search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "relief"

    • தீ விபத்தில் பாதிக்கப்பட்ட வீடுகளை நேரில் பார்வையிட்டார்.
    • அரிசி, காய்கறிகள், வேட்டி, புடவை போன்றவற்றை வழங்கினார்.

    சீர்காழி:

    கொள்ளிடம் ஒன்றியம், மாதானம் ஊராட்சியில் செருகுடி தியாகராஜன், ஆராயி , பாஸ்கரன் ஆகியோர்களின் வீடு மின்கசிவு காரணமாக முழுவதும் தீபற்றி எரிந்து அனைத்து பொருட்களும் சேதம் அடைந்துவிட்டது.

    தகவல் அறிந்த கொள்ளிடம் கிழக்கு ஒன்றிய அறிமுக செயலாளர் நற்குணன் , தீப்பற்றி எரிந்த வீடுகளை நேரில் பார்வையிட்டு பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு ரூ5000 பணமும், ஒன்றிய குழு உறுப்பினர் தமிழரசி ரூ.2000 பணமும் நிவாரண பொருட்களாக அரிசி, காய்கறிகள், வேட்டி, புடவை, பாய் போன்றவைகள் வழங்கினார்கள்.

    உடன் மாவட்ட மீனவர் அணி செயலாளர் நாகரத்தினம் பொறுப்பாளர்கள் சொக்கலிங்கம்,பாஸ்கரன், பூவராகவன், ஒன்றிய இளைஞரணி தலைவர் உத்திர.ராஜேஷ், பங்கேற்றார்.

    • அருப்புக்கோட்டையில் பெய்த பலத்த மழையால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நிதிஉதவியை அமைச்சர் வழங்கினார்.
    • மின் மாற்றிகளும் விழுந்து சேமடைந்தது.

    விருதுநகர்

    அருப்புக்கோட்டை மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில் கடந்த 4-ந் தேதி அன்று சூறாவளி காற்றுடன் பெய்த கன மழையினால் வீடுகள் சேதமடைந்து, மரங்கள், மின்கம்பங்களும், ஒரு சில இடங்களில் மின் மாற்றிகளும் விழுந்து சேமடைந்தது. இதில் பொதுமக்கள் பலர் பாதிக்கப்பட்டனர்.

    இந்த நிலையில் முதல்-அமைச்சர் உத்தரவின்படி, பாதிக்கப்பட்ட பகுதிகளில் உடனடியாக அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன், கலெக்டர் ஜெயசீலன் மற்றும் அதிகாரிகள் ஆய்வு செய்து, மீட்பு நடவடிக்கை களை துரிதப்படுத்தினர்.

    மேலும் வருவாய்த் துறை, மின்சாரத்துறை, நகராட்சி நிர்வாகம், தீயணைப்பு துறை உள்ளிட்ட பல்வேறு துறைகள் ஒருங்கிணைந்து சூறாவளி காற்றினால் விழுந்து கிடந்த மரங்கள் அப்புறப்படுத்தப்பட்டு, சேதமடைந்த மின்கம்பங்கள் மாற்றி அமைக்கும் பணிகளும் முழுவீச்சில் நடைபெற்றது.

    அதனைத் தொடர்ந்து முதல்-அமைச்சர் உத்தரவின்படி, சூறாவளி காற்றுடன் பெய்த கன மழையினால் சேதமடைந்த வீடுகள் கணக்கிடப்பட்டு, பாதிக்கப்பட்ட வீடுகளின் சேதத்தின் அடிப்படையில் பகுதி சேதமடைந்த 82 குடும்பங்களுக்கு தலா ரூ.4,100 நிதிஉதவி மற்றும் முழு சேதமடைந்த 1 குடும்பத்திற்கு ரூ.5,200 நிதியுதவி என 83 குடும்பங்களுக்கு மொத்தம் ரூ.3 லட்சத்து 41 ஆயிரத்து 400 வழங்கப்பட்டது. இந்த உதவி தொகையை அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் வழங்கினார்.

