கோவையில் சைக்கிள் திருட்டு

பள்ளி மாணவர் உள்பட 3 சிறுவர்கள் கைது செய்யப்பட்டனர். சைக்கிள் காணாமல் போனதை கண்டு அதிர்ச்சி அடைந்த பாலகிருஷ்ணன் அக்கம் பக்கத்தில் தேடி பார்த்தார்.
கோவையில் சைக்கிள் திருட்டு
Published on

கோவை,

கோவை ரத்தின புரியை சேர்ந்தவர் பால கிருஷ்ணன் (வயது 44). இவர் அதே பகுதியில் டீ கடை வைத்து நடத்தி வருகிறார்.

இவரது மகள் அங்குள்ள பள்ளியில் படித்து வரு கிறார். பள்ளிக்கு அவர் சைக்கிளில் சென்று வருவது வழக்கம். சம்பவத்தன்று வழக்கம் போல அவர் சைக்கிளில் பள்ளிக்கு சென்றார். பின்னர் மாலை வீடு திரும்பினார்.அப்போது சைக்கிளை வீட்டின் முன்பு நிறுத்தி உள்ளே சென்றார். சிறிது நேரம் கழித்து பால கிருஷ்ணன் வெளியே வந்து பார்த்த போது சைக்கிளை காண வில்லை. உடனே அவர் தனது மகளிடம் கேட்டார். அதற்கு அவர் சைக்கிளை வீட்டின் முன்பு நிறுத்தியதாக கூறினார். சைக்கிள் காணாமல் போனதை கண்டு அதிர்ச்சி அடைந்த பாலகிருஷ்ணன் அக்கம் பக்கத்தில் தேடி பார்த்தார். ஆனால் கிடைக்க வில்லை.

பின்னர் இதுகுறித்து பாலகிருஷ்ணன் ரத்தினபுரி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து அந்த பகுதியில் உள்ள சி.சி.டி.வி காட்சிகளை ஆய்வு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

விசாரணையில் கோவை ரத்தினபுரியை சேர்ந்த 17 வயது சிறுவன், சங்கனூரை சேர்ந்த 10-ம் வகுப்பு படித்து வரும் 15 வயது சிறுவன் மற்றும் ரத்தினபுரியை சேர்ந்த மற்றொரு 15 வயது சிறுவன் ஆகியோர் சேர்ந்து சைக்கிளை திருடி சென்றது தெரியவந்தது.

இதையடுத்து போலீசார் 3 சிறுவர்களையும் மடக்கி பிடித்து கைது செய்தனர். அவர்கள் திருடி சென்ற சைக்கிளையும் மீட்டனர். பின்னர் அவர்களை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறுவர் சீர்திருத்த பள்ளியில் சேர்த்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com