சோழசிராமணி அருகே மகன் மது அருந்தி வந்ததால் விரக்தியில் தந்தை தற்கொலை

சோழசிராமணி அருகே மகன் மது அருந்தி வந்ததால் விரக்தியில் தந்தை தற்கொலை செய்துகொண்டார். மது அருந்தக்கூடாது என்று தந்தை பலமுறை எடுத்து கூறியும் மகன் கேட்கவில்லை.
சோழசிராமணி அருகே மகன் மது அருந்தி வந்ததால்  விரக்தியில் தந்தை தற்கொலை
Published on: 

பரமத்தி வேலூர்:

நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் தாலுகா, சோழசிராமணி அருகே உள்ள பொன்னம்பா ளையம், அருந்ததியர் காலனியை சேர்ந்தவர் மாரிமுத்து (வயது 54) கட்டிட மேஸ்திரி. இவருக்கு 2 மகன்களும், ஒரு மகளும் உள்ளனர். இவரது இளைய மகன் தினேஷ் மது அருந்திவிட்டு வேலைக்கு போகாமல் வீட்டில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

இது குறித்து மகனிடம் மது அருந்தக்கூடாது என அவரது தந்தை மாரிமுத்து பலமுறை எடுத்துக் கூறியும் அவர் கேட்கவில்லை என தெரிகிறது.

இதனால் மனம் உடைந்த நிலையில் இருந்த மாரிமுத்து இரவு வீட்டிற்கு அருகில் உள்ள ஒரு கொட்டகையில் நைலான் கயிற்றால் தூக்கு போட்டுக்கொண்டார். தொங்கிய அவர் உயிருக்கு போராடிய நிலையில் இருந்ததை பார்த்துள்ளார்.

பின்னர் அக்கம் பக்கத்தில் இருந்தவர்களை அழைத்து அவரை காப்பாற்றி திருச்செங்கோடு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். ஆனால் அங்கு மாரிமுத்து சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்‌.

சம்பவம் குறித்து ஜேடர்பாளையம் போலீசில் புகார் செய்தனர். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு பிரேதத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருச்செங்கோடு அரசு மருத்துவமனை சவக்கிடங்கில் வைத்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com