search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கபில்தேவ்"

    • லால் சலாம் படம் கிரிக்கெட் விளையாட்டை மையமாக வைத்து தயாராகி உள்ளது.
    • படத்தில் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் கபில் தேவ் நடித்துள்ளார்.

    ரஜினிகாந்த் தனது மகள் ஐஸ்வர்யா இயக்கிய 'லால் சலாம்' படத்தில் நடித்துள்ளார். மொய்தீன் பாய் என்ற கதாபாத்திரத்தில் அவர் வருகிறார். இதில் விஷ்ணு விஷால், விக்ராந்த் ஆகியோரும் நடித்துள்ளனர். ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார்.

    இந்த படம் கிரிக்கெட் விளையாட்டை மையமாக வைத்து தயாராகி உள்ளது.

    படத்தின் டிரெய்லரில் கூட கிரிக்கெட் போட்டி மத மோதலாக உருவெடுப்பதையும், அப்போது ரஜினிகாந்த் அறிமுகமாகி 'விளையாட்டுல மதத்தை கலந்துருக்கீங்க. குழந்தைகள் மனசுல கூட விஷத்தை விதைச்சிருக்கீங்க. தப்பா போகுது' என்று ஆவேசமாக பேசும் வசனம் கவனம் ஈர்த்தது.

    படத்தில் ரஜினியின் அதிரடி சண்டை காட்சிகளும் உள்ளன. இந்த படம் விரைவில் திரைக்கு வருகிறது.

    இந்த படத்தில் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் கபில் தேவ் நடித்துள்ளார். அவரது பிறந்தநாளையொட்டி, 'லால் சலாம்' படக்குழு வாழ்த்து தெரிவித்துள்ளது.

    மேலும் ரஜினிகாந்துடன், கபில்தேவ் இருக்கும் போஸ்டரும் வெளியிடப்பட்டு இருக்கிறது. இது சினிமா மற்றும் கிரிக்கெட் ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை அளித்துள்ளது.

    இந்த போஸ்டர் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

    • கபில் தேவ் தலைமையில் 1983-ம் ஆண்டு இந்தியா முதல் முறையாக உலக கோப்பையை கைப்பற்றியது.
    • 28 ஆண்டுகளுக்கு பிறகு 2011-ல் டோனி தலைமையில் 2-வது முறையாக உலக கோப்பை கிடைத்தது.

    இந்திய அணியின் முன்னாள் கேப்டனும், ஆல் ரவுண்டராக ஜொலித்தவருமான கபில் தேவ் சென்னையில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசியதாவது:-

    உலக கோப்பை தொடர் முழுவதும் இந்திய அணி சிறப்பாக விளையாடியது. ஆனால் உலக கோப்பையை வெல்ல முடியாமல் போனதால் மனமுடைந்து விட்டது. இது மிகுந்த ஏமாற்றத்தையும் அளித்தது.

    இன்றைய கிரிக்கெட் வீரர்கள், மன்னிக்கவும் அவர்களால் உலக கோப்பையை வெல்ல முடியவில்லை. ஆனால் அவர்கள் நன்றாக விளையாடினார்கள். விளையாடும் முறை மிகவும் முக்கியமானது. இந்த நேரத்தில் நாம் புரிந்து கொள்ளாததை கற்றுக் கொள்வோம்.

    ஒருநாள் போட்டியில் நான் ஒருமுறை பந்து வீசவில்லை. இதை நினைவில் வைத்து இருந்தால் நான் கிரிக்கெட் விளையாடி இருக்க மாட்டேன்.

    நீங்கள் வாழ்க்கையில் முன்னேற வேண்டும் என்பதை நினைவில் கொள்ளுங்கள். இளைஞர்கள் நம்மை விட சிறந்தவர்கள். அவர்களை வழி நடத்த எங்களுக்கு அனுபவம் உள்ளது. அவர்களை சிறப்பாக வழிநடத்த இயலும்.

    பள்ளி நாட்களில் இங்கு விளையாடும் போதெல்லாம் சிறப்பாக விளையாடிய நினைவுகள் இருக்கிறது. இதனால் சென்னை எனக்கு பிடித்த கிரிக்கெட் மைதானமாகும்.

