பை அணிக்காக சதம் அடித்தவர்கள் அனைவரும் கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்ததுள்ளார்.

    ஐபிஎல் 2023 தொடரின் 57-வது லீக் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் - குஜராத் டைட்டன்ஸ் அணிகளுக்கு இடையே நடைபெற்றது. இந்த போட்டியில் முதலில் பேட் செய்த மும்பை இந்தியன்ஸ் 20 ஓவரில் 218 ரன்கள் குவித்துள்ளது.

    அதில் அதிரடியாக விளையாடிய சூர்யகுமார் யாதவ் ஐபிஎல் தொடரில் தனது முதல் சதத்தை பதிவு செய்தார். அவர் பேட்டிங் செய்ய வந்தது முதல் குஜராத் பெளலர்கள் பந்து வீச்சை நாலபுறமும் பறக்க விட்டார். அவர் கடைசி வரை ஆட்டமிழக்காமல் 103 ரன்கள் எடுத்தார்.

    இதன் மூலம் ஐபிஎல் தொடரில் மும்பை அணிக்காக சதம் அடித்தவர்கள் பட்டியலில் சூர்யகுமார் யாதவ் 5-வது இடத்தை பிடித்துள்ளார். மும்பை அணிக்காக முதல் சத்தத்தை பதிவு செய்தவர் இலங்கை அணியின் அதிரடி ஆட்டக்காரர் ஜெயசூர்யா ஆவார். அதற்கு அடித்தப்படியாக சச்சின், ரோகித் சர்மா, சிம்மோன்ஸ் சதம் அடித்துள்ளனர். அதனை தொடர்ந்து சூர்யகுமார் யாதவ் சதம் அடித்து சாதனை படைத்துள்ளார்.

    மும்பை அணிக்காக சதம் அடித்தவர்கள் அனைவரும் கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்ததுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • அதிரடியாக ஆடிய சூர்யகுமார் யாதவ் 26 பந்துகளில் தனது அரை சதத்தை பூர்த்தி செய்து அசத்தினார்.
    • சூர்யகுமார் யாதவ் 7 பவுண்டரி, 6 சிக்சர்களுடன் 83 ரன்கள் எடுத்து அவுட் ஆனார்.

    மும்பை:

    நடப்பு ஐபிஎல் தொடரில் நேற்று 54-வது லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதின.

    அதில் டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் முதலில் பந்து வீச்சு தேர்வு செய்தது. முதலில் விளையாடிய' ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 20 ஓவரில் 6 விக்கெட் இழப்பிற்கு 199 ரன்கள் குவித்தது.

    இதையடுத்து, 200 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் மும்பை அணி 16.3 ஒவர்களில் 4 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 200 ரன்கள் எடுத்தது. 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் மும்பை அணி வெற்றிபெற்றது

    இந்த போட்டியில் பெங்களூரு அணி பந்துவீச்சை சூர்யகுமார் யாதவ் நாலாபுறமும் பறக்க விட்டார். அதிரடியாக ஆடிய சூர்யகுமார் யாதவ் 26 பந்துகளில் தனது அரை சதத்தை பூர்த்தி செய்து அசத்தினார். தொடர்ந்து வாணவேடிக்கை காட்டிய அவர் 7 பவுண்டரி, 6 சிக்சர்களுடன் 83 (35) ரன்கள் எடுத்தார்.

    இந்த நிலையில் சூர்யகுமார் யாதவுக்கு இந்திய அணி முன்னாள் கேப்டன் பாராட்டு தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் , உலகின் தலைசிறந்த டி20 கிரிக்கெட் வீரர் சூர்ய குமார் யாதவ் தான். அவர் கம்ப்யூட்டரில் பேட் செய்வது போல் தெரிகிறது.

    என தெரிவித்துள்ளார்.

    • இந்த போட்டியில் 13 பந்துகளை சந்தித்த அவர் இரண்டு சிக்சர் ஒரு பவுண்டரி என 20 ரன்கள் அடித்து ஆட்டமிழந்து வெளியேறினார்.
    • இம்பேக்ட் பிளேயராக களம் புகுந்த ரோகித் சர்மா முதல் விக்கெட்டுக்கு 65 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து கொடுத்தார்.

    ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 22-வது லீக் போட்டியானது நேற்று மும்பை வான்கடடே மைதானத்தில் நடைபெற்று முடிந்தது. இந்த போட்டியில் மிகச்சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய மும்பை இந்தியன்ஸ் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் கொல்கத்தா அணியை வீழ்த்தி அசத்தலான வெற்றியை பதிவு செய்திருந்தது.

