search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Impact Player"

    • அணிகள் திறமை வாய்ந்த பேட்ஸ்மேன்களை ஏழாவது அல்லது எட்டாவது இடத்தில் கூட பெறுகின்றன.
    • இது கிரிக்கெட்டை மேலும் பொழுதுபோக்காக மாற்றும்.

    தொழில்முறை கிரிக்கெட்டில் சுவாரஸ்யத்தை அதிகரிக்க புதிய புதிய விதிகள் கொண்டு வரப்படுகின்றன. பீல்டிங் கட்டுப்பாடுகள் போன்ற விதிகள் இருக்கும் நிலையில் தற்போது இம்பேக்ட் பிளேயர் விதி ஐபிஎல் தொடரில் அறிமுகப்படுத்தியுள்ளது.

    இந்த விதியின்படி ஒரு வீரருக்கு மாற்று வீரராக களம் இறங்கும் நபர் பந்து வீசலாம், பேட்டிங் செய்யலாம். முன்னதாக பீல்டிங் மட்டுமே செய்ய முடியும். இந்த விதியின்படி சேஸிங் செய்யும்போது ஒரு பந்து வீச்சாளருக்குப் பதிலாக மேலும் ஒரு தரமான பேட்ஸ்மேனை களம் இறக்க முடியும். அதேபோல் பந்து வீசும்போது நட்சத்திர பேட்ஸ்மேன்களுக்கு பதில் தரமான பந்து வீச்சாளர்களை தெர்வு செய்யமுடியும்.

    நேற்றைய போட்டியில் சென்னை அணியில் சிவம் துபே முதலில் களம் இறங்கினார். ஆனால் 2-வது பேட்டிங் செய்யும்போது இவருக்குப் பதிலாக இம்பேக்ட் பிளேயராக சர்துல் தாகூர் களம் இறங்கினார். எல்எஸ்ஜி அணியில் டி காக் இம்பேக்ட் பிளேயராக களம் இறங்கினார்.

    இம்பேக்கட் பிளேயர் விதிக்கு இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா ஏற்கனவே அதிருப்தி தெரிவித்திருந்தார். மேலும் பலர் தங்களது எதிர்ப்பு கருத்து தெரிவித்திருந்தனர்.

    இந்த நிலையில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியின் ஆலோசகராக இருக்கும் ஆடம் வோக்ஸ் இம்பேக்ட் பிளேயர் விதி, ஆல்-ரவுண்டர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் எனத் தெரிவித்துள்ளார்.

    இது தொடர்பாக ஆடம் வோக்ஸ் கூறுகையில் "அணியின் ஸ்கோர்கள் உயர்ந்த வண்ணம் உள்ளன. அணிகள் திறமை வாய்ந்த பேட்ஸ்மேன்களை ஏழாவது அல்லது எட்டாவது இடத்தில் கூட பெறுகின்றன. இது கிரிக்கெட்டை மேலும் பொழுதுபோக்காக மாற்றும். ஆனால், ஆல்-ரவுண்டர்களின் திறமைகளை வெளிப்படுத்த முடியாமல் ஆட்டத்தில் இருந்து வெளியேற்றுகிறது. ஆல்-ரவுண்டர் எப்போதுமே அணியை சமநிலைப்படுத்துபவராக இருப்பார். ஒருவேளை இம்பேக்ட் பிளேயரோடு முக்கியத்துவம் இல்லாமல் போகலாம்.

    இதேபோல் ஆஸ்திரேலியாவில் பிக்பாஷ் லீக்கில் பவர் சர்ஜ் (Power Surge) கொண்டு வரப்பட்டுள்ளது. இந்த விதிப்படி நான்கு ஓவர்தான் பவர்பிளே. அதன்பின் 11-வது ஓவரில் இருந்து இன்னிங்ஸ் முடியும் வரை பேட்டிங் செய்யும் அணி மீதமுள்ள இரண்டு ஓவர்களை எந்த நேரத்திலும் பயன்படுத்திக் கொள்ளலாம்.

    இந்த விதியால், சேஸிங் செய்யும்போது எந்த அணியும் போட்டியில் இருந்து வெளியேறியதாக நினைக்க தேவையில்லை. ஆனால், இந்த நேரங்களில் அதிகமாக விக்கெட்டுகளை அணிகள் இழந்துள்ளதை நாம் பார்த்து இருக்கிறோம்.

    இவ்வாறு ஆடம் வோக்ஸ் தெரிவித்துள்ளார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • ரசிகர்களின் சுவாரஸ்யத்தை கூட்டுவதற்காக போட்டியின் முக்கிய அம்சம் விடுபடுகிறது.
    • இந்த விதிமுறையால் துபே, சுந்தர் போன்ற வீரர்களுக்கு பந்துவீச வாய்ப்பு கிடைப்பதில்லை.

