குளச்சலில் 1000 லிட்டர் வெள்ளை நிற மண்எண்ணையுடன் மினி டெம்போ பறிமுதல்

தக்கலை வட்ட வழங்கல் அதிகாரி அதிரடி நடவடிக்கைசந்தேகத்திற்கிடமாக வந்த மினி டெம்போவை நிறுத்தி சோதனை செய்தனர்
குளச்சலில் 1000 லிட்டர் வெள்ளை நிற மண்எண்ணையுடன் மினி டெம்போ பறிமுதல்
Published on

தக்கலை, ஜூலை.18-

தக்கலை வட்ட வழங்கல் அலுவலர் சுனில் குமார் மற்றும் குளச்சல் போலீஸ் இன்ஸ்பெக்டர் கிறிஸ்டி ஆகியோர் நேற்று மாலை குளச்சல் அக்கரை பள்ளி என்னும் இடத்தில் வாகன தணிக்கை மேற்கொண்டனர்.

அப்போது அந்த வழியாக சந்தேகத்திற்கிடமாக வந்த மினி டெம்போவை நிறுத்தி சோதனை செய்தனர். இதில் மீனவர்களின் படகுகளுக்கு பயன் படுத்தப்படும் மானிய விலையிலான வெள்ளை நிற மண்எண்ணை சிக்கியது. 31 கேன்களில் சுமார் 1000 லிட்டர் அளவில் மறைத்து வத்திருந்ததை தொடர்ந்து, அதனை வாகனத்துடன் பறிமுதல் செய்து வட்ட வழங்கல் அலுவலகத்திற்கு கொண்டு வந்தனர். பறிமுதல் செய்யப்பட்ட மண்எண்ணை குளச்சல் அருகே செயல்படும் அரசு குடோனில் ஒப்படைக்கப் பட்டது.

இந்த கடத்தல் சம்பவங்களில் ஈடுபட்டவர்கள் மற்றும் மானிய விலையிலான மண்எணை் ணையை வெளிச் சந்தையில் விற்பனை செய்த பயனாளிகள் யார்? என்பது குறித்தும் தீவிரமாக விசா ரணை செய்யப்பட்டு வருகிறது.

X

Maalai Malar
www.maalaimalar.com