search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Scooter"

    • ஹீரோ நிறுவனம் தனது ஜூம் ஸ்கூட்டரின் பெரிய வெர்ஷனை உருவாக்கி வருவதாக தெரிகிறது.
    • புதிய ஹீரோ ஸ்கூட்டர் முழு டிஜிட்டல் கன்சோல், ஸ்மார்ட்போன் கனெக்டிவிட்டி அம்சங்களை கொண்டுள்ளது.

    ஹீரோ நிறுவனத்தின் புதிய ஸ்கூட்டர் ஸ்பை படங்கள் வெளியாகி உள்ளது. ஹீரோ மோட்டோகார்ப் ஜெய்பூர் ஆய்வு மற்றும் வளர்ச்சி மையத்திற்கு அருகில் புதிய ஸ்கூட்டர் டெஸ்டிங் செய்யப்படுகிறது. ஸ்பை படங்களில் ஸ்கூட்டரின் பக்கவாட்டு மற்றும் முன்புற தோற்றம் எப்படி இருக்கும் என்று தெரியவந்துள்ளது.

    அதன்படி ஸ்கூட்டரில் கூர்மையான முன்புறம், பக்கவாட்டில் பட்ச் பாடிவொர்க் செய்யப்பட்டு உள்ளது. பக்கவாட்டு பேனலில் உள்ள கிரீஸ்கள் ஹீரோ ஜூம் மாடலில் உள்ளதை போன்றே காட்சியளிக்கிறது. முன்புற டிசைனும் ஜூம் மாடலில் உள்ளதை போன்று காட்சியளிக்கிறது.

     

    ஹீரோ நிறுவனம் தனது ஜூம் ஸ்கூட்டரின் பெரிய வெர்ஷனை உருவாக்கி வருவதாக தெரிகிறது. முன்னதாக இதுபற்றிய தகவல்கள் இணையத்தில் வெளியாகி இருந்தது. அந்த வகையில் டெஸ்டிங் செய்யப்படும் ஸ்கூட்டரும் 125சிசி மாடலாக இருக்கும் என்று தெரிகிறது. அந்த வகையில், இந்த மாடலில் 125சிசி சிங்கில் சிலின்டர் என்ஜின் வழங்கப்படுகிறது.

    இத்துடன் டெலிஸ்கோபிக் முன்புற ஃபோர்க்குகள், பின்புறம் மோனோஷாக் யூனிட், பிரேக்கிங்கிற்கு முன்புறம் டிஸ்க் யூனிட், முழுமையான டிஜிட்டல் கன்சோல் மற்றும் ஸ்மார்ட்போன் கனெக்டிவிட்டி போன்ற அம்சங்கள் வழங்கப்படுகிறது.

    Photo Courtesy: Rushlane

    • வீடியோ ஜம்மு-காஷ்மீரில் எடுக்கப்பட்டதாகவும், அங்கு வீசிய சூறைகாற்றில் ஸ்கூட்டர் மின் கம்பிகளுக்குள் சிக்கிக் கொண்டதாகவும் கூறப்படுகிறது.
    • பயனர்கள் பலரும் வீடியோ தொடர்பான சந்தேகங்களை எழுப்பி வருகின்றனர்.

    சமூக வலைதளங்களில் பரவும் ஒரு வீடியோவில், கடையை ஒட்டிய உயர்அழுத்த மின் கம்பிகளுக்குள் ஸ்கூட்டர் ஒன்று சிக்கியிருப்பதை காண முடிகிறது. அந்த ஸ்கூட்டர் எப்படி அவ்வளவு உயர மின் கம்பிகளுக்குள் புகுந்தது என்பது குழப்பத்தை ஏற்படுத்தி உள்ள நிலையில், அதனை பார்த்த பயனர்கள் பலரும் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.

    இந்த வீடியோ ஜம்மு-காஷ்மீரில் எடுக்கப்பட்டதாகவும், அங்கு வீசிய சூறைகாற்றில் ஸ்கூட்டர் மின் கம்பிகளுக்குள் சிக்கிக் கொண்டதாகவும் கூறப்படுகிறது. ஆனாலும் பயனர்கள் பலரும் இது தொடர்பான சந்தேகங்களை எழுப்பி வருகின்றனர். அதில் ஒருவர், இது எலக்ட்ரிக் ஸ்கூட்டராக இருக்கலாம், நேரடியாக சார்ஜ் செய்வதற்காக நிறுத்தப்பட்டிருக்கலாம் என நகைச்சுவையாக பதிவிட்டுள்ளார்.

