search icon
என் மலர்tooltip icon

  நீங்கள் தேடியது "frustration"

  • குரல்வளையில் இருக்கும் மெல்லிய தசைகள் சேதமடையும்.
  • கத்திக்கொண்டே இருப்பதால் உறவுகளுக்குள் பிளவு ஏற்படவும்.

  அன்றாட வாழ்க்கை முறையில் பலரும் பல்வேறு காரணங்களால் மன அழுத்தத்துக்கு உள்ளாகிறர்கள். குறிப்பாக பெண்களுக்கு வீட்டு வேலைகள், அலுவலகப்பணிகள், குழந்தைகள் பராமரிப்பு, குடும்பத்தின் முக்கிய பொறுப்புகள் ஆகியவற்றை தினசரி கையாள்வதன் காரணமாக எதிர்மறையான மனநிலை மாற்றங்கள் எளிதாக ஏற்படுகின்றன. இதன் விளைவாக பெண்களுக்கு அதிக கோபம், எரிச்சல், சலிப்பு, விரக்தி போன்ற பாதிப்புகள் உண்டாகும். அந்த உணர்வுகளை சத்தமாக திட்டுவது. கத்துவது போன்ற செயல்பாடுகளின் மூலம் அவர்கள் வெளிப்படுத்துகிறார்கள்.

  குறும்பு செய்யும் குழந்தைகள் இருக்கும் வீடுகளில், அதிகமாக சத்தம் போட்டு திட்டுவதும். கத்துவதும் பெண்களின் தினசரி நடவடிக்கையாகவே மாறிவிடும். இதன் காரணமாக குழந்தைகளுக்கும் உடல் மற்றும் மனம் சார்ந்த பிரச்சினைகள் ஏற்படும்.

  குரல் நாண் மற்றும் தொண்டையில் அழுத்தம் ஏற்படும். தொண்டையில் இருக்கும் குரல்வளையில் ஏற்படும் அதிர்வு காரணமாகத்தான் நம்மால் பேச முடிகிறது. சத்தமாக பேசும்போது குரல்வளையில் அதிக அழுத்தத்தோடு அதிர்வு ஏற்படுவதாலும், அடுக்குகளுக்கு இடையில் காற்றோட்டம் குறைவதாலும் உராய்வு ஏற்படுகிறது. இதனால் குரல்வளையில் இருக்கும் மெல்லிய தசைகள் சேதமடையும்.

  மேலும் நாளடைவில் பேசுவதற்கே சிரமம் ஏற்படலாம். அதிகமாக கோபப்பட்டு கத்துபவர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி 6 மடங்கு குறைய வாய்ப்பு உள்ளது.

  ஒவ்வொரு முறையும் நீங்கள் கோபத்தில் உங்கள் குரலை உயர்த்தி பேசும்போது, உங்களுடைய இதயத் துடிப்பு அதிகரிப்பதை கவனிக்க முடியும். கோபம் அதிகரிக்கும்போது, உடலில் ரத்த அழுத்தம் அதிகரிக்கும். அதன் மூலம் இதயம் சீரற்று வேகமாக துடிக்க ஆரம்பிக்கும். சுவாசிக்கும் வேகம் அதிகமாகும். தசைகளில் அதிக அழுத்தம் உண்டாகும். இதன் காரணமாக தசைகள் தளர்ந்துபோக நேரிடும்.

  கோபப்பட்டு கத்துவதால் உடலில் ஹார்மோன் மாற்றங்கள் ஏற்படும். இதன்மூலம் வளர்சிதை மாற்றம் குறையும். தலைவலி, பதற்றம், தூக்கமின்மை, செரிமானக் கோளாறுகள் மற்றும் சரும பிரச்சினைகள் ஏற்படும். எப்போதும் கோபப்பட்டு கத்திக்கொண்டே இருப்பவர்களுக்கு பக்கவாதம், மாரடைப்பு ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம்.

  அடிக்கடி கத்திக்கொண்டே இருப்பதால் உறவுகளுக்குள் பிளவு ஏற்படவும். பிள்ளைகள் மற்றும் பெற்றோர் இடையே கருத்து வேறுபாடு ஏற்படவும் வாய்ப்புகள் உள்ளன. பெற்றோர் அதிக சத்தம் போட்டு கண்டிப்பது, குழந்தைகளின் உடல் மற்றும் மனநிலையில் பல்வேறு பிரச்சினைகளை உண்டாக்கும்.

