search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மருதுபாண்டியர்கள்"

    • மருதுபாண்டியர்கள் நினைவு தினம் அமைச்சர்கள்-கலெக்டர் பங்கேற்கின்றனர்.
    • மருது சகோதரர்களின் தியாகத்தை போற்றும் விதமாக சென்னையிலும் தி.மு.க. அரசு சிலை நிறுவி பெருமைபடுத்தியது என்றார்.

    திருப்பத்தூர்

    சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரில் உள்ள மருது பாண்டியர் நினைவிடத்தில் 222-வது நினைவுநாள் இன்று 24-ந் தேதி கடைப்பிடிக்கபடுகிறது. இதையொட்டி மருது பாண்டியர் வாரிசுதாரர்கள் நினைவு மண்டபத்தின் முன்புறத்தில் சர்க்கரை பொங்கல் வைத்தனர். பின்னர் மருதுபாண்டியர் சிலை முன்பு படையல் இட்டு வழிபாடு செய்தனர்.

    இந்த நிகழ்ச்சியில் வாரிசு தாரர் ராமசாமி மற்றும் அவரது குடும்பத்தினர், உறவினர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். தொடர்ந்து நினைவு மணி மண்டபம் பகுதியில் மாவட்ட கலெக்டர் ஆஷாஅஜித் கொடியேற்றி வைத்து அரசு விழாவை தொடங்கி வைத்தார்.

    நினைவு மண்டபம், நினைவிட தூண் பகுதியில் அமைச்சர்கள், அரசு அதிகாரிகள், பல்வேறு அரசியல் கட்சி பிரமுகர்கள், சமுதாய அமைப்புகள் தொடர்ந்து அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

    மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அரவிந்த் தலைமையில் பாதுகாப்பு பணியில் சுமார் 1400 காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரில் மாமன்னர் மருது பாண்டியர்களுக்கு அவர்களின் மணிமண்டபம் மற்றும் நினைவு தூண்களில் தமிழக அரசு சார்பில் நிதித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, பத்திரப்பதிவு மற்றும் வணிகவரித்துறை அமைச்சர் மூர்த்தி, கூட்டுறவுத்துறை அமைச்சர் கே ஆர் பெரிய கருப்பன், பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் ஆர். எஸ்.ராஜாகண்ணப்பன் மற்றும் மானாமதுரை சட்டமன்ற உறுப்பினர் தமிழரசி ஆகியோர் கலந்து கொண்டு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

    நிகழ்ச்சியில் அமைச்சர் பெரியகருப்பன் பேசுகை யில், அண்ணா முதல் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வரை சுதந்திர போராட் டத்திற்கு பாடுபட்ட தலைவர்களை யும், தமிழ் மொழிக்காக, தமிழ் இனத்திற்காக பாடு பட்டவர்களின் புகழைப் பரப்புவதில் தி.மு.க. முதல்- அமைச்சர்களுக்கு இணையானவர்கள் யாரும் இல்லை. மருது சகோத ரர்களின் வீர வரலாற்றை கருணாநிதி அறிந்து அவர்க ளுக்கு சிலை வைத்து நினைவுமண்டபம் கட்டி னார்.

    சுதந்திரப் போராட்ட வீரர்களின் வரலாற்றை தி.மு.க. அரசு மூடி மறைப்ப தாக சிலர் நேற்று கூட திருச்சியில் உயர்ந்த பதவியில் இருந்து கொண்டு வரலாறு தெரியாமல் அவதூறாக பொறுப் பற்றதனமாக யாரோ எழுதிக் கொடுத்ததை பேசியுள்ளார். மருது சகோதரர்களின் தியாகத்தை போற்றும் விதமாக சென்னையிலும் தி.மு.க. அரசு சிலை நிறுவி பெருமைபடுத்தியது என்றார்.

    • திருப்பத்தூரில் மருதுபாண்டியர்கள் குருபூஜை நடக்கயிருப்பதை முன்னிட்டு பாதுகாப்பு குறித்து போலீஸ் சூப்பிரண்டு ஆய்வு செய்தார்.
    • மருதுபாண்டியர்கள் தூக்கிலிடப்பட்ட இடமான நினைவுத்தூண் (ஸ்தூபி) மற்றும் மணிமண்டபம் ஆகிய பகுதிகளில் போலீஸ் சூப்பிரண்டு திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

    திருப்பத்தூர்

    சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரில் சுதந்திர போராட்ட தியாகிகளான மருது பாண்டியர்களின் குருபூஜையை முன்னிட்டு மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் அரவிந்த் ஆய்வு மேற் கொண்டார்.

