என் மலர்
நீங்கள் தேடியது "சூர்யகுமார் யாதவ்"
- கடந்த ஆண்டு ஜூன் மாதம் 20 ஓவர் உலகக் கோப்பையை வென்ற பிறகு இந்திய அணி எந்த ஒரு 20 ஓவர் தொடரையும் இழந்ததில்லை.
- ஆசிய கோப்பை உள்பட தொடர்ச்சியாக 8 தொடர்களை கைப்பற்றி இருக்கிறது.
10-வது 20 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி பிப்ரவரி 7-ந்தேதி முதல் மார்ச் 8-ந்தேதி வரை இந்தியா மற்றும் இலங்கையில் நடைபெறுகிறது. இதில் பங்கேற்கும் 20 அணிகள் 4 பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளது. 'ஏ' பிரிவில் அங்கம் வகிக்கும் இந்தியாவுடன், பாகிஸ்தான், நமிபியா, நெதர்லாந்து, அமெரிக்க அணிகளும் இடம் பெற்றுள்ளன. இந்திய அணி தனது தொடக்க ஆட்டத்தில் அமெரிக்காவுடன் பிப்.7-ந்தேதி மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் மோதுகிறது. பரம போட்டியாளரான பாகிஸ்தானை பிப்.15-ந்தேதி கொழும்பில் சந்திக்கிறது.
இந்த நிலையில் 20 ஓவர் உலகக் கோப்பை போட்டிக்கான 15 பேர் கொண்ட இந்திய அணி மும்பையில் இன்று அறிவிக்கப்படுகிறது. இதையொட்டி தேர்வு குழு தலைவர் அஜீத் அகர்கர் தலைமையிலான கமிட்டியினர் ஆலோசிக்கிறார்கள். தலைமை பயிற்சியாளர் கவுதம் கம்பீர், கேப்டன் சூர்யகுமார் யாதவும் அணித் தேர்வில் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த ஆண்டு ஜூன் மாதம் 20 ஓவர் உலகக் கோப்பையை வென்ற பிறகு இந்திய அணி எந்த ஒரு 20 ஓவர் தொடரையும் இழந்ததில்லை. ஆசிய கோப்பை உள்பட தொடர்ச்சியாக 8 தொடர்களை கைப்பற்றி இருக்கிறது. சூர்யகுமார் யாதவ் தலைமையில் கணிசமான வெற்றிகளோடு 'நம்பர் ஒன்' அணியாக திகழ்கிறது. அதனால் தற்போதைய 20 ஓவர் அணியில் ஆச்சரியம் அளிக்கும் வகையில் மாற்றங்கள் இருக்கப்போவதில்லை. பார்மின்றி தடுமாறும் தொடக்க ஆட்டக்காரர் சுப்மன் கில்லுக்கு இடம் இருக்குமா? என்பது தான் சற்று கேள்விக்குறியாக இருக்கிறது. அவரது இடத்துக்கு ஜெய்ஸ்வால் அல்லது சையத் முஷ்டாக் அலி கிரிக்கெட் இறுதி ஆட்டத்தில் 45 பந்தில் சதம் விளாசிய இஷான் கிஷன் ஆகியோரின் பெயர் பரிசீலிக்கப்படலாம். மற்றபடி அபிஷேக் ஷர்மா, திலக் வர்மா, கேப்டன் சூர்யகுமார் யாதவ், சஞ்சு சாம்சன், ஜிதேஷ் ஷர்மா, ஹர்திக் பாண்ட்யா, ஷிவம் துபே, குல்தீப் யாதவ், வருண் சக்ரவர்த்தி, அர்ஷ்தீப்சிங், அக்ஷர் பட்டேல், வாஷிங்டன் சுந்தர், ஜஸ்பிரித் பும்ரா, ஹர்ஷித் ராணா ஆகியோர் அணியில் தொடருவார்கள்.
ரிங்கு சிங், ரியான் பராக், நிதிஷ்குமார் ரெட்டி, பிரசித் கிருஷ்ணா உள்ளிட்டோர் மாற்று வீரர்களின் பட்டியலில் இடம் பெறுவார்கள் என்று தெரிகிறது. உலகக் கோப்பை போட்டி தொடங்குவதற்கு முன்பு வரை அணியில் மாற்றம் செய்து கொள்ள முடியும்.