    • 45 மாற்றுத்திறனாளிகளுக்கு பிரத்யேக ஸ்கூட்டர்கள் வழங்கப்பட்டது.
    • சுயதொழில் தொடங்குவதற்கும் தேவையான தொழிற் பயிற்சி, வங்கிக் கடனுதவி வழங்கப்பட்டு வருகிறது.

    சிவகங்கை

    சிவகங்கை கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் உள்ள மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தில் நலத் திட்ட உதவிகள் வழங்கம் விழா நடந்தது. கலெக்டர் ஆஷா அஜீத் தலைமை தாங்கினார். அமைச்சர் பெரியகருப்பன் கலந்து கொண்டு ரூ38.24 லட்சம் மதிப்பிலான இணைப்பு சக்கரங்கள் பொருத்தப்பட்ட பிரத்யேக ஸ்கூட்டர்களை 45 மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கினார்.

    அப்போது அவர் பேசியதாவது:-

    முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மாற்றுத்திறனாளிகளின் நலனை கருத்தில் கொண்டு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். மாற்றுத் திறனாளிகள் உயர்கல்வி வரை படிப்பதற்கும், சுயதொழில் தொடங்குவதற்கும் தேவை யான தொழிற் பயிற்சி, வங்கிக் கடனுதவி வழங்கப் பட்டு வருகிறது.

    கடுமையாக பாதிக்கப் பட்ட மாற்றுத்திறனாளி களுக்கான மருத்துவச் சிகிச்சை திட்டம், பராமரிப்பு நிதியுதவி திட்டம், மாற்றுத் திறனாளிகளுக்கான மாதாந்திர ஓய்வூதியத் திட்டம் போன்ற எண்ணற்ற திட்டங்களால் மாற்றுத்திற னாளிகளை பயன்பெற செய்யும் வகையில் தமிழ கத்தில் பல்வேறு சிறப்பான திட்டங்கள் மாற்றுத் திறனா ளிகளுக்கெனவே செயல் படுத்தப்பட்டு வருகிறது.

    2022-23-ம் நிதி யாண்டில் சிவகங்கை மாவட்டத்தில் 5,553 மாற்றுத்்திறானளிகளுக்கு ரூ13.58கோடி மதிப்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு உள்ளது.

    இவ்வாறு அவர் பேசி னார்.

    இந்நிகழ்ச்சியில் திருப்பு வனம் பேரூராட்சி தலைவர் சேங்கைமாறன், ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர்கள் மஞ்சுளா பாலசந்தர் (சிவகங்கை), லதா அண்ணாத் துரை (மானாமதுரை), சிவ கங்கை நகர்மன்ற தலைவர் துரைஆனந்த், உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • ஹோண்டா சர்வீஸ் சென்டரில் புதிய எக்ஸ்டென்டட் வாரண்டி பிளஸ் சேவையை பெற்றுக் கொள்ளலாம்.
    • புதிய திட்டத்தின் விலை 250சிசி வரையிலான மாடல்களுக்கு ரூ. 1667 என்றும் நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.

    ஹோண்டா மோட்டார்சைக்கிள் மற்றும் ஸ்கூட்டர் நிறுவனம் தனது இருசக்கர வாகனங்களுக்கு நீட்டிக்கப்பட்ட வாரண்டி அறிவித்து இருக்கிறது. புதிய திட்டத்தின் மூலம் வாடிக்கையாளர்கள் எக்ஸ்டென்டட் வாரண்டியை வாகனங்கள் வயதுக்கு ஏற்ப மூன்று ஆப்ஷன்களின் கீழ் தேர்வு செய்திட முடியும்.

    அந்த வகையில் எட்டு ஆண்டுகள் பழைய வாகனத்திற்கு இரண்டு ஆண்டுகள் திட்டமும், ஒன்பதாவது ஆண்டு பழைய வாகனங்களுக்கு ஒரு ஆண்டிற்கான திட்டமும் வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தில் முக்கிய என்ஜின் உபகரணங்கள், இதர மெக்கானிக்கல் மற்றும் எலெக்ட்ரிக்கல் பாகங்களுக்கு காப்பீடு வழங்கப்படுகிறது.

