search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Piaggio"

    • பியாஜியோ 1 பிளஸ் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் காட்சிக்கு வைக்கப்பட்டது.
    • இந்த ஸ்கூட்டர் நார்மல் மற்றும் பாஸ்ட் சார்ஜிங் ஆப்ஷன்களை கொண்டிருக்கிறது.

    இத்தாலியை சேர்ந்த ஸ்கூட்டர் உற்பத்தியாளர் பியாஜியோ-வின் வெஸ்பா ஸ்கூட்டர் அதிக பிரபலமான மாடல் ஆகும். பியாஜியோ நிறுவனத்தின் பியாஜியோ 1 பிளஸ் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது. இது பயனர்கள் அன்றாட பயன்பாடுக்கு, சுற்றுச்சூழலுக்கு உகந்த ஆப்ஷனாக அமைகிறது.

    பியாஜியோ 1 பிளஸ் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் இத்தாலியின் மிலனில் நடைபெற்ற 2022 EICMA நிகழ்வில் பியாஜியோ 1 மாடலுடன் காட்சிக்கு வைக்கப்பட்டது. பியாஜியோ 1 பிளஸ் மாடலில் கழற்றக்கூடிய 2.3 கிலோவாட்ஹவர் லித்தியம் அயன் பேட்டரி பேக் உள்ளது. இது நீண்ட கால பயன்பாட்டிற்கு ஏற்றதாகும்.

     

    பியாஜியோ 1 பிளஸ் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் முழு சார்ஜ் செய்தால் 100 கிலோமீட்டர்கள் வரை செல்லும் திறன் கொண்டிருக்கிறது. இந்த ஸ்கூட்டரில் 1700 வாட் பி.எல்.டி.சி. எலெக்ட்ரிக் மோட்டார் வழங்கப்பட்டு இருக்கிறது.

    இந்த ஸ்கூட்டர் நார்மல் மற்றும் பாஸ்ட் சார்ஜிங் ஆப்ஷன்களை கொண்டிருக்கிறது. இத்துடன் ரிமோட் அக்சஸ், எல்இடி லைட்கள், ஸ்டார்ட் பட்டன், டிஜிட்டல் ஸ்பீடோமீட்டர், டிஜிட்டல் ஒடோமீட்டர், யுஎஸ்பி போர்ட் பல்வேறு ரைடிங் மோட்கள் உள்ளன.

    இந்திய சந்தையில் புதிய பியாஜியோ 1 பிளஸ் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் விலை ரூ. 1.5 லட்சம் என்று நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை வாங்குவோருக்கு எளிய மாத தவணை முறை வசதியும் வழங்கப்படுகிறது.

    • பியஜியோ வெஸ்பா GTV மாடலில் 300சிசி சிங்கில் சிலண்டர் என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது.
    • வெஸ்பா GTV மாடலில் கீலெஸ் ஸ்டார்ட் ஸ்டாப், டிராக்ஷன் கண்ட்ரோல் சிஸ்டம், ஏபிஎஸ் போன்ற அம்சங்கள் உள்ளது.

    பியஜியோ நிறுவனம் தனது சக்திவாய்ந்த வெஸ்பா ஸ்கூட்டரை அறிமுகம் செய்து இருக்கிறது. புதிய வெஸ்பா GTV மாடல் முதற்கட்டமாக ஐரோப்பிய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. 2023 மாடலில் ஏராளமான மாற்றங்கள், சிறு அப்கிரேடுகள் மேற்கொள்ளப்பட்டு உள்ளது.

    அதன்படி இந்த மாடலில் 300சிசி, சிங்கில் சிலிண்டர், லிக்விட் கூல்டு என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜின் 23.4 ஹெச்பி பவர், 26 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தும் திறன் கொண்டிருக்கிறது. இந்த ரெட்ரோ ஸ்கூட்டரில் ஃபுல் எல்இடி லைட்கள், மேட் பிளாக் டிசைன் செய்யப்பட்டு உள்ளது.

     

    இத்துடன் அலாய் வீல்கள், எக்சாஸ்ட் கவர், கிராப்ரெயில், ரியர்வியூ மிரர்கள் மற்றும் ஃபூட்ரெஸ்ட் உள்ளிட்டவை மேட் பிளாக் நிறம் கொண்டிருக்கிறது. புதிய வெஸ்பா GTV மாடலில் கீலெஸ் ஸ்டார்ட் ஸ்டாப், டிராக்ஷன் கண்ட்ரோல் சிஸ்டம், ஏபிஎஸ் மற்றும் யுஎஸ்பி சார்ஜிங் போர்ட் வழங்கப்பட்டு இருக்கிறது.

