என் மலர்
உள்ளூர் செய்திகள்

ரேஷன் கடையில் மாவட்ட வழங்கல் அலுவலர் வாசுதேவன் ஆய்வு செய்தார்.
பாபநாசம் பகுதி ரேஷன் கடையில் அதிகாரி ஆய்வு
- ரேஷன் கடையில் பொருட்களின் இருப்பு விவரம் சரியாக உள்ளதா? என ஆய்வு செய்தார்.
- அரிசி, பருப்பு மற்றும் இதர பொருட்களின் தரம் குறித்து ஆய்வு செய்தார்.
பாபநாசம்:
பாபநாசம் வடக்கு வீதியில் உள்ள வேளாண் கூட்டுறவு கடன் சங்கத்துக்கு உட்பட்ட ரேஷன் கடை உள்ளது.
இந்த கடையில் இருந்து பொதுமக்களுக்கு வழங்கப்படும் அரிசி, பருப்பு மற்றும் இதர பொருட்களின் தரம் குறித்து மாவட்ட வழங்கல் அலுவலர் வாசுதேவன் திடீரென பார்வயைிட்டு ஆய்வு செய்தார்.
மேலும், பொருட்களின் இருப்பு விவரம் சரியாக உள்ளதா? என அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.
ஆய்வின்போது வருவாய் ஆய்வாளர் அஜித்குமார், சங்க செயலாளர் சரவணன், விற்பனையாளர் சிவகாம சுந்தரி மற்றும் பொதுமக்கள் உடன் இருந்தனர்.
Next Story






