search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "son"

    • ராஜேஸ்வரியின் மூத்த மகன் திட்டி வெளியே செல்லுமாறு கூறினார்.
    • மகன் என்றும் பாராமல் அவரை இரும்பு கம்பியால் தாக்கினார்.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலம் கொச்சியை சேர்ந்தவர் ராஜேஸ்வரி. இவருக்கு திருமணமாகி மகன்கள் உள்ளனர். மூத்த மகனுக்கு 17 வயது ஆகிறது.

    இந்நிலையில் ராஜேஸ்வரிக்கும் வயநாட்டை சேர்ந்த சுனீஸ் என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டது. நாளடைவில் இது கள்ளக்காதலாக மாறியது. இதனால் சுனீஸ், அடிக்கடி ராஜேஸ்வரி வீட்டுக்கு வந்து சென்றார்.

    இதுபற்றி அக்கம்பக்கத்தினர், ராஜேஸ்வரியின் மூத்த மகனிடம் கூறினர். அவர் தாயாரிடம் இதுபற்றி கேட்டார். இதில் தாய்க்கும், மகனுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது.

    சம்பவதன்றும் சுனீஸ் ராஜேஸ்வரி வீட்டிற்கு வந்தார். அவரை ராஜேஸ்வரியின் மூத்த மகன் திட்டி வெளியே செல்லுமாறு கூறினார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த ராஜேஸ்வரி, மகன் என்றும் பாராமல் அவரை இரும்பு கம்பியால் தாக்கினார். அவருடன் சேர்ந்து சுனீசும், தாக்கினார். இதில் படுகாயம் அடைந்த சிறுவனை அக்கம் பக்கத்தினர் மீட்டு அருகில் உள்ள ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இந்த சம்பவம் குறித்து சிறுவன் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து சிறுவனை தாக்கியதாக அவரது தாயார் ராஜேஸ்வரி, கள்ளக்காதலன் சுனீஸ் உள்பட 3 பேரை கைது செய்தனர். அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • அக்கா தேவி வீட்டிற்கு தனது 2 மகன்களுடன் சென்றுள்ளார்.
    • பல இடங்களில் தேடியுள்ளனர்.

    பல்லடம் :

    கோவை மாவட்டம், சூலூர் குமாரபாளையத்தைச் சேர்ந்தவர் பெருமாள் (வயது 36). இவரது மனைவி கவிதா ( 29 ). இவர்களது மகன்கள் ரத்தீஷ்( 8 ), மிஜின்( 6 ) இந்த நிலையில் கடந்த 29- ந்தேதி பொங்கலூர் அருகே உள்ள வேலம்பட்டியில் வசிக்கும் கவிதாவின் அக்கா தேவி வீட்டிற்கு தனது 2 மகன்களுடன் சென்றுள்ளார். இதனைத் தொடர்ந்து நேற்று முன்தினம் காலை தேவி மற்றும் அவரது கணவர் ஆகியோர் வேலைக்கு சென்று விட்டனர். வேலை முடிந்து இரவு 8 மணிக்கு வீட்டிற்கு வந்து பார்த்தபோது கவிதா மற்றும் அவரது 2 மகன்களுடன் வீட்டில் இல்லை. பல இடங்களில் தேடியுள்ளனர். எங்கு தேடியும் கண்டுபிடிக்க முடியவில்லை. செல்போனில் தொடர்பு கொண்டபோது சுவிட்ச் ஆப் செய்யப்பட்டு இருந்தது. இது குறித்து அவர்கள் பெருமாளுக்கு தகவல் கொடுத்தனர்.

    உடனடியாக வேலம்பட்டி வந்த பெருமாள் இது குறித்து அவினாசி பாளையம் போலீசில் புகார் தெரிவித்துள்ளார். புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்கு பதிவு செய்து அவர்கள் எங்கு சென்றனர்? என்பது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.

    • தாயை அடித்து கொன்ற மகன் கைது செய்யப்பட்டார்.
    • போலீசார் வழக்குப் பதிவு செய்து தாயை அடித்துக்கொலை செய்த மாதவனை கைது செய்தனர்.

    மதுரை

    மதுரை மிளகரணை, நடுத்தெருவை சேர்ந்தவர் சாந்தி (வயது50). இவரது மகன் மாதவன் (25). இவர் கூலித்தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். அவருக்கு சற்று மனநல பாதிப்பு இருந்ததாக கூறப்படுகிறது. இதற்காக அவர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தார். இருந்தபோதிலும் நோய் முழுமையாக குணமாக வில்லை.

