மருதுபாண்டியர்கள் சிலைகளுக்கு கே.டி.ராஜேந்திரபாலாஜி மரியாதை

விருதுநகர் அருகே மருதுபாண்டியர்கள் சிலைகளுக்கு கே.டி.ராஜேந்திரபாலாஜி மரியாதை செலுத்தினார். இந்த நிகழ்ச்சியில், நரிக்குடி மேற்கு ஒன்றிய செயலாளர் பூமிநாதன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
மருதுபாண்டியர்கள் சிலைகளுக்கு முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
மருதுபாண்டியர்கள் சிலைகளுக்கு முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
Published on

விருதுநகர்

மருதுபாண்டியர்களின் 221-வது குருபூஜை விழாவினை முன்னிட்டு விருதுநகர் மாவட்டம் நரிக்குடி அருகே மறையூர் கிராமத்தில் அமைந்துள்ள அவர்களது சிலைகளுக்கு அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி தலைமையில் அ.தி.மு.க.வினர் மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

இந்த நிகழ்ச்சியில், நரிக்குடி மேற்கு ஒன்றிய செயலாளர் பூமிநாதன், அண்ணா தொழிற்சங்க போக்குவரத்து பிரிவு மாநில துணை செயலாளர் வீரேசன், நரிக்குடி ஒன்றிய சேர்மன் பஞ்சவர்ணம்,விருதுநகர் மேற்கு மாவட்ட கழக அவைத்தலைவர் விஜய குமரன், விருதுநகர் கிழக்கு மாவட்ட அம்மா பேரவை செயலாளர் மச்சேஸ்வரன், அருப்புக்கோட்டை நகர செயலாளர் சக்திவேல் பாண்டியன், அருப்புக்கோட்டை தெற்கு ஒன்றிய செயலாளர் வாசுதேவன், நடிகர் பிரபாத், விருதுநகர் கிழக்கு மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் மச்சராசா மற்றும் நூற்றுக்கும் மேற்பட்ட நிர்வாகிகள், தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com