search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Slaughter"

    அரூர் அருகே பிளஸ்-2 மாணவி கற்பழித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக கிராம மக்களுடன் கலெக்டர் மலர்விழி பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார். #DharmapuriGirlStudent #GirlMolested

    கம்பைநல்லூர்:

    தருமபுரி மாவட்டம் அரூரை அடுத்த கோட்டப்பட்டி அருகே உள்ள சிட்லிங் மலை கிராமத்தை சேர்ந்த மாணவி சவுமியா கற்பழித்து கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவத்தில் நடவடிக்கை எடுக்காத கோட்டப்பட்ட போலீசாரை கண்டித்து சிட்லிங் கிராமத்தில் இன்று 2-வது நாளாக மலைவாழ் மக்கள் மறியல் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.

    உண்ணாவிரதமும் இருந்து வருகிறார்கள். சிட்லிங் மட்டும் அல்லாமல் இதர மலை கிராமங்களை சேர்ந்த மக்களும் இந்த உண்ணாவிரதத்தில் கலந்து கொண்டுள்ளனர். 500க்கும் மேற்பட்ட மக்கள் திரண்டதால் அந்த கிராமத்தில் பதட்டம் நிலவுகிறது. போலீசார் மற்றும் அதிகாரிகளை உள்ளே விடாமல் கிராமத்துக்கு வரும் சாலையில் மரத்தை வெட்டி போட்டு இருந்தனர். மண்களையும் குவியலாக கொட்டி இருந்தனர்.

    இந்த நிலையில் கிராம மக்களுடன் பேச்சு நடத்த தருமபுரி கலெக்டர் மலர்விழி தருமபுரி மாவட்ட போலீஸ் சூப்பிரெண்டு பொறுப்பு வகிக்கும் கிருஷ்ணகிரி மாவட்ட போலீஸ் சூப்பிரெண்டு மகேஸ்குமார் ஆகியோர் அந்த கிராமத்துக்கு விரைந்தனர். அவர்கள் கிராம மக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்கள்.

    மாணவி சவுமியா இறந்த விவகாரத்தில் ஒருவாரமாகியும் எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல் மெத்தனமாக செயல்பட்ட கோட்டப்பட்டி இன்ஸ்பெக்டர் மற்றும் போலீசாரை சஸ்பெண்டு செய்ய வேண்டும். மாணவியின் குடும்பத்துக்கு ரூ 1 கோடி இழப்பீடு வழங்க வேண்டும். குடும்பத்தில் உள்ள அவரது சகோதரருக்கு அரசு வேலை வழங்க வேண்டும்.

    மாணவிக்கு சிகிச்சை அளித்த டாக்டரையும் பதவி நீக்கம் செய்ய வேண்டும். சிறப்பு மருத்துவ குழுவை அமைத்து மாணவியின் உடலை பிரேத பரிசோதனை செய்ய வேண்டும். அதுவும் தருமபுரி அரசு மருத்துவக்கல்லூரியில் பிரேத பரிசோதனை செய்யக்கூடாது. வேறு மருத்துவமனையில் தான் அந்த பிரேத பரிசோதனையை செய்ய வேண்டும். அதை வீடியோ எடுக்க வேண்டும். தலைமறைவு குற்றவாளிகளை கைது செய்ய உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர்கள் கூறினர். #DharmapuriGirlStudent #GirlMolested 

    ராஜீவ் கொலையாளிகளை விடுவிக்க எதிர்ப்பு தெரிவித்து புதுவை காந்தி சிலை முன்பு வாலிபர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். #RajivGandhiAssassination
    புதுச்சேரி:

    ராஜீவ்காந்தி கொலையாளிகளை விடுவிக்கக்கூடாது எனக்கூறி புதுவை கடற்கரையில் உள்ள காந்தி சிலை அருகே இன்று வாலிபர் ஒருவர் திடீர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.

    இதுபற்றி அறிந்ததும் போலீசார் விரைந்து சென்று அவரை அங்கிருந்து அப்புறப்படுத்தினார்கள். பெரியக்கடை போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரித்ததற்கு பிறகு அவரை விடுவித்தனர்.

    அந்த வாலிபர் புதுவை லாஸ்பேட்டையை சேர்ந்த ராஜ்குமார் (வயது 33) என்று தெரியவந்தது.



    ராஜீவ்காந்தி குண்டுவெடிப்பில் கொல்லப்பட்ட போது காஞ்சிபுரத்தை சேர்ந்த தர்மன் என்ற போலீஸ்காரர் உயிரிழந்தார். அவருடைய மகன்தான் ராஜ்குமார் என்றும் தெரிந்தது.

