search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மண்எண்ணை"

    டலூர் கலெக்டர் அலுவலகத்திற்கு வந்த வாலிபர் தன் மீது மண்எண்ணையை ஊற்றி கொண்டார். அப்போது பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் வாலிபரிடம் இருந்த கேனை பறிமுதல் செய்தனர்.

    கடலூர்:

    கடலூர் கலெக்டர் அலுவலகத்தில் இன்று திங்கட்கி மை மக்கள் குறை தீர்ப்பு கூட்டம் நடைபெற்று வருகின்றது. இதன் காரணமாக கடலூர் மாவட்டத்தில் இருந்து ஏராளமான பொதுமக்கள் தங்கள் கோரிக்கைகள் தொடர்பாக மனு அளித்து வருகின்றனர்.இந்த நிலையில் இன்று காலை பெண் ஒருவர் தனது மகனுடன் கடலூர் கலெக்டர் அலுவலகத்திற்கு நேரில் வந்தார். அவர் மறைத்து வைத்திருந்த மண்எண்ணெயை தன் மீது ஊற்றிக்கொண்டார்.அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் அதிர்ச்சி அடைந்து உடனடியாக அவரிடம் இருந்த மண்எண்ணையை பறிமுதல் செய்து விசாரணை நடத்தினார்கள்.இதில் அவர் பண்ருட்டி தாலுக்கா கண்டரக்கோட்டையை சேர்ந்த பரமேஸ்வரி என்பது தெரியவந்தது. அவர் போலீசாரிடம் கூறியதாவது:- எனது கணவர் முத்துக்குமரன் என்னை 2-வது திருமணம் செய்து கொண்டு உடல்நிலை பாதிப்பு காரணமாக இறந்துவிட்டார்.நான் எனது 8 வயது மகனுடன் முத்துக்குமரன் வீட்டில் இருந்து வருகிறோம். எங்களுக்கு சரியான முறையில் உணவு, மகன் படிப்பு செலவுக்கு பணம் போன்றவைகளை வழங்காமல் அவரது குடும்பத்தார் துன்புறுத்தி வருகின்றனர்.இது தொடர்பாக பண்ருட்டி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தும், நடவடிக்கை ஏதும் இல்லை. தினந்தோறும் என்னை சித்திரவதை செய்து வருவதோடு, நானும் எனது மகனும் தற்கொலை செய்து கொள்ளும் எண்ணம் மேலோங்கி வருகின்றது. எனது தாயார் வீட்டிலும் எந்தவித ஆதரவும் எனக்கு கிடையாது.ஆகையால் இது தொடர்பாக விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என கலெக்டர் அலுவலக போலீசாரிடம் பரமேஸ்வரி கூறினார்.இதனை தொடர்ந்து கலெக்டர் அலுவலக போலீசார் பரமேஸ்வரி மற்றும் அவரது மகனை கலெக்டர் அலுவலகத்திற்கு உள்ளே அழைத்து சென்று மனு அளிக்க வைத்தனர். மனு தொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரியிடம் தெரிவித்தனர்.

    மற்றொரு சம்பவம் :கடலூர் கலெக்டர் அலுவலகத்திற்கு வந்த வாலிபர் தன் மீது மண்எண்ணையை ஊற்றி கொண்டார். அப்போது பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் வாலிபரிடம் இருந்த கேனை பறிமுதல் செய்தனர்.விசாரணையில், பண்ருட்டி மேல் இருப்பை சேர்ந்த அருள் முருகன் என்பது தெரியவந்தது. அவர் கூறும்போது, எனது தந்தையின் பெயரில் நிலம் உள்ளது. ஒரு கும்பல் எனது தந்தை பெயரில் உள்ள பட்டாவை மாற்றம் செய்து உள்ளனர். இது தொடர்பாக ஏற்கனவே மனு வழங்கி உள்ளேன்.ஆனால் இதுநாள் வரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஆகையால், என் தந்தையின் பெயரில் மீண்டும் பட்டாவை மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறினார்.இதனை தொடர்ந்து போலீசார் இதுபோன்ற நடவடிக்கையில் ஈடுபடக்கூடாது. உங்கள் கோரிக்கைகள் தொடர்பாக அதிகாரிகளிடம் மனு அளித்து தீர்வு காண வேண்டும் என எச்சரிக்கை செய்து அனுப்பினர். இந்த2 சம்பவங்களால் கலெக்டர் அலுவலகத்தில் திடீர் பரபரப்பு ஏற்பட்டது.

