search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "study"

    • மழைநீர் வீடுகளில் புகுந்து பொதுமக்கள் அவதி அடைந்து வருகின்றனர்.
    • சாட்டை வாய்க்காலை ஆக்கிரமிப்புகள் அகற்ற அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்தனர்.

    சீர்காழி:

    சீர்காழி நகராட்சிக்கு உட்பட்ட 3-வது வார்டில் பூந்தோட்ட தெருவில் சாட்டை வாய்க்கால் அமைந்துள்ளது.

    இந்த வாய்க்கால் பல ஆண்டுகளாக தூர்வாரப்ப டாமல் இருந்து வருகிறது.

    இதனால் அப்பகுதி விவசாயிகள் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

    மேலும் மழைக்காலங்களில் மழைநீர் வீடுகளில் புகுந்து பொதுமக்கள் அவதி அடைந்து வருகின்றனர்.

    சாட்டை வாய்க்காலை ஆக்கிரமிப்புகள் அகற்றி தூர்வார வேண்டுமென தொடர்ந்து அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

    இதனை தொடர்ந்து 3 -வது வார்டு நகர்மன்ற உறுப்பினர் கஸ்தூரிபாய்செந்தில் சீர்காழி நகராட்சி ஆணையர் ஹேமலதாவிடம் சாட்டை வாக்காளர் தூர்வாரக்கோரி கோரிக்கை மனு அளித்தார்.

    இதனை தொடர்ந்து நகராட்சி ஆணையர் ஹேமலதா, நகர மன்ற தலைவர் துர்கா பரமேஸ்வரி ராஜசேகர், நகரமைப்பு ஆய்வாளர் மரகதம் ஆகியோர் சாட்டை வாய்க்காலை நேரடியாக சென்று பார்வையிட்டு அப்பகுதி மக்களிடம் விரைவில் வாய்க்காலை தூர்வாரி தருவதாக உறுதியளித்தனர்.

    இதனால் அப்பகுதி மக்கள் மகிழ்ச்சி அடைந்து நகராட்சி ஆணையருக்கும், நகர மன்ற உறுப்பினருக்கும் நன்றியும் பாராட்டுதலையும் தெரிவித்துள்ளனர்.

    விளையாட்டு மேம்பாட்டுக் குழு துணை அமைப்பாளர் செந்தில் உடனிருந்தார்.

    • ரேஷன் கடையில் பொருட்களின் இருப்பு விவரம் சரியாக உள்ளதா? என ஆய்வு செய்தார்.
    • அரிசி, பருப்பு மற்றும் இதர பொருட்களின் தரம் குறித்து ஆய்வு செய்தார்.

    பாபநாசம்:

    பாபநாசம் வடக்கு வீதியில் உள்ள வேளாண் கூட்டுறவு கடன் சங்கத்துக்கு உட்பட்ட ரேஷன் கடை உள்ளது.

    இந்த கடையில் இருந்து பொதுமக்களுக்கு வழங்கப்படும் அரிசி, பருப்பு மற்றும் இதர பொருட்களின் தரம் குறித்து மாவட்ட வழங்கல் அலுவலர் வாசுதேவன் திடீரென பார்வயைிட்டு ஆய்வு செய்தார்.

    மேலும், பொருட்களின் இருப்பு விவரம் சரியாக உள்ளதா? என அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.

    ஆய்வின்போது வருவாய் ஆய்வாளர் அஜித்குமார், சங்க செயலாளர் சரவணன், விற்பனையாளர் சிவகாம சுந்தரி மற்றும் பொதுமக்கள் உடன் இருந்தனர்.

    • உலக அளவில் பட்டினி குறியீட்டு எண்ணில் இந்தியா 28.7 புள்ளிகள் பெற்றுள்ளது.
    • தவறான மதிப்பீடு, தவறான நோக்கம் கொண்டதாக இருப்பதாகவும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

    உலக அளவில் உணவு பற்றாக்குறை, ஊட்டச்சத்து குறைபாடு ஆகியவற்றை ஆய்வு செய்து ஆண்டு தோறும் உலகப் பட்டினி குறியீடு வெளியிடப்படுகிறது. அயர்லாந்தை சேர்ந்த கன்சர்ன் வேர்ல்ட் வைட் மற்றும் ஜெர்மனியை சேர்ந்த வெல்ட் ஹங்கர் ஹில்பே ஆகிய நிறுவனங்கள் இப்பட்டியலை வெளியிட்டு வருகின்றன.