    இந்தநிலையில் சாந்தி நேற்று அதிகாலை வீட்டில் இருந்தார். அப்போது மாதவன் பணம் கேட்டுள் ளார். அவருக்கு பணம் கொடுக்க சாந்தி மறுத்து விட்டார். இதில் ஆத்திர மடைந்த மாதவன் இரும்பு கம்பியை எடுத்து வந்து சாந்தியை தாக்கினார். இதில் படுகாயமடைந்த சாந்தி மயங்கி விழுந்தார். அவரை உறவினர்கள் மீட்டு மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே அவர் பரிதாபமாக இறந்தார்.

    இது பற்றி கூடல்புதூர் போலீசில் புகார் செய்யப்பட்டது. அதன் பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து தாயை அடித்துக்கொலை செய்த மாதவனை கைது செய்தனர்.

    • குடிபோதையில் தகராறு செய்த மகனை, தந்தை கத்தியால் வெட்டிார்.
    • கிருஷ்ணன் கோவில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    விருதுநகர்

    ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள எஸ்.ராமச்சந்திராபுரம் இந்திரா காலனியை சேர்ந்தவர் மலைச்செல்வன். இவரது மனைவி கல்யாணி. இவர்களுக்கு சூர்யபிரகாஷ்(வயது21) என்ற மகன் உள்ளார். சம்பவத்தன்று சூர்யபிரகாஷ் வீட்டிற்கு குடித்துவிட்டு வந்து தாய் கல்யாணியிடம் தகராறு செய்துள்ளார். இதுகுறித்து மலைச்செல்வனுக்கு, அவர் போனில் தகவல் தெரிவித்தார்.

    இந்தநிலையில் இரவு மலைச்செல்வன் வீட்டிற்கு வந்தபோது சூர்யபிரகாஷ் வாசலில் குடிபோதையில் நின்று கொண்டிருந்தார். அதைப்பார்த்து மலைச்செல்வன் அவரை கண்டித்தார். ஆனால் தந்தையுடனும் சூர்யபிரகாஷ் தகராறு செய்துள்ளார். இதில் ஆத்திரமடைந்த மலைச்செல்வன், சூர்யபிரகாஷ் வைத்திருந்த கத்தியை பிடுங்கி அவரை கை, கால்களில் வெட்டினார். சூர்யபிரகாஷின் நண்பர்கள் அவரை மீட்டு வத்திராயிருப்பு அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். இது குறித்து கல்யாணி கிருஷ்ணன் கோவில் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • மீனா நாங்குநேரி பழைய பஸ் நிலையத்திற்கு டீ வாங்க சென்றார்.
    • ஆத்திரம் அடைந்த மணி, மீனாவை அவதூறாக பேசி தாக்கினார்.

    களக்காடு:

    நாங்குநேரி செல்வன் தெருவை சேர்ந்தவர் சுப்பையா. இவரது மனைவி மீனா (வயது 46). இவர்களது மகன் கோகுல கண்ணன் என்ற பெட்ரோல் மணி. கூலி தொழிலாளியான இவர் சரியாக வேலைக்கு செல்லாமல் இருந்து வந்துள்ளார். கடந்த 2016-ம் ஆண்டு இவர் செலவுக்கு பணம் கேட்டு தாயாரிடம் தகராறு செய்தார். இதுகுறித்து புகாரின் பேரில் நாங்குநேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து மணியை கைது செய்து, சிறையில் அடைத்தனர்.

    அதன் பின் அவர் ஜாமீனில் விடுதலையானார். சிறையில் இருந்து விடுதலையான பிறகும் அவர் வேலைக்கு செல்லாமல் தாயாரிடம் பணம் கேட்டு மிரட்டி வந்துள்ளார். சம்பவத்தன்று மீனா நாங்குநேரி பழைய பஸ் நிலையத்திற்கு டீ வாங்க சென்றார். அப்போது அங்கு வந்த மணி, மீனாவிடம் வழக்கம் போல் செலவுக்கு பணம் கேட்டுள்ளார். மீனா பணம் கொடுக்காததால் ஆத்திரம் அடைந்த மணி அவரை அவதூறாக பேசி தாக்கினார். மேலும் கொலை மிரட்டலும் விடுத்தார்.

    இதுபற்றி அவர் நாங்குநேரி போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி மணியை தேடி வருகின்றனர்.

