என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Disagreement"
- கருணாகரன் மாணவிகளிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக கடந்த 28-ந் தேதி போக்சோ சட்டத்தில் போலீசார் கைது செய்தனர்.
- நடவடிக்கை எடுக்க வேண்டும் என வெளியே கூடியிருந்த பொதுமக்கள் கோஷமிட்டனர்.
விழுப்புரம்:
விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அடுத்த வாக்கூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் பணிபுரிந்தவர் ஆசிரியர் கருணாகரன் (வயது 32). இவர் பள்ளி மாணவிகளிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக கடந்த 28-ந் தேதி போக்சோ சட்டத்தில் போலீசார் கைது செய்தனர். இதையடுத்து பள்ளி முன்பு திரண்ட பெற்றோர்கள், மாணவர்கள் சக ஆசிரியர்களுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக பொய்யான புகார் தெரிவித்துள்ளனர். இதனால் கைது செய்யப்பட்ட ஆசிரியரை விடுவிக்க கோரி முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட கல்வி அலுவலர் கவுசர், போலீஸ் இன்ஸ்பெக்டர் வினாயகமுருகன் ஆகியோர் உறுதியளித்தனர். தொடர்ந்து பள்ளியில் பயிலும் மாணவர்கள், அவர்களின் பெற்றோர் மாவட்ட கலெக்டரை சந்தித்து ஆசிரியரை விடுவிக்க கோரி மனு கொடுக்க விழுப்புரம் சென்றனர். அங்கிருந்த மாவட்ட வருவாய் அலுவலர் மனுவை பெற்றுக்கொண்டு நடவடிக்கை எடுப்பதாக கூறி அனுப்பிவிட்டார். மேலும், ஆசிரியரை விடுவிக்கும் வரை எங்கள் பிள்ளைகளை பள்ளி க்கு அனுப்பமாட்டோமென பெற்றோர்கள் கூறிவிட்டு அங்கிருந்து வந்தனர்.
இது தொடர்பாக வட்டார கல்வி அலுவலர் ஜெய்சங்கர் நேற்று முன்தினம் பள்ளியில் பணிபுரியும் ஆசிரியைகள், ஆசிரியர், பள்ளி மாணவிகளிடம் தனித்தனியே ரகசிய விசாரணை நடத்தினார். இது குறித்து தகவலறிந்த பொதுமக்கள் பள்ளி முன்பு திரண்டனர். தவறான புகார் கொடுத்த பள்ளி ஆசிரியைகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வெளியே கூடியிருந்த பொதுமக்கள் கோஷமிட்டனர். இந்த சம்பவம் குறித்து முன்கூட்டியே கல்வி துறைக்கு ஏன் தகவல் தெரிவிக்கபடவில்லை என முறையான விளக்கம் கேட்டு தலைமை ஆசிரியர் புஷ்பராணி மற்றும் வட்டார கல்வி அலுவலர் ஜெய்சங்கர் ஆகியோருக்கு மாவட்ட கல்வி அலுவலர் விளக்கம் கேட்டு கடிதம் அனுப்பியிருந்தார். பள்ளிக்கு செல்லாமல் புறக்கணித்த நிலையில் நேற்றும் தொடர்ந்து 3-வது நாளாக மாணவர்கள் வகுப்பிற்கு செல்லாமல் புறக்கணித்தனர். இந்நிலையில் வழக்கில் சம்பந்தப்பட்ட 13 குழந்தைகளின் பெற்றோர் மற்றும் கிராம முக்கிய பிரமுகர்கள் நேற்று மாவட்ட கலெக்டர் மற்றும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டை சந்தித்து, வழக்கை வாபஸ் பெற்றுக் கொள்வதாக எழுதி கொடுக்க சென்றனர். அவர்களிடம் கலெக்டர் பழனி, போலீஸ் சூப்பிரண்டு சசாங்சாய் ஆகியோர் கூறியதாவது:-
