ஆரல்வாய்மொழி அருகே தீயில் கருகி தொழிலாளி பலி

கேனில் இருந்த மண் எண்ணை அறை முழுவதும் சிந்தி கிடந்தது. இன்று அதிகாலை யோகீந்திரன் கண் விழித்ததும் சிகரெட் பற்ற வைத்துள்ளார்.அறையில் இருந்த மண் எண்ணையில் தீ பொறி விழவே அறை முழுவதும் தீ பற்றி கொண்டது.
ஆரல்வாய்மொழி அருகே தீயில் கருகி தொழிலாளி பலி
Published on

கன்னியாகுமரி :

ஆரல்வாய்மொழி அருகே அவ்வை நகரை சேர்ந்தவர் யோகீந்திரன் (வயது 50). வெள்ளமடம் அருகே பீரோ தயாரிப்பு நிறுவனத்தில் வேலை செய்து வந்தார்.

இவருக்கு திருமணமாகி மனைவி உள்ளார். யோகீந்திரனுக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்தது. நேற்று இவர் மது குடித்துவிட்டு வீட்டுக்கு வந்தார்.

பின்னர் சாப்பிட்டுவிட்டு தூங்க சென்றார். அவரது அறையில் மண் எண்ணை கேன் இருந்தது. தூங்கும் போது அந்த கேன் தவறுதலாக சரிந்து விழுந்துள்ளது.

அப்போது கேனில் இருந்த மண் எண்ணை அறை முழுவதும் சிந்தி கிடந்தது. இன்று அதிகாலை யோகீந்திரன் கண் விழித்ததும் சிகரெட் பற்ற வைத்துள்ளார்.

அப்போது அறையில் இருந்த மண் எண்ணையில் தீ பொறி விழவே அறை முழுவதும் தீ பற்றி கொண்டது.

இதில் யோகீந்திரன் உடல் கருகினார். அவரதுஅலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்தனர். அவர்கள் யோகீந்திரனை மீட்டு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

பின்னர் ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு சிகிச்சை பலன் இன்றி யோகீந்திரன் பரிதாபமாக இறந்தார். இது குறித்து ஆரல்வாய்மொழி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

X

Maalai Malar
www.maalaimalar.com