முன்னதாக நியூசிலாந்து கிரிக்கெட் அணி ஜனவரி மாதம் இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 ஒரு நாள் மற்றும் ஐந்து 20 ஓவர் போட்டிகளில் விளையாடுகிறது. இந்தியா-நியூசிலாந்து இடையிலான முதலாவது ஒரு நாள் போட்டி ஜன.11-ந்தேதி வதோதராவில் நடக்கிறது. இதற்கான இந்திய அணியும் இன்று அறிவிக்கப்படுகிறது.
- நேற்றைய போட்டியில் இந்திய கேப்டன் சூர்யகுமார் யாதவ் 12 ரன்னில் ஆட்டமிழந்தார்.
- இந்தாண்டு சர்வதேச டி20 கிரிக்கெட்டில் சூர்யகுமார் யாதவ் ஒரு அரைசதம் கூட அடிக்கவில்லை.
இந்தியா, தென் ஆப்பிரிக்கா இடையிலான டி20 தொடரின் 3-வது போட்டி தர்மசாலாவில் நேற்று நடைபெற்றது.
இப்போட்டியில் முதலில் பேட் செய்த தென் ஆப்பிரிக்கா 20 ஓவரில் 117 ரன்கள் எடுத்து ஆல் அவுட் ஆனது. இதை அடுத்து ஆடிய இந்தியா 15.5 ஓவரில் 3 விக்கெட்டுக்கு 120 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது.
இப்போட்டியில் இந்திய கேப்டன் சூர்யகுமார் யாதவ் 12 ரன்னில் ஆட்டமிழந்தார். குறிப்பாக இந்தாண்டு சூர்யகுமார் யாதவ் ஒரு அரைசதம் கூட அடிக்கவில்லை. அவரின் இந்தாண்டு சராசரி 15 ஆக குறைந்துள்ளது.
இந்நிலையில், நேற்றை போட்டியின் வெற்றிக்கு பின்பு பேசிய சூர்யகுமார் யாதவ், "நெட் பயிற்சியின் போது நான் நன்றாகவே பேட்டிங் செய்து வருகிறேன். என் கட்டுப்பாட்டில் உள்ள அனைத்தையும் நான் முயற்சி செய்கிறேன். நான் ரன்களை அடிக்க முயற்சித்து வருகிறேன். நான் ஃபார்ம் அவுட்டில் இல்லை. அவுட் ஆஃப் ரன்ஸ் தான். மீண்டும் ரன்கள் குவிப்பேன்" என்று தெரிவித்தார்.
- அபிஷேக் சர்மா 528 பந்துகளில் ஆயிரம் ரன்கள் அடித்துள்ளார்.
- சூர்யகுமார் யாதவ் 573 பந்துகளில் ஆயிரம் ரன்களை கடந்திருந்தார்.
இந்திய டி20 அணியின் தொடக்க வீரராக களம் இறங்கும் அபிஷேக் சர்மா, அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். குறைந்த பந்தில் அதிக ரன்கள் அடிக்க வேண்டும் என்பதுதான் இவருடைய இலக்கு. பவர்பிளேயை பயன்படுத்தி அதிரடியாக ரன்குவித்து வருகிறார்.
இன்றைய போட்டியில் 7 பந்துகளை சந்தித்து 11 ரன்கள் அடித்தார். இதன்மூலம் 29 போட்டிகளில் 528 பந்துகளை சந்தித்து ஆயிரம் ரன்களை தொட்டார். இதனைத் தொடர்ந்து டி20 கிரிக்கெட்டில் குறைந்த பந்தில் ஆயிரம் ரன்களை கடந்த வீரர் என்ற சூர்யகுமார் யாதவ் சாதனையை முறியடித்துள்ளார்.
சூர்யகுமார் யாதவ் 573 பந்துகளில் ஆயிரம் ரன்கள் அடித்துள்ளார். பில் சால்ட் 599 பந்துகளில் ஆயிரம் ரன்கள் அடித்துள்ளார். மேக்ஸ்வெல் 604 பந்துகளில் ஆயிரம் ரன்கள் அடித்துள்ளார்.
- ஆசிய கோப்பை தொடரின்போது இருநாட்டு வீரர்களும் மோதிக்கொண்டனர்.
- இந்திய விமானங்களை சுட்டது போன்று ஹாரிஸ் ராஃப் சைகை காட்டியிருப்பார்.
ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின்போது இந்தியா- பாகிஸ்தான் இடையிலான போட்டியில் வீரர்கள் மிகவும் ஒழுங்கீனமாக நடந்து கொண்டார்கள். இந்திய வீரர்கள் பாகிஸ்தான் வீரர்களுடன் கைக்குலுக்க மறுத்தனர்.
பாகிஸ்தான் வீரர் ஹாரிஸ் ராஃப் விமானம் விழுந்து நொறுங்குவது போன்று சைகை காட்டினார். ஆபரேஷசன் சிந்தூர் நடவடிக்கையின்போது இந்திய விமானங்களை பாகிஸ்தான் சுட்டு வீழ்த்தியதை தெரிவிக்கும் வகையில் அவ்வாறு சைகை காட்டினார் என இந்தியா குற்றம்சாட்டியது.
போட்டி முடிந்து செய்தியாளர்கள் சந்திப்பின்போது, இந்தியா- பாகிஸ்தான் மோதலின்போது, உயிரிழந்தவர்களுக்கு வெற்றியை அர்ப்பணிப்பதாகவும், அவர்களுடன் நிற்பதாகவும் சூர்யகுமார் யாதவ் தெரிவித்தார்.
இருநாட்டின் கிரிக்கெட் சங்கங்களும் ஐசிசி-யில் புகார் அளித்தது. இதனடிப்படையில் ஐசிசி ஹாரிஸ் ராஃப்-க்கு 2 போட்டிகளில் விளையாட தடைவிதித்துள்ளது. சூர்யகுமார் யாதவுக்கு போட்டியின் கட்டணத்தில் 30 சதவீதம் அபராதம் விதித்துள்ளது.
ஏ.கே.47 துப்பாக்கியால் சுடுவது போன்று சைகை காட்டிய பாகிஸ்தான் தொடக்க வீரர் பர்ஹானுக்கு எந்த அபராதமும் விதிக்கப்படவில்லை.
- ஆசிய கோப்பையில் இருந்து சூர்யகுமார் யாதவ் டாஸ் தோற்று வருகிறது.
- ஆஸ்திரேலியாவுக்கு எதிராக முதல் இரண்டு போட்டியிலும் தோல்வியடைந்தார்.
இந்தியா- ஆஸ்திரேலியா இடையிலான 3ஆவது டி20 கிரிக்கெட் போட்டி ஹோபர்ட்டில் நடைபெற்று வருகிறது. ஆசிய கோப்பை டி20 தொடரில் இருந்து இந்தியா டாஸ்-ஐ தொடர்ந்து தோற்று வருகிறது.
இந்த நிலையில்தான் இன்றைய 3ஆவது போட்டியில், சூர்யகுமார் யாதவ் டாஸ் வென்றார். அத்துடன் வெற்றி பெற்றது போன்று கையை கட்டினார். மேலும், பூஜை போட்டது வேலை செய்துவிட்டது என்பது போன்று சைகை காட்டினார்.
பின்னர் சிரித்துக் கொண்டு மிட்செல் மார்ஷை சூர்யகுமார் யாதவ் கட்டிப்பிடித்தார்.
- 3-வது ஒருநாள் போட்டியின் போது இந்திய அணியின் துணை கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயருக்கு காயம் ஏற்பட்டது.
- தீவிர சிகிச்சை பிரிவில் இருந்து ஷ்ரேயாஸ் நேற்று காலை சாதாரண வார்டுக்கு மாற்றப்பட்டார்.
சிட்னி:
ஆஸ்திரேலியாவுக்கு எதிராக கடந்த சனிக்கிழமை சிட்னியில் நடந்த 3-வது மற்றும் கடைசி ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
இந்த ஆட்டத்தின் போது இந்திய அணியின் துணை கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயருக்கு காயம் ஏற்பட்டது. அதில் அவரது இடது கீழ் விலாஎலும்பு பகுதியில் காயமடைந்திருப்பதாகவும், அதற்கு சிகிச்சை அளிக்கப்படுவதாகவும் கிரிக்கெட் வாரியம் தரப்பில் தெரிவிக்கப்பட்டு இருந்தது.
அதன்பிறகு சிட்னியில் உள்ள ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை பிரிவில் (ஐ.சி.யூ.) ஷ்ரேயாஸ் ஐயர் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று காலை சாதாரண வார்டுக்கு மாற்றப்பட்டார்.
