search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "sale"

    • 10 கிலோ எடை கொண்ட ஆட்டுக்குட்டி ரூ.8 ஆயிரம் முதல் விற்பனையானது.
    • 1 கிலோ எடை கொண்ட நாட்டுக்கோழி ரூ.500க்கு விற்பனையானது.

    வடமதுரை:

    திண்டுக்கல் மாவட்டம் அய்யலூரில் வாரம் தோறும் வியாழக்கிழமை ஆட்டுச்சந்தை நடைபெற்று வருகிறது. இங்கு திண்டுக்கல் மட்டுமின்றி திருச்சி, கரூர் போன்ற வெளி மாவட்டங்களில் இருந்தும் விவசாயிகள் அதிக அளவில் ஆடு, கோழிகளை விற்பனைக்கு கொண்டு வருகின்றனர்.

    தீபாவளி பண்டிகையை முன்னிட்டு இன்று காலை 3 மணி முதல் சந்தை வியாபாரம் தொடங்கியது. வழக்கமாக வரும் வியாபாரிகளை விட நாமக்கல், சேலம் போன்ற மாவட்டங்களில் இருந்தும் அதிக அளவில் வியாபாரிகள் வந்திருந்தனர்.

    10 கிலோ எடை கொண்ட ஆட்டுக்குட்டி ரூ.8 ஆயிரம் முதல் விற்பனையானது. சந்தைக்கு அதிக அளவில் செம்மறி ஆடுகள் வந்திருந்த நிலையில் வெள்ளாடுகள் குறைந்த அளவே வந்தன. வியாபாரிகள் போட்டி போட்டு ஆடுகளை வாங்கிச் சென்றனர்.

    கடந்த வாரம் வரை ரூ.6500க்கு விற்கப்பட்ட ஆட்டுக்குட்டிகள் இன்று ரூ.8,000 மட்டும் அதற்கும் மேலும் விற்பனையாகியது. இதே போல் கிராமங்களில் தீபாவளி பண்டிகை சமயங்களில் வீடுகளுக்கு வரும் உறவினர்களுக்கு நாட்டுக்கோழி சமையல் சமைத்து விருந்தளிப்பது முக்கியமான ஒன்றாகும். இதனால் நாட்டுக் கோழிகளுக்கு நல்ல விலை கிடைத்தது.

    1 கிலோ எடை கொண்ட நாட்டுக்கோழி ரூ.500க்கு விற்பனையானது. கேட்ட விலைக்கு நாட்டுக்கோழிகள் விற்றதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனர். இன்று மட்டும் ரூ.3 கோடிக்கு மேல் ஆடு, கோழிகள் விற்பனையானது.

    அய்யலூர் மற்றும் சுற்று வட்டார பகுதியில் நேற்று இரவு முதலே விட்டு விட்டு மழை பெய்து வந்தது. இன்று காலையிலும் மழை தொடர்ந்த நிலையிலும் ஆட்டுச்சந்தையில் விற்பனை விறுவிறுப்பாக நடைபெற்றது. சந்தை அமைந்துள்ள பகுதியில் வாகனங்கள் அதிக அளவில் நிறுத்தப்பட்டால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. வாரம் தோறும் சந்தை நடைபெறும் நாளில் இது போன்ற சூழல் நிலவுவதால் இதற்கு நிரந்தர தீர்வு காணப்பட வேண்டும் என வியாபாரிகள் தெரிவித்துள்ளனர். 

    • சாலைப்புதூரில் வேளாண் ஒழுங்கு முறை விற்பனை கூடம் செயல்பட்டு வருகிறது.
    • வேளாண் பொருட்கள் மொத்தம் ரூ. 30லட்சத்து38 ஆயிரத்து 150-க்கு விற்பனையானது.

    வேலாயுதம்பாளையம்

    சாலைப்புதூரில் வேளாண் ஒழுங்கு முறை விற்பனை கூடம் செயல்பட்டு வருகிறது. இங்கு வாரந்தோறும் தேங்காய், தேங்காய் பருப்பு, எள், நிலக்கடலை ஆகியவற்றுக்கான ஏலம் நடைபெறுகிறது.