    எக்ஸ்டென்டட் வாரண்டி திட்டத்தின் மற்றொரு குறிப்பிடத்தக்க பயன், டிரான்ஸ்ஃபர் செய்வது தான். இந்த திட்டத்தின் கீழ் வாரண்டியை தேர்வு செய்தபிறகு, வாகனத்தை விற்க நேரிட்டால், வாரண்டியையும் புதிய ஓனருக்கு மாற்றிக்கொடுக்க முடியும். இந்த வாரண்டி நீட்டிப்பு திட்டம் ஸ்கூட்டர் மற்றும் மோட்டார்சைக்கிள் மாடல்களுக்கு வழங்கப்படுகிறது.

    ஸ்கூட்டர்கள் அதிகபட்சம் 1.2 லட்சம் கிலோமீட்டர்களும், மோட்டார்சைக்கிள்கள் 1.3 லட்சம் கிலோமீட்டர்கள் வரையிலும் வாரண்டி நீட்டிப்பு திட்டத்தின் கீழ் பயன்பெற முடியும். அதிகாரப்பூர்வ ஹோண்டா சர்வீஸ் சென்டரில் புதிய எக்ஸ்டென்டட் வாரண்டி பிளஸ் சேவையை பெற்றுக் கொள்ளலாம்.

    இந்த எக்ஸ்டென்டட் வாரண்டி திட்டத்தின் விலை 150சிசி வரையிலான மாடல்களுக்கு ரூ. 1317 என்றும் 150சிசி முதல் 250சிசி வரையிலான மாடல்களுக்கு ரூ. 1667 என்றும் நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. வாகனம் வாங்கிய ஆண்டு, விலை மற்றும் பல்வேறு விவரங்கள் அடிப்படையில், விலை வேறுபடும் என்று அறிவிக்கப்பட்டு இருக்கிறது. 

    • ஹோண்டா டியோ மாடல்- ஸ்டாண்டர்டு மற்றும் டீலக்ஸ் என இரண்டு வேரியண்ட்களில் கிடைக்கிறது.
    • டியோ புது வெர்ஷனில் கீலெஸ் இக்னிஷன் மற்றும் அலாய் வீல்கள் உள்ளன.

    ஹோண்டா நிறுவனத்தின் பிரபல டியோ ஸ்கூட்டரின் முற்றிலும் புதிய வெர்ஷன் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. புதிய வெர்ஷன் ஹோண்டா டியோ H ஸ்மார்ட் என்று அழைக்கப்படுகிறது. இதன் விலை ரூ. 77 ஆயிரத்து 712, எக்ஸ்-ஷோரூம் என்று நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.

    புதிய டியோ வெர்ஷனில் H ஸ்மார்ட் அப்கிரேடுகள் செய்யப்பட்டு இருப்பதாக ஹோண்டா மோட்டார்சைக்கிள் மற்றும் ஸ்கூட்டர் இந்தியா அதிகாரப்பூர்வ வலைதளத்தில் பதிவிடப்பட்டு இருக்கிறது. அதன்படி டியோ ஸ்கூட்டரின் புது வெர்ஷனில் கீலெஸ் இக்னிஷன் மற்றும் அலாய் வீல்கள் வழங்கப்பட்டு உள்ளன. முன்னதாக இதே ஆப்ஷன்கள் ஹோண்டா ஆக்டிவா மற்றும் ஆக்டிவா 125 மாடல்களில் வழங்கப்பட்டு இருந்தது.

    ஹோண்டா டியோ H ஸ்மார்ட் வெர்ஷனின் விலை அதன் OBD 2 அப்டேட் செய்யப்பட்ட மாடலை விட ரூ. 3 ஆயிரத்து 500 வரை அதிகம் ஆகும். இந்திய சந்தையில் ஹோண்டா டியோ OBD 2 வெர்ஷனும் சமீபத்தில் தான் அறிமுகம் செய்யப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.

