search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கோவை"

    • 2 சரக்கு பெட்டியுடன் கூடிய ரெயில் மேலாளர் பெட்டி ஆகியவை இணைக்கப்படும். ‌
    • விழுப்புரம், செங்கல்பட்டு ஆகிய ரெயில் நிலையங்களில் நின்று செல்லும்.

    மதுரை:

    பாராளுமன்ற தேர்தலில் பொதுமக்கள் வாக்களிக்க வசதியாக சென்னையில் இருந்து கன்னியாகுமரி மற்றும் திண்டுக்கல் வழியாக கோவைக்கு சிறப்பு ரெயில்கள் இயக்க தெற்கு ரெயில்வே ஏற்பாடு செய்துள்ளது.

    அதன்படி தாம்பரம்-கன்னியாகுமரி சிறப்பு ரெயில் (06001) ஏப்ரல் 18 மற்றும் 20-ந்தேதி ஆகிய நாட்களில் தாம்பரத்தில் இருந்து மாலை 4.45 மணிக்கு புறப்பட்டு மறுநாள் அதிகாலை 4.40 மணிக்கு கன்னியாகுமரி சென்று சேரும்.

    மறு மார்க்கத்தில் கன்னியாகுமரி-தாம்பரம் சிறப்பு ரெயில் (06002) ஏப்ரல் 19 மற்றும் 21-ந்தேதி ஆகிய நாட்களில் கன்னியாகுமரியில் இருந்து இரவு 8.30 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 9.20 மணிக்கு தாம்பரம் சென்று சேரும்.

    இந்த ரெயில்கள் நாகர்கோவில், திருநெல்வேலி, கோவில்பட்டி, சாத்தூர், விருதுநகர், மதுரை, திண்டுக்கல், திருச்சி, விருத்தாச்சலம், விழுப்புரம், செங்கல்பட்டு ஆகிய ரெயில் நிலையங்களில் நின்று செல்லும். இந்த ரெயில்களில் 2 குளிர்சாதன மூன்றடுக்கு படுக்கை வசதி பெட்டிகள், 19 இரண்டாம் வகுப்பு படுக்கை வசதி பெட்டிகள், 2 சரக்கு பெட்டியுடன் கூடிய ரெயில் மேலாளர் பெட்டி ஆகியவை இணைக்கப்படும்.

    சென்னை எழும்பூர்-கோயம்புத்தூர் சிறப்பு ரெயில் (06003) சென்னையில் இருந்து ஏப்ரல் 18 மற்றும் 20 ஆகிய நாட்களில் சென்னையில் இருந்து மாலை 4.25 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 8.20 மணிக்கு கோயம்புத்தூர் சென்று சேரும்.

    மறு மார்க்கத்தில் கோயம்புத்தூர் சென்னை எழும்பூர் சிறப்பு ரெயில் (06004) ஏப்ரல் 19 மற்றும் 21 ஆகிய நாட்களில் கோயம்புத்தூரில் இருந்து இரவு 8.40 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 10.05 மணிக்கு சென்னை எழும்பூர் சென்று சேரும்.

    இந்த ரெயில்கள் தாம்பரம், செங்கல்பட்டு, மேல்மருவத்தூர், திண்டிவனம், விழுப்புரம், கடலூர், சிதம்பரம், சீர்காழி, வைத்தீஸ்வரன் கோவில், மயிலாடுதுறை, கும்பகோணம், பாபநாசம், தஞ்சாவூர், திருச்சி, மணப்பாறை, திண்டுக்கல், ஒட்டன்சத்திரம், பழனி, உடுமலைப்பேட்டை, பொள்ளாச்சி, கிணத்துக்கடவு, போத்தனூர் ஆகிய நிலையங்களில் நின்று செல்லும்.

    இந்த ரெயில்களில் 2 குளிர்சாதன மூன்றடுக்கு படுக்கை வசதி பெட்டிகள், 7 இரண்டாம் வகுப்பு படுக்கை வசதி பெட்டிகள், 7 இரண்டாம் வகுப்பு பொது பெட்டிகள், 2 சரக்கு மற்றும் ரெயில் மேலாளர் பெட்டிகள் இணைக்கப்படும்.

    இந்த தகவலை தெற்கு ரெயில்வே மதுரை கோட்ட அலுவலகம் தெரிவித்துள்ளது.

    • தனி நபர் குடிநீர் அளவு 100 லிட்டராக உயர்ந்தது
    • பெரும்பாலான வீடுகளுக்கு ஒருங்கிணைந்த குடிநீர் திட்டத்தில் குடி நீர் வழங்கப்படவில்லை.

    கோவை

    கோவை மாவட்டத்தில் 228 ஊராட்திகளில், 1190 குக்கிராமங்கள் இருக்கிறது. இதில் 3,74,013 வீடுகள் உள்ளது. பெரும்பாலான வீடுகளுக்கு ஒருங்கிணைந்த குடிநீர் திட்டத்தில் குடி நீர் வழங்கப்படவில்லை. சிலர் போர்வெல் மற்றும் உள்ளூர் நீர் ஆதாரங்கள் மூலமாக குடிநீர் ஆதாரங்கள் பெற்று பயன்படுத்துகின்றனர்.