    இவ்வாறு கபில்தேவ் கூறினார்.

    கபில் தேவ் தலைமையில் 1983-ம் ஆண்டு இந்தியா முதல் முறையாக உலக கோப்பையை கைப்பற்றியது. அதன்பிறகு 28 ஆண்டுகளுக்கு பிறகு 2011-ல் டோனி தலைமையில் 2-வது முறையாக உலக கோப்பை கிடைத்தது. கபில் தேவ், டோனி வரிசையில் ரோகித்சர்மாவால் இணைய முடியவில்லை.

    அகமதாபாத்தில் நடந்த இறுதிப்போட்டியில் அவரது தலைமையிலான இந்திய அணி ஆஸ்திரேலியாவிடம் 6 விக்கெட் வித்தியாசத்தில் தோற்று உலக கோப்பையை இழந்தது. உலக கோப்பை இறுதிப் போட்டியை பார்ப்பதற்கு நாட்டுக்கு பெருமை சேர்த்த கபில் தேவ், டோனிக்கு அழைப்பு அனுப்பப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

    • ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான ஆடும் லெவன் அணியை கேப்டனும், அணி நிர்வாகமும் ஏற்கனவே முடிவு செய்து விட்டது.
    • பெரும்பாலும் இந்திய அணி தோற்கும் போது இது போன்ற விமர்சனங்கள் வருகின்றன.

    தரோபா:

    இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் கபில்தேவ் சில தினங்களுக்கு முன்பு, 'இந்திய அணியில் வீரர்களுக்கு நிறைய பணம் கொட்டும் போது, கூடவே ஈகோவும், கர்வமும் வந்து விடுகிறது. அவர்கள், கிரிக்கெட்டில் தங்களுக்கு எல்லாம் தெரியும் என்று நினைக்கிறார்கள். சுனில் கவாஸ்கர் போன்ற ஜாம்பவான்கள் உங்கள் அருகில் இருக்கிறார்கள். அவரிடம் ஆலோசனை கேட்பதில் உங்களுக்கு என்ன தயக்கம். அவர் 50 ஆண்டுகள் கிரிக்கெட்டிலேயே வாழ்ந்தவர். அவரிடம் பேசினால் புதுப்புது யோசனை கிடைக்கும்' என்று சரமாரியாக சாடி இருந்தார். ஆனால் எந்த வீரர்களின் பெயரையும் குறிப்பிடவில்லை.

    கபில்தேவின் விமர்சனம் குறித்து இந்திய அணியின் ஆல்-ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா பதில் அளித்துள்ளார்.

    அவர் அளித்த பேட்டியில், 'கபில்தேவ் எப்போது இப்படி சொன்னார் என்பது தெரியவில்லை. இது போன்ற விஷயங்களை சமூக வலைதளத்தில் தேடிப் பார்ப்பதில்லை. ஒவ்வொருவருக்கும் தனிப்பட்ட கருத்து உண்டு. முன்னாள் வீரர்கள் தங்களுடைய கருத்துகளை பகிர்ந்து கொள்ள உரிமை இருக்கிறது. அதே நேரத்தில் தற்போதைய இந்திய அணியில் திமிர் போக்குடன் நடந்து கொள்ளும் வீரர்கள் யாரும் இல்லை.

    அணியில் ஒவ்வொரு வீரர்களும் தங்களது கிரிக்கெட்டை அனுபவித்து ரசித்து விளையாடுகிறார்கள். இதற்காக கடினமாக உழைக்கிறார்கள். அவர்களுக்கு எதுவும் எளிதாக கிடைத்துவிடவில்லை. அணிக்கு தங்களது 100 சதவீத பங்களிப்பை வழங்குகிறார்கள். பெரும்பாலும் இந்திய அணி தோற்கும் போது இது போன்ற விமர்சனங்கள் வருகின்றன. இது நல்ல வீரர்களை கொண்ட சிறந்தஅணி. நாங்கள் இந்தியாவை பிரதிநிதித்துவப்படுத்துகிறோம். அது தான் எங்களது முக்கிய இலக்கே தவிர தனிப்பட்ட விஷயங்களுக்கு இங்கு இடமில்லை' என்றார்.