    குளச்சல், 

    மீனவர்களின் வள்ளங்களுக்கு அரசு மானிய விலையில் மீனவர் கூட்டுறவு சங்கங்கள் மூலமாக மண்எண்ணை வழங்குகிறது. சிலர் இதனை வாங்கி பதுக்கி வைத்து கள்ளச்சந்தையில் விற்பனை செய்வதாக புகார்கள் எழுந்துள்ளது.

    இந்தநிலையில் நேற்று குளச்சல் மரைன் சப்-இன்ஸ்பெக்டர் சுரேஷ் தலைமையிலான போலீசார் மணவாளக்குறிச்சி, கடியபட்டணம், முட்டம் பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுப்பட்டனர். முட்டம் சோதனைச்சாவடி அருகே செல்லும்போது, சந்தேகத்திற்கிடமாக ஒரு மீன் கூண்டு வண்டி வந்தது.

    உடனே போலீசார் அந்த வண்டியை நிறுத்தினர். அப்போது டிரைவர் மற்றும் வண்டியிலிருந்த ஒருவர், வண்டியை சாலையோரம் நிறுத்தி விட்டு தப்பியோட முயற்சித்தனர். போலீசார் அவர்களை மடக்கிப் பிடித்தனர்.

    பின்னர் மீன் கூண்டு வண்டியை திறந்து பார்க்கும்போது, வண்டிக்குள் 30 கேன்களில் சுமார் 1000 லிட்டர் மானிய மண்எண்ணை இருந்தது தெரிய வந்தது. போலீசார் அவற்றை பறிமுதல் செய்து, மீன் வண்டியில் வந்த 2 பேரையும் குளச்சல் மரைன் போலீஸ் நிலையம் கொண்டு வந்தனர். பின்னர் மண்எண்ணை மற்றும் பிடிபட்ட இருவரையும் மாவட்ட குடிமை பொருள் வழங்கல் குற்ற புலனாய்வு துறையினரிடம் ஒப்படைத்தனர்.

    • பறிமுதல் செய்யப்பட்ட மண்எண்ணை உணவு பிரிவு தடுப்பு போலீஸ் நிலையத்திற்கு கொண்டு வந்தனர்.
    • வேறு யாருக்காவது தொடர்பு உண்டா? என்ற கோணத்தில் போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

    நாகர்கோவில் :

    குமரி மாவட்ட உணவுப் பிரிவு தடுப்பு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பேபி இசக்கி பிரகதாம்பாள் தலைமை யிலான போலீசார் மண வாளக்குறிச்சி வள்ளியாற்று பாலத்தில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

    அப்போது அந்த வழியாக சந்தேகப்படும்படியாக வந்த மினி டெம்போ ஒன்றை தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர். அப்போது டிரைவர் முன்னுக்கு பின் முரணான தகவலை தெரிவித்தார்.

    போலீசார் வண்டியை சோதனை செய்தபோது அதில் எந்த ஒரு ஆவணமும் இன்றி மண்எண்ணை கடத்தி சென்றது தெரிய வந்தது. இதையடுத்து கேன்களில் இருந்த 2000 லிட்டர் மண்எண்ணையை போலீசார் பறிமுதல் செய்தனர்.

    பிடிபட்ட டிரைவரிடம் விசாரணை நடத்தியபோது அவர் தக்கலை பகுதியை சேர்ந்த ஜெகன் ராஜ் (வயது 27) என்பது தெரியவந்தது. போலீசார் அவரை கைது செய்தனர். பறிமுதல் செய்யப்பட்ட மண்எண்ணை உணவு பிரிவு தடுப்பு போலீஸ் நிலையத்திற்கு கொண்டு வந்தனர்.

    கைது செய்யப்பட்ட ஜெகன்ராஜிடம் போலீசார் நடத்திய விசாரணையில் மண்எண்ணையை முட்டத்திலிருந்து கொட்டில்பாட்டிற்கு கொண்டு செல்வதாக தெரிவித்தார். இதில் வேறு யாருக்காவது தொடர்பு உண்டா? என்ற கோணத்தில் போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

    விசாரணையில் கொட்டில்பாட்டை சேர்ந்த கண்ணன் என்பவருக்கு மண்எண்ணை கடத்தலில் தொடர்பு இருப்பது தெரியவந்தது. போலீசார் கண்ணன் மீதும் வழக்குப் பதிவு செய்துள்ளனர். அவரை போலீசார் தேடி வருகிறார்கள்.