  சிறுவயதில்தான் முளை மற்றும் உடல் உறுப்புகளின் வளர்ச்சி அதிகமாக இருக்கும். ஆனால் பெற்றோர் அதிக சத்தம் போட்டு கண்டிப்பதால் குழந்தைகளின் மூளை வளர்ச்சி பாதிக்கப்படும். தொடர்ந்து இத்தகைய கடுமையான சூழ்நிலையில் வளரும் குழந்தைகளுக்கு ஆர்த்ரைட்டிஸ், தலைவலி, முதுகு மற்றும் கழுத்துவலி ஏற்படவும் வாய்ப்புகள் அதிகமாக உள்ளன

  • சோழசிராமணி அருகே மகன் மது அருந்தி வந்ததால் விரக்தியில் தந்தை தற்கொலை செய்துகொண்டார்.
  • மது அருந்தக்கூடாது என்று தந்தை பலமுறை எடுத்து கூறியும் மகன் கேட்கவில்லை.

  பரமத்தி வேலூர்:

  நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் தாலுகா, சோழசிராமணி அருகே உள்ள பொன்னம்பா ளையம், அருந்ததியர் காலனியை சேர்ந்தவர் மாரிமுத்து (வயது 54) கட்டிட மேஸ்திரி. இவருக்கு 2 மகன்களும், ஒரு மகளும் உள்ளனர். இவரது இளைய மகன் தினேஷ் மது அருந்திவிட்டு வேலைக்கு போகாமல் வீட்டில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

  இது குறித்து மகனிடம் மது அருந்தக்கூடாது என அவரது தந்தை மாரிமுத்து பலமுறை எடுத்துக் கூறியும் அவர் கேட்கவில்லை என தெரிகிறது.

  இதனால் மனம் உடைந்த நிலையில் இருந்த மாரிமுத்து இரவு வீட்டிற்கு அருகில் உள்ள ஒரு கொட்டகையில் நைலான் கயிற்றால் தூக்கு போட்டுக்கொண்டார். தொங்கிய அவர் உயிருக்கு போராடிய நிலையில் இருந்ததை பார்த்துள்ளார்.

  பின்னர் அக்கம் பக்கத்தில் இருந்தவர்களை அழைத்து அவரை காப்பாற்றி திருச்செங்கோடு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். ஆனால் அங்கு மாரிமுத்து சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்‌.

  சம்பவம் குறித்து ஜேடர்பாளையம் போலீசில் புகார் செய்தனர். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு பிரேதத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருச்செங்கோடு அரசு மருத்துவமனை சவக்கிடங்கில் வைத்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

  • வீரவநல்லூர் அருகே உள்ள புதுக்குடி நடுத்தெருவை சேர்ந்தவர் பிச்சையா கார்த்திகேயன். இவரது மகன் வேலு(வயது 23).
  • வேலு மருத்துவ பரிசோதனை தேர்வில் மட்டும் தோல்வி அடைந்தார்.

  நெல்லை:

  வீரவநல்லூர் அருகே உள்ள புதுக்குடி நடுத்தெருவை சேர்ந்தவர் பிச்சையா கார்த்திகேயன். இவரது மகன் வேலு(வயது 23).

  இவர் ராணுவத்தில் சேருவதற்காக பயிற்சி எடுத்து வந்தார். சமீபத்தில் நடந்த ராணுவத்திற்கான உடல் தகுதி தேர்வில் அவர் பங்கேற்றார். அதில் தேர்ச்சி பெற்ற வேலு மருத்துவ பரிசோதனை தேர்வில் மட்டும் தோல்வி அடைந்தார்.

  அதாவது கண் பார்வை திறன் தொடர்பான சோதனையில் அவருக்கு பார்வை குறைபாடு இருப்பதாக கூறிவிட்டனர். இதனால் அவருக்கு ராணுவத்தில் சேர முடியாமல் போய்விட்டது.

  இதன் காரணமாக அவர் கடந்த சில நாட்களாக மிகுந்த வருத்தத்தில் யாரிடமும் பேசாமல் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று முன்திம் இரவு வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் வேலு விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

  இதுதொடர்பாக வீரவநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்

  பாகூர் அருகே காலில் அடிபட்டதால் வேலை செய்ய முடியாத விரக்தியில் தொழிலாளி தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.