    இதில் அருப்புக்கோட்டை கோட்டாட்சியர்(பொ) அனிதா, நகராட்சி ஆணை யாளர் அசோக்குமார், வட்டாட்சியர் அறிவழகன், உள்ளாட்சிப் பிரதிநிதிகள், மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

    • ஊர் ஊராக சென்று பிச்சை எடுத்து முதல்-அமைச்சரின் பொது நிவா ரணம் மற்றும் கொரோனா நிவாரணத்துக்கு நிதி வழங்கி வருகிறார்.
    • அதன்படி, தமிழகம் முழுவதும் கலெக்டர் அலுவலகங்களுக்கு சென்று இதுவரை ரூ.55 லட்சத்திற் கும் மேல் நிவாரண நிதியாக வழங்கி உள்ளார்.

    சேலம்:

    தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே உள்ள ஆலங்கிணறு பகு தியைச் சேர்ந்தவர் பூல்பாண்டியன் (வயது 75). இவர், ஊர் ஊராக சென்று பிச்சை எடுத்து முதல்-அமைச்சரின் பொது நிவா ரணம் மற்றும் கொரோனா நிவாரணத்துக்கு நிதி வழங்கி வருகிறார்.

    அதன்படி, தமிழகம் முழுவதும் கலெக்டர் அலுவலகங்களுக்கு சென்று இதுவரை ரூ.55 லட்சத்திற் கும் மேல் நிவாரண நிதியாக வழங்கி உள்ளார்.

    ஏற்கனவே சேலம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் ரூ.10 ஆயிரம் நிதி வழங்கிய அவர், இன்று மீண்டும் முதல்-அமைச்சர் பொது நிவாரண நிதியாக, சேலம் கலெக்டர் அலுவலகத்தில் ரூ.10 ஆயிரம் வழங்கினார்.

    அப்போது அவர் கூறுகையில், எனது மனைவி இறந்து விட்டார். எனக்கு ஒரு மகள் மற்றும் 2 மகன்கள் உள்ளனர். அவர்கள் கோவை உள்பட பல்வேறு பகுதிகளில் வேலை செய்து வரு கிறார்கள். நான் அவர்களி டம் செல்வதில்லை.

    தமிழகம் முழுவதும் பிச்சை எடுத்து பொது மக்களை காக்கும் நோக்கத்தில் முதல்-அமைச்சரின் பொது நிவா ரண நிதிக்கு பணம் வழங்கி வருகிறேன். எனது இறுதி காலம் வரை இதனை ஒரு பணியாக செய்வேன்.

    ஒரு வாரத்திற்கு ரூ.10 ஆயிரம் வரை யாசகம் கிடைக்கும். அதனை வைத்து இந்த நிதி உதவியை செய்து வருகிறேன் என்றார். 

    • நேற்றிரவு திடீரென இவரது வீடு தீப்பிடித்து எரிந்தது.
    • பாதிக்கப்பட்டவர்களுக்கு ரூ.5 ஆயிரம் நிவாரணம் மற்றும் தார்பாய் வழங்கப்பட்டது.

    திருத்துறைப்பூண்டி:

    திருத்துறைப்பூண்டி பெரியநாயகிபுரம் தெருவை சேர்ந்தவர் ஞானசேகரன்.

    இவர் குடும்பத்துடன் குடிசை வீட்டில் வசித்து வருகிறார்.

    இந்நிலையில், நேற்றிரவு திடீரென இவரது வீடு தீப்பிடித்து எரிந்தது.

    உடனடியாக அக்கம் பக்கத்தினர் போராடி தீயை அணைத்தனர்.

    ஆனால் அதற்குள் வீடு முற்றிலும் எரிந்து நாசமானது.

    இதுகுறித்து, தகவலறிந்த நகர்மன்ற தலைவர் கவிதாபாண்டியன் பாதிக்கப்பட்டவர்களுக்கு ரூ.5 ஆயிரம் நிவாரணம் மற்றும் தார்பாய் வழங்கி ஆறுதல் கூறினார்.

    மேலும், அரசால் வழங்கப்படும் உதவித்தொகை, வேஷ்டி, சேலை, அரிசி ஆகியவற்றையும் வழங்கினார்.

    இதேபோல், தாசில்தார் காரல்மார்க்ஸ், துணை தாசில்தார் ஜோதிபாசு, வி.ஏ.ஒ. முருகானந்தம், பாலம் சேவை நிறுவன செயலாளர் செந்தில்குமார், கவுன்சிலர் ரமேஷ்குமார் ஆகியோரும் பாதிக்கப்பட்டவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினர்.