    இதில் ஊட்டச்சத்து குறைபாடு, குழந்தைகளின் வயதுக்கு ஏற்ற உயரம், 5 வயதுக்கு கீழ் இருக்கும் குழந்தைகளில் எத்தனை பேர் வயதுக்கு ஏற்ற உடல் எடை, உயரம் இல்லாமல் இருக்கிறார்கள் ஆகியவற்றை கொண்டு பட்டியல் தயாரிக்கப்படுகிறது.

    ஐ.நா.சபை, யுனிசெப் உள்ளிட்டவைகளிடம் இருந்து பெறப்படும் தரவுகளின் அடிப்படையில் கணக்கிடப்பட்டு உலக பட்டினி குறியீடு பட்டியல் வெளியாகிறது.

    இந்நிலையில் உலக பட்டினி குறியீடு பட்டியல் வெளியிடப்பட்டது. மொத்தம் 125 நாடுகள் தர வரிசைப்படுத்தப்பட்டிருந்தன. இதில் இந்தியா 111-வது இடத்தில் உள்ளது. கடந்த ஆண்டு இந்தியா 107-வது இடத்தில் இருந்தது.

    இந்த ஆண்டு 4 இடங்கள் பின் தங்கி உள்ளது. உலக அளவில் பட்டினி குறியீட்டு எண்ணில் இந்தியா 28.7 புள்ளிகள் பெற்றுள்ளது. இது பட்டினி அளவு தீவிரமாக இருக்கிறது என்பதை குறிக்கிறது.

    அண்டை நாடுகளான பாகிஸ்தான் 102-வது இடத்திலும், வங்காளதேசம் 81-வது இடத்திலும், நேபாளம் 69-வது இடத்திலும், இலங்கை 60-வது இடத்திலும் உள்ளது. தெற்காசியா மற்றும் ஆப்பிரிக்கா சவுத் ஆப் தி சஹாரா ஆகிய பிராந்தியங்கள் கடைசி இடங்களில் உள்ளன.

    இந்த உலக பட்டினிக் குறியீடு பட்டியலை இந்தியா நிராகரித்துள்ளது. இப்பட்டியல், இந்தியாவின் உண்மை நிலையை பிரதிபலிக்கவில்லை என்றும், தவறான மதிப்பீடு, தவறான நோக்கம் கொண்டதாக இருப்பதாகவும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

    • திருப்பத்தூரில் மருதுபாண்டியர்கள் குருபூஜை நடக்கயிருப்பதை முன்னிட்டு பாதுகாப்பு குறித்து போலீஸ் சூப்பிரண்டு ஆய்வு செய்தார்.
    • மருதுபாண்டியர்கள் தூக்கிலிடப்பட்ட இடமான நினைவுத்தூண் (ஸ்தூபி) மற்றும் மணிமண்டபம் ஆகிய பகுதிகளில் போலீஸ் சூப்பிரண்டு திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

    திருப்பத்தூர்

    சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரில் சுதந்திர போராட்ட தியாகிகளான மருது பாண்டியர்களின் குருபூஜையை முன்னிட்டு மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் அரவிந்த் ஆய்வு மேற் கொண்டார்.

    வருடந்தோறும் அக்டோ பர் மாதம் 24 -ந்தேதி முதல் மருது பாண்டி யர்களின் குருபூஜை தினத்தை அரசு விழாவாக கடைபிடிக்கப்பட்டு வருகி றது. அதன் அடிப்படையில் திருப்பத்தூர் நகரில் பஸ் நிலையம் எதிரே அமைந் துள்ள மருதுபாண்டியர்கள் தூக்கிலிடப்பட்ட இடமான நினைவுத்தூண் (ஸ்தூபி) மற்றும் மணிமண்டபம் ஆகிய பகுதிகளில் போலீஸ் சூப்பிரண்டு திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

    மேலும் அன்றைய தினங்களில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து அமைச்சர்கள், அனைத்து கட்சி பிரமு கர்கள், முக்கியஸ்தர்கள் போன்ற பலரும் ஆயிரக் கணக்கானோர் வருகைதர இருப்பதால் அது குறித்த பாதுகாப்பு மற்றும் கடைபிடிக்க வேண்டிய வழி முறைகள் குறித்த முன் ஏற்பாடுகள் பணிகள் குறித்து கேட்டறிந்தார்.