    மற்றொரு கேள்விக்கு பதில் அளித்த ஜடேஜா, 'வெஸ்ட் இண்டீஸ் தொடரில் சில வீரர்களை களம் இறக்கி பரிசோதனை முயற்சிகள் மேற்கொண்டாலும் ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான ஆடும் லெவன் அணியை கேப்டனும், அணி நிர்வாகமும் ஏற்கனவே முடிவு செய்து விட்டது' என்றார்.

    • சூர்யகுமார் யாதவுக்கு பதிலாக சஞ்சு சாம்சனை முயற்சித்து பார்க்க வேண்டும் என்று முன்னாள் வீரர் வாசிம் ஜாபர் கருத்து தெரிவித்தார்.
    • சூர்யகுமார் யாதவை 7-வது வரிசையில் இறக்கியதற்கு சில காரணங்கள் இருந்திருக்க வேண்டும்.

    மும்பை:

    இந்திய கிரிக்கெட் அணி பேட்ஸ்மேன் சூர்யகுமார் யாதவ், 20 ஓவர் கிரிக்கெட்டில் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார்.

    ஆனால் ஒருநாள் போட்டியில் அவர் தொடர்ந்து மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 3 ஒருநாள் போட்டியிலும் சூர்யகுமார் யாதவ் ரன் ஏதும் எடுக்காமல் அவுட் ஆனார். இந்த ஆட்டங்களில் முதல் பந்திலேயே ஆட்டம் இழந்தார். இதனால் அவர் கடும் விமர்சனத்துக்குள்ளாகி இருக்கிறார்.

    ஒருநாள் போட்டியில் சூர்யகுமார் யாதவுக்கு பதிலாக சஞ்சு சாம்சனை முயற்சித்து பார்க்க வேண்டும் என்று முன்னாள் வீரர் வாசிம் ஜாபர் கருத்து தெரிவித்தார். இதே போல் சில முன்னாள் வீரர்களும் எதிர்ப்பு தெரி வித்து இருக்கிறார்கள்.

    இந்த நிலையில் சூர்ய குமார் யாதவுக்கு இந்திய முன்னாள் கேப்டன் கபில் தேவ் ஆதரவு தெரிவித்து உள்ளார்.

    சூர்யகுமார் போன்ற திறமையான வீரரை ஆதரிப்பதன் மூலம் அணி நிர்வாகம் சரியானதை செய்வதாக நான் கருதுகிறேன். நன்றாக விளையாடிய வீரருக்கு எப்போதும் அதிக வாய்ப்புகள் கிடைக்கும்.

    சூர்யகுமார் யாதவை சஞ்சு சாம்சனுடன் ஒப்பிடாதீர்கள். இது சரியானதல்ல. சஞ்சுசாம்சன் மோசமாக செயல்பட்டால் வேறுயாரையாவது பற்றி பேசுவீர்கள். அணி நிர்வாகம் சூர்யகுமார் யாதவை ஆதரிக்க முடிவு செய்திருந்தால் அவருக்கு அதிக வாய்ப்புகள் வழங்க வேண்டும். மக்கள் தங்களது கருத்துக்களை தெரிவிப்பார்கள். ஆனால் இறுதி முடிவு நிர்வாகத்தின் கையில் தான் உள்ளது.

    ஒருநாள் போட்டியில் பேட்டிங் வரிசையை மாற்றுவது ஒன்றும் புதிதல்ல. சூர்யகுமார் யாதவை 7-வது வரிசையில் இறக்கியதற்கு சில காரணங்கள் இருந்திருக்க வேண்டும். போட்டி முடிந்ததும் பேசுவது மிகவும் எளிதானது. சூர்யகுமார் யாதவை 7-வது வரிசையில் களம் இறக்கிய பின்னணியில் அவர் போட்டியை வெற்றிகரமாக முடிக்க வாய்ப்பு கொடுக்கப்பட்டிருக்கலாம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • வங்கதேசம், இலங்கை அணிகளுக்கு எதிரான தொடரில் விராட் கோலி அடுத்தடுத்து சதமடித்தார்.
    • ஒருநாள் கிரிக்கெட்டில் உள்ளூரில் அதிக சதம் அடித்த சச்சின் சாதனையை கோலி முறியடித்தார்.