    • மீனவர்களின் வாழ்வாதாரத்திற்காக அரசு நிவாரண உதவி வழங்குகிறது.
    • நிவாரணத்தொகை பயனாளிகளின் வங்கிக் கணக்குகளில் வரவு வைக்கும் பணி இன்று தொடங்கும்.

    சென்னை:

    தமிழகத்தில் கடல் மீன்வளத்தைப் பேணி காப்பதற்காக 61 நாட்களுக்கு மீன்பிடி தடைக்காலம் அமல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த நாட்களில் மீனவர்களின் வாழ்வாதாரத்திற்காக அரசு நிவாரண உதவி வழங்குகிறது. அவ்வகையில், இந்த ஆண்டு 14 கடலோர மாவட்டங்களைச் சேர்ந்த மீனவ குடும்பங்களுக்கு மீன்பிடி தடைக்கால நிவாரணமாக தலா 5000 ரூபாய் வழங்கப்படுகிறது.

    இந்த திட்டத்திற்காக ரூ.89.50 கோடி நிதி ஒதுக்கீடு செய்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. இதன்மூலம் 1.79 லட்சம் மீனவ குடும்பங்கள் பயன்பெறும். அரசு நிதி ஒதுக்கியதையடுத்து, மீன்பிடி தடைக்கால நிவாரணத்தொகை பயனாளிகளின் வங்கிக் கணக்குகளில் வரவு வைக்கும் பணி இன்று தொடங்கும். 

    • விஷ சாராயம் குடித்து பலியானவர்களுக்கு ரூ.10 லட்சம் நிவாரணம் வழங்கப்பட்டு உள்ளது.
    • வெடி விபத்தின்போது உயிரிழந்தவர்களுக்கு நிவாரணமாக ரூ.2 லட்சம் வழங்கி இருக்கிறார்கள்.

    மன்னார்குடி:

    முன்னாள் அமைச்சர் ஆர்.காமராஜ் எம்.எல்.ஏ., மன்னார்குடியில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    தமிழகம் முழுவதும் சாராய சாம்ராஜ்யம் கொடிகட்டி பறப்பது காவல்துறையினரின் தற்போதைய சாராயம் பறிமுதல் மற்றும் கைது நடவடிக்கையில் இருந்து தெரிய வருகிறது.

    காவல்துறையின் முறையான நடவடிக்கை இல்லாத காரணத்தினால் தான் விஷசாராயம் அருந்தி இவ்வளவு பேர் உயிரிழந்து உள்ளனர்.

    விஷ சாராயம் குடித்து பலியானவர்களுக்கு ரூ.10 லட்சம் நிவாரணம் வழங்கப்பட்டு உள்ளது.

    அதே நேரத்தில் சிவகாசி பட்டாசு தொழிற்சாலைகளில் நிகழ்ந்த வெடி விபத்தின்போது உயிரிழந்தவர்களுக்கு நிவாரணமாக ரூ.2 லட்சம் வழங்கி இருக்கிறார்கள்.

    இது ஒரு தவறான முன்னுதாரணம்.

    ஸ்ரீரங்கத்தில் பாடசாலையில் படித்த மன்னார்குடியை சேர்ந்த 2 மாணவர்கள் உள்ளிட்ட 3 இளம் மாணவர்கள் ஆற்றில் மூழ்கி உயிரிழந்தனர்.

    அவர்களுக்கு எந்த ஒரு நிவாரணமும் அரசின் சார்பில் அறிவிக்கப்படாதது வருத்தத்தையும், வேதனையும் அளிக்கிறது. அவர்களின் குடும்பத்தினருக்கு ரூ.15 லட்சம் நிவாரணம் வழங்க வேண்டும்.

    நான் பல்வேறு மக்கள் நலத்திட்டங்களை செயல்படுத்தியதால்தான் தொடர்ந்து 3 முறை நன்னிலம் பகுதியில் பெரும் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்று வருகிறேன்.

    எந்த தொகுதியிலும் நின்று ஜெயிக்கக்கூடிய தெம்பு உள்ளவன் நான்.