  பாகூர்:

  பாகூரை அடுத்த அரங்கனூர் நிர்ணயப்பட்டு மாரியம்மன் கோவில் வீதியை சேர்ந்தவர் தனசேகரன் (வயது 47).இவரது மனைவி பாரதி. இவர்களுக்கு ஒரு மகன் உள்ளான்.

  தனசேகருக்கு வேலை செய்யும் போது காலில் அடிபட்டது. இதனால் அவரால் வேலைக்கு செல்ல முடியவில்லை. இதனால் மது பழக்கத்துக்கு அடிமையானார்.

  இந்த நிலையில் நேற்று தன்னால் வேலை செய்ய முடியவில்லை என்று மன வருத்தத்தில் இருந்த தனசேகரன் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் துப்பட்டாவால் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.

  இது குறித்து பாரதி பாகூர் போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் பாகூர் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

  வில்லியனூரில் வேலை கிடைக்காத விரக்தியில் எம்.டெக். பட்டதாரி வாலிபர் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.

  புதுச்சேரி:

  வில்லியனூர் ஜி.என். பாளையம் எழில்நகரை சேர்ந்தவர் தமிழரசன். தனியார் நிறுவனத்தில் ஊழியராக பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி காமாட்சி. இவர்களது மகன் கோபிநாத் (வயது23). புதுவை அரசு என்ஜினீயரிங் கல்லூரியில் எம்.டெக். முடித்து தங்கப்பதக்கம் பெற்றவர்.

  இவர் கடந்த சில மாதங்களாக வேலைதேடி வந்தார். ஆனால் படிப்புக்கேற்ற வேலை கிடைக்கவில்லை. இதனால் விரக்தியில் இருந்து வந்தார். பெற்றோர் சமாதானப்படுத்தியும் கோபிநாத் மனமுடைந்த நிலையில் இருந்து வந்தார்.

  இந்த நிலையில் நேற்று தமிழரசன் வழக்கம்போல் வேலைக்கு சென்றுவிட்டார். மதியம் காமாட்சி வீட்டில் இருந்து வெளியே சென்றார். அப்போது கோபிநாத் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்து வீட்டின் கதவை உள்பக்கமாக பூட்டி கொண்டு மின்விசிறியில் சேலையால் தூக்குபோட்டு தொங்கினார்.

  வெளியே சென்று விட்டு வீடு திரும்பிய காமாட்சி வீட்டின் கதவு உள்பக்கமாக பூட்டப்பட்டு இருந்ததால் சந்தேகம் அடைந்து ஜன்னல் வழியாக பார்த்தார். அப்போது கோபிநாத் தூக்கில் தொங்குவதை கண்டு அலறினார். பின்னர் அக்கம் பக்கத்தினர் உதவியுடன் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்த போது கோபிநாத் இறந்து போனது தெரியவந்தது.

  இதுகுறித்த புகாரின் பேரில் வில்லியனூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் வேலைய்யன், உதவி சப்-இன்ஸ்பெக்டர் தணிகாசலம் ஆகியோர் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

  கணவர் இறந்த விரக்தியில் பெண் தீக்குளித்து தற்கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

  மதுரை:

  மதுரை மேலூர் அருகேயுள்ள வாச்சாம்பட்டியைச் சேர்ந்தவர் ராஜேஷ்குமார். இவரது மனைவி ரேகா (வயது 26). இவர்களுக்கு 9 மாத கைக்குழந்தை உள்ளது.

  இந்த நிலையில் ராஜேஷ் குமார் உடல்நலக்குறைவு காரணமாக கடந்த 6-ந் தேதி இறந்து விட்டார். இதனால் வேதனை அடைந்த ரேகா கடந்த சில நாட்களாக யாருடனும் பேசவில்லை.

  மிகவும் மனவேதனையில் இருந்த அவர் சம்பவத்தன்று காலை வீட்டில் யாரும் இல்லாத நிலையில் தீக்குளித்தார். இதையடுத்து அவரை உறவினர்கள் மதுரை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

  பின்னர் ரேகா மேல் சிகிச்சைக்காக பொன்னமராவதியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர்.

  இருப்பினும் ரேகா சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். இது தொடர்பாக ரேகாவின் தாயார் வெள்ளையம்மாள் கீழவளவு போலீசில் புகார் செய்தார்.

  சப்-இன்ஸ்பெக்டர் கோபிநாத் வழக்குப்பதிவு செய்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகிறார்.

  ×