    மும்பை:

    சர்வதேச கிரிக்கெட்டில் சச்சின் 100 சதங்கள் பதிவு செய்துள்ளார். சச்சினுக்கு அடுத்தபடியாக விராட் கோலி 74 சதங்களைப் பதிவு செய்துள்ளார்.

    விராட் கோலி வங்கதேசம், இலங்கை அணிகளுக்கு எதிரான தொடரில் அடுத்தடுத்து சதம் அடித்து ஒருநாள் கிரிக்கெட்டில் உள்ளூரில் அதிக சதம் அடித்த சச்சினின் சாதனையை முறியடித்தார்.

    இதற்கிடையே, சமூக வலைதளங்களில் சர்வதேச கிரிக்கெட்டில் சிறந்த வீரர் சச்சின் டெண்டுல்கரா, விராட் கோலியா என்ற சர்ச்சை தற்போது எழுந்துள்ளது. இது குறித்து பல்வேறு கிரிக்கெட் வீரர்கள் தங்களது கருத்தை தெரிவித்து வருகின்றனர்.

    இந்நிலையில், இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கபில்தேவ் இது குறித்து தனது கருத்தை கூறியுள்ளார்.

    இதுதொடர்பாக கருத்து தெரிவித்துள்ள இந்திய முன்னாள் வீரர் கபில்தேவ் கூறியதாவது:

    அனைத்து தலைமுறையுமே ஒன்றுக்கு ஒன்று வளர்ந்து வருகிறது. தமது காலத்தில் கவாஸ்கர் சிறந்த வீரராக விளங்கி வந்தார். அதன்பிறகு டிராவிட் ,சச்சின், ஷேவாக் போன்ற தலைமுறையினர் வந்து சாதித்தனர். தற்போது ரோகித், விராட் கோலி என சிறந்து விளங்குகின்றனர்.

    இனி வரும் காலங்களில் விராட் கோலியை விட சிறந்த பேட்ஸ்மேன்கள் சிறப்பாக ரன் குவிக்க வாய்ப்பு இருக்கிறது.

    தமக்கு சில வீரர்களிடமிருந்து சில பிடிக்கும், சில பிடிக்காது என்பதால் 11 வீரர்கள் விளையாடும் ஆட்டத்தில் ஒருவர் மற்றும் இருவரை சிறந்த வீரர் என்று தேர்வு செய்ய தாம் விரும்பவில்லை என தெரிவித்துள்ளார்.

    • நெதர்லாந்து போன்ற அணிக்கு எதிராக கூட நாம் சரியான திட்டமிடாமல் பந்துவீசினோம்.
    • சூர்யகுமார் தமக்கு கிடைத்த வாய்ப்பை சிறப்பாக பயன்படுத்திக் கொண்டிருக்கிறார்.

    டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்திய அணியில் இரண்டு குறை இருப்பதாக முன்னாள் கேப்டன் கபில்தேவ் தெரிவித்துள்ளார். நடப்பு டி20 உலகக்கோப்பையில் இந்திய அணி நெதர்லாந்து மற்றும் பாகிஸ்தானை வீழ்த்தி புள்ளி பட்டியலில் நான்கு புள்ளிகளுடன் முதலிடத்தில் இருக்கிறது.

    இந்த இரண்டு ஆட்டத்திலும் இந்திய அணி வெற்றி பெற்றாலும் சில குறைகள் இருக்கத்தான் செய்கிறது என்று கபில்தேவ் கூறி இருக்கிறார்.

    இதுகுறித்து கபில்தேவ் கூறியதாவது:-

    இந்தியாவின் பந்துவீச்சு மெருகேறி வருகிறது. பேட்டிங்கில் நாம் கூடுதலாக ரன் அடிக்க வேண்டும். ஆனால் கடைசி பத்து ஓவர்களில் பேட்ஸ்மேன்கள் 100 ரன்களுக்கு மேல் அடித்து சமாளித்து விடுகிறார்கள். ஆஸ்திரேலியாலில் மைதானங்கள் அனைத்தும் பெரியது. இதனால் சுழற் பந்துவீச்சாளர்களுக்கு கூடுதல் சாதகமாக இருக்கும்.