    சிலர், குட்டை, ஓடைகளில் வரும் நீரை பயன்படுத்துவதாக தெரிகிறது. சிலர் கிணற்று நீரை குடிநீரா பயன்படுத்தி வருகின்றனர். பல இடங்களில் நீர் ஆதாரம் இல்லாமல் பொதுமக்கள் நீண்டதூரம் குடிநீருக்காக சென்று வர வேண்டியிருக்கிறது.

    குடிநீர் பிரச்சினையை தீர்க்க மத்திய அரசு ஜல் ஜீவன் மிஷன் திட்டத்தை தொடங்கியது. கடந்த 2020-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் வரை இந்த திட்டத்தில் 1,87,515 வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு வழங்கப்பட்டது. 2020-21-ம் ஆண்டில் 41,869 வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு தரப்பட்டது. இந்த ஆண்டில் 40,889 வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு தர வேண்டி உள்ளது.

    15-வது நிதி திட்டத்தின் கீழ் வீட்டு குடிநீர் இணைப்பாக 21,332 வீடுகளுக்கு குடிநீர் சப்ளை செய்ய வேண்டியிருக்கிறது. விரைவில் 19,557 வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு வழங்கும் பணி தொடங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    கோவை மாவட்டத்தில் பல இடங்களில் நிலத்தடி நீர் மட்டம் உயர்வான நிலையில் இருக்கிறது. இந்த நீரை போர்வெல் மூலமாக எடுத்து மேல் நிலை தொட்டி அல்லது நிலமட்டத் தொட்டிகளில் சேகரித்து அதை குடியிருப்புகளுக்கு வழங்க வாய்ப்புள்ளது. சில இடங்களில் பிரதான குடிநீர் இணைப்புகளில் இருந்து பகிர்மான குழாய்கள் மூலமாக குடி நீரை பகிர்ந்து வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.

    சில கிராமங்களில் வீடுகள் தொலைவில் ஆங்காங்கே அமைந்து–ள்ளது. சில வீடுகள் தோட்டம் மற்றும் ஒதுக்குப்புற பகுதிகளில் இருக்கிறது. மேடு, பள்ளம் மற்றும் வழிப்பாதை இல்லாமல் கூட சில கிராமங்கள் இருக்கிறது. இங்கே ஒருங்கிணைந்த குடிநீர் திட்டத்தின் கீழ் குழாய் இணைப்பு வழங்குவதில் சிக்கல் இருக்கிறது.

    இந்த பகுதியில் உள்ளூர் நீராதாரங்கள் மூலமாக குடிநீர் எடுத்து குழாய் மூலமாக குடிநீர் வழங்க தேவையான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. பிரதான நீர் மூலமாக குடிநீர் பகிர்மான குழாய் மூலமாக வெகு தூரம் கொண்டு செல்லவும் ஏற்பாடு நடக்கிறது. ஓரிரு ஆண்டுகளில் ஜல் ஜீவன் திட்டத்தில் முழு அளவில் குடிநீர் வழங்க முடியும்.

    இதற்கான குழாய் மற்றும் குடிநீர் ஆதாரங்கள் ஏற்படுத்தும் பணி நடக்கிறது. முழு அளவில் குடிநீர் இணைப்பு வழங்கினால் குக்கிராமங்களில் பொதுமக்கள் வசிப்பது அதிகமாகும். அடிப்படை வசதிகளுக்காக நகர்ப்ப–குதிக்கு பொதுமக்கள் இடம் பெயர்ந்து செல்வது வெகுவாக குறையும்.

    குடிநீர் முழு அளவில் வழங்குவதன் மூலமாக கிராமங்களில் வளர்ச்சி பணிகள் அதிகமாகி வருகிறது. பெரும்பாலான கிராமங்களில் தனி நபர் குடிநீர் அளவு தினமும் 100 லிட்டர் என உயர்ந்திருப்பதாக தெரியவந்துள்ளது.

    • இரண்டு ஏ.சி பெட்டிகள் நிரந்தரமாக இணைக்கப்பட்டுள்ளன.
    • 3-ம் வகுப்பு ஏ.சி பெட்டிகள் வரும் 22-ந் தேதி முதல் இணைத்து இயக்கப்படும்.

    கோவை

    கோவை வழியாக இயக்கப்படும் 4 எக்ஸ்பிரஸ் ெரயில்களில் கூடுதலாக இரண்டு ஏ.சி பெட்டிகள் நிரந்தரமாக இணைக்கப்பட்டுள்ளன. இதுகுறித்த சேலம் கோட்ட ெரயில்வே நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம் வழியாக இயக்கப்படும் திருவனந்தபுரம்-மும்பை சத்ரபதி சிவாஜி ெரயில் நிலையம் (சி.எஸ் எம்.டி) இடையிலான வாராந்திர எக்ஸ்பிரஸ் ெரயிலில் (எண்:16332), கூடுதலாக இரண்டு 3-ம் வகுப்பு ஏ.சி பெட்டிகள் இன்று முதல் இணைத்து இயக்கப்படுகிறது.