    இதில் அருகே உள்ள கரூர் ஒன்றியம், க.பரமத்தி சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த விவசாயிகள் தாங்கள் தங்களது தோட்டத்தில் விளைவித்த வேளாண் பொருட்களை விற்பனை செய்வதற்காக கொண்டு செல்கின்றனர். இங்கு நடைபெறும் ஏலத்தில் தமிழகம் மற்றும் வெளிமாநிலங்களை சேர்ந்த வியாபாரிகள் மற்றும் பிரபல எண்ணெய் நிறுவன முகவர்கள் கலந்து கொண்டு தங்களுக்கு கட்டுபடியாகும் விலைக்கு பொருட்களை வாங்கி செல்கின்றனர்.

    தேங்காய்

    இந்த வாரம் நடந்த ஏலத்தில் 57.97 1/2 குவிண்டால் எடை கொண்ட 16ஆயிரத்து 255 தேங்காய் விற்பனைக்கு வந்தது. இதில் தேங்காய் கிலோ ஒன்றுக்கு அதிகபட்ச விலையாக ரூ.27.10-க்கும், குறைந்தபட்ச விலையாக ரூ.22.88-க்கும், சராசரி விலையாக ரூ.26.60-க்கும் என மொத்தம் ரூ.1 லட்சத்து 42ஆயிரத்து 479-க்கு விற்பனையானது.

    தேங்காய் பருப்பு

    அதேபோல் 363.49 1/2 குவிண்டால் எடை கொண்ட 765-மூட்டை தேங்காய் பருப்பு விற்பனைக்கு வந்தது. இதில் முதல் தரம் தேங்காய் பருப்பு கிலோ ஒன்றுக்கு அதிகபட்ச விலையாக ரூ.86.49-க்கும், குறைந்தபட்ச விலையாக ரூ.78.99-க்கும், சராசரி விலையாக ரூ.85.89-க்கும் விற்பனையானது.

    2-ம் தரம் தேங்காய் பருப்பு கிலோ ஒன்றுக்கு அதிகபட்ச விலையாக ரூ.84.36-க்கும், குறைந்தபட்ச விலையாக ரூ.64.68-க்கும், சராசரி விலையாக ரூ.80.89-க்கும் என மொத்தம் ரூ.28 லட்சத்து95ஆயிரத்து671-க்கு விற்பனையானது. சாலைப்புதூர் அரசு வேளாண் ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில் வேளாண் பொருட்கள் மொத்தம் ரூ. 30லட்சத்து38 ஆயிரத்து 150-க்கு விற்பனையானது.

    • தீபாவளியை முன்னிட்டு வீரசோழன் ஆட்டுச்சந்தை களைகட்டியது.
    • ரூ.6 ஆயிரம் முதல் ரூ.8 ஆயிரம் வரையிலான சுமார் 1200-க்கும் மேற்பட்ட ஆடுகள் விற்பனையாகிறது.

    திருச்சுழி

    விருதுநகர் மாவட்டம் நரிக்குடி அருகேயுள்ள வீரசோழன் வாரச்சந்தை மிகவும் பிரபலமானது. பல ஆண்டுகளாக பாரம்பரிய மிக்க இந்த சந்தையானது வாரந்தோறும் திங்கட் கிழமை நடைபெறு வது வழக்கம். மேலும் வீர சோழன் சந்தையானது தீபாவளி, பொங்கல், கிறிஸ்துமஸ் மற்றும் ரம்ஜான் பண்டிகைகளில் ஆடு வியாபாரம் களை கட்டும்.

    வாரம்தோறும் நடை பெறும் இந்த சந்தைக்கு விருதுநகர், சிவகங்கை, ராமநாதபுரம், மதுரை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஏராளமான வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் வந்து ஆடுகள், கோழிகளை விற்பனை செய்யவும், வாங்கவும் வந்து செல்கின்றனர்.

    வருகிற 12-ந்தேதி தீபா வளி பண்டிகை கொண்டா டப்பட உள்ளது. இதை யொட்டி வீரசோழன் வாரச் சந்தை நடைபெற்றது. அதிகாலை 2 மணி முதலே வீரசோழன் வாரச்சந்தை திடலில் திரளாக கூடிய ஆட்டு வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் அதிக ளவில் ஆடுகள் மற்றும் கோழிகளை வாங்கி சென்றனர்.