போக்சோ சட்டத்தின் கீழ் ஆசிரியர் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ளார். இனிமேல் இந்த வழக்கு குறித்து நீதிமன்ற விசாரணையில் தான் முடிவு தெரியும். நாங்கள் யாரும் அது பற்றி முடிவு செய்ய முடியாது. கிராம பொதுமக்கள் பள்ளி மாணவர்களின் கல்வி நலனை கருத்தில் கொண்டு அனைவரையும் பள்ளிக்கு அனுப்பி வைத்து கல்வி கற்க செய்யுங்கள் என கூறி அவர்களை அனுப்பி வைத்தனர். இந்நிலையில் கிராமத்திற்கு வந்த அவர்கள், கிராம பஞ்சாயத்தார் மற்றும் மற்ற பெற்றோர்களுடன் கலந்தாலோசித்தனர். இதில் வரும் 4-ந் தேதி திங்கட்கிழமையில் இருந்து மாணவர்களை பள்ளிக்கு அனுப்பி வைப்பதென முடிவு செய்தனர். மேலும், நீதிமன்ற விசாரணையின் போது பா ர்த்துக் கொள்ளலாமெனவும் முடிவெடுத்தனர். இந்த முடிவினை கலெக்டர், போலீஸ் சூப்பிரண்டு, கல்வித் துறை அதிகாரிகளுக்கு வாக்கூர் கிராம மக்கள் அனுப்பி வைத்தனர். இதனால் கடந்த ஒரு வாரமாக நடந்த பிரச்சினை முடிவுக்கு வந்துள்ளது.
- இனிமையான மண வாழ்க்கை எல்லோருக்கும் அமைந்து விடுவதில்லை.
- கருத்து வேறுபாடுகளால் மணமுறிவுகள் அதிகமாகி வருகின்றன.
இனிமையான மண வாழ்க்கை எல்லோருக்கும் அமைந்து விடுவதில்லை. கருத்து வேறுபாடுகளால் மணமுறிவுகள் அதிகமாகி வருகின்றன. விவாகரத்து செய்யாவிட்டாலும் சலிப்புடன் திருமண வாழ்க்கை வாழ்பவர்கள் பலர். இன்னொருபுறம் எனக்கு திருமணமே வேண்டாம், தனியாக வாழ்கிறேன் என்று திருமணத்தையே நிராகரிக்கும் போக்கும் சிலரிடம் நிலவுகிறது.
வேலைக்கு போனதும் திருமணம் என்ற சமூக நியதி மெல்ல மெல்ல மாறி, சொந்தமாக ஒரு வாகனம், வீடு என்று வாங்கியதும் திருமணம் என்ற முடிவில் பலர் இருக்கிறார்கள். இதனால் வயதும் கூடிப்போகிறது. நிலைமை உயர உயர எதிர்பார்ப்புகள் எகிற ஆரம்பிக்கின்றன. இதனாலும் திருமணங்கள் தடைபடுகின்றன.
திருமணம் எனும் அமைப்பு மிகுந்த சிக்கலான விஷயமாக மாறி வருவது உண்மை. இதற்கு முக்கிய காரணம் திருமணம் என்பது இன்றைக்கு குடும்ப நிகழ்வாக இல்லாமல் தனி மனித ஏற்பாடாக மாறியதுதான் அதற்கு காரணம். திருமணம் என்றில்லை, எல்லா உறவுகளிலும் ஏமாற்றம் வருவதற்கு காரணம் எதிர்பார்ப்புகள் பொய்த்துப் போவதுதான்.
திருமணத்துக்கு தயாராதல் என்பது வீட்டை சரிசெய்து ஷோ செய்வது அல்ல. வரப்போகும் பந்தத்துக்காக தன்னை தயார்செய்துகொள்வது. மேலை நாடுகளில் இதற்கு கவுன்சலிங் போகிறார்கள்.
கையில் இருக்கும் 'ஆப்'பை தட்டினால் அரை மணி நேரத்தில் எதுவும் வீடு தேடி வரும் என்ற மனப்பான்மை இன்றைய 20 வயசுக்காரர்களை பெரிதும் பலவீனப்படுத்தி விட்டது. "பிடிக்கலையாம், அதான் பிரிஞ்சிட்டாங்களாம்" என்று ஒற்றை வரியில் திருமண முறிவுக்கு பதில் தருகிறார்கள்.