    புதிய ஹோண்டா டியோ மாடல்- ஸ்டாண்டர்டு மற்றும் டீலக்ஸ் என இரண்டு வேரியண்ட்களில் கிடைக்கிறது. இதில் ஸ்டாண்டர்டு மாடல் சற்றே குறைந்த விலை கொண்டிருக்கிறது. இதில் ஹாலோஜன் பல்பு கொண்ட ஹெட்லைட், அனலாக் இன்ஸ்ட்ரூமெண்ட் கிளஸ்டர் மற்றும் பிளாக்டு-அவுட் வீல் வழங்கப்பட்டு இருக்கிறது.

    டீலக்ஸ் வேரியண்டில் எல்.இ.டி. ஹெட்லைட், டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர், வெளிப்புறம் ஃபியூவல் ஃபில்லர் கேப், தங்க நிறம் கொண்ட அலாய் வீல்கள், 3-ஸ்டெப் இகோ இன்டிகேட்டர் போன்ற அம்சங்கள் உள்ளன. புதிய மாற்றங்கள் காரணமாக ஹோண்டா டியோ விற்பனை மெட்ரோ மற்றும் கிராம புறங்களில் அதிகரிக்கும் என்று நம்பப்படுகிறது.

    • இந்தியாவில் தற்போது ஹோண்டா டியோ மாடல் இரண்டு வேரியண்ட்களில் கிடைக்கிறது.
    • புதிய டியோ H ஸ்மார்ட் வேரியண்டில் அதிக அம்சங்கள் வழங்கப்படுகிறது.

    ஹோண்டா நிறுவனம் இந்திய சந்தையில் தனது டியோ ஸ்கூட்டரின் புதிய வேரியண்டை அறிமுகம் செய்ய இருக்கிறது. புதிய வேரியண்ட் டியோ H-ஸ்மார்ட் எனும் பெயரில் விற்பனைக்கு வரும் என்று கூறப்படுகிறது.

    புதிய மாடல் அறிமுகமாகும் பட்சத்தில்- ஆக்டிவா, ஆக்டிவா 125 H ஸ்மார்ட் ஸ்கூட்டர்கள் வரிசையில், ஹோண்டா அறிமுகம் செய்யும் மூன்றாவது மாடலாக இது இருக்கும். டியோ H ஸ்மார்ட் வேரியண்டில் அதிக அம்சங்கள் வழங்கப்பட இருக்கிறது. இதில் கீலெஸ் வசதி மற்றும் அலாய் வீல்கள் வழங்கப்படுகின்றன.

    இத்துடன் புதிய வேரியண்டில் ஸ்மார்ட்ஃபைண்ட் அம்சம் வழங்கப்படுகிறது. இந்த அம்சம் பட்டனை க்ளிக் செய்ததும் ஸ்கூட்டரின் இண்டிகேட்டர்களை ஃபிலாஷ் செய்யும். இத்துடன் ஸ்மார்ட்ஸ்டார்ட் அம்சம் வழங்கப்படுகிறது. இத்துடன் ஸ்மார்ட்அன்லாக் அம்சம் மூலம் பயனர்கள் ஹேண்டில்பார், ஃபியூவல் ஃபில்லர் கேப் மற்றும் அண்டர்சீட் ஸ்டோரேஜ் உள்ளிட்டவைகளை அன்லாக் செய்யும்.

    ஹோண்டா டியோ H ஸ்மார்ட் மாடலில் ஸ்மார்ட்சேஃப் (Smartsafe) எனும் அம்சமும் வழங்கப்படுகிறது. இது ஸ்கூட்டரை லாக் செய்து, அதன் பாதுகாப்பை உறுதிப்படுத்துகிறது. இவைதவிர டியோ ஸ்கூட்டரில் வேறு எந்த மாற்றமும் மேற்கொள்ளப்படவில்லை. அதன்படி இந்த மாடலில் 109சிசி, சிங்கில் சிலிண்டர் எஞ்சின் வழங்கப்படுகிறது. இது 7.8 ஹெச்பி பவர், 9 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது.