    வீரசோழன் வாரச்சந்தை யில் ரூ.6 ஆயிரம் முதல் ரூ.8 ஆயிரம் வரையிலான சுமார் 1200-க்கும் மேற் பட்ட ஆடுகள் விற்பனை யான தாகவும் அதன் மூலம் சுமார் ரூ.95 லட்சம் ரூபாய் அளவிற்கு வியாபாரம் நடைபெற்றதாகவும் வீரசோழன் டிரஸ்ட் போர்டு நிர்வாகம் தெரிவிந்துள்ளது.

    மேலும் வருகிற 12-ந்தேதி கொண்டா டப்படும் தீபாவளி பண்டி கையானது ஞாயிற்றுக்கி ழமை கொண்டாடப்படு வதால் வழக்கமாக திங்கட் கிழமை நடைபெறுகின்ற வீரசோழன் வாரச்சந்தையை பொதுமக்களின் நலன் கருதி 11-ந் தேதி அதாவது முன் கூட்டியே சனிக்கிழமை நடைபெறும் எனவீரசோழன் டிரஸ்ட் போடு நிர்வாகம் தெரிவித்துள்ளது.

    மேலும் அன்றைய தினம் (சனி) எட்டையாபுரம், இளையான்குடி பகுதிகளில் வாரச்சந்தை செயல் படுவதால் தீபாவளிக்கு முதல் நாள் அதாவது சனிக்கிழமை நடைபெறவுள்ள வீர சோழன் வாரச்சந்தையில் ஆடு விற்பனை சற்று குறை வதற்கும் அதிக வாய்ப்புள்ள தாக டிரஸ்ட் போர்டு நிர்வாகம் தெரிவித்துள்ளது.

    • மேலப்பாளையம் கால்நடை சந்தையில் ஆடுகள் விற்பனை அமோகமாக இருந்தது.
    • சுமார் 2,500 ஆடுகள் வரை விற்பனைக்காக கொண்டு வரப்பட்டிருந்தது.

    நெல்லை:

    நெல்லை மாநகர பகுதியில் உள்ள மேலப்பாளையம் கால்நடை சந்தை தென்மாவட்டத்தின் புகழ்பெற்ற சந்தையாகும். வாரந்தோறும் செவ்வாய்க்கிழமை மட்டும் இந்த சந்தை நடைபெறும்.

    இங்கு நெல்லை மட்டுமல்லாமல் தென்காசி, தூத்துக்குடி, விருதுநகர் போன்ற அண்டை மாவட்டங்களை சேர்ந்த வியாபாரிகள் தங்களுடைய ஆடுகளை இங்கு கொண்டு வந்து விற்பனை செய்வார்கள். அதுதவிர கோழி, மீன், கருவாடு, மாடு உள்ளிட்டவையும் இங்கு விற்பனைக்கு கொண்டு வரப்படும்.

    பக்ரீத், தீபாவளி உள்ளிட்ட பண்டிகைகளின்போது வியாபாரிகளின் கூட்டமும், ஆடுகள் வாங்க வருபவர்களின் கூட்டமும் அலைமோதி காணப்படும். வருகிற 12-ந்தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. இதனையொட்டி மேலப்பாளையம் கால்நடை சந்தை இன்று களைகட்டி காணப்பட்டது.

    தீபாவளி பண்டிகையை முன்னிட்டு மேலப்பாளையம் சந்தையில் இன்று கூட்டம் அலைமோதியது. சுமார் 2,500 ஆடுகள் வரை விற்பனைக்காக கொண்டு வரப்பட்டிருந்த நிலையில் அவை சில மணி நேரங்களிலேயே முழுவதுமாக விற்று தீர்ந்துவிட்டன. சிறிய குட்டிகளை விட பெரிய ஆடுகளை அதிக ஆர்வத்துடன் கறிக்கடைக்காரர்கள் வாங்கி சென்றனர்.