    இதேபோன்று மும்பை சி.எஸ்.எம்.டி-திருவனந்தபுரம் இடையிலான வாராந்திர எக்ஸ்பிரஸ் ெரயிலில் (16331), கூடுதலாக இரண்டு 3-ம் வகுப்பு ஏ.சி பெட்டிகள் நாளை முதல் இணைத்து இயக்கப்படுகிறது.

    மேலும், கன்னியாகுமரி-புனே இடையிலான தினசரி எக்ஸ்பிரஸ் ெரயிலில் (எண்:16382), கூடுதலாக இரண்டு 3-ம் வகுப்பு ஏ.சி பெட்டிகள் வரும் 22-ந் தேதி முதல் இணைத்து இயக்கப்படும்.

    புனே-கன்னியாகுமரி இடையிலான தினசரி எக்ஸ்பிரஸ் ெரயிலில் (எண்:16381), கூடுதலாக இரண்டு 3-ம் வகுப்பு ஏ.சி பெட்டிகள் வரும் 23-ந் தேதி முதல் இணைத்து இயக்கப்படும்.

    இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • தண்ணீர் தொட்டியை சுத்தம் செய்யும் வேலை செய்து கொண்டு இருந்தனர்.
    • போலீசார் தேவியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக இ.எஸ்ஐ ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    கோவை,

    கோவை ரத்தினபுரி தயிரிட்டேரியை சேர்ந்தவர் மூர்த்தி. இவரது மனைவி தேவி(வயது27). இவர் தனது சகோதரி சத்யா(33) என்பவருடன் சேர்ந்து கூலி வேலை செய்து வருகிறார்.

    இந்நிலையில், சம்பவத்தன்று இவர்கள் 2 பேரும் உப்பிலிபாளையத்தில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் தண்ணீர் தொட்டியை சுத்தம் செய்யும் வேலை செய்து கொண்டு இருந்தனர். அப்போது திடீரென தேவி மாயமானார். இதனையடுத்து அவரை அவரது சகோதரி சத்யா பல இடங்களில் தேடினார்.

    அப்போது அங்குள்ள தண்ணீர் தொட்டிக்குள் மூழ்கிய நிலையில் தேவி உயிருக்கு போராடி கொண்டிருந்தார். இதனைப்பார்த்து அதிர்ச்சியடைந்த சத்யா அக்கம்பக்கத்தினர் உதவியுடன் தேவியை மீட்க முயன்றார்.

    பின்னர் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் கொடுத்தார். விரைந்து சென்ற தீயணைப்பு வீரர்கள் நீரில் மூழ்கிய தேவியை மீட்க முயன்றனர். ஆனால் அதற்குள் அவர் இறந்தார்.

    சிங்காநல்லூர் போலீசார் தேவியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக இ.எஸ்ஐ ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இது குறித்து சிங்காநல்லூர் போலீசார் வழக்கு பதிவு செய்து தேவி தண்ணீர் தொட்டியை சுத்தம் செய்த போது தவறி விழுந்து நீரில் மூழ்கி இறந்தாரா அல்லது வேறு ஏதேனும் காரணம் இருக்குமா? என விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • கடந்த சில வருடங்களுக்கு முன்பு மாணவிக்கு கூலித் தொழிலாளி பகவதி (வயது19) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது.
    • கிணத்துக்கடவில் உள்ள ஒரு கோவிலில் வைத்து பெற்றோருக்கு தெரியாமல் அவரை திருமணம் செய்தார்.

    கோவை

    கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள சொக்கனூரை சேர்ந்தவர் 17 வயது மாணவி.

    இவர் அந்த பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் பிளஸ்-2 படித்து வருகிறார். கடந்த சில வருடங்களுக்கு முன்பு மாணவிக்கு அதே பகுதியை சேர்ந்த கூலித் தொழிலாளி பகவதி (வயது19) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. நாளடைவில் இது காதலாக மாறியது. 2 பேரும் கடந்த 4 வருடங்களாக செல்போனில் பேசியும் நேரில் சந்தித்தும் தங்களது காதலை வளர்த்து வந்தனர்.

    கடந்த மே மாதம் 20-ந் தேதி மாணவியின் பெற்றோர் வீட்டில் இல்லாத நேரத்தில் பகவதி அங்கு சென்றார். அங்கு மாணவியிடம் திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி அவரை பாலியல் பலாத்காரம் செய்தார். இதில் மாணவி 3 மாத கர்ப்பமானார். இதனால் அதிர்ச்சியடைந்த மாணவி தான் கர்ப்பமான விஷயத்தை தனது காதலனிடம் தெரிவித்தார். இதனையடுத்து பகவதி கடந்த 21-ந் தேதி மாணவியை அழைத்து சென்று கிணத்துக்கடவில் உள்ள ஒரு கோவிலில் வைத்து பெற்றோருக்கு தெரியாமல் அவரை திருமணம் செய்தார்.