    17-வது ஐபிஎல் சீசன் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது. இதுவரை 32 லீக் போட்டிகள் முடிந்துள்ளது. இதன் முடிவில் ராஜஸ்தான் முதல் இடத்திலும் கொல்கத்தா 2-வது இடத்திலும் 3-வது மற்றும் 4-வது இடங்கள் முறையே சென்னை மற்றும் ஐதராபாத் அணிகள் உள்ளன.

    இந்த புள்ளி பட்டியலில் பலம் வாய்ந்த அணியான மும்பை 9-வது இடத்தில் உள்ளது. அந்த அணி 6 போட்டிகளில் விளையாடி 2 வெற்றி 4-ல் தோல்வியடைந்துள்ளது. நடப்பு தொடரில் மும்பை இந்தியன்ஸ் கேப்டனாக ஹர்திக் பாண்ட்யா செயல்பட்டு வருகிறார். முன்னாள் கேப்டனான ரோகித் சர்மா சக வீரராக விளையாடி வருகிறார்.

    இந்நிலையில் ஐபிஎல் தொடரில் இம்பேக் விதிமுறையில் தனக்கு உடன்பாடு இல்லை என ரோகித் சர்மா கூறியுள்ளார்.

    இது குறித்து அவர் கூறியதாவது:-

    இம்பேக்ட் பிளேயர் விதிமுறையில் எனக்கு உடன்பாடு இல்லை. கிரிக்கெட் போட்டி என்பது 11 வீரர்களை கொண்டதே தவிர 12 வீரர்களை உள்ளடக்கியது அல்ல. ரசிகர்களின் சுவாரஸ்யத்தை கூட்டுவதற்காக போட்டியின் முக்கிய அம்சம் விடுபடுகிறது. இந்த விதிமுறையால் துபே, சுந்தர் போன்ற வீரர்களுக்கு பந்துவீச வாய்ப்பு கிடைப்பதில்லை.

    இவ்வாறு ரோகித் கூறினார்.

    • இந்த போட்டியில் 13 பந்துகளை சந்தித்த அவர் இரண்டு சிக்சர் ஒரு பவுண்டரி என 20 ரன்கள் அடித்து ஆட்டமிழந்து வெளியேறினார்.
    • இம்பேக்ட் பிளேயராக களம் புகுந்த ரோகித் சர்மா முதல் விக்கெட்டுக்கு 65 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து கொடுத்தார்.

    ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 22-வது லீக் போட்டியானது நேற்று மும்பை வான்கடடே மைதானத்தில் நடைபெற்று முடிந்தது. இந்த போட்டியில் மிகச்சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய மும்பை இந்தியன்ஸ் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் கொல்கத்தா அணியை வீழ்த்தி அசத்தலான வெற்றியை பதிவு செய்திருந்தது.

    இந்நிலையில் இந்த போட்டியின் போது மும்பை அணியின் கேப்டன் ரோகித் சர்மா பிளேயிங் லெவனில் இடம்பெறாததால் சூர்யகுமார் யாதவ் தலைமையிலான மும்பை அணி கொல்கத்தா அணிக்கெதிரான இந்த போட்டியில் களம் இறங்கியது.

    ஆனால் முதல் பாதியில் விளையாடாத ரோகித் சர்மா கொல்கத்தா அணி 185 ரன்கள் குவித்ததும் அடுத்ததாக மும்பை அணி சேசிங் செய்ய வருகையில் இம்பேக்ட் பிளேயராக துவக்க வீரராக இஷான் கிஷனுடன் களமிறங்கினார். அந்த வகையில் இம்பேக்ட் பிளேயராக களம் புகுந்த ரோகித் சர்மா முதல் விக்கெட்டுக்கு 65 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து கொடுத்தார்.

    இந்த போட்டியில் 13 பந்துகளை சந்தித்த அவர் இரண்டு சிக்சர் ஒரு பவுண்டரி என 20 ரன்கள் அடித்து ஆட்டமிழந்து வெளியேறினார்.

    இந்நிலையில் இந்த போட்டியில் ரோகித் சர்மா ஏன் இம்பேக்ட் வீரராக களமிறங்கினார் என்பது குறித்து மும்பை அணியின் கேப்டன் சூர்யகுமார் யாதவ் விளக்கம் ஒன்றினை அளித்துள்ளார்.