    • தக்கலை வட்ட வழங்கல் அதிகாரி அதிரடி நடவடிக்கை
    • சந்தேகத்திற்கிடமாக வந்த மினி டெம்போவை நிறுத்தி சோதனை செய்தனர்

    தக்கலை, ஜூலை.18-

    தக்கலை வட்ட வழங்கல் அலுவலர் சுனில் குமார் மற்றும் குளச்சல் போலீஸ் இன்ஸ்பெக்டர் கிறிஸ்டி ஆகியோர் நேற்று மாலை குளச்சல் அக்கரை பள்ளி என்னும் இடத்தில் வாகன தணிக்கை மேற்கொண்டனர்.

    அப்போது அந்த வழியாக சந்தேகத்திற்கிடமாக வந்த மினி டெம்போவை நிறுத்தி சோதனை செய்தனர். இதில் மீனவர்களின் படகுகளுக்கு பயன் படுத்தப்படும் மானிய விலையிலான வெள்ளை நிற மண்எண்ணை சிக்கியது. 31 கேன்களில் சுமார் 1000 லிட்டர் அளவில் மறைத்து வத்திருந்ததை தொடர்ந்து, அதனை வாகனத்துடன் பறிமுதல் செய்து வட்ட வழங்கல் அலுவலகத்திற்கு கொண்டு வந்தனர். பறிமுதல் செய்யப்பட்ட மண்எண்ணை குளச்சல் அருகே செயல்படும் அரசு குடோனில் ஒப்படைக்கப் பட்டது.

    இந்த கடத்தல் சம்பவங்களில் ஈடுபட்டவர்கள் மற்றும் மானிய விலையிலான மண்எணை் ணையை வெளிச் சந்தையில் விற்பனை செய்த பயனாளிகள் யார்? என்பது குறித்தும் தீவிரமாக விசா ரணை செய்யப்பட்டு வருகிறது.

    • சுமார் 4 கிலோ மீட்டர் தூரம் துரத்தி சென்று மங்காடு பகுதியில் அதிகாரிகள் காரை மடக்கி பிடித்தனர்
    • 20 கேன்களில் சுமார் 700 லிட்டர் ரேசன் மண்ணண்ணை இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

    கன்னியாகுமரி :

    தமிழக கேரள எல்லைப் பகுதி வழியாக தமிழகத்தில் இருந்து கேரளாவிற்கு ரேஷன் அரிசி மற்றும் மானிய மண்எண்ணை உள்ளிட்ட பொருட்கள் கடத்துவது தொடர் கதை யாக நடந்து வருகிறது.

    இந்த நிலையில் இன்று வட்டவழங்கல் அதிகாரி ராஜசேகர் தலைமையில் வருவாய் ஆய்வாளர் ரெதன் ராஞ்குமார் கொண்ட குழு முன்சிறை பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சந்தேகத்துக்கு இடமாக சொகுசு கார் ஒன்று வந்தது.

    அந்த காரை நிறுத்துமாறு வருவாய் துறையினர் சைகை காட்டினர். இருந்தும் அந்த கார் நிற்காமல் சென்று விட்டது. இதனை தொடர்ந்து சுமார் 4 கிலோ மீட்டர் தூரம் துரத்தி சென்று மங்காடு பகுதியில் அதிகாரிகள் காரை மடக்கி பிடித்தனர். ஆனால் ஓட்டுநர் தப்பி ஓடிவிட்டார்.

    காரை சோதனை செய்து பார்த்த போது 20 கேன்களில் சுமார் 700 லிட்டர் ரேசன் மண்ணண்ணை இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இந்த ரேசன் மண்எண்ணை கேரளாவிற்கு கடத்தி செல்வது தெரிய வந்தது.

    பிறகு காரில் இருந்து கைப்பற்றப்பட்ட மண்எண்ணை மார்த்தாண் டம் அரசு விற்பனை நிலை யத்திலும் கடத்தல் காரை வட்டாச்சியர் அலுவலகத்தி லும் ஒப்படைக்கப்பட்டது. தப்பி ஓடிய ஓட்டுநர் யார்? என்று விசாரணை நடைபெற்று வருகிறது.

      கன்னியாகுமரி:

      தக்கலைவட்ட வழங்கல் அலுவலர் சுனில் குமார் தலைமையிலான அலுவலக பணியாளர்கள் நேற்று நள்ளிரவு சுமார் 11.30 மணி யளவில் கல்குளம் வட்டம், குளச்சல் அருகே யுள்ள லியோன் நகர் சுனாமி காலனியில் ரோந்து பணி யில் ஈடுபட்டனர்.