    வருடந்தோறும் அக்டோ பர் மாதம் 24 -ந்தேதி முதல் மருது பாண்டி யர்களின் குருபூஜை தினத்தை அரசு விழாவாக கடைபிடிக்கப்பட்டு வருகி றது. அதன் அடிப்படையில் திருப்பத்தூர் நகரில் பஸ் நிலையம் எதிரே அமைந் துள்ள மருதுபாண்டியர்கள் தூக்கிலிடப்பட்ட இடமான நினைவுத்தூண் (ஸ்தூபி) மற்றும் மணிமண்டபம் ஆகிய பகுதிகளில் போலீஸ் சூப்பிரண்டு திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

    மேலும் அன்றைய தினங்களில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து அமைச்சர்கள், அனைத்து கட்சி பிரமு கர்கள், முக்கியஸ்தர்கள் போன்ற பலரும் ஆயிரக் கணக்கானோர் வருகைதர இருப்பதால் அது குறித்த பாதுகாப்பு மற்றும் கடைபிடிக்க வேண்டிய வழி முறைகள் குறித்த முன் ஏற்பாடுகள் பணிகள் குறித்து கேட்டறிந்தார்.

    இந்த ஆய்வில் திருப்பத் தூர் காவல் துணை கண்காணிப்பாளர் ஆத்ம நாதன், நகர் காவல் ஆய்வாளர் கலைவாணி ஆகியோர் உடன் இருந்தனர்.

    • விருதுநகர் அருகே மருதுபாண்டியர்கள் சிலைகளுக்கு கே.டி.ராஜேந்திரபாலாஜி மரியாதை செலுத்தினார்.
    • இந்த நிகழ்ச்சியில், நரிக்குடி மேற்கு ஒன்றிய செயலாளர் பூமிநாதன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    விருதுநகர்

    மருதுபாண்டியர்களின் 221-வது குருபூஜை விழாவினை முன்னிட்டு விருதுநகர் மாவட்டம் நரிக்குடி அருகே மறையூர் கிராமத்தில் அமைந்துள்ள அவர்களது சிலைகளுக்கு அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி தலைமையில் அ.தி.மு.க.வினர் மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

    இந்த நிகழ்ச்சியில், நரிக்குடி மேற்கு ஒன்றிய செயலாளர் பூமிநாதன், அண்ணா தொழிற்சங்க போக்குவரத்து பிரிவு மாநில துணை செயலாளர் வீரேசன், நரிக்குடி ஒன்றிய சேர்மன் பஞ்சவர்ணம்,விருதுநகர் மேற்கு மாவட்ட கழக அவைத்தலைவர் விஜய குமரன், விருதுநகர் கிழக்கு மாவட்ட அம்மா பேரவை செயலாளர் மச்சேஸ்வரன், அருப்புக்கோட்டை நகர செயலாளர் சக்திவேல் பாண்டியன், அருப்புக்கோட்டை தெற்கு ஒன்றிய செயலாளர் வாசுதேவன், நடிகர் பிரபாத், விருதுநகர் கிழக்கு மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் மச்சராசா மற்றும் நூற்றுக்கும் மேற்பட்ட நிர்வாகிகள், தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

    • அரசு சார்பில் மருதுபாண்டியர்களின் நினைவாக மணிமண்டபம் அமைக்கப்பட்டுள்ளது
    • மருது பாண்டியர்களின் நினைவு தினம் அரசு நிகழ்ச்சியாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது.

    சிவகங்கை:

    இந்தியாவில் ஆங்கிலேயர் ஆட்சியை எதிர்த்து சுதந்திர போரிட்டதால் ஆங்கிலேயர்களால் 1801-ம் ஆண்டு அக்டோபர் 24-ந் தேதி சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூரில் மருதுபாண்டியர்கள் தூக்கிலிடப்பட்டார்கள். இதனையடுத்து அரசு சார்பில் மருதுபாண்டியர்களின் நினைவாக மணிமண்டபம் அமைக்கப்பட்டு இங்கு ஆண்டுதோறும் அக்டோபர் மாதம் 24-ந் தேதி மருது பாண்டியர்களின் நினைவு தினம் அரசு நிகழ்ச்சியாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது.

    இந்நிலையில் இன்று மருதுபாண்டியர்களின் 221வது நினைவு நாளை முன்னிட்டு ஏராளமான அரசியல் கட்சி தலைவர்கள், அமைச்சர்கள், பல்வேறு அமைப்பினர் கலந்துகொண்டு திருப்பத்தூரில் உள்ள மணிமண்டபத்தில், மருதுபாண்டியர்களின் சிலைகளுக்கு அஞ்சலி செலுத்தினர். மேலும் திருப்பத்தூர் பேருந்து நிலையம் அருகில் உள்ள நினைவுத்தூணுக்கும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். 

    அரசு சார்பில் கூட்டுறவுத்துறை அமைச்சர் இ.பெரியசாமி, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன், தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் கேஆர். பெரியகருப்பன், வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி, நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத்துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.

    ×