    இந்நிலையில் இந்த போட்டியின் போது மும்பை அணியின் கேப்டன் ரோகித் சர்மா பிளேயிங் லெவனில் இடம்பெறாததால் சூர்யகுமார் யாதவ் தலைமையிலான மும்பை அணி கொல்கத்தா அணிக்கெதிரான இந்த போட்டியில் களம் இறங்கியது.

    ஆனால் முதல் பாதியில் விளையாடாத ரோகித் சர்மா கொல்கத்தா அணி 185 ரன்கள் குவித்ததும் அடுத்ததாக மும்பை அணி சேசிங் செய்ய வருகையில் இம்பேக்ட் பிளேயராக துவக்க வீரராக இஷான் கிஷனுடன் களமிறங்கினார். அந்த வகையில் இம்பேக்ட் பிளேயராக களம் புகுந்த ரோகித் சர்மா முதல் விக்கெட்டுக்கு 65 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து கொடுத்தார்.

    இந்த போட்டியில் 13 பந்துகளை சந்தித்த அவர் இரண்டு சிக்சர் ஒரு பவுண்டரி என 20 ரன்கள் அடித்து ஆட்டமிழந்து வெளியேறினார்.

    இந்நிலையில் இந்த போட்டியில் ரோகித் சர்மா ஏன் இம்பேக்ட் வீரராக களமிறங்கினார் என்பது குறித்து மும்பை அணியின் கேப்டன் சூர்யகுமார் யாதவ் விளக்கம் ஒன்றினை அளித்துள்ளார்.

    இது குறித்து அவர் கூறுகையில்:-

    நாங்கள் இந்த போட்டியில் முதலில் பந்துவீசவே விரும்பினோம். ஏனெனில் மைதானம் கொஞ்சம் டிரையாக இருந்ததால் இரண்டாவது பேட்டிங்கிற்கு மைதானம் நன்றாக ஒத்துழைக்கும் என்று நினைத்தோம். அதன்படியே முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தோம். ரோகித் சர்மாவிற்கு இந்த போட்டிக்கு முன்னதாக வயிற்று பகுதியில் சற்று அசவுகரியம் ஏற்பட்டது.

    அதனாலேயே அவர் இந்த போட்டியின் பிளேயிங் லெவனில் இடம்பெறவில்லை. பின்னர் அவர் சேசிங்கின் போது இம்பேக்ட் பிளேயராக களமிறங்கினார்.

    என்று சூர்யகுமார் யாதவ் கூறினார்.

    • இந்திய தரப்பில் அதிகபட்சமாக அர்ஷ்தீப்சிங் 14-வது இடத்தில் உள்ளார்.
    • விராட்கோலி 15-வது இடத்தில் தொடருகிறார்.

    சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.), 20 ஓவர் போட்டி கிரிக்கெட் வீரர்களின் புதிய தரவரிசை பட்டியலை நேற்று வெளியிட்டது.

    இதன்படி பேட்ஸ்மேன் தரவரிசையில் ஐ.பி.எல். போட்டியில் தொடர்ந்து சொதப்பி வரும் இந்திய அதிரடி ஆட்டக்காரர் சூர்யகுமார் யாதவ் (906 புள்ளி) முதலிடத்தில் நீடிக்கிறார்.

    பாகிஸ்தான் விக்கெட் கீப்பர் முகமது ரிஸ்வான் (811 புள்ளி) 2-வது இடத்திலும், கேப்டன் பாபர் அசாம் (755 புள்ளி) 3-வது இடத்திலும், தென்ஆப்பிரிக்க வீரர் மார்க்ரம் (748 புள்ளி) 4-வது இடத்திலும், நியூசிலாந்தின் டிவான் கான்வே (745 புள்ளி) 5-வது இடத்திலும் உள்ளனர். விராட்கோலி 15-வது இடத்தில் தொடருகிறார்.

    பந்து வீச்சாளர் தரவரிசையில் ஆப்கானிஸ்தான் வீரர்கள் ரஷித் கான் (710 புள்ளி), பசல்ஹக் பரூக்கி (692 புள்ளி), ஆஸ்திரேலியாவின் ஹேசில்வுட் (690 புள்ளி), இலங்கையின் ஹசரங்கா (686 புள்ளி), தீக்ஷனா (684 புள்ளி) ஆகியோர் முறையே முதல் 5 இடங்களில் மாற்றமின்றி தொடருகின்றனர்.

    இந்திய பவுலர்கள் யாரும் டாப்-10 இடத்திற்குள் இல்லை. இந்திய தரப்பில் அதிகபட்சமாக அர்ஷ்தீப்சிங் 14-வது இடத்தில் உள்ளார்.

    • சூர்யகுமார் யாதவுக்கு பதிலாக சஞ்சு சாம்சனை முயற்சித்து பார்க்க வேண்டும் என்று முன்னாள் வீரர் வாசிம் ஜாபர் கருத்து தெரிவித்தார்.
    • சூர்யகுமார் யாதவை 7-வது வரிசையில் இறக்கியதற்கு சில காரணங்கள் இருந்திருக்க வேண்டும்.

