search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பூச்செடி"

    • தங்களுடைய நிலங்களில் சாமந்திப்பூ பயிரிட அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர்.
    • சாமந்திப் பூவிற்கு நல்ல விலை கிடைக்குமென விவ சாயிகள் கருதுகின்றனர்.

    விழுப்புரம்:

    விழுப்புரம் மாவட்டம் அருகே ச.சிறுவாடி, ஓமிப்பேர், வடநற்குணம், நல்லம்பாக்கம், நகர் முன்னூர், ஆலங்குப்பம், அடைவள்ளிக்கூத்தான், வேப்பேரி, குருவூர், செட்டிகுளம், ராயநல்லூர், நாகப்பாக்கம், நாகல்பாக்கம், ஆலத்தூர் ஆகிய கிராமப்புறங்களில் உள்ள விவசாயிகள் தங்களுடைய நிலங்களில் சாமந்திப்பூ பயிரிட அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர்.

    புதுவை மற்றும் திண்டி வனம் மார்க்கெட்டுகளில் சாமந்திப் பூக்கள் அதிகளவில் விற்பனையாகிறது. மேலும், விவசாயிகளுக்கு கட்டு படியான விலை கிடைத்தும் வருகிறது. தொடர்ந்து பண்டிகை நாட்கள் உள்ளதால் சாமந்திப் பூவிற்கு நல்ல விலை கிடைக்குமென விவ சாயிகள் கருதுகின்றனர். இதனால் மரக்காணம் சுற்றுப்புற பகுதியில் உள்ள விவசாயிகள் தற்போது சாமந்தி பூச்செடி பயிரிடுவதில் ஆர்வம் காட்டி வருகின்றனர். தற்போது ஒரு கிலோ சாமந்திப்பூ ரூ.100-லிருந்து ரூ.120 வரை விற்பனையாகிறது.

    • பூச்செடி என்று நினைத்து கஞ்சா செடி வளர்த்த வாலிபர் கைது செய்யப்பட்டார்.
    • இளைஞர்களை குறி வைத்து சர்வ சாதார ணமாக கஞ்சா விற்பனை செய்து வருகின்றனர்.

    மதுரை

    மதுரை மேலமடை அருகே எழில் நகர் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் கஞ்சா செடி வளர்ப்பதாக போலீஸ் உதவி கமிஷனர் சூரக்குமா ருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார் அந்த பகுதியில் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது சிவகுமார் என்பவர் வீட்டில் பூச்செடி களுக்கு நடுவே கஞ்சா செடி வளர்ப்பது தெரியவந்தது.

    இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தியதில் சிவகுமாரின் மகன் கார்த்திக் சில வாரங்களுக்கு முன்பு தேனியில் உள்ள நண்பர் வீட்டுக்கு சென்றுள்ளார். அப்போது அவர் பூச்செடி விதைகள் எனக்கூறி சிலவற்றை கார்த்திக்கிடம் கொடுத்துள்ளார்.

    அதனை பூ விதை என தவறுதலாக நினைத்து தொட்டியில் வைத்து கஞ்சா செடியை கார்த்திக் வளர்த்தது தெரியவந்தது. இதையடுத்து கஞ்சா செடி வளர்த்த குற்றத்திற்காக கார்த்திக் கைது செய்யப்பட்டார்.

    மதுரை நகர் மற்றும் புறநகர் பகுதிகளில் சமூக விரோதிகள் பள்ளி- கல்லூரி மாணவர்கள் மற்றும் இளைஞர்களை குறி வைத்து சர்வ சாதார ணமாக கஞ்சா விற்பனை செய்து வருகின்றனர். இதனை தடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    ×