    விலையை பொருத்தவரை இந்த ஸ்கூட்டர் அதன் ஸ்டாண்டர்டு மற்றும் DLX வேரியண்ட்களை விட அதிகமாகவே நிர்ணயம் செய்யப்படும். இந்திய சந்தையில் ஹோண்டா டியோ ஸ்டாடண்டர்டு மாடல் விலை ரூ. 68 ஆயிரத்து 625 என்றும் டியோ DLX வேரியண்ட் விலை ரூ. 72 ஆயிரத்து 626 என்றும் நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.

    • ஸ்கூட்டரில் இருந்து தவறிவிழுந்து பெண் பலியானார்.
    • சப்-இன்ஸ்பெக்டர் பிரகாஷ் ஆகியோர் வழக்குப்பதிவு செய்தி விசாரணை நடத்தி வருகின்றனர்.

    பசும்பொன்

    ராமநாதபுரம் மாவட்டம் கமுதி தாலூகா மேட்டுப்பட்டியை சேர்ந்தவர் சோலைராஜ். இவரது மனைவி ராமலெட்சுமி (40). இவர் தனது மகன் இளைய பாரதியுடன் இருசக்கர வாகனத்தில் கமுதி சென்றார். வாகனத்தை இளையபாரதி வேகமாக ஓட்டிச் சென்றதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் சிங்கபுளியபட்டி அருகே சென்ற போது இரு சக்கர வாகனத்திலிருந்து ராமலெட்சுமி தவறி கீழே விழுந்தார். இதில் அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு கமுதி அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பிவைத்தனர். அங்கு டாக்டர்கள் பரிசோதித்த போது ராமலெட்சுமி ஏற்கனவே இறந்துவிட்டது தெரியவந்தது. இதுகுறித்து ராமலெட்சுமியின் மூத்த மகன் ஆனந்த்பிரபு கமுதி போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் அப்துல் வஹா, சப்-இன்ஸ்பெக்டர் பிரகாஷ் ஆகியோர் வழக்குப்பதிவு செய்தி விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • பியாஜியோ நிறுவனத்தின் புதிய வெஸ்பா ஸ்கூட்டர் இரண்டு வேரியண்ட்களில் கிடைக்கிறது.
    • இந்திய சந்தையில் வெஸ்பா டூயல் VXL 125 மாடலின் விலை ரூ. 1 லட்சத்து 32 ஆயிரம் என்று துவங்குகிறது.

    பியாஜியோ நிறுவனத்தின் புதிய வெஸ்பா டூயல் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. புதிய வெஸ்பா டூயல் மாடலின் விலை ரூ. 1 லட்சத்து 32 ஆயிரம் என்று துவங்குகிறது. புதிய டூயல் வேரியண்ட் 125சிசி மற்றும் 150சிசி என்று இருவித என்ஜின் ஆப்ஷன்களில் கிடைக்கிறது. இரு என்ஜின்களும் OBD 2 விதிகளுக்கு ஏற்ப அப்டேட் செய்யப்பட்டு உள்ளது.

    இளம் வாடிக்கையாளர்களை கவரும் வகையில் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கும் வெஸ்பா டூயல் ஸ்கூட்டர் விசேஷமாக டூயல் டோன் லிவெரி மற்றும் அழகிய ஃபூட்போர்டு கொண்டிருக்கிறது. புதிய டூயல் டோன் நிறங்கள் வழக்கமான மோனோக்ரோம் ஸ்கூட்டர்களை விட வித்தியாசமாக காட்சியளிக்கிறது.

     

    இதன் VXL ரேஞ்ச் வட்ட வடிவம் கொண்ட ஹெட்லைட், ரியர் வியூ மிரர்கள் வழங்கப்பட்டு உள்ளன. இதன் SXL வேரியண்ட் செவ்வக வடிவம் கொண்ட ஹெட்லைட் மற்றும் ரியர் வியூ மிரர்கள் உள்ளன. புதிய வெஸ்பா டூயல் மாடல் நாடு முழுக்க 250-க்கும் அதிக பிரத்யேக விற்பனை மையங்களில் விற்பனைக்கு வருகிறது.

    விலையை பொருத்தவரை வெஸ்பா டூயல் VXL 125 மாடலின் விலை ரூ. 1 லட்சத்து 32 ஆயிரம் என்று துவங்கி டாப் எண்ட் வெஸ்பா டூயல் SXL 150 மாடல் விலை ரூ. 1 லட்சத்து 49 ஆயிரம் என்று நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. அனைத்து விலைகளும் எக்ஸ்-ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டு உள்ளது.