    போராட்டம் தொடர்பாக ராஜ்குமார் நிருபர்களிடம் கூறியதாவது:-

    நாங்கள் சென்னை தேனாம்பேட்டையை சேர்ந்தவர்கள். எனது தந்தை தர்மன் காஞ்சிபுரம் போலீஸ் நிலையத்தில் பணியாற்றி வந்தார். ராஜீவ்காந்தி பாதுகாப்பு பணிக்காக ஸ்ரீபெரும்புதூர் சென்றிருந்தார்.

    அப்போது அங்கு நடந்த குண்டுவெடிப்பில் அவர் உயிரிழந்துவிட்டார். எனது தாயார் பெயர் வேதவல்லி. எங்கள் பெற்றோருக்கு மலர்விழி, ராஜசேகர் மற்றும் நான் ஆகிய 3 குழந்தைகள்.

    எனது தந்தை இறக்கும்போது எனது தாயாருக்கு 32 வயது. எனது அக்காள் மலர்விழிக்கு 12 வயது, அண்ணன் ராஜசேகருக்கு 11 வயது. நான் 8 வயது சிறுவனாக இருந்தேன்.

    தந்தை திடீரென இறந்து விட்டதால் நாங்கள் சொல்ல முடியாத துயரங்களை சந்தித்தோம். மிகவும் கஷ்டப்பட்டோம். எங்கள் தாயாருக்கு படிப்பறிவு கிடையாது.

    கருணை அடிப்படையில் வேலை பெற வேண்டும் என்பது கூட தெரியாது. தந்தை இறந்து 5 ஆண்டுகளுக்கு பிறகு எனது தாயாருக்கு வேலை கொடுத்தார்கள். அதை வைத்து கஷ்டப்பட்டு வளர்ந்தோம்.

    தந்தை இல்லாத காரணத்தால் எங்களை சரியாக படிக்க வைக்கவில்லை. எனது அண்ணன் டிரைவராக இருக்கிறார். எனக்கும் சரியான வேலை இல்லை. 10 ஆண்டுகளுக்கு முன்பு புதுவை வந்த நான் இங்கு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறேன்.

    அன்று எனது தந்தை இறந்த காரணத்தால் இன்று வரை எங்கள் குடும்பம் கடும் கஷ்டத்தில் உள்ளது. இதேபோல 13 குடும்பங்கள் அன்றைய குண்டுவெடிப்பில் குடும்ப தலைவரை இழந்து கஷ்டப்பட்டு கொண்டு இருக்கின்றனர்.

    எனவே இதற்கு காரணமான கொலையாளிகளை விடுவிக்கக்கூடாது. அவர்கள் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டுள்ளது. முதலில் மரண தண்டனை வழங்கினார்கள். இப்போது ஆயுள் தண்டனை வழங்கி இருக்கிறார்கள்.

    அவர்களை மனிதாபிமான அடிப்படையில் விடுவிக்கக்கூடாது. அப்படியானால் அப்பாவியான எங்கள் தந்தை போன்றவர்கள் உயிரிழந்ததற்கு யார் பொறுப்பு ஏற்பது.

    இவ்வாறு அவர் கூறினார்.  #RajivGandhiAssassination


    திண்டுக்கல் ரவுடி கொலை வழக்கில் தொடர்புடைய 2 பேரை போலீசார் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திண்டுக்கல்:

    திண்டுக்கல் பொன்மாந்துறையை சேர்ந்தவர் ரவுடி பாஸ்கர் (வயது36). இவர் நேற்று முன்தினம் 5 பேர் கொண்ட கும்பலால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார்.

    இவர் மீது திண்டுக்கல் காந்திமார்க்கெட் பகுதியை சேர்ந்த ராம்கி என்ற ராமகிருஷ்ணன் என்பவரை கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்டு ஜாமீனில் வெளியே வந்த நிலையில் இந்த கொலை நடந்ததால் அதில் தொடர்புடையவர்களை போலீசார் தேடி வந்தனர்.

    போலீசார் விசாரணையில் பாஸ்கருக்கும், பொன்மாந்துறையை சேர்ந்த மாசானம் என்பவருக்கும் ஏற்பட்ட முன்விரோதம் காரணமாகவே இந்த கொலை நடந்தது தெரிய வந்தது.

    இதில் தொடர்புடையவர்களை போலீசார் தேடி வந்த நிலையில் சின்னபொன்மாந்துறையை சேர்ந்த சரவணன், சண்முகவேல், ஸ்ரீரங்கம் ஆகிய 3 பேர் கோவை கோர்ட்டில் சரண் அடைந்தனர்.