    இந்திய அணியின் பந்துவீச்சு ஆங்காங்கே குறைகள் இருக்கிறது. நெதர்லாந்து போன்ற அணிக்கு எதிராக கூட நாம் சரியான திட்டமிடாமல் பந்துவீசினோம். அது போன்ற ஆட்டத்தை நீங்கள் ஒரு பயிற்சியாக நினைக்க வேண்டும். அதற்காக வெற்றி நான் முக்கியம் இல்லை என சொல்லவில்லை. அந்த ஆட்டங்களில் நீங்கள் நோபால், வைடு வீசக்கூடாது.

    சூர்யகுமார் தமக்கு கிடைத்த வாய்ப்பை சிறப்பாக பயன்படுத்திக் கொண்டிருக்கிறார். அவர் ரன்களை வேகமாக அடிக்கிறார். இதனால் அவரை அதிகமாக புகழ வேண்டும்.

    இதேபோன்று கேப்டன் ரோகித் சர்மா தனது அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்துவது இந்திய அணிக்கு மிகவும் முக்கியமாகும். வெற்றிகரமாக எட்டுவார்கள் அதேபோன்று ராகுலும் முக்கிய போட்டிகளுக்கு முன்பு ரன்களை அடிக்க வேண்டும்.விராட் கோலியை பொருத்தவரை அவர் 20 ஓவரும் நின்று விளையாட வேண்டும். ஏனெனில் அவர் எப்போது வேண்டுமானாலும் வேகமாக அடித்து ரன் குவிக்கலாம்.

    என்று கபில்தேவ் கூறினார்.

    • 2011 உலகக்கோப்பையை வெல்ல டோனி அடித்த சிக்சரை எத்தனை முறை பார்த்தோமோ அதேபோல கோலியின் சிக்சரையும் பார்க்கலாம்.
    • டோனியை போல விராட் கோலி பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் கடைசி வரை நின்று வெற்றியை பெற்றுக்கொடுத்தார்.

    புதுடெல்லி:

    ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் 20 ஓவர் உலகக்கோப்பையில் பாகிஸ்தானுக்கு எதிராக விராட் கோலி விளையாடிய அதிரடியான ஆட்டம் மறக்க இயலாத ஒன்றாகும்.

    அவர் 53 பந்தில் 6 பவுண்டரி, 4 சிக்சருடன் 82 ரன் எடுத்து வெற்றிக்கு காரணமாக திகழ்ந்தார்.அவரது இந்த இன்னிங்ஸ் மிகவும் சிறப்பானதாகும்.

    இந்த ஆட்டத்தில் விராட் கோலியின் ஷாட்கள் எல்லாம் அபாரமாக இருந்தது. வேகப்பந்து வீரர் ஹாரிஸ் ரவுப் வீசிய ஆட்டத்தின் 19-வது ஓவரின் 5-வது பந்தில் அவர் அடித்த சிக்சர் மிகவும் அற்புதமாக இருந்தது.

    காலை பின் பக்கமாக (பேக்புட்) கொண்டு சென்று நேராக சிக்சர் அடித்தார்.

    விராட் கோலியின் இந்த சிக்சரை முன்னாள் கேப்டன் கபில்தேவ் வியந்துள்ளார். அவர் 2011 உலகக்கோப்பை இறுதி போட்டியில் இலங்கை வீரர் குலசேகராவின் பந்தில் டோனி அடித்த சிக்சரோடு கோலியின் சிக்சரை ஒப்பிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:-

    கபில்தேவ் 

    கபில்தேவ் 

    மெதுவான பந்தில் நேராக சிக்சர் அடிப்பது மிகவும் கடினமானது. 2011 உலகக்கோப்பையை வெல்ல டோனி அடித்த சிக்சரை எத்தனை முறை பார்த்தோமோ அதேபோல கோலியின் சிக்சரையும் பார்க்கலாம். இந்த சிக்சரை ஆயிரம் முறை பார்க்கலாம்.

    டோனியை போல விராட் கோலி பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் கடைசி வரை நின்று வெற்றியை பெற்றுக்கொடுத்தார். அந்த சூழ்நிலையில் அணி வெல்ல யாராவது உதவினால் அது விராட் கோலி தான் என்று நாங்கள் விவாதித்தோம். அது போல அவர் அணியை வெற்றி பெற வைத்தார்.