    • வாலிபர் ஒருவர் ஸ்கூட்டரில் முன் பக்கம் வாளியில் தண்ணீர் வைத்து, குளித்துக் கொண்டே ஓட்டினார்.
    • பொது இடங்களில் அச்சுறுத்தும் வகையில் செயல்படக் கூடாது என போலீசார் எச்சரிக்கை செய்து அனுப்பி வைத்தனர்.

    தஞ்சாவூர்:

    தஞ்சாவூரில் கடந்த ஒரு வாரமாகவே வெயிலின் உக்ரம் அதிக அளவில் காணப்படுகிறது.

    இந்நிலையில் தஞ்சாவூர் பழைய பஸ் நிலையம் , பெரியகோவில் பகுதியில் கடும் வெயிலின் தாக்கத்தை உணர்த்தும் விதமாக வாலிபர் ஒருவர் ஸ்கூட்டரில் முன் பக்கம் வாளியில் தண்ணீர் வைத்து, குளித்துக் கொண்டே ஓட்டினார். இதை மற்றொரு வாலிபர் செல்போன் மூலம் வீடியோ பதிவு செய்தார்.

    இந்த வீடியோ காட்சிகள் வாட்ஸ் அப், பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளத்தில் வேகமாகப் பரவியது. இந்நிலையில், ஆபத்தை விளைவிக்கும் விதமாக வாகனத்தை ஓட்டியதாக, இருவர் குறித்து மேற்கு தஞ்சை போலீஸ் நிலையத்தினர், போக்குவரத்து ஒழுங்கு பிரிவினர் விசாரணை நடத்தினர்.

    இதில், வாகனத்தை ஓட்டியவர் தஞ்சை கீழவாசல் குறிச்சி வடக்கு தெருவைச் சேர்ந்த அருணாசலம் (வயது 23), இதை வீடியோ எடுத்தவர் குறிச்சி தெற்கு தெருவைச் சேர்ந்த பிரசன்னா (24) என்பது தெரியவந்தது.

    இதையடுத்து, அருணாசலம், பிரசன்னாவுக்கு தலா ரூ. 2 ஆயிரம் வீதம் மொத்தம் ரூ. 4 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. மேலும், இருவரையும் இதுபோன்று பொது இடங்களில் அச்சுறுத்தும் வகையில் செயல்படக் கூடாது என போலீசார் எச்சரிக்கை செய்து அனுப்பி வைத்தனர். 

    • டிவிஎஸ் மோட்டார் நிறுவனம் 2018 ஆண்டு என்டார்க் ஸ்கூட்டரை இந்தியாவில் அறிமுகம் செய்தது.
    • அறிமுகம் செய்யப்பட்டதில் இருந்து பிரபலமாக இருந்துவரும் என்டார்க் மாடல் விற்பனையில் தொடர்ந்து அசத்தி வருகிறது.

    டிவிஎஸ் என்டார்க் ஸ்கூட்டர் இந்திய சந்தை விற்பனையில் 1.45 மில்லியன் யூனிட்களை கடந்துள்ளது. கடந்த 2018 பிப்ரவரி மாதம் அறிமுகம் செய்யப்பட்ட டிவிஎஸ் என்டார்க் விற்பனையில் 1 மில்லியன் யூனிட்களை 2022 ஏப்ரல் மாதம் எட்டியது. மார்ச் 2023 இறுதி வரை என்டார்க் மொத்த விற்பனை 12 லட்சத்து 89 ஆயிரத்து 171 யூனிட்களாக இருந்தது. 2019 நிதியாண்டில் மட்டும் 1 லட்சத்து 65 ஆயிரத்து 947 யூனிட்கள் ஏற்றுமதி செய்யப்பட்டு இருந்தது.