    • திருக்குறுங்குடி அருகே உள்ள மேலகட்டளையை சேர்ந்தவர் ராஜம்மாள்.கூலி வேலை செய்து வருகிறார்.
    • இதையடுத்து ராஜம்மாளையும் செல்வின் தாக்கினார். இதில் காயமடைந்த ராஜம்மாள் சிகிச்சைக்காக ஏர்வாடி தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

    களக்காடு:

    திருக்குறுங்குடி அருகே உள்ள மேலகட்டளையை சேர்ந்தவர் ராஜம்மாள் (வயது65). இவரது கணவர் சுந்தர்ராஜ் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்தார். ராஜம்மாள் கூலி வேலை செய்து வருகிறார்.

    சம்பவத்தன்று இரவில் ராஜம்மாளின் மகன் ஜான் தனது நண்பர்களுடன் சேர்ந்து கிறிஸ்துமஸ் விழாவிற்காக மேலகட்டளையில் உள்ள கிறிஸ்தவ ஆலயத்தில் அலங்காரப் படுத்தும் பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது அங்கு வந்த அதே ஊரை சேர்ந்த முத்துப்பாண்டி மகன் செல்வின், ஜானை பார்த்து ஆலயத்தை அலங்காரப்படுத்த நீங்கள் யார்? எனக் கேட்டார். இதில் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. ஆத்திரம் அடைந்த செல்வின், ஜானை தாக்கினார். இதைப்பார்த்த ராஜம்மாள் தட்டிக் கேட்டார். இதையடுத்து ராஜம்மாளையும் செல்வின் தாக்கினார். இதில் காயமடைந்த ராஜம்மாள் சிகிச்சைக்காக ஏர்வாடி தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதுபற்றி திருக்குறுங்குடி போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி தாய், மகனை தாக்கிய செல்வினை தேடி வருகின்றனர்.

    • வேலு என்பவருக்கு திடீரென உடல்நிலை மோசமானது.
    • மகன் அதிர்ச்சி அடைந்து கதறி அழுதார்.

    நாகர்கோவில் :

    குமரி மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலையில் பேச்சிப்பாறை அணைக்கு அருகே பழங்குடியின மக்கள் வசிக்கும் குடியிருப்புகள் உள்ளன.

    இந்த குடியிருப்புக்கு செல்ல சாலை வசதி கிடையாது. இதனால் அங்கு வசிக்கும் மக்களுக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டால் உடனடியாக ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்ல முடியாது. பாதிக்கப்பட்ட நபரை சில கி.மீ. தூரம் தூக்கி சென்று அங்கிருந்து வாகனத்தில் ஏற்றி ஆஸ்பத்திரிக்கு செல்ல வேண்டும் என்ற பரிதாப நிலை இருக்கிறது.

    இந்தநிலையில் சர்க்கரை நோயால் அவதிப்பட்டு வந்த பேச்சிப்பாறை கோலிஞ்சிமடம் பழங்குடி குடியிருப்பைச் சேர்ந்த வேலு (வயது 67) என்பவருக்கு திடீரென உடல்நிலை மோசமானது.

    இதையடுத்து அவருடைய மகன் விக்னேஷ், தந்தையை காப்பாற்ற தோளில் சுமந்து சென்றார். அந்த வகையில் 3 கி.மீ. தூரம் கடந்து சென்ற அவர் பின்னர் ஒரு காரில் ஏற்றி பேச்சிப்பாறை அரசு ஆரம்ப சுகாதார நிலைய ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றார்.

    அங்கு பரிசோதனை செய்த டாக்டர், வேலு ஏற்கனவே இறந்து விட்டார் என தெரிவித்தார்.

    இதனை கேட்டு மகன் அதிர்ச்சி அடைந்து கதறி அழுதார். சாலை வசதியில்லாததால் நோயால் பாதித்த வேலுவை உரிய நேரத்தில் ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்ல முடியாததால் அவர் உயிரிழந்த சம்பவம் பழங்குடி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

    • சோழசிராமணி அருகே மகன் மது அருந்தி வந்ததால் விரக்தியில் தந்தை தற்கொலை செய்துகொண்டார்.
    • மது அருந்தக்கூடாது என்று தந்தை பலமுறை எடுத்து கூறியும் மகன் கேட்கவில்லை.

    பரமத்தி வேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் தாலுகா, சோழசிராமணி அருகே உள்ள பொன்னம்பா ளையம், அருந்ததியர் காலனியை சேர்ந்தவர் மாரிமுத்து (வயது 54) கட்டிட மேஸ்திரி. இவருக்கு 2 மகன்களும், ஒரு மகளும் உள்ளனர். இவரது இளைய மகன் தினேஷ் மது அருந்திவிட்டு வேலைக்கு போகாமல் வீட்டில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

    இது குறித்து மகனிடம் மது அருந்தக்கூடாது என அவரது தந்தை மாரிமுத்து பலமுறை எடுத்துக் கூறியும் அவர் கேட்கவில்லை என தெரிகிறது.