    இந்த ஆய்வில் திருப்பத் தூர் காவல் துணை கண்காணிப்பாளர் ஆத்ம நாதன், நகர் காவல் ஆய்வாளர் கலைவாணி ஆகியோர் உடன் இருந்தனர்.

    • அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் நடைபெறும் சிகிச்சைகள் குறித்து கேட்டறிந்தார்.
    • கட்டுமான பணிகளை உடனே தொடங்க நடவடிக்கை எடுக்கும்படி அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.

    நாகப்பட்டினம்:

    நாகை மாவட்டம் திட்டச்சேரியில் ரூ.60 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டு திறக்கப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் நடைபெறும் சிகிச்சைகள் குறித்து முகமது ஷாநவாஸ் எம்எல்ஏ ஆய்வு செய்தார்.

    அப்போது ஆரம்ப சுகாதார நிலையம் திறக்கப்ப ட்டு முதல் பிரசவமாக மேலவாஞ்சூர் மெயின் ரோடு பகுதியை சேர்ந்த சிவா என்பவரின் மனைவி ரோஷி (வயது 27) என்பவருக்கு பிறந்த ஆண் குழந்தையை பார்வையிட்டு அவருக்கு தமிழக அரசால் வழங்கப்படும் பரிசு பெட்டகத்தை வழங்கினார்.மேலும் அந்த குழந்தைக்கு தருண் என்ற பெயர் சூட்டினார்.

    பின்னர் அதைத் தொடர்ந்து திட்டச்சேரி பேரூராட்சிக்கு உட்பட்ட வெள்ளத்திடலில் இடிக்க ப்பட்ட சமுதாயக்கூடத்திற்கு ரூ.25 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்தும் கட்டுமான பணி களை தொடங்கப்படாமல் இருப்பதை பார்வையிட்டு உடன் கட்டுமான பணிகளை தொடங்க நடவடிக்கை எடுக்கும்படி அதிகாரிகளை அறிவுறுத்தினார். இந்த ஆய்வின்போது பேரூராட்சி மன்ற தலைவர் ஆயிஷாசி த்திக்கா,வட்டார மருத்துவ அலுவலர் மணிசுந்தரம் ,பேரூராட்சி செயல் அலுவலர் வெங்கடேசன்,பேரூராட்சி மன்ற உறுப்பினர் முகமது சுல்தான்,பேரூராட்சி இளநிலை உதவியாளர் கோவிந்தராஜ்,சுகாதார ஆய்வாளர் பரமநாதன் மற்றும் அலுவலர்கள் உடன் இருந்தனர்.

    • தேவர் நினைவிடத்தில் ரூ.2 கோடி மதிப்பில் மேற்கூரை அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
    • அமைச்சர் சாமிநாதன் நேரில் ஆய்வு செய்தார்.

    கமுதி

    ராமநாதபுரம் மாவட்டம் கமுதி வட்டம், பசும்பொன் கிராமத்தில் உள்ள முத்துராமலிங்கத் தேவர் நினைவிடத்தில் அமைச்சர் சாமிநாதன் வருகை தந்து மரியாதை செலுத்தினார். பின்னர் அவர் நிரூபர்க ளிடம் கூறியதாவது:-

    முத்துராமலிங்க தேவரின் குருபூஜை விழா வருகிற 30-ந் தேதி தொடங்கி 3 நாட்கள் நடைபெற உள்ளது. இதில் பல்லாயிரக்கணக்கானோர் கலந்து கொள்வார்கள். நினைவிடம் முன்பாக பொதுப்பணித்துறை மூலம் தற்காலிக கொட்டகை அமைத்து பயன்ப டுத்தப்பட்டு வந்தது.