    மும்பை:

    இந்திய கிரிக்கெட் அணி பேட்ஸ்மேன் சூர்யகுமார் யாதவ், 20 ஓவர் கிரிக்கெட்டில் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார்.

    ஆனால் ஒருநாள் போட்டியில் அவர் தொடர்ந்து மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 3 ஒருநாள் போட்டியிலும் சூர்யகுமார் யாதவ் ரன் ஏதும் எடுக்காமல் அவுட் ஆனார். இந்த ஆட்டங்களில் முதல் பந்திலேயே ஆட்டம் இழந்தார். இதனால் அவர் கடும் விமர்சனத்துக்குள்ளாகி இருக்கிறார்.

    ஒருநாள் போட்டியில் சூர்யகுமார் யாதவுக்கு பதிலாக சஞ்சு சாம்சனை முயற்சித்து பார்க்க வேண்டும் என்று முன்னாள் வீரர் வாசிம் ஜாபர் கருத்து தெரிவித்தார். இதே போல் சில முன்னாள் வீரர்களும் எதிர்ப்பு தெரி வித்து இருக்கிறார்கள்.

    இந்த நிலையில் சூர்ய குமார் யாதவுக்கு இந்திய முன்னாள் கேப்டன் கபில் தேவ் ஆதரவு தெரிவித்து உள்ளார்.

    சூர்யகுமார் போன்ற திறமையான வீரரை ஆதரிப்பதன் மூலம் அணி நிர்வாகம் சரியானதை செய்வதாக நான் கருதுகிறேன். நன்றாக விளையாடிய வீரருக்கு எப்போதும் அதிக வாய்ப்புகள் கிடைக்கும்.

    சூர்யகுமார் யாதவை சஞ்சு சாம்சனுடன் ஒப்பிடாதீர்கள். இது சரியானதல்ல. சஞ்சுசாம்சன் மோசமாக செயல்பட்டால் வேறுயாரையாவது பற்றி பேசுவீர்கள். அணி நிர்வாகம் சூர்யகுமார் யாதவை ஆதரிக்க முடிவு செய்திருந்தால் அவருக்கு அதிக வாய்ப்புகள் வழங்க வேண்டும். மக்கள் தங்களது கருத்துக்களை தெரிவிப்பார்கள். ஆனால் இறுதி முடிவு நிர்வாகத்தின் கையில் தான் உள்ளது.

    ஒருநாள் போட்டியில் பேட்டிங் வரிசையை மாற்றுவது ஒன்றும் புதிதல்ல. சூர்யகுமார் யாதவை 7-வது வரிசையில் இறக்கியதற்கு சில காரணங்கள் இருந்திருக்க வேண்டும். போட்டி முடிந்ததும் பேசுவது மிகவும் எளிதானது. சூர்யகுமார் யாதவை 7-வது வரிசையில் களம் இறக்கிய பின்னணியில் அவர் போட்டியை வெற்றிகரமாக முடிக்க வாய்ப்பு கொடுக்கப்பட்டிருக்கலாம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • தொடர்ந்து 3 ஒருநாள் போட்டிகளில் டக்கில் வெளியேறிய 6-வது இந்திய வீரர் என்ற மோசமான சாதனையை இவர் படைத்திருக்கிறார்.
    • சச்சின் டெண்டுல்கர் ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் தொடர்ந்து 3 முறை டக் அவுட்டில் வெளியேறியிருக்கிறார்.

    இந்தியா -ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான கடைசி ஒருநாள் போட்டி சென்னையில் உள்ள சேப்பாக்கம் மைதானத்தில் நடந்தது. இதில், டாஸ் வென்று முதலில் ஆடிய ஆஸ்திரேலியா 49 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 269 ரன்கள் எடுத்தது.

    இதையடுத்து 270 எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி விளையாடியது. முதல் விக்கெட்டுக்கு ரோகித் சர்மா, சுப்மன் கில் இருவரும் இணைந்து 65 ரன்கள் சேர்த்தனர். ரோகித் சர்மா 30 ரன்களில் ஆட்டமிழக்க, சுப்மன் கில் 37 பந்துகளில் ஆட்டமிழந்தார். விராட் கோலி தன் பங்கிற்கு 54 ரன்கள் சேர்த்துக் கொடுத்தார். ஹர்திக் பாண்டியா 40 ரன்னிலும், ஜடேஜா 18 ரன்னிலும், ஷமி 14 ரன்னிலும் வெளியேறினர். முதல் 2 ஒருநாள் போட்டிகளில் கோல்டன் டக் முறையில் வெளியேறிய சூர்யகுமார் யாதவ் இந்த போட்டியிலும் கோல்டன் டக்கில் வெளியேறி மோசமான சாதனை படைத்தார்.