    2023 நிதியாண்டில் டிவிஎஸ் என்டார்க் ஒட்டுமொத்த விற்பனை 2 லட்சத்து 90 ஆயிரத்து 539 யூனிட்கள் ஆகும். இதன் மூலம் வருடாந்திர விற்பனையில் 16.55 சதவீதம் வளர்ச்சியை பதிவு செய்துள்ளது. ஒரே ஆண்டில் டிவிஎஸ் நிறுவனம் இத்தனை யூனிட்கள் விற்பனை செய்தது இதுவே முதல் முறை ஆகும். இந்திய சந்தையில் அதிகம் விற்பனையாகும் ஸ்கூட்டர்கள் பட்டியலில் என்டார்க் மாடல் நான்காவது இடத்தில் உள்ளது.

     

    முதல் மூன்று இடங்களில் ஆக்டிவா, டிவிஎஸ் ஜூப்பிட்டர் மற்றும் சுசுகி அக்சஸ் போன்ற மாடல்கள் உள்ளன. அறிமுகம் செய்யப்பட்டதில் இருந்தே டிவிஎஸ் என்டார்க் மாடல் பிரபலமாக இருந்து வருகிறது. அறிமுகம் செய்யப்பட்ட இரண்டே மாதங்களில் என்டார்க் மாடல் 19 ஆயிரத்து 809 யூனிட்கள் விற்பனையாகி இருந்தது. இதே ஆண்டின் இறுதியில் டிவிஎஸ் நிறுவனம் 2 லட்சத்து 13 ஆயிரத்து 039 யூனிட்களை விற்பனை செய்து இருந்தது.

    பின் 2020 ஆண்டு 2 லட்சத்து 65 ஆயிரத்து 016 யூனிட்கள் விற்பனையானது. இது வருடாந்திர அடிப்படையில் 24 சதவீதம் அதிகம் ஆகும். 2021 நிதியாண்டில் கொரோனா ஊரடங்கு மற்றும் கட்டுப்பாடுகள் அமலில் இருந்த நிலையிலும் என்டார்க் மாடல் 2 லட்சத்து 51 ஆயிரத்து 491 யூனிட்களை விற்பனை செய்திருந்தது. 2022 நிதியாண்டில் 2 லட்சத்து 49 ஆயிரத்து 277 யூனிட்கள் விற்பனையாகி இருந்தது. இந்த வரிசையில் 2023 நிதியாண்டில் 2 லட்சத்து 90 ஆயிரத்து 539 யூனிட்கள் விற்பனையாகி இருக்கிறது.

    டி.வி.எஸ். மோட்டார் கம்பெனி நிறுவனத்தின் இருசக்கர வாகனங்கள் விற்பனை 85 சதவீதம் அதிகரிப்பு. சமீபத்தில் டி.வி.எஸ். நிறுவனம் புதிய ஐகியூப் இ ஸ்கூட்டரை அறிமுகம் செய்தது.

    டி.வி.எஸ். மோட்டார் கம்பெனி நிறுவனம் மே மாத விற்பனையில் கணிசமான வளர்ச்சியை பதிவு செய்து இருக்கிறது. இந்திய சந்தையில் கடந்த மாதத்தில் மட்டும் டி.வி.எஸ். மோட்டார் கம்பெனி நிறுவனம் 2 லட்சத்து 87 ஆயிரம் மோட்டார்சைக்கிள் மற்றும் ஸ்கூட்டர்களை விற்பனை செய்து இருப்பதாக அறிவித்து உள்ளது. 

    கடந்த ஆண்டு மே மாதத்தில் மட்டும் டி.வி.எஸ். மோட்டார் கம்பெனி நிறுவனம் 1 லட்சத்து 54 ஆயிரம் இருசக்கர வாகனங்களை விற்பனை செய்து இருந்தது குறிப்பிடத்தக்கது. இதன் மூலம் டி.வி.எஸ். மோட்டார் கம்பெனி நிறுவனம் விற்பனையில் 85 சதவீதம் வளர்ச்சியை பதிவு செய்து இருக்கிறது. 

    டி.வி.எஸ். நிறுவனத்தின் மொத்த விற்பனையில் 1 லட்சத்து 91 ஆயிரம் மோட்டார்சைக்கிள் மற்றும் ஸ்கூட்டர்கள் இந்தியாவில் மட்டும் விற்பனை செய்யப்பட்டு உள்ளன. கடந்த ஆண்டு மே மாதத்தில் டி.வி.எஸ். நிறுவனம் 52 ஆயிரத்து 084 இருசக்கர வாகனங்களை விற்பனை செய்து இருந்தது குறிப்பிடத்தக்கது. 

