கோவையில் தண்ணீர் தொட்டியில் மூழ்கி இளம்பெண் பலி

தண்ணீர் தொட்டியை சுத்தம் செய்யும் வேலை செய்து கொண்டு இருந்தனர்.போலீசார் தேவியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக இ.எஸ்ஐ ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
கோவையில் தண்ணீர் தொட்டியில் மூழ்கி இளம்பெண் பலி
Published on

கோவை,

கோவை ரத்தினபுரி தயிரிட்டேரியை சேர்ந்தவர் மூர்த்தி. இவரது மனைவி தேவி(வயது27). இவர் தனது சகோதரி சத்யா(33) என்பவருடன் சேர்ந்து கூலி வேலை செய்து வருகிறார்.

இந்நிலையில், சம்பவத்தன்று இவர்கள் 2 பேரும் உப்பிலிபாளையத்தில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் தண்ணீர் தொட்டியை சுத்தம் செய்யும் வேலை செய்து கொண்டு இருந்தனர். அப்போது திடீரென தேவி மாயமானார். இதனையடுத்து அவரை அவரது சகோதரி சத்யா பல இடங்களில் தேடினார்.

அப்போது அங்குள்ள தண்ணீர் தொட்டிக்குள் மூழ்கிய நிலையில் தேவி உயிருக்கு போராடி கொண்டிருந்தார். இதனைப்பார்த்து அதிர்ச்சியடைந்த சத்யா அக்கம்பக்கத்தினர் உதவியுடன் தேவியை மீட்க முயன்றார்.

பின்னர் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் கொடுத்தார். விரைந்து சென்ற தீயணைப்பு வீரர்கள் நீரில் மூழ்கிய தேவியை மீட்க முயன்றனர். ஆனால் அதற்குள் அவர் இறந்தார்.

சிங்காநல்லூர் போலீசார் தேவியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக இ.எஸ்ஐ ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இது குறித்து சிங்காநல்லூர் போலீசார் வழக்கு பதிவு செய்து தேவி தண்ணீர் தொட்டியை சுத்தம் செய்த போது தவறி விழுந்து நீரில் மூழ்கி இறந்தாரா அல்லது வேறு ஏதேனும் காரணம் இருக்குமா? என விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com