    பின்னர் மாணவியை தனது வீட்டிற்கு அழைத்து சென்று மீண்டும் பாலியல் பலாத்காரம் செய்தார். இதனை அறிந்த அக்கம் பக்கத்தினர் இதுகுறித்து குழந்தைகள் நல பாதுகாப்பு அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர்.

    அவர்கள் உடனடியாக சம்பவஇடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தி மாணவியை மீட்டனர். பின்னர் இது குறித்து பொள்ளாச்சி அனைத்து மகளிர் போலீசில் புகார் அளித்தனர். புகாரின் பேரில் போலீசார் போக்சோ சட்டததின் கீழ் வழக்குப்பதிவு செய்து பிளஸ்-2 மாணவியை கர்ப்பமாக்கிய பகவதியை கைது செய்தனர். பின்னர் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர். 

    • நஞ்சம்மாள் பாடிய பாடல் பட்டி, தொட்டி எங்கும் பிரபலமானது.
    • அட்டப்பாடியில் உள்ள பழங்குடி இனத்தை சேர்ந்த மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    கோவை:

    கேரள மாநிலம் அட்டப்பாடியை சேர்ந்தவர் நஞ்சம்மாள். பழங்குடி இனத்தை சேர்ந்த இவர் அட்டப்பாடி பழங்குடியின இளைஞர்கள் 18 ஆண்டுகளுக்கு முன்பு உருவாக்கிய இசைக்குழுவில் கிராமிய பாடகராக இணைந்து பல இசை நிகழ்ச்சிகளில் பாடி வந்தார்இந்த நிலையில் அய்யப்பனும், கோஷியும் என்ற மலையாள திரைப்படத்தை எடுக்க அட்டப்பாடிக்கு இயக்குனர் சச்சி வந்தார். அப்போது அவர் தன்னுடைய படத்தின் கிராமிய பாடல் ஒன்றை பாடுவதற்கு ஒருவரை தேடி உள்ளார்.

    அப்போது தான் அவர் நஞ்சம்மாளை சந்தித்து அவரின் குரல் நன்றாக இருக்கவே அவரை தனது படத்தில் பாட வைத்துள்ளார். படம் வெளியாகி நஞ்சம்மாள் பாடிய பாடல் பட்டி, தொட்டி எங்கும் பிரபலமானது.

    இதற்காக கடந்த ஆண்டு கேரள மாநில விருதை பெற்றார்.இந்த நிலையில் நேற்று முன்தினம் மத்திய அரசு அறிவித்த திரைப்படங்களுக்கான தேசிய விருது பட்டியலில் அய்யப்பனும் கோஷியும் படத்தில் பாடிய நஞ்சம்மாளை சிறந்த பின்னணி பாடகியாக தேர்வு செய்துள்ளது.

    இந்த தகவல் வெளியானது முதல் அட்டப்பாடியில் உள்ள பழங்குடி இனத்தை சேர்ந்த மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.இந்த நிலையில் இந்த விருதினை பெற்ற நஞ்சம்மாளுக்கு பழங்குடியின குழந்தைகள் படிக்க கூடிய அப்துல்கலாம் ஆதிவாசிகள் உண்டு உறைவிட பள்ளி சார்பில் பாரம்பரிய இசை கருவிகள் முழங்க மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் அவருக்கு உற்சாக வரவேற்பு கொடுத்தனர்.விருது குறித்து நஞ்சம்மா பேசியதாவது:-

    விருது வாங்கினது ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது. இதனை இயக்குனர் சட்சிக்கும், பழங்குடியினர் மக்களுக்கும் சமர்ப்பிக்கிறேன். எல்லா மக்களுக்குள்ளும் நான் இருக்கிறேன். எனக்கு விருது கிடைக்க காரணமாக அனைத்து மக்களுக்கும், அரசுக்கும் நன்றி.

    நான் யாருன்னு தெரியாதப்ப, கண்டிப்பாக நீ எல்லோருக்கும், தெரிவேன்னு,சொன்ன இயக்குநர் சச்சி சரோட வாக்கு பலித்திருக்கிறது. அவர் எனக்கு கடவுள். இந்த மக்களிடம் என்னை கொண்டு சேர்த்தவர், அவர் இருந்து பார்க்க வேண்டியது, மறைந்துவிட்டார். அவர் என்னுள்ளே இருக்கிறார். இந்த விருதை வைத்து,அவராகவே பார்ப்பேன்.இவ்வாறு அவர் கூறினார்.

    இந்த விருதை பழங்குடி இனத்தை சேர்ந்த கிராமிய பாடல் பாடக்கூடிய நஞ்சம்மாள் பெற்றதன் மூலம் தங்களுடைய பாரம்பரிய கலை உயிர்ப்புடன் மீண்டும் அடுத்த தலைமுறை குழந்தைகள் கற்றுக்கொள்ளும் வா–ய்ப்பாக அமைந்துள்ளதாக ஒருங்கிணைப்பாளர் பழனிச்சாமி கூறினார்.

