என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Marching With Guns"

    • நாகப்பட்டினம் மாவட்டத்திற்கு மத்திய அதிவிரைவு படையினர் (ஆர்.ஏ.எப்.) 6 பெண் உட்பட 60 பேர் வருகை தந்தனர்.
    • நாகை மாவட்டத்தில் 7 நாட்கள் முகாமிட்டு மீனவ கிராமங்கள் உள்ளூர் போலீசாருடன் இணைந்து ஆய்வு செய்கின்றனர்.

    நாகப்பட்டினம்:

    நாகப்பட்டினம் மாவட்ட த்திற்கு கோவையில் இருந்து மத்திய அதிவிரைவு படையினர் (ஆர்.ஏ.எப்.) துணை கமாண்டர் ராஜேஷ் தலைமையில், 6 பெண் உட்பட 60 பேர் வருகை தந்தனர்.

    பின்னர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் பதற்றமான பகுதிகள் எவை? அடிக்கடி பிரச்சினை, கலவரம், சாதி மோதல்கள் உள்ளிட்ட சட்டம்-ஒழுங்கு பிரச்சினை கள் உள்ளதா ? என்பன உள்ளிட்ட தகவல்களை துணை கமாண்டர் ராஜேஷ், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹர்ஷ் சிங்கிடம் கேட்டறிந்தனர்.

    தொடர்ந்து நாகை நகர காவல் நிலையத்திலிருந்து வெளிப்பாளையம் காவல் நிலையம் வரை கலவரத்தை கட்டுப்படுத்தும் வஜ்ரா வாகனம், கருவிகள், நவீன எந்திரங்கள் வாகனத்துடன் துப்பாக்கி ஏந்தியபடி அணி வகுப்புடன் சென்றனர்.

    இந்த மத்திய அதிவிரைவு படையினர் நாகை மாவட்டத்தில் 7 நாட்கள் முகாமிட்டு,சிபிசிஎல், நாகை கடற்படை அலுவலகம், மீனவ கிராமங்கள், பதற்றமான, கலவரம் நடக்கும் பகுதிகள் என உள்ளூர் போலீசாருடன் இணைந்து ஆய்வு செய்கின்றனர். இதற்கான ஆய்வறிக்கையை தமிழக டி.ஜி.பி. மற்றும் உள்துறை அமைச்சகத்துக்கு சமர்ப்பிக்க உள்ளனர். 

    ×