      அப்போது பயணிகள் ஆட்டோ நூதன முறையில் வடிவமைக்கப்பட்டு அங்கு வந்தது. அதனை சந்தேகத்தின் அடிப்படையில்போலீசார் தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர்.

      அதில் சுமார் 35 லிட்டர் கொள்ளளவு கொண்ட 12 கேன்களில் சுமார் 420 லிட்டர் வெள்ளை நிற மானிய விலை மண்எண்ணை (மீனவர்களின் படகுகளுக்கு பயன்படுத்துவதற்கு மானிய விலையில் மீன் வளத்துறை மூலமாக வழங்கப்படும் மண்எண்ணை) இருந்தது. அதனை வாகனத்துடன் போலீ சார் பறிமுதல் செய்த னர்.

      மேலும் அப்பகுதியில் மறைத்து வைத்திருந்த 100 லிட்டர் வெள்ளை நிற மண்எண்ணை லாரியுடன் பறிமுதல் செய்யப்பட்டது. பின்னர் லாரி குளச்சல் போலீஸ் நிலைய வளாகத்தில் மேல் நடவடிக்கைக்காக பாதுகாப்பாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. மேற்படி ஆட்டோவில் கைப்பற்றப்பட்ட மண்எண்ணை குளச்சல் கிட்டங்கியில் நாளை ஒப்படைக்கப்படுகிறது.

      ஆட்டோ தக்கலை வட்ட வழங்கல் அலுவலகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. மேற்படி இரு வாகனங்களின் ஓட்டுநர்களும் தப்பிச் சென்றுள்ளனர்.

      • பறிமுதல் செய்த மண்எண்ணையையும் உணவு பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
      • இந்த மண்எண்ணை மீன் பிடி வள்ளங்களுக்கு அரசு மானியமாக வழங்கப்படும் மண்எண்ணை என கூறப்படுகிறது.

      கன்னியாகுமரி:

      குளச்சல் மரைன் இன்ஸ்பெக்டர் நவீன் உத்தர வுப்படி சப் - இன்ஸ்பெக்டர் சுரேஷ் தலைமையிலான போலீசார் நேற்றிரவு மணவா ளக்குறிச்சி, அழிக்கால், பிள்ளைத்தோப்பு ஆகிய பகுதியில் தீவிர ரோந்து சென்றனர்.

      முட்டம் சோதனைச் சாவடியில் செல்லும் போது, அங்கு சந்தேகத்திற்கிடமாக ஒரு சொகுசு கார் வந்தது.அதனை நிறுத்தி போலீசார் சோதனை செய்தனர்.அப்போது காருக்குள் 22 பிளாஸ்டிக் கேன்களில் 700 லிட்டர் மண்எண்ணை கடத்தி செல்ல முயற்சித்தது தெரிய வந்தது. இதையடுத்து மண்எண்ணையை பறிமுதல் செய்தனர்.

      மேலும் இந்த மண்எண்ணை மீன் பிடி வள்ளங்களுக்கு அரசு மானியமாக வழங்கப்படும் மண்எண்ணை என கூறப்படுகிறது. இதையடுத்து போலீசார் காரை ஓட்டி வந்த சாமியார்மடத்தை சேர்ந்த ஸ்டாலின் (வயது 37) மற்றும் அவருடன் வந்த கிரிபிரசாத் (47) ஆகியோரையும், பறிமுதல் செய்த மண்எண்ணையையும் உணவு பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

      • கேனில் இருந்த மண் எண்ணை அறை முழுவதும் சிந்தி கிடந்தது. இன்று அதிகாலை யோகீந்திரன் கண் விழித்ததும் சிகரெட் பற்ற வைத்துள்ளார்.
      • அறையில் இருந்த மண் எண்ணையில் தீ பொறி விழவே அறை முழுவதும் தீ பற்றி கொண்டது.

      கன்னியாகுமரி :

      ஆரல்வாய்மொழி அருகே அவ்வை நகரை சேர்ந்தவர் யோகீந்திரன் (வயது 50). வெள்ளமடம் அருகே பீரோ தயாரிப்பு நிறுவனத்தில் வேலை செய்து வந்தார்.

