என் மலர்
நீங்கள் தேடியது "மண்எண்ணை"
கடலூர்:
கடலூர் கலெக்டர் அலுவலகத்தில் இன்று திங்கட்கி மை மக்கள் குறை தீர்ப்பு கூட்டம் நடைபெற்று வருகின்றது. இதன் காரணமாக கடலூர் மாவட்டத்தில் இருந்து ஏராளமான பொதுமக்கள் தங்கள் கோரிக்கைகள் தொடர்பாக மனு அளித்து வருகின்றனர்.இந்த நிலையில் இன்று காலை பெண் ஒருவர் தனது மகனுடன் கடலூர் கலெக்டர் அலுவலகத்திற்கு நேரில் வந்தார். அவர் மறைத்து வைத்திருந்த மண்எண்ணெயை தன் மீது ஊற்றிக்கொண்டார்.அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் அதிர்ச்சி அடைந்து உடனடியாக அவரிடம் இருந்த மண்எண்ணையை பறிமுதல் செய்து விசாரணை நடத்தினார்கள்.இதில் அவர் பண்ருட்டி தாலுக்கா கண்டரக்கோட்டையை சேர்ந்த பரமேஸ்வரி என்பது தெரியவந்தது. அவர் போலீசாரிடம் கூறியதாவது:- எனது கணவர் முத்துக்குமரன் என்னை 2-வது திருமணம் செய்து கொண்டு உடல்நிலை பாதிப்பு காரணமாக இறந்துவிட்டார்.நான் எனது 8 வயது மகனுடன் முத்துக்குமரன் வீட்டில் இருந்து வருகிறோம். எங்களுக்கு சரியான முறையில் உணவு, மகன் படிப்பு செலவுக்கு பணம் போன்றவைகளை வழங்காமல் அவரது குடும்பத்தார் துன்புறுத்தி வருகின்றனர்.இது தொடர்பாக பண்ருட்டி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தும், நடவடிக்கை ஏதும் இல்லை. தினந்தோறும் என்னை சித்திரவதை செய்து வருவதோடு, நானும் எனது மகனும் தற்கொலை செய்து கொள்ளும் எண்ணம் மேலோங்கி வருகின்றது. எனது தாயார் வீட்டிலும் எந்தவித ஆதரவும் எனக்கு கிடையாது.ஆகையால் இது தொடர்பாக விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என கலெக்டர் அலுவலக போலீசாரிடம் பரமேஸ்வரி கூறினார்.இதனை தொடர்ந்து கலெக்டர் அலுவலக போலீசார் பரமேஸ்வரி மற்றும் அவரது மகனை கலெக்டர் அலுவலகத்திற்கு உள்ளே அழைத்து சென்று மனு அளிக்க வைத்தனர். மனு தொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரியிடம் தெரிவித்தனர்.
மற்றொரு சம்பவம் :கடலூர் கலெக்டர் அலுவலகத்திற்கு வந்த வாலிபர் தன் மீது மண்எண்ணையை ஊற்றி கொண்டார். அப்போது பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் வாலிபரிடம் இருந்த கேனை பறிமுதல் செய்தனர்.விசாரணையில், பண்ருட்டி மேல் இருப்பை சேர்ந்த அருள் முருகன் என்பது தெரியவந்தது. அவர் கூறும்போது, எனது தந்தையின் பெயரில் நிலம் உள்ளது. ஒரு கும்பல் எனது தந்தை பெயரில் உள்ள பட்டாவை மாற்றம் செய்து உள்ளனர். இது தொடர்பாக ஏற்கனவே மனு வழங்கி உள்ளேன்.ஆனால் இதுநாள் வரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஆகையால், என் தந்தையின் பெயரில் மீண்டும் பட்டாவை மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறினார்.இதனை தொடர்ந்து போலீசார் இதுபோன்ற நடவடிக்கையில் ஈடுபடக்கூடாது. உங்கள் கோரிக்கைகள் தொடர்பாக அதிகாரிகளிடம் மனு அளித்து தீர்வு காண வேண்டும் என எச்சரிக்கை செய்து அனுப்பினர். இந்த2 சம்பவங்களால் கலெக்டர் அலுவலகத்தில் திடீர் பரபரப்பு ஏற்பட்டது.
குளச்சல்,
மீனவர்களின் வள்ளங்களுக்கு அரசு மானிய விலையில் மீனவர் கூட்டுறவு சங்கங்கள் மூலமாக மண்எண்ணை வழங்குகிறது. சிலர் இதனை வாங்கி பதுக்கி வைத்து கள்ளச்சந்தையில் விற்பனை செய்வதாக புகார்கள் எழுந்துள்ளது.
இந்தநிலையில் நேற்று குளச்சல் மரைன் சப்-இன்ஸ்பெக்டர் சுரேஷ் தலைமையிலான போலீசார் மணவாளக்குறிச்சி, கடியபட்டணம், முட்டம் பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுப்பட்டனர். முட்டம் சோதனைச்சாவடி அருகே செல்லும்போது, சந்தேகத்திற்கிடமாக ஒரு மீன் கூண்டு வண்டி வந்தது.