    • குமார் தான் காதலிக்கும் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தார். அதற்காக பெற்றோரிடம் சம்மதம் கேட்க காத்திருந்தார்.
    • இருவரும் வெவ்வேறு சாதியை சேர்ந்தவர்கள் என்பதால் குமாரின் குடும்பத்தினர் சம்மதிக்கவில்லை.

    கோவை:

    கோவை ஆர்.எஸ்.புரம் காந்திபார்க் சுக்ரவார்பேட்டையை சேர்ந்தவர் குழந்தைவேல். இவரது மனைவி ராணி(வயது52). இவர்களது மகன் குமார்(29). சென்ட்ரிங் தொழிலாளி.

    இவர் நீண்டநாட்களாக இளம்பெண் ஒருவரை காதலித்து வருகிறார். இருவரும் அடிக்கடி செல்போனில் பேசி தங்களது காதலை வளர்த்து வந்தனர்.

    இந்த நிலையில் குமார் தான் காதலிக்கும் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தார். அதற்காக பெற்றோரிடம் சம்மதம் கேட்க காத்திருந்தார்.

    ஆனால் அதற்குள்ளாகவே தங்களது மகனின் காதல் விவகாரம் பெற்றோருக்கு தெரியவந்தது. குமாரின் காதலுக்கு பெற்றோர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.குறிப்பாக அவரது தாய் ராணி(52) இந்த காதலை கடுமையாக எதிர்த்ததுடன் அந்த பெண்ணை திருமணம் செய்ய ஒருபோதும் சம்மதிக்க மாட்டோம் என கண்டிப்புடன் தெரிவித்தார்.

    இருவரும் வெவ்வேறு சாதியை சேர்ந்தவர்கள் என்பதால் குமாரின் குடும்பத்தினர் சம்மதிக்கவில்லை. இதனால் அவருக்கும், அவரது தாயாருக்கும் அடிக்கடி சண்டை ஏற்பட்டுள்ளது.

    கடந்த சில நாட்களாக தாயும், மகனும் பேசிக்கொள்ளவில்லை. இருப்பினும் குமார், தனது காதலியுடன் தொடர்ந்து பேசி வந்தார். இதனையறிந்த ராணி தனது மகன் மீது கடும் ஆத்திரத்தில் இருந்தார்.

    இந்நிலையில், சம்பவத்தன்று இரவு வேலைக்கு சென்று திரும்பிய குமார் வீட்டில் உணவருந்தினார். அப்போது மகன் மீது ஏற்கனவே ஆத்திரத்தில் இருந்த ராணி வீட்டில் இருந்த மண்எண்ணையை எடுத்து அவர் மீது ஊற்றி தீ பற்ற வைத்தார். பின்னர் அங்கிருந்து தப்பி சென்றார். அப்போது குமார் குடிபோதையில் இருந்ததால் தன் மீது பற்றிய தீயை அணைத்து விட்டு வீட்டில் தூங்கி விட்டார்.

    மறுநாள் காலையில் போதை தெளிந்ததும் தீக்காயத்தின் வலி தெரிந்தது. இதனை பார்த்த அங்கிருந்தவர்கள் 108 ஆம்புலன்ஸ் மூலம் குமாரை கோவை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக ஆர்.எஸ்.புரம் போலீசில் புகார் அளிக்கப்பட்டது. புகாரின் பேரில், போலீசார் ராணி மீது கொலை முயற்சி வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    காதல் விவகாரத்தில் பெற்ற மகனையே தாய் மண்ணெண்ணெய் ஊற்றி எரித்து கொல்ல முயன்ற சம்பவம் கோவையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • மற்ற ெரயில்களிலும் டிக்கெட் பரிசோதகர்களுக்கு கைய டக்ககருவி வழங்கப்படும்.
    • சேலம் ரெயில் கோட்டத்தில் முதல்முறையாக சேரன் எக்ஸ்பிரஸ் ரெயிலில் டிக்கெட் பரிசோதிக்க, பரிசோதகர்களுக்கு கையடக்கக் கருவி வழங்கப்பட்டுள்ளது.

    கோவை:

    சேலம் ரெயில் கோட்டத்தில் முதல்முறையாக சேரன் எக்ஸ்பிரஸ் ரெயிலில் டிக்கெட் பரிசோதிக்க, பரிசோதகர்களுக்கு கையடக்கக் கருவி வழங்கப்பட்டுள்ளது.

    இது குறித்து சேலம் கோட்ட ெரயில்வே அதிகாரிகள் கூறியதாவது:-சேலம் ரெயில்வே கோட்டத்துக்கு உட்பட்ட கோவை-சென்னை சென்ட்ரல் இடையிலான சேரன் எக்ஸ்பிரஸ் ரயிலில் டிக்கெட் பரிசோதகர்களுக்கு நவீன கையடக்கக்கருவி வழங்கப்பட்டுள்ளது.