    2023 பியஜியோ வெஸ்பா GTV மாடல் இரண்டு நிறங்களில் கிடைக்கிறது. எனினும், இரண்டு மாடல்களும் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்படுவதற்கான வாய்ப்புகள் குறைவு தான். இந்தியா இதுபோன்ற மாடல்களுக்கான சந்தை இல்லை என்பதே காரணம் என்று தெரிகிறது.

    • பியாஜியோ நிறுவனத்தின் புதிய வெஸ்பா ஸ்கூட்டர் இரண்டு வேரியண்ட்களில் கிடைக்கிறது.
    • இந்திய சந்தையில் வெஸ்பா டூயல் VXL 125 மாடலின் விலை ரூ. 1 லட்சத்து 32 ஆயிரம் என்று துவங்குகிறது.

    பியாஜியோ நிறுவனத்தின் புதிய வெஸ்பா டூயல் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. புதிய வெஸ்பா டூயல் மாடலின் விலை ரூ. 1 லட்சத்து 32 ஆயிரம் என்று துவங்குகிறது. புதிய டூயல் வேரியண்ட் 125சிசி மற்றும் 150சிசி என்று இருவித என்ஜின் ஆப்ஷன்களில் கிடைக்கிறது. இரு என்ஜின்களும் OBD 2 விதிகளுக்கு ஏற்ப அப்டேட் செய்யப்பட்டு உள்ளது.

    இளம் வாடிக்கையாளர்களை கவரும் வகையில் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கும் வெஸ்பா டூயல் ஸ்கூட்டர் விசேஷமாக டூயல் டோன் லிவெரி மற்றும் அழகிய ஃபூட்போர்டு கொண்டிருக்கிறது. புதிய டூயல் டோன் நிறங்கள் வழக்கமான மோனோக்ரோம் ஸ்கூட்டர்களை விட வித்தியாசமாக காட்சியளிக்கிறது.

     

    இதன் VXL ரேஞ்ச் வட்ட வடிவம் கொண்ட ஹெட்லைட், ரியர் வியூ மிரர்கள் வழங்கப்பட்டு உள்ளன. இதன் SXL வேரியண்ட் செவ்வக வடிவம் கொண்ட ஹெட்லைட் மற்றும் ரியர் வியூ மிரர்கள் உள்ளன. புதிய வெஸ்பா டூயல் மாடல் நாடு முழுக்க 250-க்கும் அதிக பிரத்யேக விற்பனை மையங்களில் விற்பனைக்கு வருகிறது.

    விலையை பொருத்தவரை வெஸ்பா டூயல் VXL 125 மாடலின் விலை ரூ. 1 லட்சத்து 32 ஆயிரம் என்று துவங்கி டாப் எண்ட் வெஸ்பா டூயல் SXL 150 மாடல் விலை ரூ. 1 லட்சத்து 49 ஆயிரம் என்று நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. அனைத்து விலைகளும் எக்ஸ்-ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டு உள்ளது.

    பியாஜியோ நிறுவனம் தனது அப்ரிலியா 150 சிசி மோட்டார்சைக்கிள்களை ஏற்கனவே அறிமுகம் செய்து விட்ட நிலையில், இதன் வெளியீட்டு விவரங்களை பார்ப்போம்.



    இத்தாலியை சேர்ந்த ஆட்டோமொபைல் நிறுவனமான பியாஜியோ இந்திய சந்தையில் 150சிசி மோட்டார்சைக்கிளை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது. அந்த வகையில் அடுத்த 18 மாதங்களுக்குள் பியாஜியோ அப்ரிலியா 150சிசி மோட்டார்சைக்கிளை இந்தியாவில் அறிமுகம் செய்யும் என தெரிகிறது.

    இந்திய சந்தைக்கென பிரத்யேக 150சிசி ஸ்கூட்டரை உருவாக்கும் பணிகள் நடைபெற்று வருவதாக பியாஜியோ நிறுவன நிர்வாக இயக்குனர் டெய்கோ கிராஃபி தெரிவித்தார். இந்த அப்ரிலியா ஸ்கூட்டர் 150சிசி - 200சிசியில் உருவாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்துடன் 150சிசி மோட்டார்சைக்கிள் பற்றியும் அவர் தகவல் வழங்கி இருக்கிறார்.