    இவ்வாறு கபில்தேவ் கூறியுள்ளார்.

    இந்திய அணிக்கு உலகக்கோப்பையை முதல் முறையாக பெற்றுக் கொடுத்தவர் கபில்தேவ். அவர் தலைமையிலான அணி 1983-ம் ஆண்டு உலகக்கோப்பையை வென்றது. அதன் பிறகு 28 ஆண்டுகளுக்கு பிறகு டோனி தலைமையில் 2011-ம் ஆண்டு உலகக்கோப்பை கிடைத்தது. டோனி தலைமையில் 2007-ம் ஆண்டு 20 ஓவர் உலகக்கோப்பையும் கிடைத்து இருந்தது.

    இந்திய அணி இதுவரை 3 உலகக்கோப்பையை (1983, 2011-ஒரு நாள் போட்டி, 2007-இருபது ஓவர்) கைப்பற்றி உள்ளது.

    • ஐ.பி.எல். போட்டியில் விளையாடுவதால் அழுத்தம் இருப்பதாக ஒரு சில புகார் உள்ளது.
    • நான் ஒரு விவசாயி. ஆனால் விளையாட்டை ரசித்து மிகவும் அனுபவித்து ஆடினேன்.

    புதுடெல்லி:

    20 ஓவர் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி ஆஸ்திரேலியாவில் வருகிற 16-ந்தேதி முதல் நவம்பர் 13-ந்தேதி வரை நடக்கிறது.

    இந்த போட்டியில் விளையாடுவதற்காக ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி ஆஸ்திரேலியா சென்றுள்ளது. உலகக்கோப்பைக்காக இந்திய அணி தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகிறது.

    வேகப்பந்து வீரர் பும்ரா, ஆல் ரவுண்டர் ஜடேஜா ஆகியோர் காயம் காரணமாக 20 ஓவர் உலகக்கோப்பையில் ஆடவில்லை. முன்னணி வீரர்களான இருவரும் இல்லாதது மிகப்பெரிய பின்னடைவாக கருதப்படுகிறது. உலகக்கோப்பைக்கான மாற்று வீரர்கள் பட்டியலில் இருந்த தீபக் சாஹரும் காயம் அடைந்துள்ளார். அதிகமான போட்டிகளில் விளையாடுவதால் வீரர்கள் காயத்தில் சிக்குவதாக கூறப்படுகிறது.

    இந்த நிலையில் அதிக அழுத்தம் இருப்பதாக உணரும் வீரர்கள் ஐ.பி.எல். போட்டியில் விளையாட வேண்டாம் என்று முன்னாள் கேப்டன் கபில்தேவ் அறிவுறுத்தி உள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:-

    ஐ.பி.எல். போட்டியில் விளையாடுவதால் அழுத்தம் இருப்பதாக ஒரு சில புகார் உள்ளது. அதனை சிலர் வெளிப்படையாக தொலைக்காட்சியில் சொல்லி நான் பார்த்து உள்ளேன். இதனால் அவர்களுக்கு இதனை சொல்லிக்கொள்கிறேன்.

    ஐ.பி.எல்.லில் ஆடுவதால் வீரர்கள் மீது அதிக அழுத்தம் இருப்பதாக சொல்கிறார்கள். அழுத்தமாக உணர்ந்ததால் வீரர்கள் ஐ.பி.எல்.லில் விளையாட வேண்டாம் என்று நான் சொல்லிக்கொள்கிறேன்.

    வீரர்கள் கிரிக்கெட்டை ரசித்து ஆடினால் அழுத்தம் இருக்காது. மன அளவிலான சோர்வு குறித்து என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை. நான் ஒரு விவசாயி. ஆனால் விளையாட்டை ரசித்து மிகவும் அனுபவித்து ஆடினேன். கிரிக்கெட் அழுத்தம் இருப்பதாக நான் உணர்ந்தது இல்லை. வீரர்களும் விளையாட்டை ரசித்து ஆடினால் அழுத்தம் எதுவும் இருக்காது.

    இவ்வாறு கபில்தேவ் கூறியுள்ளார்.

    ×