வீரவநல்லூரில் ராணுவத்தில் சேர முடியாத விரக்தியில் வாலிபர் தற்கொலை

வீரவநல்லூர் அருகே உள்ள புதுக்குடி நடுத்தெருவை சேர்ந்தவர் பிச்சையா கார்த்திகேயன். இவரது மகன் வேலு(வயது 23).வேலு மருத்துவ பரிசோதனை தேர்வில் மட்டும் தோல்வி அடைந்தார்.
வீரவநல்லூரில்  ராணுவத்தில் சேர முடியாத  விரக்தியில் வாலிபர் தற்கொலை
Published on

நெல்லை:

வீரவநல்லூர் அருகே உள்ள புதுக்குடி நடுத்தெருவை சேர்ந்தவர் பிச்சையா கார்த்திகேயன். இவரது மகன் வேலு(வயது 23).

இவர் ராணுவத்தில் சேருவதற்காக பயிற்சி எடுத்து வந்தார். சமீபத்தில் நடந்த ராணுவத்திற்கான உடல் தகுதி தேர்வில் அவர் பங்கேற்றார். அதில் தேர்ச்சி பெற்ற வேலு மருத்துவ பரிசோதனை தேர்வில் மட்டும் தோல்வி அடைந்தார்.

அதாவது கண் பார்வை திறன் தொடர்பான சோதனையில் அவருக்கு பார்வை குறைபாடு இருப்பதாக கூறிவிட்டனர். இதனால் அவருக்கு ராணுவத்தில் சேர முடியாமல் போய்விட்டது.

இதன் காரணமாக அவர் கடந்த சில நாட்களாக மிகுந்த வருத்தத்தில் யாரிடமும் பேசாமல் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று முன்திம் இரவு வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் வேலு விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

இதுதொடர்பாக வீரவநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com