    தீபாவளி தினத்தன்று பொதுமக்கள் பட்டாசுகள் வெடித்தும், புத்தாடைகள் உடுத்தியும் கொண்டாடும் நிலையில், தொடர்ந்து அவர்கள் அசைவ உணவுகள் சமைத்து சாப்பிட்டும் உற்சாகமாக பண்டிகையை கொண்டாடுவார்கள். எனவே இன்று மேலப்பாளையம் கால்நடை சந்தையில் ஆடுகள் விற்பனை அமோகமாக இருந்தது.

    சிறிய குட்டி ஆடு ரூ.3 ஆயிரம் முதல் ரூ.7 ஆயிரம் வரை விற்பனையானது. பெரிய ஆடுகள் ரூ.45 ஆயிரம் ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டது. செம்பி கிடா ஒன்று ரூ.35 ஆயிரத்துக்கும், சண்டகிடா ரூ.30 ஆயிரத்துக்கும் விற்பனையானது.

    இதுதவிர செங்கிடா, கன்னி கிடா உள்ளிட்ட பல்வேறு ரக ஆடுகளின் விற்பனையும் அதிகரித்து காணப்பட்டது. இன்று ஒரே நாளில் மட்டும் ரூ.4 கோடி வரை ஆடுகள் விற்பனை நடந்திருப்பதாக கூறப்படுகிறது.

    தொடர் மழையின் காரணமாக மேலப்பாளையம் கால்நடை சந்தையில் சேறும்- சகதியுமாக காணப்பட்டது. ஆங்காங்கே மழைநீர் குளம்போல் தேங்கி கிடந்தது. தீபாவளியையொட்டி சந்தையில் அமோக விற்பனை நடப்பது வழக்கம். ஆயிரக்கணக்கான வியாபரிகள், பொதுமக்கள் வந்து செல்லும் சந்தையில் சேறும் சகதியுமாக காட்சியளித்தது பொதுமக்களை முகம் சுழிக்க வைத்தது.

    • கர்நாடகா, ஆந்திரா, வேலூர், திருவண்ணாமலை, சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி, மாவட்டத்தில் இருந்தும் வியாபாரிகள் வந்தனர்.
    • தீவன தட்டுபாடு காரணமாக விவசாயிகள் தாங்கள் வளர்த்த ஆடுகளை அதிகளவில் விற்பனைக்காக கொண்டு வந்தனர்.

    காரிமங்கலம்:

    வரும் ஞாயிற்றுக்கிழமை தீபாவளி பண்டிகை வருவதையொட்டி காரிமங்கலம் வாரச்சந்தையில் ஆடுகள், கோழி விற்பனைகளை கட்டியது. தீபாவளி பண்டிகை வரும் 12-ந் தேதி கொண்டாடப்படுகிறது. அதற்காக வியாபாரிகள், கறி கடை உரிமையாளர்கள் மட்டுமின்றி கிராமத்து மக்களும் அதிக அளவில் ஆடுகள் மற்றும் கோழி வாங்கி சென்றனர்.

    தருமபுரி மாவட்டம் காரிமங்கலம் சந்தையில் ஆடு, கோழி விற்பனைகளை கட்டியது. தருமபுரி மாவட்டத்தில் தீபாவளி பண்டிகை விமர்சையாக கொண்டாடப்படுவது வழக்கம். அதே போல் காரிமங்கலம் சுற்று வட்டார பகுதி கிராமங்களில் தீபாவளி பண்டிகையன்று புத்தாடை அணிந்து பட்டாசுகள் வெடித்து கோவிலுக்கு சென்று வழிபாட்டு செய்வது வழக்கம்.

    அதனை தொடர்ந்து ஆடுகளை பலியிட்டு நண்பர்கள் மற்றும் உறவினர்களுடன் கறி விருந்து நடைபெறும். அதற்கு இன்று கூடிய சந்தையில் ஆடுகளை வாங்க கர்நாடகா, ஆந்திரா, வேலூர், திருவண்ணாமலை, சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி, மாவட்டத்தில் இருந்தும் வியாபாரிகள் வந்தனர்.

    வழக்கத்தை விட இந்த வாரம் கூடிய ஆட்டு சந்தையில் அதிகளவில் ஆடுகள் விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர். சுமார் 3 ஆயிரம் ஆடுகள் விற்பனையானது. கிராம மக்கள் குழுவாக சேர்ந்து ஒன்று அல்லது இரண்டு ஆடுகளை வாங்கி சென்றனர்.