    இதன்மூலம், பயணி–களின் விவரங்களை விரைவாக சரிபார்க்க முடியும். அதோடு, யார் பயணிக்கவில்லை என்ற விவரம் பதிவேற்றப்படும். இதனால், அவர்கள் டிக்கெட் கட்டணத்தை எவ்வித சிக்கலும் இன்றி விரைவாக பெற இயலும்.

    மேலும், டிக்கெட் உறுதிசெய்யப்பட்டு, படுக்கை கிடைக்காத பயணிகளுக்கு, வரிசைப்படி வெளிப்படையாக படுக்கையை ஒதுக்க முடியும்.

    முன்பு ெரயிலில் பயணிப்போரின் டிக்கெட்டை பரிசோதிக்க டிக்கெட் பரிசோதகர்கள், பயணிகளின் விவரங்கள் அடங்கிய நீளமான காகிதத்தில், ஒவ்வொ–ருவரின் விவரமாக சரிபார்த்து குறித்து வந்தனர். இனிமேல், அந்த காகிதங்கள் தேவைப்படாது. இதேபோல, மற்ற ெரயில்களிலும் டிக்கெட் பரிசோதகர்களுக்கு கைய டக்ககருவி வழங்கப்படும்.

    இவ்வாறு அவர்கள் கூறினர். 

    • வெட்கிரைண்டர், பம்ப்செட்டுக்கு ஜி.எஸ்.டி வரி உயர்த்தப்பட்டுள்ளதால் சிறு, குறு தொழில் முனைவோர்கள் கவலை அடைந்துள்ளனர்.
    • கொங்கு மண்டலத்தில் தயாரிக்கப்படும் வெட்கிரைண்டர் இந்தியா முழுவதும் மட்டுமில்லாமல், வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது.

    கோவை:

    கோவை மாவட்டத்தில் 700க்கும் மேற்பட்ட வெட் கிரைண்டர் உற்பத்தியாளர்கள், 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட உதிரி பாகங்கள் தயாரிப்பு நிறுவனங்கள் உள்ளன.

    குறிப்பாக வெட்கிரைண்டர் தொழில் முக்கியமானதாக உள்ளது. கோவையில் அடையாளமாக உள்ள இந்த வெட் கிரைண்டர்களுக்கு மத்திய அரசின் புவிசார் குறியீடு சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.

    கொங்கு மண்டலத்தில் மட்டுமே கிடைக்க கூடிய தரம் வாய்ந்த கற்களால் இவை உருவாக்கப்படுகிறது. இங்கு தயாரிக்கப்படும் வெட்கிரைண்டர் இந்தியா முழுவதும் மட்டுமில்லாமல், வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது.

    ஜி.எஸ்.டிக்கு முன்பு வெட் கிரைண்டர்களுக்கு 5 சதவீதமாக இருந்த வரி, ஜி.எஸ்.டி அறிமுகமானபோது 28 சதவீதமாக உயர்த்தப்பட்டது. தொழில் முனைவோர் எதிர்ப்பு தெரிவித்ததை அடுத்து, 18 சதவீதமாகவும், பின்னர் 5 சதவீதமாகவும் குறைக்கப்பட்டது.

    இதேபோல் 300க்கும் மேற்பட்ட சிறு, குறு நிறுவனங்கள் மூலம் பம்புசெட் தயாரிக்கப்பட்டு ஏற்றுமதி செய்யப்படுகிறது. இதற்கு ஜி.எஸ்.டிக்கு முன்பு 5 சதவீத வாட் வரியே இருந்தது. ஜி.எஸ்.டி அமலாக்கத்திற்கு பிறகு பம்ப்செட் மூல பொருட்களுக்கு 18 முதல் 28 சதவீத வரியும், அந்த பொருட்களை கொண்டு தயாரிக்கப்பட்ட பம்ப்செட்டுக்கு 12 சதவீத வரியும் விதிக்கப்பட்டது. இந்த குழப்பமான நடைமுறையை மாற்ற வேண்டும் என தொழில் முனைவோர் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

    இந்த நிலையில் மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் தலைமையில் நடந்த ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டத்தில் வெட்கிரைண்டர் மீதான 5 சதவீத வரியை 18 சதவீதமாகவும், பம்ப்செட்டுகள் மீதான 12 சதவீத வரியை 18 சதவீதமாகவும் உயர்த்த முடிவு செய்யப்பட்டுள்ளது.இதற்கு கோவையை சேர்ந்த வெட்கிரைண்டர், பம்ப்செட் தயாரிப்பாளர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

    இதுகுறித்து கோவை வெட் கிரைண்டர் மற்றும் உதிரிபாக தயாரிப்பாளர்கள் சங்கத்தினர் கூறியதாவது:-கடந்த 2016-ம் ஆண்டுடன் ஒப்பிடுகையில், தற்போது 50 சதவீதம் மட்டுமே கிரைண்டர் உற்பத்தி செய்து வருகிறோம். பணமதிப்பிழப்பு, ஜி.எஸ்.டியில் தொடங்கிய பிரச்சினை, கொரோனா, குவாரிகள் மூடல், மூலப்பொருட்கள் விலை உயர்வு என தொடர்ந்து வருகிறது.