அவரது உடல்நிலை சீராக இருப்பதாகவும் இன்னும் சில நாட்களில் மருத்துவமனையில் இருப்பார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர் சீக்கிரம் நலம் பெற ரசிகர்கள் பிரார்த்தனை செய்து வருகின்றனர்.
இந்நிலையில் சத் பூஜையின் போது ஷ்ரேயாஸ் ஐயர் குணமடைய இந்திய டி20 அணியின் கேப்டன் சூர்யகுமாரின் தாயார் பிரார்த்தனை செய்துள்ளார். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
- விலா எலும்பையும் தாண்டி மண்ணீரலில் கீறல் ஏற்பட்டு, அதனால் ரத்தக்கசிவு உருவாகி இருப்பது கண்டறியப்பட்டது.
- ரத்தப்போக்கு நீடித்தால் உயிருக்கே ஆபத்தாகி விடும்.
சிட்னி:
ஆஸ்திரேலியாவுக்கு எதிராக கடந்த சனிக்கிழமை சிட்னியில் நடந்த 3-வது மற்றும் கடைசி ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
இந்த ஆட்டத்தின் போது ஆஸ்திரேலிய விக்கெட் கீப்பர் அலெக்ஸ் கேரி (24 ரன்) அடித்த பந்தை இந்திய அணியின் துணை கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயர் பின்னோக்கி ஓடிச் சென்று பாய்ந்து அருமையாக கேட்ச் செய்தார். அப்போது மைதானத்தில் விழுந்ததில் அவரது இடது விலாப்பகுதி பலமாக இடித்தது. வலியால் அவதிப்பட்ட அவர் உடனடியாக மைதானத்தை விட்டு வெளியேறினார். அதன் பிறகு பீல்டிங் செய்ய வரவில்லை.
அவர் இடது கீழ் விலாஎலும்பு பகுதியில் காயமடைந்திருப்பதாகவும், அதற்கு சிகிச்சை அளிக்கப்படுவதாகவும் கிரிக்கெட் வாரியம் தரப்பில் தெரிவிக்கப்பட்டு இருந்தது.
மேலும் சில 'ஸ்கேன்' பரிசோதனை மேற்கொண்ட போது, விலா எலும்பையும் தாண்டி மண்ணீரலில் கீறல் ஏற்பட்டு, அதனால் ரத்தக்கசிவு உருவாகி இருப்பது கண்டறியப்பட்டது. ரத்தப்போக்கு நீடித்தால் உயிருக்கே ஆபத்தாகி விடும். இதையடுத்து அணி டாக்டரின் அறிவுறுத்தலின் பேரில் சிட்னியில் உள்ள ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை பிரிவில் (ஐ.சி.யூ.) ஷ்ரேயாஸ் ஐயர் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.
இந்நிலையில் விலா எலும்பு பகுதியில் காயமடைந்து ரத்தக்கசிவு ஏற்பட்டதால் ICUவில் அனுமதிக்கப்பட்ட ஷ்ரேயாஸ் உடல்நிலை குறித்து டி20 அணியின் கேப்டன் சூர்யகுமார் அப்டேட் கொடுத்துள்ளார்.
அதன்படி அவரது உடல்நிலை தற்போது சீராக உள்ளது. நல்ல முறையில் நலம் பெற்று வருகிறார். சில நாட்கள் மருத்துவர்கள் கண்காணிப்பில் இருப்பார். ஆனால் பயப்படும் அளவுக்கு எதுவும் இல்லை.
என கூறினார்.
மேலும் பிசிசிஐ தரப்பில், தீவிர சிகிச்சை பிரிவில் இருந்து ஷ்ரேயாஸ் இன்று காலை சாதாரண வார்டுக்கு மாற்றப்பட்டார். அவரது உடல்நிலை சீராக இருப்பதாகவும் இன்னும் சில நாட்களில் மருத்துவமனையில் இருப்பார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவர் சீக்கிரம் நலம் பெற ரசிகர்கள் பிரார்த்தனை செய்து வருகின்றனர். அவரது குடும்பத்தினர் ஆஸ்திரேலியா விரைகிறார்கள்.
- கரன்பீர் சிங் இந்த ஆண்டில் 32 ஆட்டத்தில் ஆடி 2 சதம், 13 அரைசதம் உள்பட 1,488 ரன்கள் சேர்த்துள்ளார்.