     டி.வி.எஸ். ஐகியூப்

    உள்நாட்டு விற்பனையில் அமோக வளர்ச்சி ஏற்பட்ட நிலையில் ஏற்றுமதியில் சரிவை சந்தித்து இருக்கிறது. கடந்த ஆண்டு மே மாதத்தில் டி.வி.எஸ். நிறுவனம் 1 லட்சத்து 02 ஆயிரம் யூனிட்களை ஏற்றுமதி செய்திருந்த நிலையில், கடந்த மாதம் 95 ஆயிரத்து 576 யூனிட்கள் மட்டுமே ஏற்றுமதி செய்யப்பட்டன. 

    டி.வி.எஸ். மோட்டார்சைக்கிள் விற்பனை கடந்த ஆண்டு மே மாதத்துடன் ஒப்பிடும் போது 18.6 சதவீதம் வளர்ச்சி அடைந்துள்ளது. டி.வி.எஸ். ஸ்கூட்டர்களை பொருத்தவரை கடந்த ஆண்டு மே மாதம் 19 ஆயிரத்து 627 யூனிட்கள் விற்பனை செய்யப்பட்ட நிலையில், கடந்த மாதம் ஒரு லட்சம் யூனிட்கள் விற்பனையாகி உள்ளன. 

    கீவே நிறுவனம் இந்திய சந்தையில் புதிய சிக்ஸ்டீஸ் 300i ஸ்கூட்டர் மாடலை அறிமுகம் செய்தது. இதில் எல்.இ.டி. லைட்டிங் எல்.சி.டி. ஸ்கிரீன் வழங்கப்பட்டு இருக்கிறது.


    இந்திய இருசக்கர வாகனங்கள் சந்தையில் புதுவரவு நிறுவனம் கீவே புதிதாக சிக்ஸ்டீஸ் 300i பெயரில் ஸ்கூட்டர் மாடலை அறிமுகம் செய்து இருக்கிறது. புதிய கீவே சிக்ஸ்டீஸ் 300i மாடலின் விலை ரூ. 2 லட்சத்து 99 ஆயிரம், எக்ஸ்-ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இது இந்திய சந்தையில் கிடைக்கும் சக்திவாய்ந்த ஸ்கூட்டர் ஆகும். 

    புதிய கீவே சிக்ஸ்டீஸ் 300i மாடல் அதிநவீன-ரெட்ரோ பாடி வொர்க் கொண்டிருக்கிறது. இதில் பயன்படுத்தப்பட்டு இருக்கும் பாகங்கள் வளைந்த நிலையில் வடிவமைக்கப்பட்டு உள்ளது. இத்துடன் எல்.இ.டி. லைட்டிங் மற்றும் எல்.சி.டி. போன்ற அம்சங்கள் உள்ளன. இந்த ஸ்கூட்டரில் 278.2சிசி சிங்கில் சிலிண்டர் லிக்விட் கூல்டு மோட்டார் வழங்கப்பட்டு இருக்கிறது.

     கீவே சிக்ஸ்டீஸ் 300i

    இந்த என்ஜின் 18.7 பி.ஹெச்.பி. பவர், 22 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. இதே என்ஜின் விஸ்டி 300 மேக்சி ஸ்கூட்டரிலும் வழங்கப்பட்டு உள்ளது. சஸ்பென்ஷனிற்கு கீவே சிக்ஸ்டீஸ் 300i மாடலில் டெலிஸ்கோபிக் போர்க், டூயல் ரியர் ஸ்ப்ரிங் வழங்கப்பட்டுள்ளது. பிரேக்கிங்கிற்கு முன்புறம் 230mm ஒற்றை டிஸ்க் பிரேக், பின்புறம் 220mm டிஸ்க் பிரேக் உள்ளது.

    புதிய கீவே சிக்ஸ்டீஸ் 300i ஸ்கூட்டருக்கான முன்பதிவு ஏற்கனவே துவங்கி நடைபெற்று வருகிறது. முன்பதிவு பெனலி விற்பனை மையங்களில் நடைபெறுகிறது. வினியோகம் அடுத்த மாதம் துவங்குகிறது.  
    ×