    அவர்களை கோவை மத்திய சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார்.

    இதனிடையே கொலையில் தொடர்புடைய மேலும் 2 பேரை திண்டுக்கல் தாலுகா போலீசார் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவத்தில் வேறு யாரேனும் சம்மந்தப்பட்டிருக்கிறார்களா? என்றும் வேறு யாரையேனும் கொலை செய்ய திட்டம் உள்ளதா? என்பது குறித்தும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    அரியானாவில் கோவிலுக்குள் 2 பேர் கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    சண்டிகர்:

    அரியானா மாநிலம் கர்ணால் மாவட்டத்தில் மாங்கலார் என்ற கிராமம் உள்ளது. இங்கு புகழ் பெற்ற கோவில் ஒன்று அமைந்துள்ளது.

    இந்த கோவிலில் பூசாரியாக வினோத் என்பவரும், அவருக்கு உதவியாக சுல்தான் என்பவரும் பணியாற்றி வந்தனர். மேலும், கர்ஜிந்தர், ரவீந்தர்சர்மா, அஜய்சர்மா ஆகியோர் ஊழியர்களாக இருந்தனர்.

    அவர்கள் இரவில் கோவிலிலேயே தங்கிக் கொள்வது வழக்கம்.

    சம்பவத்தன்று இரவு மர்ம நபர்கள் கோவிலுக்குள் நுழைந்தனர். அவர்கள் கோவிலில் இருந்த 5 பேரையும் கத்தி, அரிவாள் போன்ற ஆயுதங்களால் தாக்கினார்கள். இதில் வினோத், சுல்தான் ஆகியோர் இறந்துவிட்டனர்.

    மற்ற 3 பேருடைய நாக்குகளையும் துண்டித்தனர். பின்னர் கோவில் கதவை வெளிப்பக்கமாக பூட்டிவிட்டு சென்றுவிட்டனர்.

    மறுநாள் காலை குழந்தைகளும், ஒரு குடும்பத்தினரும் கோவிலுக்கு சென்றார்கள். அப்போது கோவில் வெளிப்பக்கமாக பூட்டி இருந்தது. உள்ளே இருந்து முனகல் சத்தம் கேட்டது.

    இதுபற்றி ஊர் மக்களுக்கு தகவல் தெரிவித்தனர். அவர்கள் விரைந்து வந்து பூட்டை உடைத்து உள்ளே சென்றனர். அங்கே 2 பேர் இறந்து கிடப்பதும், 3 பேர் நாக்கு அறுந்து உயிருக்கு போராடிக்கொண்டிருந்தது தெரியவந்தது. 3 பேரையும் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

    கோவிலில் இருந்த உண்டியல் உடைக்கப்பட்டு இருந்தது. எனவே கொள்ளையர்கள் பணத்தை திருடிவிட்டு அவர்களையும் தாக்கி இருக்கலாம் என்று கருதப்படுகிறது. இதுதொடர்பாக போலீசார் விசாரித்து வருகிறார்கள்.

    நாக்கு துண்டிக்கப்பட்டதால் 3 பேராலும் பேச முடியவில்லை. மேலும் அவர்களுக்கு அதிக அளவில் ரத்தம் வெளியேறி இருப்பதால் அபாய கட்டத்தில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். அவர்கள் குணமானதற்கு பிறகு தான் நடந்த சம்பவம் என்ன என்பது பற்றிய முழு விவரமும் தெரியவரும்.

    போளூர் அருகே குழந்தை கடத்தல் பீதியில் மூதாட்டி ருக்மணி அம்மாள் அடித்துக்கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக 3 பேரை போலீசார் குண்டர் சட்டத்தில் கைது செய்தனர்.
    திருவண்ணாமலை:

    மலேசியாவை சேர்ந்தவர்கள் மோகன்குமார், சந்திரசேகர். இவர்கள் கடந்த மாதம் சென்னைக்கு வந்தனர். மோகன்குமாரின் சித்தி ருக்மணி அம்மாள் (வயது 65), சென்னை பழைய பல்லாவரத்தில் வசித்து வந்தார்.

    சென்னைக்கு வந்த மோகன்குமார், சந்திரசேகர் ஆகியோர் திருவண்ணாமலை மாவட்டம் போளூர் அருகே ஜமுனாமரத்தூர் செல்லும் வழியில் உள்ள குல தெய்வ கோவிலுக்கு செல்ல முடிவு செய்தனர். அதன்படி கடந்த மாதம் 9-ந் தேதி அவர்களுடன் ருக்மணி அம்மாள், அவரது மகளின் கணவரான சென்னை பழைய பல்லாவரத்தை சேர்ந்த கஜேந்திரன், வெங்கடேசன் ஆகியோர் போளூருக்கு காரில் வந்தனர்.