- ஓராண்டில் அதிக ரன் குவித்த வீரர்களின் பட்டியலில் முதல் இடம் பிடித்து உலக சாதனை படைத்தார்.
வியன்னா:
ஆஸ்திரியா அணி ருமேனியாவில் சுற்றுப்பயணம் செய்து 4 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இதில் நேற்று நடந்த 4வது டி20 போட்டியில் ஆஸ்திரியா வெற்றி பெற்றதுடன், 3-1 என தொடரைக் கைப்பற்றியது.
இதில் முதலாவது ஆட்டத்தில் 57 ரன் எடுத்த ஆஸ்திரிய தொடக்க ஆட்டக்காரர் கரன்பீர் சிங் 2-வது ஆட்டத்தில், 90 ரன்னும், 3-வது ஆட்டத்தில் 74 ரன்னும், கடைசி ஆட்டத்தில் 27 ரன்னும் எடுத்து அசத்தினார்.
இந்நிலையில், கரன்பீர் சிங் இந்த ஆண்டில் இதுவரை 32 ஆட்டத்தில் ஆடி 2 சதம், 13 அரைசதம் உள்பட 1,488 ரன்கள் சேர்த்துள்ளார்.
இதன்மூலம் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் ஓராண்டில் அதிக ரன் குவித்த வீரர்களின் பட்டியலில் முதல் இடம் பிடித்து உலக சாதனை
படைத்துள்ளார்.
முதல் இரு இடத்தில் இருந்த பாகிஸ்தானின் முகமது ரிஸ்வான் (2021-ம் ஆண்டில் 1,326 ரன்), இந்திய கேப்டன் சூர்யகுமார் யாதவ் (2022-ம் ஆண்டில் 1,164 ரன்) ஆகியோரின் சாதனைகளை முறியடித்தார்.
- சூர்யகுமார் யாதவ் கேப்டனாகவும் சுப்மன் கில் துணை கேப்டனாகவும் அறிவிக்கப்பட்டுள்ளனர்.
- தமிழக வீரர் வாஷிங்டன் சுந்தர் அணியில் இடம்பிடித்துள்ளார்.
ஆசிய கோப்பை டி20 தொடரில் கோப்பையை வென்ற இந்திய அணி அடுத்ததாக ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி20 தொடரில் விளையாடுகிறது.
இந்நிலையில், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி20 தொடருக்கான இந்திய அணியை பிசிசிஐ அறிவித்துள்ளது.
சூர்யகுமார் யாதவ் கேப்டனாகவும் சுப்மன் கில் துணை கேப்டனாகவும் அறிவிக்கப்பட்டுள்ளனர்.
இந்திய அணி வீரர்கள் விவரம்:-
சூர்ய குமார் யாதவ் (C) அபிஷேக் ஷர்மா, சுப்மன் கில் (VC) திலக் வர்மா, நிதிஷ் குமார் ரெட்டி, சிவம் துபே, அக்சர் படேல், ஜிதேஷ் சர்மா (WK), வருண் சக்கரவர்த்தி, பும்ரா, குல்தீப் யாதவ், ஹர்ஷித் ராணா, சஞ்சு சாம்சன் (WK), ரிங்கு சிங், வாஷிங்டன் சுந்தர், அர்ஷ்தீப் சிங்,
- ஆசிய கோப்பை தொடரில் இந்திய அணி சாம்பியன் பட்டம் வென்றது.
- சூர்யகுமார் இந்த தொடரில் பெரிய அளவில் ரன்களை குவிக்க தவறினார்.
ஆசிய கோப்பை தொடரில் இந்திய அணி சூர்யகுமார் தலைமையில் களமிறங்கியது. இந்த தொடரில் இந்த அணி ஒரு தோல்வி கூட சந்திக்காமல் ஆசிய கோப்பையை வென்றது. பேட்டிங் மற்றும் பந்து வீச்சிலும் இந்திய அணி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது.
சூர்யகுமார் இந்த தொடரில் பெரிய அளவில் ரன்களை குவிக்க தவறினார். ஆனால் கேப்டன்ஷிப்பில் எந்தவித பதட்டமும் இன்றி சரியான முடிவுகளை எடுத்து அணியை வெற்றிப்பாதைக்கு அழைத்து சென்றார்.
இந்நிலையில் ரோகித் மற்றும் ரித்திகா கொடுத்த அறிவுரை தான் நம்பிக்கையான முடிவை எடுக்க உதவியது என இந்திய அணியின் கேப்டன் சூர்யகுமார் யாதவ் கூறினார்.