    காரிமங்கலம் பகுதியில் தீவன தட்டுபாடு காரணமாக விவசாயிகள் தாங்கள் வளர்த்த ஆடுகளை அதிகளவில் விற்பனைக்காக கொண்டு வந்தனர்.

    கடந்த வாரம் 10, 15 கிலோ கொண்ட ஆடு 6 ஆயிரத்து 500 ரூபாய் முதல் 8 ஆயிரம் ரூபாய் விற்பனை செய்யப்பட்ட நிலையில் இந்த வாரம் 7 ஆயிரம் முதல் 10 ஆயிரம் ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டது. நாட்டுக்கோழி ரூ.350 முதல் ரூ.400 வரை விற்பனை செய்யப்பட்டது.

    • போதை பொருட்கள் விற்பதை நிறுத்திவிட்டு உணவு பொருட்கள் விற்பனை செய்ய வேண்டும்.
    • முடிவில் துணை தலைவர் காசி அறிவழகன் நன்றி கூறினார்.

    நாகப்பட்டினம்:

    திருமருகல் தனியார் திருமண மண்டபத்தில் தமிழ்நாடு உணவு பாதுகாப்புத்துறை மற்றும் திருமருகல் வர்த்தக சங்கம் இணைந்து நடத்திய உணவு பாதுகாப்பு பயிற்சி மற்றும் உணவு பாதுகாப்பு பதிவு,உரிமம் பெறும் முகாம் நடைபெற்றது.

    முகாமிற்கு திருமருகல் வர்த்தக சங்க தலைவர் ஜெயபால்சங்கர் தலைமை வகித்தார்.

    முன்னாள் வர்த்தக சங்க தலைவர் தியாக சத்தியமூர்த்தி முன்னிலை வகித்தார்.முன்னதாக வர்த்தக சங்க செயலாளர் காமராஜ் வரவேற்றார். இதில் தமிழ்நாடு உணவு பாதுகாப்புத்துறை மாவட்ட நியமன அலுவலர் டாக்டர் புஷ்பராஜ், திருமருகல் வட்டார உணவு பாதுகாப்பு அலுவலர் அந்தோணி பிரபு ஆகியோர் கலந்துக் கொண்டு உணவு பாதுகாப்பு பயிற்சி முகாமை தொடங்கி வைத்து தடை செய்யப்பட்ட போதை பொருட்கள், குட்கா,பான் மசாலா போன்றவற்றை விற்பனை செய்வதை நிறுத்திவிட்டு,அரசின் விதிப்படி உணவு பொருட்களை விற்பனை செய்ய வேண்டும் என பேசினார்.

    இதில் வர்த்தக சங்க பொருளாளர் அ.ஹரிஹரன்,வர்த்தக சங்க நிர்வாகிகள், பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர். முடிவில் துணை தலைவர் காசி அறிவழகன் நன்றி கூறினார்.

    • திருப்பூா், ஈரோடு, சேலம், கோவை மாவட்டங்களை சோ்ந்த 18 வணிகா்கள் பருத்தியை வாங்க வந்திருந்தனா்.
    • ராசரி விலை ரூ. 6ஆயிரத்து 950. ஒட்டுமொத்த விற்பனை தொகை ரூ.91 லட்சமாகும்.

    மூலனூர், நவ.5-

    வெள்ளகோவில் அருகே உள்ள மூலனூரில் ஒழுங்குமுறை விற்பனை கூடம் செயல்பட்டு வருகிறது. இங்கு இந்த வாரம் நடைபெற்ற ஏலத்துக்கு கோவை, திருப்பூா், ஈரோடு, திருச்சி, கரூா், திண்டுக்கல் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து 361 விவசாயிகள் தங்களுடைய 4 ஆயிரத்து 174 பருத்தி மூட்டைகளை விற்பனை செய்ய கொண்டு வந்திருந்தனா். மொத்த வரத்து ஆயித்து 322 குவிண்டால் திருப்பூா், ஈரோடு, சேலம், கோவை மாவட்டங்களை சோ்ந்த 18 வணிகா்கள் பருத்தியை வாங்க வந்திருந்தனா். பருத்தி விலை குவிண்டால் ரூ.6 ஆயிரத்து 500 முதல் ரூ.7 ஆயிரத்து 479 வரை விற்பனையானது.