எனவே பொறுமையாக இருந்தால் சரியாகும் என்ற பழைய அறிவுரை போதாது. அடிப்படை மாற்றம் நிகழ வேண்டிய இடம் திருமணம் பற்றிய எண்ணங்கள், எதிர்பார்ப்புகளில்தான்.
அதேபோல் உங்கள் மேல் உங்கள் வாழ்க்கைத் துணை கொண்ட எதிர்பார்ப்புகள் என்னவாக இருக்கும் என யூகித்து பட்டியல் இடுங்கள். பட்டியலை பரிமாறிக்கொள்ளுங்கள். இது பிரச்சினையை தீர்க்காது. ஆனால், பிரச்சினை எங்கு இருந்து தொடங்கி இருக்கிறது? என்பதை புரிய வைக்கும்.
- திருமணம் நடந்த நாளிலிருந்து கணவன் மனைவி இடையே கருத்து வேறுபாடு இருந்துவந்தது.
- 1 லட்ச ரூபாய் பணம் கேட்டு சரண்யாவை அடித்து வீட்டை விட்டு வெளியேற்றினார்.
கடலூர்:
பண்ருட்டி அடுத்த பி.என்.பாளையத்தை சேர்ந்தவர் நடராஜன். இவரது மகள் சரண்யா (வயது 31). இவருக்கும் வடலூர் சேராகுப்பத்தைச் சேர்ந்த ராஜி மகன் பாலகுரு (38) என்பவருக்கும் கடந்த 21-ம்தேதி திருமணம் நடைபெற்றது. திருமணம் நடந்த நாளிலிருந்து கணவன் மனைவி இடையே கருத்து வேறுபாடு இருந்துவந்தது.
இதனால் பாலகுரு வரதட்சணையாக 20 பவுன் நகை 1 லட்ச ரூபாய் பணம் கேட்டு சரண்யாவை அடித்து வீட்டை விட்டு வெளியேற்றினார். பின்னர் சரண்யா பி.என்.பாளையத்தில் உள்ள தனது தாய் வீட்டிற்கு வந்தார். இதுகுறித்து சரண்யா கொடுத்த புகாரின் பேரில் பண்ருட்டி போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- பேச்சு வார்த்தையில் இரு தரப்பினரையும் அழைத்து சுமூக பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.
- முடிவு எடுப்பதற்காக 3 நாட்கள் கால அவகாசம் கோரியுள்ளார்கள்.
விழுப்புரம்:
விழுப்புரம் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் கோலியனூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட மேல்பாதி கிராமத்தில் உள்ள தர்மராஜா திரவுபதி அம்மன் கோவில் தொடர்பாக இரு தரப்பினரிடையே அமைதி பேச்சுவார்த்தை மாவட்ட கலெக்டர் பழனி தலைமையில் விழுப்புரம் தொகுதி எம்.பி. ரவிக்குமார், எம்.எல்.ஏ.க்கள்புகழேந்தி (விக்கிரவாண்டி) டாக்ட ர்லட்சுமணன்(விழுப்புரம்) சிவக்குமார்(மயிலம்) ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது. இது குறித்து மாவட்ட கலெக்டர் பழனி நிருபர்களிடம் கூறியதாவது:-
கோலியனூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட மேல்பாதி கிராமத்தில் உள்ள தர்மராஜா -திரவுபதி அம்மன் க்கவில் வழிபாடு தொடர்பாக இரு தரப்பினரிடையே கருத்து வேறுபாடு இருந்து வந்தது. எனவே, இது தொடர்பாக ஏற்கனவே இரண்டு கட்ட பேச்சுவார்த்தை வருவாய் கோட்டாட்சியர் தலைமையில் நடைபெற்றது. தற்போது மூன்றாம் கட்ட பேச்சு வார்த்தை நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் முன்னி லையில் நடைபெற்றது. பேச்சு வார்த்தையில் இரு தரப்பினரையும் அழைத்து சுமூக பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. இருதரப்பினரிடமும் கருத்து க்கள் கேட்கப்பட்டுள்ளது. இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் படி, பொது இடத்தினை பயன்படுத்திட அனைவருக்கும் உரிமை உண்டு, அதேப்போல் சமூக நீதி கடைப்பிடித்தும் வழிபாட்டு உரிமையை நிலைநாட்டுவதும் சட்ட விதிகளில் ஒன்றாகும்.