    இது குறித்து அவர் கூறுகையில்:-

    நாங்கள் இந்த போட்டியில் முதலில் பந்துவீசவே விரும்பினோம். ஏனெனில் மைதானம் கொஞ்சம் டிரையாக இருந்ததால் இரண்டாவது பேட்டிங்கிற்கு மைதானம் நன்றாக ஒத்துழைக்கும் என்று நினைத்தோம். அதன்படியே முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தோம். ரோகித் சர்மாவிற்கு இந்த போட்டிக்கு முன்னதாக வயிற்று பகுதியில் சற்று அசவுகரியம் ஏற்பட்டது.

    அதனாலேயே அவர் இந்த போட்டியின் பிளேயிங் லெவனில் இடம்பெறவில்லை. பின்னர் அவர் சேசிங்கின் போது இம்பேக்ட் பிளேயராக களமிறங்கினார்.

    என்று சூர்யகுமார் யாதவ் கூறினார்.

    • சென்னை அணியில் இம்பேக்ட் பிரேயராக துஷார் தேஷ்பாண்டே களமிறங்கினார்.
    • குஜராத் அணியில் இம்பேக்ட் பிளேயராக தமிழக வீரர் சாய் சுதர்சன் களமிறங்கினார்.

    ஐபிஎல் 16-வது சீசனின் முதல் போட்டியில் சென்னை-குஜராத் அணிகள் மோதின. பரபரப்பான இந்த ஆட்டத்தில் குஜராத் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    ஒவ்வொரு முறையும் ஐபிஎல் தொடரில் ஏதாவது புதிய விதிமுறை அறிமுகத்திற்கு வரும். அந்த வகையில் இந்த முறை 'இம்பேக்ட் பிளேயர்' என்கிற முறையை அறிமுகப்படுத்தப்பட்டது.

    இந்த புதிய விதியின் படி, டாஸ் போடும் போது வழங்கப்படும் 11 வீரர்கள் அடங்கிய பட்டியலுடன், மாற்று வீரர்கள் 5 பேரின் பெயர்களையும் வழங்க வேண்டும். அந்த 5 பேரில் இருந்து ஒருவரை, ஆட்டத்தின் நடுவில் களமிறக்கலாம்.

    அது பந்து வீச்சாக இருந்தாலும் சரி, பேட்டிங் வரிசையாக இருந்தாலும் சரி, அது அந்த அணியின் விருப்பம். அதே நேரத்தில் மூன்று வெளிநாட்டு வீரர்கள் களத்தில் இருந்தால் மட்டுமே, கூடுதலாக ஒரு வெளிநாட்டு வீரரை களத்தில் இறக்க முடியும். ஒருவேளை 4 வெளிநாட்டு வீரர்கள் களத்தில் இருந்தால், ஐந்தாவதாக மற்றொரு வெளிநாட்டு வீரரை 'இம்பேக்ட் ப்ளேயராக' களத்தில் இறக்க முடியாது.

    இந்த புதிய விதியை தன்னுடைய முதல் போட்டியிலேயே சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பயன்படுத்தியது. குஜராத்திற்கு எதிராக களமிறங்கிய சென்னை அணியின் அம்பாதி ராயுடு பேட்டிங் செய்த நிலையில், சென்னை அணி பீல்டிங் செய்யும் போது, அவருக்கு பதிலாக 'இம்பேக்ட் பிரேயர்' முறையில் துஷார் தேஷ்பாண்டே மாற்றப்பட்டார்.

    3.2 ஓவர்களை வீசிய அவர், 51 ரன்கள் கொடுத்து 1 விக்கெட்டை வீழ்த்தினார். 15.30 எக்கானமியை பெற்றார். இவ்வாறு களம் கண்டதன் மூலம், ஐபிஎல் வரலாற்றில் முதல் 'இம்பேக்ட் ப்ளையர்' என்கிற பெருமையை பெற்றார் தேஷ்பாண்டே.

    இதேபோல குஜராத் அணியிலும் இம்பேக்ட் பிளேயராக தமிழக வீரர் சாய் சுதர்சன் களமிறங்கினார். குஜராத் அணி பீல்டிங் செய்யும் போது சிக்சரை தடுக்க சென்ற வில்லியம்சனுக்கு காலில் அடிப்பட்டதால் அவர் பாதிலேயே வெளியேறினார். இதனால் அவருக்கு பதிலாக சாய் சுதர்சன் பேட்டிங் செய்தார்.

    அவர் 17 பந்துகளில் 21 ரன்கள் மட்டுமே எடுத்தார். இருவரும் சொல்லி கொள்ளும் அளவுக்கு எந்த இம்பேக்ட்டும் கொடுக்கவில்லை என கிரிக்கெட் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கேலி செய்து வருகின்றனர்.

    ×