என் மலர்

  நீங்கள் தேடியது "Wasim Jaffer"

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • பும்ராவுடன் இணைந்து விளையாடும் ஆடும் லெவனில் இடம் பெறுவதற்கு புவனேஷ்வர் குமார் போதுமானதை விட சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி உள்ளார்.
  • ரோகித் சர்மா இல்லையென்றால் நான் ஹர்திக் பாண்ட்யாவை தான் கேப்டனாக நியமிக்க வேண்டும் என கூறுவேன்.

  இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா இடையேயான 5 போட்டிகள் கொண்ட தொடரில் புவனேஸ்வர் குமார் சிறப்பாக செயல்பட்டதன் மூலம் டி20 உலகக்கோப்பைக்கான பந்துவீச்சு வரிசை தொடர்பாக எழும் விவாதங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார் என முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் வாசிம் ஜாபர் கருத்து தெரிவித்துள்ளார்.

  பும்ராவுடன் இணைந்து விளையாடும் ஆடும் லெவனில் இடம் பெறுவதற்கு புவனேஷ்வர் குமார் போதுமானதை விட சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி உள்ளார் என்று அவர் கூறினார்.

  இது குறித்து இந்திய அணியின் முன்னாள் வீரர் வாசிம் ஜாபர் கூறியதாவது:-

  தென் ஆப்பிரிக்கா தொடர் முழுவதும் பந்து வீசிய விதத்தைப் பார்க்கும் போது டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணியின் மூன்றாவது வேகப்பந்து வீச்சாளராக புவனேஸ்வர் குமார் உறுதிப்படுத்திக் கொண்டார் என்று நினைக்கிறேன். எனது புத்தகத்தில் பும்ரா மற்றும் ஹர்ஷல் படேல் முதல் இரண்டு இடத்தில் உள்ளனர். புவனேஸ்வர் குமார் நிச்சயமாக எனது கருத்துப்படி மூன்றாவது வேகப்பந்து வீச்சாளர்களில் ஒருவராக இருப்பார்.

  டி20 தொடரில் யாரையாவது கேப்டனாக நியமிக்க வேண்டும் என்னும் பட்சத்தில் ரோகித் சர்மா இல்லையென்றால் நான் ஹர்திக் பாண்ட்யாவை தான் கேப்டனாக நியமிக்க வேண்டும் என கூறுவேன்.

  இவ்வாறு வாசிம் ஜாபர் கூறினார்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  40 வயதாகும் வாசிம் ஜாபர் ரஞ்சி கோப்பை கிரிக்கெட் தொடரில் 11 ஆயிரம் ரன்களை கடந்த முதல் வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார். #RanjiTrophy #WasimJaffer
  இந்திய அணியின் முன்னாள் தொடக்க பேட்ஸ்மேன் வாசிம் ஜாபர். 40 வயதாகும் இவர் ஆரம்பகால கட்டத்தில் மும்பை அணிக்காக விளையாடி வந்தார். தற்போது விதர்பா அணிக்காக ரஞ்சி கோப்பையில் விளையாடி வருகிறார்.

  ரஞ்சி கோப்பை 3-வது ரவுண்டில் விதர்பா பரோடா அணியை எதிர்த்து விளையாடி வருகிறது. இதில் 3-வது பேட்ஸ்மேனாக களம் இறங்கிய வாசிம் ஜாபர் 284 பந்தில் 13 பவுண்டரி, 2 சிக்சருடன் 153 ரன்கள் குவித்தார். கேப்டன் பாசல் உடன் இணைந்து 2-வது விக்கெட்டுக்கு 300 ரன்கள் சேர்த்தார்.  வாசிம் ஜாபர் 97 ரன்னைத் தொட்டபோது ரஞ்சி டிராபியில் 11 ஆயிரம் ரன்கள் என்ற மைல்கல்லை எட்டினார். 11 ஆயிரம் ரன்கள் அடித்த முதல் வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார். வாசிம் ஜாபர் 11056 ரன்கள் அடித்துள்ளார். அமோல் முசும்தார் 9202 ரன்கள் அடித்து 2-வது இடத்தில் உள்ளார்.
  ×