இது குறித்து அவர் கூறியதாவது:-
முக்கியமான தொடருக்கு முன்பு ரோகித் எப்படி வெளியில் இருந்து வரும் கருத்துகளை எப்படி தவிர்ப்பார் என்பது பற்றி ரோகித்திடமும் அவரது மனைவியிடமும் பேசியது எனக்கு நினைவிருக்கிறது.
ரித்திகா தொலைபேசியிலிருந்து தனது அனைத்து சமூக ஊடக செயலிகளையும் மூடிவிட்டதாக என்னிடம் கூறினார். நானும் அதைப் பின்பற்றினேன். அது எனக்கு முடிவெடுப்பதற்கு உதவியது.
என சூர்யகுமார் கூறினார்.
- வெற்றிபெற்ற ஒரு அணிக்கு கோப்பை மறுக்கப்படுவதை இப்போதுதான் முதல்முறையாக பார்க்கிறேன்.
- என்னுடைய கோப்பைகள் (வீரர்கள்) ஓய்வறையில் அமர்ந்துள்ளனர்.
துபாய்:
இந்திய அணி கேப்டன் சூர்யகுமார் யாதவ் அளித்த பேட்டியில் கூறியதாவது:-
நான் கிரிக்கெட் விளையாட, கிரிக்கெட்டை பின்தொடர தொடங்கியதில் இருந்து வெற்றிபெற்ற ஒரு அணிக்கு கோப்பை மறுக்கப்படுவதை இப்போதுதான் முதல்முறையாக பார்க்கிறேன். என்னுடைய கோப்பைகள் (வீரர்கள்) ஓய்வறையில் அமர்ந்துள்ளனர். அணி வீரர்கள் 14 பேரும், பயிற்சியாளர்கள் உதவியாளர்கள்தான் இந்தத் தொடரில் உண்மையான வெற்றிக் கோப்பைகள்.
2 நாட்களில் இரண்டு தொடர்ச்சியான நல்ல ஆட்டங்கள். நாங்கள் அதற்கு தகுதியானவர்கள் என்று நினைக்கிறேன். மேலும் என்னால் எதுவும் சொல்ல முடியாது. நான் அதை நன்றாகச் சுருக்கமாக கூறியுள்ளேன் என்று நினைக்கிறேன்.
இவ்வாறு சூர்யகுமார் யாதவ் கூறியுள்ளார்.
- இந்திய அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வென்றது.
- ஒரு போட்டிக்கு சூர்யகுமார் யாதவுக்கு ரூ.4 லட்சம் ஊதியமாக வழங்கப்படுகிறது.
துபாய்:
துபாயில் நடந்த ஆசிய கோப்பை இறுதி போட்டியில் முதலில் விளையாடிய பாகிஸ்தான் அணி 19.1 ஓவரில்146 ரன்னில் சுருண்டது. இதனால் இந்தியாவுக்கு 147 ரன் இலக்காக இருந்தது.
பின்னர் ஆடிய இந்தியா 147 ரன் இலக்கை 2 பந்து எஞ்சி இருந்த நிலையில் எடுத்தது. 19.4 ஓவரில்5 விக்கெட் இழப்புக்கு 150 ரன் எடுத்து 5 விக்கெட் வித்தியாசத்தில் வென்று ஆசிய கோப்பையை கைப்பற்றியது. இந்த போட்டி தொடரில் 3-வது முறையாக பாகிஸ்தானை இந்தியா வீழ்த்தியது.
இந்தியாவின் வெற்றியை நாடு முழுவதும் ரசிகர்கள் பட்டாசு வெடித்தும், இனிப்புகளை வழங்கியும் கொண்டாடினார்கள்.
இந்நிலையில் ஆசியக் கோப்பை தொடருக்கான எனது ஊதியத்தை பஹல்காம் தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்கள் மற்றும் ராணுவ வீரர்களுக்கு கொடுக்க விரும்புகிறேன் என இந்திய அணியின் கேப்டன் சூர்யகுமார் கூறியுள்ளார்.
அவருக்கு பலரும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். ஆசிய கோப்பையில் சூர்யகுமாரின் ஊதியம் ரூ. 28 லட்சம் என்பது குறிப்பிடத்தக்கது.