    அமைச்சர் ராஜ கண்ணப்பன், எம்.எல்.ஏ.க்கள் முத்துராம லிங்கம், முருகேசன் ஆகியோர் வேண்டு கோளுக்கிணங்க பொது மக்கள் பயன்பாட்டிற்காக நினைவிடம் முன்பு ரூ.1.50 கோடி மதிப்பீட்டில் நிரந்தரமாக மேற்கூரை அமைக்கவும், மேலும் முக்கிய பிரமுகர்கள் வந்து செல்லும் வழியில் ரூ.50 லட்சம் மதிப்பில் மேற்கூரை அமைக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கான இடம் தேர்வு செய்யப்பட்டு விரைவில் முதல்-அமைச்சரின் அனுமதியோடு பணிகள் நடைபெறும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்நிகழ்ச்சியில் செய்தி மக்கள் தொடர்பு துறை இயக்குனர் மோகன், கூடுதல் இயக்குநர் (செய்தி), இணை இயக்குனர் (நினைவகங்கள்) தமிழ் செல்வராஜன், தி.மு.க. மாவட்டச் செயலாளரும், சட்டமன்ற உறுப்பினரு மான காதர்பாட்சா முத்து ராமலிங்கம், பாராளுமன்ற உறுப்பினர் நவாஸ் கனி, பரமக்குடி சட்டமன்ற உறுப்பினர் முருகேசன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் முருகவேல், திவாகரன், வட்டாட்சியர் சேதுராமன், தி.மு.க. வடக்கு ஒன்றிய செயலாளர் வாசுதேவன், ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் தமிழ்ச்செல்வி போஸ், துணைத் தலைவர் சித்ரா தேவிஅய்யனார், ஊராட்சி ஒன்றிய ஆணையாளர்கள் மணிமேகலை, சங்கர பாண்டியன் உட்பட பலர் கலந்து கொண்டனர். முன்னதாக அமைச்சரை தேவர் நினைவாலய பொறுப்பாளர் காந்திமீனாள் நடராஜன், பழனி, குமார், தங்கவேல் உட்பட பொறுப்பாளர்கள் பொன்னாடை போர்த்தி வரவேற்றனர்.

    • இமானுவேல் சேகரன் மணிமண்டபம் கட்ட இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது.
    • அமைச்சர் நேரில் ஆய்வு செய்தார்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மாவட்டம்,பரமக்குடியில் செய்தி மக்கள் தொடர்பு துறையின் மூலம் அமைய வுள்ள தியாகி இமானுவேல் சேகரனாருக்கு மணிமண்ட பம் கட்டுவதற்காக தேர்வு செய்யப்பட்ட இடத்தை தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    அப்போது அவர் பேசுகையில், இமானுவேல் சேகரனாருக்கு அவரின் தியாக உணர்வை போற்றும் விதமாக அவரது திருவுருவச் சிலையுடன் கூடிய மணிமண்டபம் அமைத்திட ரூ.3 கோடி ஒதுக்கீடு செய்து முதல்-அமைச்சர் உத்தரவிட்டுள்ளார். அதன டிப்படையில் மணிமண்டபம் அமையவுள்ள இடம் பார்வையிடப் பட்டுள்ளது.

    நகராட்சிக்கு சொந்தமான இடம் என்பதால் அதற்குரிய அனுமதியினை பெற்று விரைவில் பணிகள் நடை பெறும் என அமைச்சர் சாமிநாதன் தெரிவித்தார்.

    பின்னர் தியாகி இமானுவேல் சேகரனாரின் நினைவிடத்திற்கு சென்று மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

    இந்நிகழ்ச்சியில் ராமநாதபு ரம் தி.மு.க மாவட்ட செயலா ளர் காதர்பாட்சா முத்துராம லிங்கம் எம்.எல்.ஏ., பரமக்குடி எம்.எல்.ஏ. முருகேசன், கூடுதல் இயக்குனர் தமிழ் செல்வ ராஜன், மாவட்ட வருவாய் அலுவலர் கோவிந்த ராஜூலு, பரமக்குடி சார் கலெக்டர் அப்தாப் ரசூல், பரமக்குடி நகர சபை தலைவர் சேது கருணாநிதி, பரமக்குடி நகராட்சி கமிஷனர் (பொறுப்பு) அஜிதா பர்வீன்.

    செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் பாண்டி, உதவி மக்கள் தொடர்பு அலுவலர் (செய்தி) விஜய குமார், பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் குருதிவேல் மாறன், தி.மு.க. விவசாய அணி மாநில துணைச் செயலாளரும்,

    முதுகுளத்தூர் முன்னாள் எம்.எல்.ஏ.வுமான முருக வேல் மற்றும் இமானுவேல் சேகரனாரின் மகள் சுந்தரி பிரபா ராணி,தேவேந்திரர் பண்பாட்டு கழக தலைவர் பரம்பை பாலா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தில் மொத்தமாக 12 எந்திரங்கள் பயன்படுத்தப்படுகிறது.
    • விவசாயிகள் சுத்திகரிக்கப்பட்டு வரும் நன்னீரை விவசாய நிலத்திற்கு வழங்குமாறு கோரிக்கை வைத்திருந்தனர்.

    தஞ்சாவூர்:

    தஞ்சாவூர் சாலைக்கார தெருவில் உள்ள மாநகராட்சியின் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தை இன்று மேயர் சண்.ராமநாதன், ஆணையர் மகேஸ்வரி, துணை மேயர் அஞ்சுகம் பூபதி ஆகியோர் நேரில் ஆய்வு செய்தனர்.

    பின்னர் மேயர் சண் ராமநாதன் அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    இந்த கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தில் மொத்தமாக 12 எந்திரங்கள் பயன்படுத்தப்படுகிறது.

    இதில் தற்சமயம் ஒரு எந்திரம் பழுதாகி உள்ளதால் 11 எந்திரங்கள் மூலம் இன்று சுத்திகரிப்பு நடந்து கொண்டு உள்ளது.

    இன்னும் இரண்டு நாட்களில் பழுதான எந்திரமும் சரி செய்யப்பட்டு சுத்திகரிப்பு பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும்.

    இந்த சுத்திகரிப்பு நிலையம் 28 எம்.எல்.டி கொள்ளளவு கொண்டதாகும்.

    அதில் 13 எம் .எல். டி கழிவு நீரை நாள்தோறும் சுத்திகரிப்பு செய்யப்படுகிறது.

    இதிலிருந்து சுத்திகரிக்கப்படும் தண்ணீர் அனைத்தும் தற்சமயம் வடவாற்றில் விடப்படுகிறது.

    தண்ணீரை சுற்றுப்பகுதியில் உள்ள சுமார் 300 ஏக்கர் நிலம் பயிரிடப்படுகிறது.

    அந்த விவசாயிகள் சுத்திகரிக்கப்பட்டு வரும் நன்னீரை விவசாய நிலத்திற்கு வழங்குமாறு ஏற்கனவே கோரிக்கை வைத்திருந்தனர்.

    அந்த கோரிக்கை குறித்து விவசாயிகளுக்கு தண்ணீர் வழங்குவதற்காக தமிழக அரசிடம் அனுமதி கேட்கப்பட்டுள்ளது.

    அது சம்பந்தமாக அனுமதி கிடைத்த பின்னர் விவசாயிகள் கோரிக்கை நிறைவேற்றப்படும்.

    தற்சமயம் செய்யப்படும் ஆய்வு எதற்காக என்றால் மாநகராட்சி கூட்டங்களில் அடிக்கடி இந்த சுத்திகரிப்பு நிலையம் சரிவர வேலை செய்வதில்லை என்ற குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் இந்த ஆய்வு மேற்கொள்ளப்படுகிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்த ஆய்வின் போது மாநகர நகர் நல அலுவலர் சுபாஷ் காந்தி, நகர அமைப்பு அலுவலர் ராஜசேகரன், தமிழ்நாடு நீர் முதலீட்டு கழகக்குழு தலைவர் எழிலன் மற்றும் மாமன்ற உறுப்பினர்கள், அலுவலர்கள் உடன் இருந்தனர்.