    "அப்ரிலியா போன்ற பிராண்டு இருக்கும் போது மோட்டார்சைக்கிள் சந்தையில் விளையாடாமல் இருக்க முடியாது. இதன் மூலம் எங்களது மோட்டார்சைக்கிள் பிரிவில் புதிய வாகனங்களை சேர்க்க முடியும். இதனால் அப்ரிலியாவில் முதலீடு செய்வது அவசியமாகும்" என அவர் தெரிவித்தார்.



    2018 ஆட்டோ எக்ஸ்போ விழாவில் பியாஜியோ அப்ரிலியா ஆர்.எஸ். 150 மற்றும் அப்ரிலியா டியோனோ 150 போன்ற மாடல்களை அறிமுகம் செய்தது. இவை சந்தையில் நிலவும் போட்டியை புரிந்து கொள்ளும் நோக்கில் உருவாக்கப்பட்டுள்ளதாக டெய்கோ கிராஃபி தெரிவித்தார்.

    அப்ரிலியா ஆர்.எஸ். 150 மற்றும் அப்ரிலியா டியோனோ 150 மாடல்கள் அலுமினியம் பெரிமீட்டர் ஃபிரேமில் உருவாக்கப்பட்டுள்ளது. இரு மாடல்களிலும் 150சிசி சிங்கிள் சிலிண்டர், லிக்விட் கூல்டு, 4-வால்வ், ஃபியூயல் இன்ஜெக்ட்டெட் என்ஜின் கொண்டிருக்கிறது. இந்த என்ஜின் 18 பி.ஹெச்.பி. பவர் @10,000 ஆர்.பி.எம். மற்றும் 14 என்.எம். டார்க் @7500 ஆர்.பி.எம். செயல்திறன் வழங்குகிறது.
    சி.பி.எஸ். வசதி கொண்ட வெஸ்பா ZX125 ஸ்கூட்டர் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. #Vespa



    பிரீமியம் ஸ்கூட்டர்களில் பியாஜியோ நிறுவனத்தின் வெஸ்பா ஸ்கூட்டர்கள் முதலிடத்தில் இருக்கின்றன. இந்நிறுவனத் தயாரிப்புகள் மற்ற ஸ்கூட்டர்களைக் காட்டிலும் விலை அதிகமாகத்தான் இருக்கும். ஆனாலும் இதன் செயல்பாடுகள் சிறப்பாக இருப்பதால் இதை விரும்பி வாங்குவோர் அதிகம்.

    அழகிய தோற்றம், குறைவான எடை, மிகச் சிறந்த செயல்திறன் ஆகியன இதை பலரும் விரும்பக் காரணமாக உள்ளது. இப்போது இந்நிறுவனம் தனது LX125 மாடல் ஸ்கூட்டர்களை சி.பி.எஸ். (கோம்பி பிரேக்கிங் சிஸ்டம்) வசதி கொண்டவையாக அறிமுகம் செய்துள்ளது. இதனால் இந்த மாடலுக்கு ZX125 என பெயர் சூட்டப்பட்டுள்ளது. 

    இந்தியாவில் வெஸ்பா ZX125 விலை ரூ.78,750 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்நிறுவனத் தயாரிப்புகளில் இது விலை குறைந்த மாடலாக இருக்கிறது. இந்நிறுவனத்தின் VXL125 மாடலில் சி.பி.எஸ். வசதி கொண்டதன் விலை ரூ.92,372 ஆக உள்ளது. இதைவிட சி.பி.எஸ். ZX. மாடல் விலை ரூ.95,668 ஆகும். பிரீமியம் மாடலான SXL.150 ஏ.பி.எஸ். மாடல் விலை ரூ.1.07 லட்சமாகும்.



    ZX மாடலில் இரண்டு சக்கரங்களுக்கும் டிரம் பிரேக் வசதி மட்டுமே அளிக்கப்பட்டுள்ளது. மற்றபடி என்ஜினில் எவ்வித மாறுதலும் செய்யப்படவில்லை. முன்பகுதியில் ஹைட்ராலிக் சஸ்பென்ஷனும், பின்புறம் மோனோஷாக் அப்சார்பர் வழங்கப்பட்டுள்ளது.
    இந்த ஸ்கூட்டரில் 125 சி.சி. திறன் கொண்ட என்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இதில் 3 வால்வுகளைக் கொண்ட ஒற்றை சிலிண்டர் என்ஜின் ஆகும். 