    சராசரி விலை ரூ. 6ஆயிரத்து 950. ஒட்டுமொத்த விற்பனை தொகை ரூ.91 லட்சமாகும். ஏலத்துக்கான ஏற்பாடுகளை திருப்பூா் விற்பனைக்குழு செயலாளா் சுரேஷ்பாபு, விற்பனைக்கூட கண்காணிப்பாளா் சிவகுமாா் ஆகியோா் செய்திருந்தனா்.

    • தங்களுடைய நிலங்களில் சாமந்திப்பூ பயிரிட அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர்.
    • சாமந்திப் பூவிற்கு நல்ல விலை கிடைக்குமென விவ சாயிகள் கருதுகின்றனர்.

    விழுப்புரம்:

    விழுப்புரம் மாவட்டம் அருகே ச.சிறுவாடி, ஓமிப்பேர், வடநற்குணம், நல்லம்பாக்கம், நகர் முன்னூர், ஆலங்குப்பம், அடைவள்ளிக்கூத்தான், வேப்பேரி, குருவூர், செட்டிகுளம், ராயநல்லூர், நாகப்பாக்கம், நாகல்பாக்கம், ஆலத்தூர் ஆகிய கிராமப்புறங்களில் உள்ள விவசாயிகள் தங்களுடைய நிலங்களில் சாமந்திப்பூ பயிரிட அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர்.

    புதுவை மற்றும் திண்டி வனம் மார்க்கெட்டுகளில் சாமந்திப் பூக்கள் அதிகளவில் விற்பனையாகிறது. மேலும், விவசாயிகளுக்கு கட்டு படியான விலை கிடைத்தும் வருகிறது. தொடர்ந்து பண்டிகை நாட்கள் உள்ளதால் சாமந்திப் பூவிற்கு நல்ல விலை கிடைக்குமென விவ சாயிகள் கருதுகின்றனர். இதனால் மரக்காணம் சுற்றுப்புற பகுதியில் உள்ள விவசாயிகள் தற்போது சாமந்தி பூச்செடி பயிரிடுவதில் ஆர்வம் காட்டி வருகின்றனர். தற்போது ஒரு கிலோ சாமந்திப்பூ ரூ.100-லிருந்து ரூ.120 வரை விற்பனையாகிறது.

    • பண்ருட்டியில் லாட்டரி விற்றவர் கைது செய்யப்பட்டார்.
    • ரகசிய தகவல் படி தீவிர ரோந்து பணி யில் ஈடுபட்டிருந்தனர்.

    கடலூர்:

    பண்ருட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் கண்ணன்சப்.இன்ஸ்பெக்டர் பிரசன்னா மற்றும் போலீசார் நேற்று காலை 9 மணிக்கு பண்ருட்டி சத்தியமூர்த்தி தெரு பகுதியில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகள் விற்ப னை செய்யப்படுவதாக கிடைத்த ரகசிய தகவல் படி தீவிர ரோந்து பணி யில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அதே பகுதியை சேர்ந்த சேர்ந்த கிருஷ்ண மூர்த்தி (வயது 57) என்பவர் அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி டிக்கெட்டுகள் நல்ல நேரம் லாட்டரி சீட்டு, தங்கம் லாட்டரி சீட்டு ஆகிய வைகளை விற்பனைக் காக வைத்திருந்தது தெரிய வந்தது. இதனை தொடர்ந்து அவர் மீது வழக்கு பதிந்து கைது செய்தனர். அவரிட மிருந்து ஏராளமான லாட்டரி சீட்டுகளை பறி முதல் செய்யப்பட்டது. பின்னர் நீதி மன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

    • தட்டாங்கோவில் பகுதியில் பொக்லைன் எந்திரம் மூலம் கருவேல மரங்களை அகற்றும் பணியில் ஈடுபட்டார்.
    • திருடப்பட்ட பொக்லைன் எந்திரத்தை விற்பனை செய்ய திட்டமிட்டது தெரியவந்தது.

    மன்னார்குடி:

    திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி அடுத்த விக்கிரபாண்டியம் கிராமத்தை சேர்ந்தவர் தினேஷ்.