    போளூரை அடுத்த தம்புகொட்டான்பாறை பகுதியில் காரை நிறுத்திய அவர்கள் அங்குள்ள ஒரு வீட்டின் வெளியே கைக்குழந்தைகளுடன் நின்றிருந்த பெண்ணிடம் முகவரி கேட்டனர். அப்போது அவர்கள் அங்கு விளையாடிய குழந்தைகளுக்கு சாக்லெட் கொடுத்ததாக தெரிகிறது.

    இதனால் சாக்லெட்டை கொடுத்து குழந்தைகளை கடத்த வந்திருக்கும் கும்பலை சேர்ந்தவர்களாக இருக்கலாமோ என கருதி அங்கிருந்த பொதுமக்கள் அவர்களை தாக்கினர். அங்கிருந்து தப்பிய அவர்கள் களியம் பகுதியில் வந்தபோது அவர்களின் காரை மடக்கி 5 பேரையும் சரமாரியாக தாக்கினர். இந்த சம்பவத்தில் ருக்மணி அம்மாள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் 4 பேர் படுகாயமடைந்தனர். இந்த சம்பவம் தமிழ்நாட்டில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

    இதையடுத்து 5 பேரை தாக்கியவர்களை போலீசார் கைது செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டனர். 40-க்கும் மேற்பட்டவர்கள் அதிரடியாக கைது செய்யப்பட்டனர். போலீசாரின் தேடுதல் வேட்டை தொடர்ந்தது.

    இதனால் அச்சமடைந்த களியம், தம்புகொட்டான்பாறை, ஜம்பங்கிபுரம், காமாட்சிபுரம், கணேசபுரம், அத்திமூர் உள்ளிட்ட சுற்றுவட்டார கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள் பலர் தங்களது கிராமத்தை விட்டு வெளியேறி தலைமறைவாகினர். சுமார் 1 மாதம் இந்த கிராமத்தில் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.

    தற்போது தான் வெளியூர்களுக்கு சென்ற கிராமத்தினர் பலர் தங்களது கிராமத்திற்கு மறுபடியும் வந்து விவசாய பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

    இந்த நிலையில் போலீசாரால் கைது செய்யப்பட்டவர்களில் 3 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்துள்ளது. 62 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டதில் 44 பேர் கைது செய்யப்பட்டு வேலூர் ஜெயிலில் அடைக்கப்பட்டனர்.

    அதில் தம்புகொட்டான்பாறையை சேர்ந்த முத்து மகன் சிவா (29), அத்திமூரை சேர்ந்த வெங்கடேசன் மகன் மணிகண்டன் (36), சாமிநாதன் மகன் பாபு (54) ஆகியோரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய வேண்டும் என்று கலெக்டருக்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பொன்னி பரிந்துரை செய்தார்.

    அதன் பேரில் 3 பேரையும் குண்டர்சட்டத்தில் கைது செய்ய கலெக்டர் உத்தரவிட்டார். இதனையடுத்து சிறையில் உள்ள 3 பேரிடமும் குண்டர்சட்டத்தில் கைது செய்ததற்கான நகலை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.

    ஆலிவலம் அருகே வி.ஏ.ஓ.வுக்கு கொலை மிரட்டல் விடுத்த வாலிபரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திருவாரூர்:

    திருவாரூர் அருகே ஆலிவலம் காவல் சரகம் செட்டியமூலை கிராம நிர்வாக அலுவலராக பணியாற்றி வருபவர் துர்கா (வயது 35). இவர் தனது எல்லைக்குட்பட்ட குளங்களில் நீர் நிலைகளை ஆராய நேற்று சென்றார். அப்போது அதே பகுதி எல்லையம்மன் கோவில் குளத்தில் ஆய்வு செய்துவிட்டு குளத்தை புகைப்படம் எடுக்க முயன்றார்.

    அப்போது குளத்தில் அதே ஊரை சேர்ந்த வீரமணி என்பவர் குளித்துக்கொண்டிருந்ததை கண்ட துர்கா அவரை கரையேறுமாறு கூறியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த வீரமணி துர்க்காவை திட்டி கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது.

    இதையடுத்து ஆலிவலம் போலீசில் துர்கா அரசு பணி செய்யவிடாமல் தடுத்து தகாத வார்த்தைகளால் திட்டியதாக புகார் கொடுத்தார். இதன் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் அன்னை அபிராமி வழக்குப்பதிவு செய்து வீரமணியை கைது செய்தார்.

    ×