    • தனியார் திருமண மண்டபம் ஒன்றில் நிகழ்ச்சி நடைபெற்றது.
    • சிலம்பம், யோகா, திருக்குறள் வாசிப்பு நடத்திய குழந்தைகளுக்கு பரிசுகளை வழங்கி கவுரவித்தார்.

     திருப்பூர்:

    சுதந்திரப் போராட்டத் தியாகி கொடி காத்த குமரனின் 120 வது பிறந்த நாளை முன்னிட்டு, தியாகி குமரன் அறக்கட்டளையின் சார்பாக, திருப்பூர் குமரனை நினைவு கூறும் வகையில், தனியார் திருமண மண்டபம் ஒன்றில் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக தமிழ்த் திரைப்பட இயக்குனர் ஆர்.கே.செல்வமணி கலந்து கொண்டு உரையாற்றுகையில், இங்கு வந்துள்ள தாய்மார்கள் அனைவரும் உங்கள் பிள்ளைகளைப் போலவே, உங்கள் மருமகள்களையும் உங்கள் பிள்ளைகளாக நினைத்து வழி நடத்த வேண்டும். அது மட்டுமல்லாது, படிப்பு ஒன்றே குழந்தைகளின் எதிர்கால வாழ்க்கையை நிர்ணயிக்கும். அதை மனதில் வைத்துக் கொண்டு ஆண், பெண் என உங்களின் இரு குழந்தைகளையும் நன்றாக படிக்க வையுங்கள். கல்வி ஒன்றே அவர்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்தும் என்றார். மேலும், சிலம்பம், யோகா, திருக்குறள் வாசிப்பு நடத்திய குழந்தைகளுக்கு பரிசுகளை வழங்கி கவுரவித்தார். 

    • வளர்ச்சி திட்டப்பணிகளை கண்காணிப்பு அலுவலர் ஆய்வு செய்தார்.
    • மாவட்ட ஊரகவளர்ச்சி முகமையின் திட்ட இயக்குநர் தண்டபாணி, கலெக்டரின் நேர்முக உதவியாளர் நாச்சியார் அம்மாள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    விருதுநகர்

    அருப்புக்கோட்டை ஊராட்சி ஒன்றியப் பகுதிகளில் செயல்படுத் தப்பட்டு வரும் பல்வேறு நலத்திட்ட பணிகளை மாவட்ட கண்காணிப்பு அலுவலரும், கோ-ஆப்டெக்ஸ் மேலாண்மை இயக்குநருமான ஆனந்த்குமார், கலெக்டர் ஜெயசீலன் ஆகியோர் நேரில் சென்று பார்வை யிட்டனர்.

    கோபாலபுரம் ஊராட்சி யில் ஒருங்கிணைந்த குழந் தைகள் வளர்ச்சித்திட்டம், கூடங்குளம் அனல் மின் நிலைய சமூகபொறுப்பு நிதியின் கீழ் ரூ.12.80 லட்சம், ஊராட்சி ஒன்றிய நிதியின் கீழ் ரூ.5.80 லட்சம் ஆக மொத்தம் ரூ.18.60 லட்சம் மதிப்பில் அமைக்கப் பட்டுள்ள மாதிரி குழந்தை கள் மையத்தினை அவர்கள் பார்வையிட்டனர்.

    ேமலும் காரீப் முன் பருவத்திற்கான பயிற்சி பெற்ற விவசாயியின் நிலத்தில் சுமார் 500 ஏக்கர் பரப்பளவில் பருத்தி பயிரில், ஊடு பயிராக பயிரிடப்பட்ட உளுந்து மற்றும் துவரை பயிர்களை ஆய்வுசெய்தனர்.ராமனுஜபுரம் ஊராட்சியில் கொண்டிசெட்டி ஊரணியில் ரூ.13.96 லட்சம் மதிப்பில் அமைக்கப்பட்டுள்ள தடுப்பு சுவர் மற்றும் குளியல் படித்து றையை பார்வையிட்டனர்.