    ஜி.எஸ்.டி வரியை 18 சதவீதமாக உயர்த்தியதால் கிரைண்டர்கள் விலை மேலும் உயரும். தற்போது 2 லிட்டர் டேபிள் டாப் கிரைண்டர் ரூ.3 ஆயிரத்துக்கு விற்பனை செய்யப்படும் நிலையில், அதன் விலை மேலும் ரூ.500 முதல் ரூ.600 உயரும். டில்டிங் கிரைண்டர் ரூ.90 ஆயிரத்திற்கும், கன்வென்சனல் கிரைண்டர் ரூ.60 ஆயிரத்திற்கும் விற்கப்பட்டது.

    இனி இவற்றின் விலை கடுமையாக உயரும். விலை உயர்ந்தால் விற்பனை சரிவை சந்திக்கும். விற்பனை மந்தமானால் உற்பத்தியாளர்கள் தான் ஆர்டர்கள் கிடைக்காமல் பாதிக்கப்படுவார்கள். தொழிலாளர்கள் வேலை வாய்ப்பை இழப்பார்கள். இவற்றை எல்லாம் மத்திய அரசு கவனத்தில் கொள்ள வேண்டும்.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    டேக்ட் அமைப்பின் தலைவர் ஜேம்ஸ் கூறியதாவது:-

    மத்திய அரசு சிறு, குறு தொழிலை பாதுகாக்க நடவடிக்கை எடுக்கிறதா என்பது எங்களுக்கு புரியவில்லை. ஏனென்றால் கொரோனாவின் தாக்கம், மூலப்பொருட்கள் விலை உயர்வு என வெட்கிரைண்டர் தொழில் ஏற்கனவே பாதிப்பில் உள்ளது. இந்த நிலையில் வெட் கிரைண்டர்களுக்கான வரியை உயர்த்தியுள்ளது தொழில் முனைவோர்களுக்கு வேதனை அளிக்கிறது.

    மேலும் பம்ப்செட் வரி, மூலப்பொருட்கள் விலை உயர்வை திரும்ப பெற கூறி டெல்லியில் அமைச்சர்களை சந்தித்தோம். ஆனால் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.மாறாக, வெட்கிரைண்டருக்கான வரியை உயர்த்தியுள்ளது. இதனால் தொழில் கடுமையான பாதிப்படையும்.

    புதிதாக வேலையையும் உருவாக்க முடியாத சூழல் ஏற்படும். எனவே சிறு, குறு தொழிலை பாதுகாக்க மத்திய அரசு ஜி.எஸ்.டி வரியை குறைக்க வேண்டும். விரைவில் தொழில் முனைவோர்கள் ஒன்று கூடி ஆலோசிக்க முடிவு செய்துள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.

    • கணவரும், இளம்பெண்ணும் ஒன்றாக எடுத்துக்கொண்ட புகைப்படம் இருந்தது
    • பெண்மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கோவை :

    கோவை சித்தாபுதூரை சேர்ந்த 36 வயது இளம்பெண் காட்டூர் போலீஸ் நிலையத்தில் ஒரு புகார் அளித்துள்ளார். அந்த புகாரில் கூறியிருப்பதாவது:-

    நான் எனது கணவருடன் சித்தாபுதூர் பகுதியில் வசித்து வருகிறேன். கடந்த சில வருடங்களுக்கு முன்பு எனது கணவருக்கு இளங்கோ நகரில் வசித்து வரும் 48 வயது பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டது. நாளடைவில் இது கள்ளக்காதலாக மாறியது. எனது கணவர் அடிக்கடி அந்த பெண்ணின் வீட்டிற்கு சென்று அவருடன் ஜாலியாக இருந்து வந்தார். இந்த கள்ளக்காதல் விவகாரம் எனக்கு தெரியவரவே நான் எனது கணவரை கண்டித்தேன். இதனால் எங்களுக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. சம்பவத்தன்று நான் எனது கணவரின் செல்போனை பார்த்தபோது எனது கணவரும், அந்த இளம் பெண்ணும் ஒன்றாக எடுத்துக்கொண்ட புகைப்படம் இருந்தது இதனைப் பார்த்து நான் அதிர்ச்சி அடைந்தேன் .

    இதுகுறித்து நான் என் கணவரிடம் கேட்டபோது மீண்டும் எங்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டது. இதனையடுத்து நான் இதுகுறித்து கேட்பதற்காக அந்த பெண்ணின் வீட்டிற்கு சென்றேன். அப்போது அவர் என்னை தகாத வார்த்தைகளால் பேசி தாக்கி வெளியே தள்ளிவிட்டார். எனவே எனது கணவருடன் கள்ளத் தொடர்பு வைத்துக் கொண்டு தட்டிக்கேட்ட என்னை தாக்கிய பெண் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அந்த புகாரில் கூறியிருந்தார். புகாரின் பேரில் காட்டூர் போலீசார் அந்த பெண்மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • அவர் தனது விலை உயர்ந்த சைக்கிளில் வெளியே சென்று வீடு திரும்பினார்.
    • துடியலூர் வெற்றிலைகாளி பாளையம் மாரியம்மன் கோவில் 2-வது வீதியை சேர்ந்த சூர்யா (23) என்பதும் கூலிவேலை செய்து வந்ததும் ெதரியவந்தது.