      இவருக்கு திருமணமாகி மனைவி உள்ளார். யோகீந்திரனுக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்தது. நேற்று இவர் மது குடித்துவிட்டு வீட்டுக்கு வந்தார்.

      பின்னர் சாப்பிட்டுவிட்டு தூங்க சென்றார். அவரது அறையில் மண் எண்ணை கேன் இருந்தது. தூங்கும் போது அந்த கேன் தவறுதலாக சரிந்து விழுந்துள்ளது.

      அப்போது கேனில் இருந்த மண் எண்ணை அறை முழுவதும் சிந்தி கிடந்தது. இன்று அதிகாலை யோகீந்திரன் கண் விழித்ததும் சிகரெட் பற்ற வைத்துள்ளார்.

      அப்போது அறையில் இருந்த மண் எண்ணையில் தீ பொறி விழவே அறை முழுவதும் தீ பற்றி கொண்டது.

      இதில் யோகீந்திரன் உடல் கருகினார். அவரதுஅலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்தனர். அவர்கள் யோகீந்திரனை மீட்டு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

      பின்னர் ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு சிகிச்சை பலன் இன்றி யோகீந்திரன் பரிதாபமாக இறந்தார். இது குறித்து ஆரல்வாய்மொழி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

      • கைப்பற்றப்பட்ட மண்எண்ணை காப்பிக்காடு அரசு நுகர்வோர் வாணிப கிடங்கில் ஒப்படைக்கப்பட்டது.
      • கடத்தல் ஆட்டோ வட்டாட்சியர் அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டது.

      கன்னியாகுமரி:

      வட்டவழங்கல் அதிகாரி கே.புரந்தரதாஸ் தலைமையில் வருவாய் ஆய்வாளர் ரெதன் ராஞ்குமார் கொண்ட குழு களியக்காவிளை அருகே பி.பி.எம் சந்திப்பு பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சந்தேகத்துக்கு இடமாக கேரள பதிவெண் கொண்ட ஆட்டோ ஒன்று வந்தது.

      அந்த ஆட்டோவை நிறுத்துமாறு சைகை காட்டினர் இருந்தும் அந்த ஆட்டோ நிறுத்தாமல் சென்று விட்டது. தொடர்ந்து சுமார் 2 கிலோமீட்டர் தூரம் துரத்தி சென்று கோழிவிளை பகுதியில் வைத்து ஆட்டோவை மடக்கி பிடித்தனர். ஆனால் ஓட்டுநர் தப்பி ஓடிவிட்டார்.

      ஆட்டோவை சோதனை செய்து பார்த்த போது 13 கேன்களில் சுமார் 500 லிட்டர் ரேஷன் மண்ணெண்ணை இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இந்த ரேஷன் மண்ணெண்ணை கேரளாவிற்கு கடத்தி செல்வது தெரிய வந்தது.

      ஆட்டோவில் இருந்து கைப்பற்றப்பட்ட மண்எண்ணை காப்பிக் காடு அரசு நுகர்வோர் வாணிப கிடங்கிலும் கடத்தல் ஆட்டோ வட்டாட்சியர் அலுவலகத்திலும் ஒப்ப டைக்கப்பட்டது. தப்பி ஓடிய ஓட்டுநர் யார் என்று விசாரணை நடைபெற்று வருகிறது.

      • அரசால் மீனவர்களுக்கு மீன்பிடித் தொழிலுக்கு மானியவிலை மண்எண்ணை வழங்கப்படுகிறது
      • மண்எண்ணையை கல்குளம் வட்டவழங்கல் அலுவலரிடம் ஒப்படைப்பு

      கன்னியாகுமாரி:

      குளச்சல் கடலோர காவல் நிலைய நுண்ணறிவு பிரிவு ஏட்டுக்கள் சிந்துகுமார், சிவகுமார், ஜஸ்டின் மற்றும் காவலர்கள் சந்திரசேகர், வினு ஆகியோர் குளச்சல் துறைமுக பகுதியில் தீவிர ரோந்து சென்றனர்.

      அப்போது அந்த வழியாக சந்தேகத்திற்கிடமாக வந்த கேரளா பதிவெண் கொண்ட ஆம்னி வேனை நிறுத்தி சோதனை செய்தனர். சோதனையில் அரசால் மீனவர்களுக்கு மீன்பிடித் தொழிலுக்கு வழங்கும் மானியவிலை மண்எண்ணை 21 கேன்களில் 735 லிட்டர் இருந்ததை கண்டு பிடித்தனர்.