    இந்த ஆய்வின் போது, மாவட்ட ஊரகவளர்ச்சி முகமையின் திட்ட இயக்குநர் தண்டபாணி, கலெக்டரின் நேர்முக உதவியாளர் நாச்சியார் அம்மாள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • நாகப்பட்டினம் மாவட்டத்திற்கு மத்திய அதிவிரைவு படையினர் (ஆர்.ஏ.எப்.) 6 பெண் உட்பட 60 பேர் வருகை தந்தனர்.
    • நாகை மாவட்டத்தில் 7 நாட்கள் முகாமிட்டு மீனவ கிராமங்கள் உள்ளூர் போலீசாருடன் இணைந்து ஆய்வு செய்கின்றனர்.

    நாகப்பட்டினம்:

    நாகப்பட்டினம் மாவட்ட த்திற்கு கோவையில் இருந்து மத்திய அதிவிரைவு படையினர் (ஆர்.ஏ.எப்.) துணை கமாண்டர் ராஜேஷ் தலைமையில், 6 பெண் உட்பட 60 பேர் வருகை தந்தனர்.

    பின்னர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் பதற்றமான பகுதிகள் எவை? அடிக்கடி பிரச்சினை, கலவரம், சாதி மோதல்கள் உள்ளிட்ட சட்டம்-ஒழுங்கு பிரச்சினை கள் உள்ளதா ? என்பன உள்ளிட்ட தகவல்களை துணை கமாண்டர் ராஜேஷ், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹர்ஷ் சிங்கிடம் கேட்டறிந்தனர்.

    தொடர்ந்து நாகை நகர காவல் நிலையத்திலிருந்து வெளிப்பாளையம் காவல் நிலையம் வரை கலவரத்தை கட்டுப்படுத்தும் வஜ்ரா வாகனம், கருவிகள், நவீன எந்திரங்கள் வாகனத்துடன் துப்பாக்கி ஏந்தியபடி அணி வகுப்புடன் சென்றனர்.

    இந்த மத்திய அதிவிரைவு படையினர் நாகை மாவட்டத்தில் 7 நாட்கள் முகாமிட்டு,சிபிசிஎல், நாகை கடற்படை அலுவலகம், மீனவ கிராமங்கள், பதற்றமான, கலவரம் நடக்கும் பகுதிகள் என உள்ளூர் போலீசாருடன் இணைந்து ஆய்வு செய்கின்றனர். இதற்கான ஆய்வறிக்கையை தமிழக டி.ஜி.பி. மற்றும் உள்துறை அமைச்சகத்துக்கு சமர்ப்பிக்க உள்ளனர். 

    • கடந்த ஆண்டில் ஆரணி ஆற்றில் உடைப்பு ஏற்பட்ட பகுதிகளை ஆய்வு செய்தனர்.
    • ஆய்வின் போது மீஞ்சூர் பி.டி.ஓ. சந்திரசேகர் குமார் தலைவர் பவானி கங்கை அமரன் மற்றும் அதிகாரிகள் பலர் உடன் இருந்தனர்.

    பொன்னேரி:

    பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து பொன்னேரி சப்-கலெக்டர் ஐஸ்வர்யா தலைமையில் பொதுப்பணித்துறை வருவாய்த்துறை வட்டார வளர்ச்சி அலுவலர்கள், மற்றும் அதிகாரிகள், கடந்த ஆண்டில் ஆரணி ஆற்றில் உடைப்பு ஏற்பட்ட பகுதிகளை ஆய்வு செய்தனர்.

    பின்னர் பொன்னேரி அடுத்த திருப்பாலைவனம், ஆண்டார் மடம் பேரிடர் கால புயல் பாதுகாப்பு மையம் கட்டிடத்தினை சார் ஆட்சியர் ஆய்வு செய்தார்.

    அப்போது கட்டிடம் பழுதடைந்து, மின்விசிறி இயங்காமலும் டியூப்லைட் எரியாமலும் தண்ணீர் வசதி இன்றி ஜன்னல் கண்ணாடிகள் உடைந்த நிலையில் அடிப்படை வசதிகள் இல்லாமல் இரு்நததால் சீரமைக்குமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். ஆய்வின் போது மீஞ்சூர் பி.டி.ஓ. சந்திரசேகர் குமார் தலைவர் பவானி கங்கை அமரன் மற்றும் அதிகாரிகள் பலர் உடன் இருந்தனர்.

    ×