search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சைக்கிள் திருட்டு"

    • வீடியோக்களின் அடிப்படையில் வீட்டு உரிமையாளர் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து திருடனை தேடி வருகிறர்கள்.
    • நாயுடன் திருடன் கொஞ்சி விளையாடிய வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி ஆயிரக்கணக்கானோரால் பார்க்கப்பட்டு லைக்குகளை குவித்து வருகிறது.

    வீடுகளில் நாய் வளர்ப்பதற்கு முக்கிய காரணம் திருடர்களிடம் இருந்து வீட்டை காக்கும் என்பது தான். ஆனால் தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வரும் ஒரு வீடியோ அதற்கு நேர்மாறாக உள்ளது. அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்திற்குட்பட்ட சாண்டியாகோ நகரில் ஒருவரின் வீட்டு கேரேஜூக்குள் விலை உயர்ந்த சைக்கிள்கள் இருந்துள்ளது. சம்பவத்தன்று இரவு வாலிபர் ஒருவர் அங்கு நுழைந்து ரூ.1.7 லட்சம் மதிப்பிலான சைக்கிளை திருடி செல்ல முயன்றார்.

    அப்போது உள்ளே இருந்த நாய் ஒன்று திருடனை நோக்கி வந்தது. நாயை கண்டதும் திருடன் அங்கிருந்து செல்லாமல், வெளியே எடுத்த சைக்கிளை உள்ளே விட்டுவிட்டு அந்த நாயுடன் கொஞ்சி விளையாடினார். அப்போது அந்த நாயை பார்த்து அவர், 'ஐ லவ் யூ டூ' என்று கூறுகிறார். மேலும் நாயுடன் சிரித்து விளையாடுவது போன்ற காட்சிகளும் அங்குள்ள சி.சி.டி.வி.யில் பதிவாகி உள்ளது.

    இந்த வீடியோக்களின் அடிப்படையில் வீட்டு உரிமையாளர் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து திருடனை தேடி வருகிறர்கள். இதற்கிடையே நாயுடன் திருடன் கொஞ்சி விளையாடிய வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி ஆயிரக்கணக்கானோரால் பார்க்கப்பட்டு லைக்குகளை குவித்து வருகிறது.

    • அவர் தனது விலை உயர்ந்த சைக்கிளில் வெளியே சென்று வீடு திரும்பினார்.
    • துடியலூர் வெற்றிலைகாளி பாளையம் மாரியம்மன் கோவில் 2-வது வீதியை சேர்ந்த சூர்யா (23) என்பதும் கூலிவேலை செய்து வந்ததும் ெதரியவந்தது.

    கோவை:

    கோவை துடியலூர் என்.ஜி.ஜி.ஓ காலனி அடுக்குமாடி குடியிருப்பை சேர்ந்தவர் நடேஷ்குமார் (வயது 42). இவர் சரவணம்பட்டியில் உள்ள ஐ.டி நிறுவனத்தில் ஊழியராக வேலை செய்து வருகிறார்.

    நடேஷ்குமார் ரூ.40 ஆயிரம் மதிப்புள்ள சைக்கிளை வைத்துள்ளார். சம்பவத்தன்று அவர் தனது விலை உயர்ந்த சைக்கிளில் வெளியே சென்று வீடு திரும்பினார். அங்கு சைக்கிள் நிறுத்தும் பகுதியில் தனது சைக்கிளை நிறுத்தி வீட்டுக்குள் சென்றார்.

    சிறிது நேரம் கழித்து அவர் வெளியே வந்தார். அப்போது வாலிபர் ஒருவர் அவரது சைக்கிளை திருடுவதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உடனே அவர் சத்தம் போட்டார். அவரின் சத்தத்தை கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்தனர். அவர்கள் வருவதை பார்த்து அந்த வாலிபர் அங்கிருந்து ஓட்டம் பிடித்தார்.

    உடனே நடேஷ்குமார் துரத்தி அந்த வாலிபரை மடக்கி பிடித்தார். பின்னர் அந்த வாலிபரை துடியலூர் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அந்த வாலிபர் துடியலூர் வெற்றிலைகாளி பாளையம் மாரியம்மன் கோவில் 2-வது வீதியை சேர்ந்த சூர்யா (23) என்பதும் கூலிவேலை செய்து வந்ததும் ெதரியவந்தது. இதையடுத்து போலீசார் அவரை கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

    ×