    இவர் பொக்லின் எந்திரம் வைத்து வேலை செய்து வருகிறார்.

    இந்நிலையில், இவர் கடந்த 13-ந் நாட்களுக்கு முன்பு தட்டாங்கோவில் பகுதியில் பொக்லைன் எந்திரம் மூலம் கருவேல மரங்களை அகற்றும் பணியில் ஈடுபட்டார்.

    இரவு நேரம் ஆனதால் பொக்லைன் எந்திரத்தை அதே சாலையில் நிறுத்தி விட்டு வீடு திரும்பினார்.

    பின்னர், மறுநாள் காலை வந்து பார்த்தபோது பொக்லைன் எந்திரத்தை காணவில்லை.

    இதனை கண்ட அவர் அதிர்ச்சி அடைந்தார்.

    தொடர்ந்து, அருகில் தேடிபார்த்து விட்டு, அக்கம் பக்கத்தில் இருந்தவர்களிடம் பொக்லைன் எந்திரம் குறித்து விசாரித்தார்.

    தொடர்ந்து, இதுகுறித்து தினேஷ் கோட்டூர் போலீசில் புகார் அளித்தார்.

    அதன் பேரில் கோட்டூர் போலீசார் தனிப்படை அமைத்து பொக்லைன் எந்திரத்தை திருடி சென்றவர்களை தீவிரமாக தேடி வந்தனர்.

    பின்னர், போலீசார் நடத்திய விசாரணையில் திருடப்பட்ட பொக்லைன் எந்திரம் திருவிடைமருதூர் அக்ரஹாரம் தெருவை சேர்ந்த காளீஸ்வரனின் உதவியுடன் விற்பனை செய்ய திட்டமிட்டது தெரியவந்தது.

    சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற கோட்டூர் போலீசார் திருவிடைமருதூர் பகுதியில் மறைத்து வைத்திருந்த பொக்லைன் எந்திரத்தை கைப்பற்றி அதனை போலீஸ் நிலையத்திற்கு எடுத்து வந்தனர்.

    மேலும், திருட்டில் ஈடுபட்டதாக ஜெயசீலன், செய்யது சம்சுல்குதா, விக்னேஷ், காலிஸ்வரன் ஆகிய 4 பேரையும் கைது செய்தனர்.

    திருட்டு சம்பவம் நடந்த 10 நாட்களில் மர்மநபர்களை பிடிக்க விரைந்து செயல்பட்ட கோட்டூர் தனிப்படை போலீசாரை திருவாரூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் பாராட்டினார்.

    • காலாவதியான விதைகளை கடையில் வைத்திருந்தாலோ அல்லது விற்பனை செய்தாலோ அது சட்டப்படி குற்றம்.
    • விதைகள் போன்றவற்றை வாங்கும்போது தங்கள் பெயர், விற்பனையாளரின் கையொப்பம் உள்ளிட்ட விவரங்கள் அடங்கிய ரசீது பெற்றுச் செல்ல வேண்டும்.

    அரூர்:

    தருமபுரி மாவட்டம் அரூரில் விதிமுறைகளை மீறி விதை விற்பனையில் ஈடுபட்ட தனியார் விதை விற்பனை நிலைய உரிமம் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளது.

    இதுகுறித்து, தருமபுரி மாவட்ட விதை ஆய்வு துணை இயக்குநர் சங்கர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்தாவது:-

    விதை விற்பனையாளர்கள் விதிமுறைகளை தவறாமல் கடைப் பிடித்தும், விவசாயிகளுக்கு தரமும், உரிய முளைப்புத் திறனும் கொண்ட பருவத்துக்கு ஏற்ற விதைகளை விநியோகிக்க வேண்டும்.

    விதை இருப்புப் பதிவேட்டில் விற்பனை செய்த விதைகளை தினமும் கழித்து இருப்பினை சரிபார்த்து முறையாக பராமரிக்க வேண்டும். விதை உரிமம் கடையில் பார்வையில் படும்படி வைக்க வேண்டும்.