      உடனே போலீசார் காட்டத்துறையை சேர்ந்த ஓட்டுனர் சுஜின் (வயது 36), சுவாமியார்மடத்தை சேர்ந்த கிரிபிரசாத் (38) ஆகிய இருவரையும் பிடித்து மற்றும் மண்எண்ணையையும் மீட்டு குளச்சல் மரைன் காவல் நிலையத்திற்கு கொண்டு சென்றனர். பின்னர் மண்எண்ணையையும் பிடிப்பட்ட வேனில் வந்தவர்களையும் கல்குளம் வட்டவழங்கல் அலுவலரிடம் ஒப்படைத்தனர்.

      • அரிசியை கேரளாவுக்கு கடத்தி செல்ல முயற்சி
      • வள்ளத்திற்கு உள்ள மானிய விலை மண்எண்ணையை பதுக்கி வைத்திருந்தது கண்டுபிடிப்பு

      கன்னியாகுமரி:

      தனிப்படை சப் - இன்ஸ்பெக்டர் ஜாண் போஸ்கோ தலைமையிலான போலீசார் நேற்று மாலை குளச்சல் பகுதியில் தீவிர ரோந்து சென்றனர்.சைமன்காலனி பாலம் அருகில் செல்லும்போது அங்கு தோட்டத்தில் ஒரு கூண்டு வேன் சந்தேகத்திற்கிடமாக நின்று கொண்டிருந்தது.போலீசார் விரைந்து சென்றதும், வேன் டிரைவர் தப்பியோட முயற்சித்தார்.

      போலீசார் அவரை மடக்கி பிடித்து, வேனையும் குளச்சல் போலீஸ் நிலையம் கொண்டு சென்றனர். வேனை திறந்து பார்க்கும்போது அதில் சிறு பிளாஸ்டிக் பைகளில் சுமார் 1500 கிலோ ரேசன் அரிசி இருந்தது தெரிய வந்தது.விசாரணையில் வேன் டிரைவர் பரக்குன்றை சேர்ந்த சத்யா (வயது 28) என்பதும், அரிசியை கேரளாவுக்கு கடத்தி செல்ல முயற்சித்ததும் தெரிய வந்தது. பின்னர் போலீசார் டிரைவர் மற்றும் அரிசி வாகனத்தை உணவு பொருள் கடத்தல் தடுப்பு பிரிவிடம் ஒப்படைத்தனர்.

      இது போல் நள்ளிரவு குளச்சல் சப் - இன்ஸ்பெக்டர் மோகன் ஜோஸ்லின், ஏட்டுகள் வில்சன், செல்வகுமார் ஆகியோர் லியோன் நகரில் ரோந்து செல்லும்போது அங்கு வீட்டு காம்பவுண்டுக்குள் 31 பிளாஸ்டிக் கேன்களில் வள்ளத்திற்கு உள்ள மானிய விலை மண்எண்ணையை பதுக்கி வைத்திருந்ததை கண்டுபிடித்தனர். உடனே போலீசார் அவற்றை மீட்டு குளச்சல் போலீஸ் நிலையத்திற்கு எடுத்து சென்றனர்.

      சிவகங்கை கலெக்டர் அலுவலகத்தில் உடலில் மண்எண்ணை ஊற்றி தீக்குளிக்க முயன்ற முதியவர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.
      சிவகங்கை

      சிவகங்கை மாவட்டம், மானாமதுரையை அடுத்துள்ள மல்லவராயனேந்தல் கிராமத்தை சேர்ந்தவர் கணேசன் (வயது 70). இவருக்கும் இவரது தம்பி பாஸ்கரனுக்கும் வீடு தொடர்பாக பிரச்சினை இருந்துவருகிறது.

      இது தொடர்பாக மானாமதுரை காவல் நிலையத்தில் கணேசன் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை மேலும் சிவகங்கை எஸ்.பி அலுவலகத்திலும் புகார் அளித்துள்ளார். அதிலும் நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
      இந்தநிலையில் சிவகங்கை கலெக்டர் அலுவலகம் வந்த முதியவர் கணேசன், கலெக்டர் அலுவலக வாயிலில் தான் மறைத்து வைத்திருந்த மண்எண்ணை கேனை எடுத்து உடலில் ஊற்றி தீக்குளிக்க முயன்றார். 

      இதனை கண்ட அங்கிருந்த போலீசார் அவரை தடுத்து மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்து சென்றனர். முதியவர் தீக்குளிக்க முயன்ற சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
      ×