    இதனால் மனம் உடைந்த நிலையில் இருந்த மாரிமுத்து இரவு வீட்டிற்கு அருகில் உள்ள ஒரு கொட்டகையில் நைலான் கயிற்றால் தூக்கு போட்டுக்கொண்டார். தொங்கிய அவர் உயிருக்கு போராடிய நிலையில் இருந்ததை பார்த்துள்ளார்.

    பின்னர் அக்கம் பக்கத்தில் இருந்தவர்களை அழைத்து அவரை காப்பாற்றி திருச்செங்கோடு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். ஆனால் அங்கு மாரிமுத்து சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்‌.

    சம்பவம் குறித்து ஜேடர்பாளையம் போலீசில் புகார் செய்தனர். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு பிரேதத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருச்செங்கோடு அரசு மருத்துவமனை சவக்கிடங்கில் வைத்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • தாயிடமிருந்து நகை, பணத்தை பறித்து கவனிக்காத மகனை போலீசார் எச்சரித்தனர்.
    • இதனை மூதாட்டி ஏற்றுக் கொண்டதால பிரச்சனை தீர்த்து வைக்கப்பட்டது.

     கடலூர்:

    கடலூர் மாவட்டம் நெய்வேலியை சேர்ந்தவர் தனலட்சுமி (வயது 75) .இவர் ஹலோ சீனியர் காவல் உதவி எண்ணில் தொடர்பு கொண்டு தனது 2 பவுன் நகை மற்றும் தனது கணவரது சேமிப்பு பணம் ஒரு லட்சம் ரூபாய் ஆகியவற்றை தனது மூத்த மகன் அன்புவேல் வாங்கிக்கொண்டு தன்னை கவனித்துக் கொள்ளாமல் வீட்டைவிட்டு வெளியே அனுப்பிவிட்டதாக புகார் தெரிவித்தார். அதன் பேரில் நெய்வேலி டவுன்ஷிப் சிறப்பு சப்- இன்ஸ்பெக்டர் ஜெயராமன் சம்பவ இடத்திற்கு சென்று விசாரித்ததில் புகார்தாரரின் மகன் அன்புவேல் தனது அம்மாவுக்கு கொடுக்க வேண்டிய 2 பவுன் நகை , 1 லட்சம் பணம் மற்றும் வீட்டு மனை பத்திரம் ஆகியவற்றை தனது உறவினர்களை சாட்சியாக வைத்து அவர்கள் முன்னிலையில் கொடுத்து விடுவதாக உத்தரவாதம் அளித்துள்ளார். இதனை மூதாட்டி ஏற்றுக் கொண்டதால பிரச்சனை தீர்த்து வைக்கப்பட்டது.

    • குமார் தான் காதலிக்கும் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தார். அதற்காக பெற்றோரிடம் சம்மதம் கேட்க காத்திருந்தார்.
    • இருவரும் வெவ்வேறு சாதியை சேர்ந்தவர்கள் என்பதால் குமாரின் குடும்பத்தினர் சம்மதிக்கவில்லை.

    கோவை:

    கோவை ஆர்.எஸ்.புரம் காந்திபார்க் சுக்ரவார்பேட்டையை சேர்ந்தவர் குழந்தைவேல். இவரது மனைவி ராணி(வயது52). இவர்களது மகன் குமார்(29). சென்ட்ரிங் தொழிலாளி.

    இவர் நீண்டநாட்களாக இளம்பெண் ஒருவரை காதலித்து வருகிறார். இருவரும் அடிக்கடி செல்போனில் பேசி தங்களது காதலை வளர்த்து வந்தனர்.

    இந்த நிலையில் குமார் தான் காதலிக்கும் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தார். அதற்காக பெற்றோரிடம் சம்மதம் கேட்க காத்திருந்தார்.

    ஆனால் அதற்குள்ளாகவே தங்களது மகனின் காதல் விவகாரம் பெற்றோருக்கு தெரியவந்தது. குமாரின் காதலுக்கு பெற்றோர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.குறிப்பாக அவரது தாய் ராணி(52) இந்த காதலை கடுமையாக எதிர்த்ததுடன் அந்த பெண்ணை திருமணம் செய்ய ஒருபோதும் சம்மதிக்க மாட்டோம் என கண்டிப்புடன் தெரிவித்தார்.