பொதுவான ஊர் சம்மந்தப்பட்ட பிரச்சனை என்பதால், இரு தரப்பினரும் தங்கள் பிரச்சனைகளை எவ்வாறு சுமூகமாக தீர்வு காணலாம் என அரசு வழிகாட்டுதலின் படி தெரிவிக்கப்பட்டுள்ளது. இரு தரப்பினரும் ஊர் பொதுமக்களிடம் கலந்து ஆலோசித்து சுமூக முடிவு எடுப்பதற்காக 3நாட்கள் கால அவகாசம் கோரியுள்ளார்கள். இப்பேச்சுவார்த்தையின் மூலம் சுமூக தீர்வு ஏற்படும் என்ற நம்பிக்கை உள்ளது. இவ்வாறு அவர் கூறினார். இக்கூட்டத்தில் மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர்.ஜெயசந்திரன், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு (பொறுப்பு) மோகன்ராஜ், திண்டிவனம் சப்-கலெக்டர் க ட்டா ரவி தேஜா, விழுப்பு ரம் வருவாய் கோட்டாட்சியர் ரவிச்ச ந்திரன், கூடுத ல்போலீஸ் சூப்பிரண்டு கோவிந்தராஜ், ஸ்ரீதரன், மாவட்ட கலெக்டரின் நே ர்முக உதவியாளர்(பொது) ஹரிதாஸ், விழுப்புரம் தாசில்தார்வேல்முருகன், மேல்பாதி கிராமபொதுமக்கள் உட்பட துறை சார்ந்த அலுவலர்கள் கலந்துகொண்டனர்.
- பண்ருட்டியில் திருமணமான 1 ஆண்டில் புதுமாப்பிள்ளை தற்கொலை செய்து கொண்டார்.
- கடந்த 6-ம் தேதி மேற்படி ராஜேஸ்வரி பூதம்பாடி தாய் வீட்டுக்கு சென்றுவிட்டார்.
கடலூர்:
பண்ருட்டி அருகே பேர்பெரியான் குப்பம் மருவன் தெரு வை சேர்ந்தவர்பாலசண்முகம். அவரது மகன் இளங்குமார் (34) என்பவர் பூதம்பாடியைச் சேர்ந்த ராஜேஸ்வரிஎன்பவரை திருமணம் செய்து ஓர் ஆண்டு ஆகிறது. குழந்தை இல்லை. இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு இருந்துள்ளது. கடந்த 6-ம் தேதி மேற்படி ராஜேஸ்வரி பூதம்பாடி தாய் வீட்டுக்கு சென்று விட்டார். இதனால் 7ம் தேதி நெய்வேலியில் நடை பெற்ற தங்கை மகள் மஞ்சள் நீராட்டு விழாவிற்கு செல்ல முடியாமல் மன உளைச்சலில் இருந்து வந்தார்.
இளங்குமார் நேற்று இரவு வீட்டில் தனியாக இருந்த போது ஃபேன் கொக்கியில் புடவையால் தூக்கு மாட்டி கொண்டு தற்கொலை செய் துகொண்டார் இதுபற்றி தாயார் இளவரசி முத்தாண்டி குப்பம் போலிசில் கொடுத்த புகாரின் பேரில் முத்தாண்டி குப்பம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று இது குறித்துவழக்கு பதிவு செய்து பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பண்ருட்டிஅரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்
- திருவெண்ணை நல்லூர் அருகே விஷம் குடித்து பெண் தற்கொலை செய்து கொண்டார்.
- சத்யராஜ். கேரளாவில் வேலை பார்த்து வருகிறார்.
விழுப்புரம்:
திருவெண்ணைநல்லூர் அருகே உள்ள பையூர் கிராமத்தை சேர்ந்தவர் சத்யராஜ். கேரளாவில் வேலை பார்த்து வருகிறார். அவரது மனைவி சுபா (வயது 32). இவர் தனது கணவருடன் ஏற்பட்ட கருத்துவேறுபாடு காரணமாக விஷம் குடித்து தற்கொலை செய்தார். இதுகுறித்து திருவெண்ணைநல்லூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பழனி விசாரணை நடத்தி வருகிறார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