    தொடர்ந்து 3 ஒருநாள் போட்டிகளில் கோல்டன் டக்கில் வெளியேறிய 6-வது இந்திய வீரர் என்ற மோசமான சாதனையை இவர் படைத்திருக்கிறார்.

    இதற்கு முன்னதாக இந்திய ஜாம்பவன் என்று அழைக்கப்படும் சச்சின் டெண்டுல்கர் (1994 ஆம் ஆண்டு) ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் தொடர்ந்து 3 முறை டக் அவுட்டில் வெளியேறியிருக்கிறார். அவர் மட்டுமின்றி அனில் கும்ப்ளே (1996 ஆம் ஆண்டு), ஜாகீர் கான் (2003-04), இஷாந்த் சர்மா (2010-11), ஜஸ்ப்ரித் பும்ரா (2017 - 2019) ஆகியோர் 3 ஒருநாள் போட்டிகளில் தொடர்ந்து 3 முறை டக் அவுட்டில் ஆட்டமிழந்திருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    • உலகக் கோப்பை மிகப்பெரிய போட்டி. இந்தியாவில் 9 நகரங்களில் நடக்கிறது.
    • சூர்யகுமார் யாதவ் நிறைய 20 ஓவர் கிரிக்கெட்டில் விளையாடி இருக்கிறார்.

    சென்னை:

    ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி ஒரு நாள் கிரிக்கெட் போட்டியையொட்டி இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட் சென்னையில் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    அக்டோபர், நவம்பர் மாதங்களில் இந்தியாவில் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி (50 ஓவர்) நடக்கிறது. அதற்கு முன்பாக உள்ளூரில் இந்த சீசனில் 9 ஒரு நாள் போட்டிகளில் விளையாட வேண்டி இருந்தது. அதில் 8 ஆட்டங்களில் விளையாடி விட்டோம். இன்றைய ஆட்டம் முடிந்ததும் நிறைய விஷயங்களில் எங்களுக்கு தெளிவு கிடைக்கும். அதை தொடர்ந்து வலுப்படுத்த வேண்டியது முக்கியம்.

    உலகக் கோப்பை மிகப்பெரிய போட்டி. இந்தியாவில் 9 நகரங்களில் நடக்கிறது. வெவ்வேறு சீதோஷ்ண நிலையில் ஆட வேண்டி இருப்பதால் தான் இப்போது பரிசோதனை முயற்சியாக ஆடும் லெவனில் பல்வேறு மாற்றங்களை செய்து களம் காணுகிறோம். நிலைமைக்கு தக்கபடி மாற்றம் செய்யும் வகையில் அணியில் வீரர்கள் வேண்டும். உலகக் கோப்பை போட்டிக்கான இந்திய அணிக்கு ஏறக்குறைய 17-18 வீரர்களை அடையாளம் கண்டு விட்டோம். அதில் சிலர் காயத்தில் இருந்து மீண்டு வர வேண்டி உள்ளது.

    துரதிர்ஷ்டவசமாக ஸ்ரேயாஸ் அய்யர் காயத்தால் இந்த தொடரில் விளையாட முடியாமல் போய் விட்டது. அனேகமாக 4-வது வரிசையில் அவருக்கு தான் அண்மை காலமாக அதிகமான வாய்ப்புகள் வழங்கப்பட்டது. இப்போது அவர் இல்லாததால் சூர்யகுமார் அந்த வரிசையில் ஆடுகிறார். முதல் இரு ஆட்டங்களிலும் சூர்யகுமார் 'டக்-அவுட்' ஆனாலும் உண்மையில் அவரது பார்ம் குறித்து கவலைப்படவில்லை. அவர் இரண்டு நல்ல பந்தில் தான் ஆட்டமிழந்தார். சூர்யகுமார் யாதவ் நிறைய 20 ஓவர் கிரிக்கெட்டில் விளையாடி இருக்கிறார். ஐ.பி.எல்.-ல் மட்டும் 10 ஆண்டுகள் விளையாடி உள்ளார். அதே சமயம் அவர் ஒரு நாள் கிரிக்கெட்டை அதிகமாக விளையாடியதில்லை. 50 ஓவர் கிரிக்கெட்டில் இப்போது தான் நிறைய கற்று வருகிறார். எனவே அவருக்கு போதுமான வாய்ப்புகளை வழங்கி பொறுமை காக்க வேண்டியது அவசியம். நிச்சயம் அவர் நல்ல நிலையை எட்டுவார்.

    இவ்வாறு டிராவிட் கூறினார்.

    ×