    இருவரும் வெவ்வேறு சாதியை சேர்ந்தவர்கள் என்பதால் குமாரின் குடும்பத்தினர் சம்மதிக்கவில்லை. இதனால் அவருக்கும், அவரது தாயாருக்கும் அடிக்கடி சண்டை ஏற்பட்டுள்ளது.

    கடந்த சில நாட்களாக தாயும், மகனும் பேசிக்கொள்ளவில்லை. இருப்பினும் குமார், தனது காதலியுடன் தொடர்ந்து பேசி வந்தார். இதனையறிந்த ராணி தனது மகன் மீது கடும் ஆத்திரத்தில் இருந்தார்.

    இந்நிலையில், சம்பவத்தன்று இரவு வேலைக்கு சென்று திரும்பிய குமார் வீட்டில் உணவருந்தினார். அப்போது மகன் மீது ஏற்கனவே ஆத்திரத்தில் இருந்த ராணி வீட்டில் இருந்த மண்எண்ணையை எடுத்து அவர் மீது ஊற்றி தீ பற்ற வைத்தார். பின்னர் அங்கிருந்து தப்பி சென்றார். அப்போது குமார் குடிபோதையில் இருந்ததால் தன் மீது பற்றிய தீயை அணைத்து விட்டு வீட்டில் தூங்கி விட்டார்.

    மறுநாள் காலையில் போதை தெளிந்ததும் தீக்காயத்தின் வலி தெரிந்தது. இதனை பார்த்த அங்கிருந்தவர்கள் 108 ஆம்புலன்ஸ் மூலம் குமாரை கோவை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக ஆர்.எஸ்.புரம் போலீசில் புகார் அளிக்கப்பட்டது. புகாரின் பேரில், போலீசார் ராணி மீது கொலை முயற்சி வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    காதல் விவகாரத்தில் பெற்ற மகனையே தாய் மண்ணெண்ணெய் ஊற்றி எரித்து கொல்ல முயன்ற சம்பவம் கோவையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • தாய் இறந்த சோகத்தில் மகனும் உயிரிழந்தார்
    • பழனியப்பன் இதய சிகிச்சை எடுத்து வந்தார்.

    புதுக்கோட்டை:

    பொன்னமராவதி அருகே உள்ள பி.உசிலம்பட்டியில் வசித்து வந்தவர் மருதம்பாள் என்ற சின்னபிள்ளை (வயது 90). இவரது மகன் பழனியப்பன்(52). சம்பவத்தன்று சின்னப்பிள்ளை வயது முதிர்வு காரணமாக உயிரிழந்தார். இவரது இறுதிசடங்கிற்கான ஏற்பாடுகளை பழனியப்பன் செய்து வந்தார். மேலும் தாய் இறந்த சோகத்தில் மனமுடைந்த நிலையில் அவர் இருந்து வந்தார். இந்நிலையில் பழனியப்பனுக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டதில் அவரும் பரிதாபமாக உயிரிழந்தார். பழனியப்பன் இதய சிகிச்சை எடுத்து வந்தார் என்பது குறுப்பிடத்தக்கது. இதையடுத்து தாய்-மகனுக்கும் இடுகாட்டில் அடுத்தடுத்து இறுதிச்சடங்குகள் செய்யப்பட்டது. ஒரே குடும்பத்தில் தாய் இறந்த சோகத்தில் மகனும் ெநஞ்சு வலியால் உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. இறந்த பழனியப்பனுக்கு ஒரு மனைவியும், ஒரு மகனும் உள்ளனர்.


    • மோட்டார் சைக்கிளில் அன்னூரிலிருந்து அவினாசி நோக்கி வந்து கொண்டிருந்தனர்.
    • அனந்தகிரி அருகே வந்தபோது எதிரே வேகமாக வந்த வேண் மோட்டார் சைக்கிள் மீது மோதியது.

    அவினாசி :

    அவினாசி அம்மாபாளையத்தை சேர்ந்தவர் ஆனந்தராஜ் (வயது42). இவரும் இவரது மகன் தரணி (15) ஆகிய இருவரும் மோட்டார் சைக்கிளில் அன்னூரிலிருந்து அவினாசி நோக்கி வந்து கொண்டிருந்தனர்.

    அவினாசியை அடுத்து அனந்தகிரி அருகே வந்தபோது எதிரே வேகமாக வந்த வேண்மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் மோட்டார் சைக்கிளில் வந்த இருவருக்கும் பலத்த காயம் ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளனர். இது குறித்த புகாரின்பேரில் அவினாசி போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    ×