    கோவை:

    கோவை துடியலூர் என்.ஜி.ஜி.ஓ காலனி அடுக்குமாடி குடியிருப்பை சேர்ந்தவர் நடேஷ்குமார் (வயது 42). இவர் சரவணம்பட்டியில் உள்ள ஐ.டி நிறுவனத்தில் ஊழியராக வேலை செய்து வருகிறார்.

    நடேஷ்குமார் ரூ.40 ஆயிரம் மதிப்புள்ள சைக்கிளை வைத்துள்ளார். சம்பவத்தன்று அவர் தனது விலை உயர்ந்த சைக்கிளில் வெளியே சென்று வீடு திரும்பினார். அங்கு சைக்கிள் நிறுத்தும் பகுதியில் தனது சைக்கிளை நிறுத்தி வீட்டுக்குள் சென்றார்.

    சிறிது நேரம் கழித்து அவர் வெளியே வந்தார். அப்போது வாலிபர் ஒருவர் அவரது சைக்கிளை திருடுவதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உடனே அவர் சத்தம் போட்டார். அவரின் சத்தத்தை கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்தனர். அவர்கள் வருவதை பார்த்து அந்த வாலிபர் அங்கிருந்து ஓட்டம் பிடித்தார்.

    உடனே நடேஷ்குமார் துரத்தி அந்த வாலிபரை மடக்கி பிடித்தார். பின்னர் அந்த வாலிபரை துடியலூர் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அந்த வாலிபர் துடியலூர் வெற்றிலைகாளி பாளையம் மாரியம்மன் கோவில் 2-வது வீதியை சேர்ந்த சூர்யா (23) என்பதும் கூலிவேலை செய்து வந்ததும் ெதரியவந்தது. இதையடுத்து போலீசார் அவரை கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

    • 10-க்கும் ேமற்பட்ட கும்பல் நாலாபுறமும் தப்பியோடினர்.
    • தகராறில் ஈடுபட்டவர்களை தேடி வருகின்றனர்.

    கோவை,

    கோவை குனியமுத்தூர் போலீஸ் நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டராக வேலை செய்து வருபவர் சின்னராஜ், அவர் சம்பவத்தன்று இரவு ஏட்டு திருநாவுக்கரசுடன் குனியமுத்தூர் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தார்.

    அப்போது கோவைப்புதூர் ஏ மைதானத்தில் தகராறு நடப்பதாக போலீஸ் நிலையத்துக்கு தகவல் வந்தது. உடனே போலீஸ் நிலையத்தில் இருந்து ரோந்து பணியில் இருந்த சப்-இன்ஸ்பெக்டர் சின்னராஜூக்கு தகவல் தெரிவித்தனர்.இதையடுத்து அவர் எட்டு திருநாவுக்கரசுடன் ரோந்து வாகனத்தில் அங்கு சென்றனர். போலீசாரை கண்டதும் அங்கிருந்த 10-க்கும் ேமற்பட்ட கும்பல் நாலாபுறமும் தப்பியோடினர். அப்போது மோட்டார் சைக்கிளில் வாலிபர் ஒருவர் சப்-இன்ஸ்பெக்டர் மற்றும் ஏட்டு ஆகியோர் மீது மோத வந்தார். இதனை பார்த்த சப்-இன்ஸ்பெக்டர் அதிர்ஷ்டவசமாக தப்பினார்.

    ஆனால் ஏட்டு திருநாவுக்கரசு மீது மோட்டார் சைக்கிளில் மோதியது. இதில் நிலைதடுமாறியதால் அந்த வாலிபர் மோட்டார் சைக்கிளில் அங்கேயே போட்டுவிட்டு தப்பி ஓடினார். காலில் படுகாயம் அடைந்த ஏட்டு திருநாவுக்கரசை மீட்டு, ஆஸ்பத்திரியில் சிகிச்சை சேர்த்தனர்.

    இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் கோவைப்புதூர் பகுதியில் உள்ள கல்லூரி மாணவர்களிடையே, கடந்த சில நாட்களாக மோதல் நடந்துள்ளதும், அதில் தாக்கப்பட்ட ஒரு மாணவரின் நண்பர்கள், இரவு சம்பவ இடத்தில் மோதலில் ஈடுபட்டதும் தெரியவந்தது.இதையடுத்து போலீசார் தப்பியோடியவர்கள் விட்டுச் சென்ற மோட்டார் சைக்கிளை கைப்பற்றினர். அதனைக் வைத்து தகராறில் ஈடுபட்டவர்களை தேடி வருகின்றனர்.

    ×