search icon
என் மலர்tooltip icon

    கிரிக்கெட்

    இது போன்ற தன்னம்பிக்கை தான் ஒவ்வொரு வீரருக்கும் தேவை- சூர்யகுமார் யாதவை பாராட்டிய ரோகித்
    X

    இது போன்ற தன்னம்பிக்கை தான் ஒவ்வொரு வீரருக்கும் தேவை- சூர்யகுமார் யாதவை பாராட்டிய ரோகித்

    • அவருடைய இந்த தன்னம்பிக்கை கூட இருக்கும் பேட்ஸ்மேன்களுக்கும் உற்சாகத்தை கொடுக்கிறது.
    • சிலர் நாம் தான் சிறப்பாக விளையாடி விட்டோமே என்ற பெருமையில் இருந்து விடுவார்கள். ஆனால் சூர்யகுமார் அப்படி அல்ல.

    ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 57-வது லீக் போட்டியானது நேற்று மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்று முடிந்தது. இந்த போட்டியில் ரோகித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியும், ஹார்டிக் பாண்டியா தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணியும் மோதின.

    இதில் முதலில் விளையாடிய மும்பை இந்தியன்ஸ் அணியானது நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 218 ரன்களை குவித்தது. பின்னர் 219 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய குஜராத் அணியானது 20 ஓவர்களின் முடிவில் 8 விக்கெடுகளை இழந்து 191 ரன்கள் குவித்தது. இதனால் 27 ரன்கள் வித்தியாசத்தில் மும்பை அணி வெற்றி பெற்றது.

    இந்நிலையில் இந்த போட்டி ஒரு இன்ட்ரஸ்டிங்கான போட்டியாக அமைந்தது என மும்பை அணியின் கேப்டன் ரோகித் சர்மா கூறியுள்ளார்.

    இது குறித்து அவர் கூறியதாவது:-

    முதலில் பேட்டிங் செய்து பெரிய ரன்களை குவித்தால் நிச்சயம் அவர்களை எங்களால் தடுத்து நிறுத்த முடியும் என்று நினைத்தோம். அந்த வகையில் நாங்கள் இரண்டாவதாக பந்துவீசும் போது பவர் பிளேவில் சிறப்பாக பந்து வீசி விக்கெட்டுகளை எடுத்தோம். ஏனென்றால் போகப் போக பந்துவீச்சுக்கு கடினமான சூழல் ஏற்பட்டது. பணிப் பொழிவு அதிகமாக இருந்ததால் பந்துவீச்சாளர்கள் அதிக ரன்கள் கொடுத்தனர். இருப்பினும் எங்களுடைய செயல்பாடு சிறப்பாக இருந்தது.

    சூர்யகுமார் யாதவுக்கு இருக்கின்ற தன்னம்பிக்கை நிச்சயமாக பாராட்டப்பட வேண்டியது. நாங்கள் தொடரின் தொடக்கத்தில் இடது கை வலது கை பேட்ஸ்மேன்கள் களத்தில் இருப்பது போல் பார்த்துக் கொள்ள வேண்டும் என்று கூறினோம். ஆனால் இன்று சூர்ய குமார் அடம்பிடித்து தான் களத்துக்கு செல்வேன் என்று உறுதியாக கூறினார். இது போன்ற தன்னம்பிக்கை தான் ஒவ்வொரு பேட்ஸ்மேனுக்கும் தேவை.

    அவருடைய இந்த தன்னம்பிக்கை கூட இருக்கும் பேட்ஸ்மேன்களுக்கும் உற்சாகத்தை கொடுக்கிறது. இது நல்ல விஷயம் என்னவென்றால் ஒவ்வொரு ஆட்டத்தையும் புதிய ஆட்டமாக அவர் தொடங்குகிறார். ஒவ்வொரு கிரிக்கெட் வீரரும் இப்படித்தான் யோசிக்க வேண்டும். சிலர் நாம் தான் சிறப்பாக விளையாடி விட்டோமே என்ற பெருமையில் இருந்து விடுவார்கள். ஆனால் சூர்யகுமார் அப்படி அல்ல.

    என ரோகித் சர்மா கூறினார்.

    Next Story
    ×