    விதை விற்பனையின் போது பயிர், ரகத்தின் பெயர், குவியல் எண், காலாவதி தேதி, விலை, விவசாயி பெயர், ஊர் உள்ளிட்ட விவரங்கள் அடங்கிய, கடைக்காரரின் கையொப்பத்துடன் கூடிய ரசீது விவசாயிகளுக்கு வழங்கப்பட வேண்டும்.

    விதைகளை உர சிப்பங்கள், பூச்சி மருந்துகளின் அருகே வைக்கக் கூடாது. இந்த விதிமுறைகளை மீறுவோரின் உரிமம் தற்காலிகமாக அல்லது நிரந்தரமாக ரத்து செய்யப்படும்.

    விதை விநியோகதாரர்கள் அனைத்து குவியல்களுக்கும் பணி விதை மாதிரி எடுத்து பகுப்பாய்வு அறிக்கை பெறப்பட்டு தரத்தை உறுதிசெய்த பிறகே விற்பனையாளருக்கு அனுப்ப வேண்டும். அதிகபட்ச விலைக்கு மிகாமல் விற்பனை செய்ய வேண்டும். காலாவதியான விதைகளை கடையில் வைத்திருந்தாலோ அல்லது விற்பனை செய்தாலோ அது சட்டப்படி குற்றம்.

    எனவே, விதைகள் சட்டம் 1966, விதை விதிகள் 1968, விதைகள் கட்டுப்பாட்டு ஆணை 1983 ஆகியவற்றின் கீழ் உள்ள விதிகளின்படி விதை விற்பனையாளர்கள் கவனத்துடனும், விவசாயிகளின் நலன் சார்ந்தும் விதை விற்பனையில் ஈடுபட வேண்டும்.

    விவசாயிகள் தாங்கள் வாங்கும் விதைகள் பருவத்துக்கு ஏற்றவையா என்பதை அறிந்தும், ஏதேனும் சந்தேகம் இருந்தால் தங்கள் பகுதி வேளாண்மை அல்லது தோட்டக்கலை அலுவலகத்தை அணுகி சந்தேகங்களை போக்கிக் கொள்ளவும் கேட்டுக் கொள்ளப்படுகிறது.

    விதைகள் போன்றவற்றை வாங்கும்போது தங்கள் பெயர், விற்பனையாளரின் கையொப்பம் உள்ளிட்ட விவரங்கள் அடங்கிய ரசீது பெற்றுச் செல்ல வேண்டும். தருமபுரி மாவட்டம் அரூர் வட்டாரத்தில் விதிகளை மீறி விதை விற்பனை செய்த தனியார் விதை விற்பனை நிலைய உரிமம் தற்போது தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளது.

    இவ்வாறு அவர் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

      பரமத்தி வேலூர்:

      சாலைப்புதூரில் வேளாண் ஒழுங்கு முறை விற்பனை கூடம் செயல்பட்டு வருகிறது. இங்கு வாரந்தோறும் தேங்காய், தேங்காய் பருப்பு, எள், நிலக்கடலை காய் ஆகியவற்றுக்கான ஏலம் நடைபெறுகிறது. இதில் அருகே உள்ள கரூர் ஒன்றியம், பரமத்திவேலூர் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் தாங்கள் விளைவித்த வேளாண் பொருட்களை விற்பனைக்கு கொண்டு செல்கின்றனர். இங்கு நடைபெறும் ஏலத்தில் தமிழகம் மற்றும் வெளிமாநிலங்களை சேர்ந்த வியாபாரிகள் மற்றும் எண்ணெய் நிறுவன முகவர்கள் கலந்து கொண்டு பொருட்களை வாங்கி செல்கின்றனர்.

      அதன்படி இந்த வாரம் நடந்த ஏலத்தில் நிலக்கடலை காய் 42.66 1/2குவிண்டால் எடை கொண்ட 140-மூட்டை நிலக்கடலை காய் விற்பனைக்கு வந்தது. இதில் கிலோ ஒன்றுக்கு அதிகபட்ச விலையாக ரூ.86.46-க்கும், குறைந்தபட்ச விலையாக ரூ.68.29-க்கும், சராசரி விலையாக ரூ.85.29-க்கும் என ரூ.3 லட்சத்து 32ஆயிரத்து 148-க்கு ஏலம் போனது.

      ×