உடனே போலீசார் அந்த வண்டியை நிறுத்தினர். அப்போது டிரைவர் மற்றும் வண்டியிலிருந்த ஒருவர், வண்டியை சாலையோரம் நிறுத்தி விட்டு தப்பியோட முயற்சித்தனர். போலீசார் அவர்களை மடக்கிப் பிடித்தனர்.
பின்னர் மீன் கூண்டு வண்டியை திறந்து பார்க்கும்போது, வண்டிக்குள் 30 கேன்களில் சுமார் 1000 லிட்டர் மானிய மண்எண்ணை இருந்தது தெரிய வந்தது. போலீசார் அவற்றை பறிமுதல் செய்து, மீன் வண்டியில் வந்த 2 பேரையும் குளச்சல் மரைன் போலீஸ் நிலையம் கொண்டு வந்தனர். பின்னர் மண்எண்ணை மற்றும் பிடிபட்ட இருவரையும் மாவட்ட குடிமை பொருள் வழங்கல் குற்ற புலனாய்வு துறையினரிடம் ஒப்படைத்தனர்.
- பறிமுதல் செய்யப்பட்ட மண்எண்ணை உணவு பிரிவு தடுப்பு போலீஸ் நிலையத்திற்கு கொண்டு வந்தனர்.
- வேறு யாருக்காவது தொடர்பு உண்டா? என்ற கோணத்தில் போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.
நாகர்கோவில் :
குமரி மாவட்ட உணவுப் பிரிவு தடுப்பு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பேபி இசக்கி பிரகதாம்பாள் தலைமை யிலான போலீசார் மண வாளக்குறிச்சி வள்ளியாற்று பாலத்தில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது அந்த வழியாக சந்தேகப்படும்படியாக வந்த மினி டெம்போ ஒன்றை தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர். அப்போது டிரைவர் முன்னுக்கு பின் முரணான தகவலை தெரிவித்தார்.
போலீசார் வண்டியை சோதனை செய்தபோது அதில் எந்த ஒரு ஆவணமும் இன்றி மண்எண்ணை கடத்தி சென்றது தெரிய வந்தது. இதையடுத்து கேன்களில் இருந்த 2000 லிட்டர் மண்எண்ணையை போலீசார் பறிமுதல் செய்தனர்.
பிடிபட்ட டிரைவரிடம் விசாரணை நடத்தியபோது அவர் தக்கலை பகுதியை சேர்ந்த ஜெகன் ராஜ் (வயது 27) என்பது தெரியவந்தது. போலீசார் அவரை கைது செய்தனர். பறிமுதல் செய்யப்பட்ட மண்எண்ணை உணவு பிரிவு தடுப்பு போலீஸ் நிலையத்திற்கு கொண்டு வந்தனர்.
கைது செய்யப்பட்ட ஜெகன்ராஜிடம் போலீசார் நடத்திய விசாரணையில் மண்எண்ணையை முட்டத்திலிருந்து கொட்டில்பாட்டிற்கு கொண்டு செல்வதாக தெரிவித்தார். இதில் வேறு யாருக்காவது தொடர்பு உண்டா? என்ற கோணத்தில் போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில் கொட்டில்பாட்டை சேர்ந்த கண்ணன் என்பவருக்கு மண்எண்ணை கடத்தலில் தொடர்பு இருப்பது தெரியவந்தது. போலீசார் கண்ணன் மீதும் வழக்குப் பதிவு செய்துள்ளனர். அவரை போலீசார் தேடி வருகிறார்கள்.
- தக்கலை வட்ட வழங்கல் அதிகாரி அதிரடி நடவடிக்கை
- சந்தேகத்திற்கிடமாக வந்த மினி டெம்போவை நிறுத்தி சோதனை செய்தனர்
தக்கலை, ஜூலை.18-
தக்கலை வட்ட வழங்கல் அலுவலர் சுனில் குமார் மற்றும் குளச்சல் போலீஸ் இன்ஸ்பெக்டர் கிறிஸ்டி ஆகியோர் நேற்று மாலை குளச்சல் அக்கரை பள்ளி என்னும் இடத்தில் வாகன தணிக்கை மேற்கொண்டனர்.
அப்போது அந்த வழியாக சந்தேகத்திற்கிடமாக வந்த மினி டெம்போவை நிறுத்தி சோதனை செய்தனர். இதில் மீனவர்களின் படகுகளுக்கு பயன் படுத்தப்படும் மானிய விலையிலான வெள்ளை நிற மண்எண்ணை சிக்கியது. 31 கேன்களில் சுமார் 1000 லிட்டர் அளவில் மறைத்து வத்திருந்ததை தொடர்ந்து, அதனை வாகனத்துடன் பறிமுதல் செய்து வட்ட வழங்கல் அலுவலகத்திற்கு கொண்டு வந்தனர். பறிமுதல் செய்யப்பட்ட மண்எண்ணை குளச்சல் அருகே செயல்படும் அரசு குடோனில் ஒப்படைக்கப் பட்டது.
இந்த கடத்தல் சம்பவங்களில் ஈடுபட்டவர்கள் மற்றும் மானிய விலையிலான மண்எணை் ணையை வெளிச் சந்தையில் விற்பனை செய்த பயனாளிகள் யார்? என்பது குறித்தும் தீவிரமாக விசா ரணை செய்யப்பட்டு வருகிறது.