    இந்த என்ஜின் 96 பி.ஹெச்.பி. திறனை 7,250 ஆர்.பி.எம். வேகத்திலும், 9.9 என்.எம். டார்க் @6,250 ஆர்.பி.எம். வேகத்திலும் வெளிப்படுத்துகிறது. இந்தப் பிரிவில் (125 சி.சி.) சுசுகி அக்சஸ் 125 (ரூ.61,858), சுசுகி பர்க்மன் ஸ்டிரீட் (ரூ.70,878), ஹோண்டா கிரேசியா (ரூ.66,231), டி.வி.எஸ். என்டார்க் 125 (ரூ.65,010) ஆகியவற்றுக்குப் போட்டியாக அமைகிறது.
    பியாஜியோ நிறுவனத்தின் வெஸ்பா நோட் ஸ்கூட்டர் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. புதிய ஸ்கூட்டரின் அம்சங்கள் மற்றும் விலை குறித்த முழு விவரங்களை தொடர்ந்து பார்ப்போம். #Vespa #Piaggio



    பியாஜியோ நிறுவனத்தின் புதிய ரக வெஸ்பா ஸ்கூட்டர் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. புதிய வேரியன்ட் வெஸ்பா நோட் என அழைக்கப்படுகிறது. இந்த ஸ்கூட்டர் வெஸ்பா LX 125 ஸ்கூட்டரை சார்ந்து உருவாக்கப்பட்டுள்ளது. 

    இந்தியாவில் வெஸ்பா நோட் இந்த ஆண்டு துவக்கத்தில் நடைபெற்ற ஆட்டோ எக்ஸ்போ 2018 விழாவில் அறிமுகம் செய்யப்பட்ட நிலையில், தற்சமயம் இந்தியாவில் வெளியிடப்பட்டுள்ளது. இத்தாலிய மொழியில் நோட் என்றால் இரவு என அர்த்தம் என்ற வகையில், புதிய வெஸ்பா நோட் முழுமையாக கருப்பு நிற தீம் கொண்டிருக்கிறது.

    வெஸ்பா நோட் ஸ்கூட்டர் மேட் பிளாக் நிறம் மற்றும் க்ரோம் பாகங்கள் மற்றும் அலாய் வீல்களும் கருப்பு நிறம் பூசப்பட்டுள்ளது. ஒட்டுமொத்தமாக இந்த ஸ்கூட்டர் ஏற்கனவே விற்பனையாகும் ஸ்டான்டர்டு வெஸ்பா மாடலை விட பார்க்க அழகாகவும், மிக நேர்த்தியாகவும் உருவாக்கப்பட்டுள்ளது.



    புதிய வெஸ்பா நோட் ஸ்கூட்டரில் 125சிசி ஏர்-கூல்டு, சிங்கிள்-சிலிண்டர் இன்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இந்த இன்ஜின் 9.5 பி.ஹெச்.பி. பவர் மற்றும் 9.9 என்.எம். டார்கியூ செயல்திறன் வழங்குகிறது. இந்த இன்ஜின் CVT கியர்பாக்ஸ் உடன் கிடைக்கிறது. வெஸ்பா நோட் ஸ்கூட்டர் இந்தியா தவிர சர்வதேச சந்தையிலும் விற்பனை செய்யப்படுகிறது. எனினும் இதன் சர்வதேச மாடல் இந்திய ஸ்கூட்டரை விட முற்றிலும் வித்தியாசமாக காட்சியளிக்கிறது.

    வெஸ்பா நோட் மாடல் LX 125 போன்றே காட்சியளிப்பதோடு ஒரே மாதிரியான மெக்கானிக்கல் உபகரணங்களும் வழங்கப்படுகிறது. புதிய வேரியன்ட் சிங்கிள் சைடு முன்பக்க சஸ்பென்ஷன், பின்புறம் ஹைட்ராலிக் ஷாக் அப்சார்பர் வழங்கப்பட்டுள்ளது. இதன் பிரேக்கிங் 150 மில்லிமீட்டர் டிரம் முன்பக்கமும், பின்புறம் 140 மில்லிமீட்டர் டிரம் பிரேக் வழங்கப்பட்டுள்ளது.

    இந்தியாவில் புதிய வெஸ்பா நோட் விலை ரூ.70,285 (எக்ஸ்-ஷோரூம், டெல்லி) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இத்துடன் புதிய ஸ்கூட்டரை பயனர்கள் ரூ.2,000 முன்பணம் செலுத்தி முன்பதிவு செய்யலாம் என தகவல் வெளியாகியுள்ளது. #Vespa #Piaggio
    ×