    பொதுச்செ யலாளர் எடப்பாடி பழனிசாமி சொன்னது போல் ஓ.பன்னீர்செல்வம், டி.டி.வி தினகரன் கூட்டு என்பது ஜீரோவுடன் ஜீரோ சேர்ந்தால் ஜீரோ என்பதுதான்.இவ்வாறு அவர் கூறினார்.

    அப்போது அ.தி.மு.க. அமைப்பு செயலாளர் சிவா.ராஜமாணிக்கம், மன்னார்குடி ஒன்றியக்குழு தலைவர் மனோகரன், ஒன்றிய செயலாளர் தமிழ்ச்செல்வம், நகர செயலாளர் ஆர்.ஜி.குமார் உள்ளிட்ட நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

    • ரூ.10 லட்சம் நிவாரணம் வழங்க பா.ம.க. கோரிக்கை விடுத்துள்ளது.
    • தமிழக அரசு தலா ரூ.3 லட்சம் நிவாரணம் அறிவித்துள்ளது.

    சிவகாசி

    விருதுநகர் மாவட்ட பாட்டாளி மக்கள் கட்சியின் மத்திய மாவட்ட செயலாளர் டேனியல், முதல்அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு அனுப்பி உள்ள மனுவில் கூறியிருப்பதாவது:-

    சிவகாசி அருகே ஊராம்பட்டியில் நடைபெற்ற பட்டாசு ஆலை வெடி விபத்தில் உயிரிழந்த 3 தொழிலாளர்களின் குடும்பத்துக்கு தமிழக அரசு தலா ரூ.3 லட்சம் நிவாரணம் அறிவித்துள்ளது.

    ஆனால் இது போதாது. ரூ.500-க்கும் குறைந்த சம்பளத்திற்கு வேலை செய்யும் பட்டாசு தொழிலாளர்கள் இறந்துள்ளதால் அவர்களின் குடும்பம் போதிய வருமானம் இன்றி தவிக்கும். எனவே பாதிக்கப்பட்ட குடும்பத்துக்கு தலா ரூ.10 லட்சம் வழங்க வேண்டும்.

    சாராயம் குடித்து இறந்தவர்களின் குடும்பத்துக்கு அரசு நிவாரணம் வழங்கியதைபோல் பட்டாசு ஆலை வெடி விபத்தில் இறக்கும் தொழிலாளர்களுக்கும் இனி வரும் காலங்களில் அரசு ரூ.10 லட்சம் நிவாரணம் வழங்க வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • மணிப்பூரில் இதுவரை நடந்த கலவரங்களில் 60 பேர் உயிரிழந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
    • லேசான காயமடைந்தவர்களுக்கு ரூ. 25 ஆயிரமும் நிவாரணம் வழங்கப்படும் என்று அம்மாநில முதல்வர் அறிவித்துள்ளார்.

    வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான மணிப்பூரில் பா.ஜ.க. ஆட்சி நடக்கிறது. அங்கு, 53 சதவீத மக்கள் தொகையைக் கொண்டுள்ள மெய்டீஸ் இனத்தவர் தங்களுக்கு பழங்குடியின அந்தஸ்து வழங்கவேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர். இதற்கு எதிராக பழங்குடி மாணவர்கள் அமைப்பினர் போர்க்கொடி தூக்கி வருகின்றனர்.

    கடந்த 3ம் தேதியன்று மணிப்பூர் அனைத்து பழங்குடி மாணவர் அமைப்பின் சார்பில், மலைப்பகுதிகளில் உள்ள 7 மாவட்டங்களில் ஒற்றுமை பேரணி நடத்தினர். அப்போது அவர்களுக்கும், மெய்டீஸ் இனத்தவருக்கும் இடையே ஏற்பட்ட மோதல் வன்முறையாக மாறியது.

    வீடுகள், வாகனங்கள், கடைகள், வழிபாட்டுத் தலங்கள் தீயிட்டுக் கொளுத்தப்பட்டன. ராணுவமும், துணை ராணுவமும் குவிக்கப்பட்டனர். மொபைல் இணையதள சேவை முடக்கப்பட்டது. மணிப்பூரில் இதுவரை நடந்த கலவரங்களில் 60 பேர் உயிரிழந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

    இந்நிலையில் வன்முறையில் உயிரிழந்த 60 பேரின் குடும்பத்திற்கு ரூ.5 லட்சம் நிவாரணம் அளிக்கப்படும் என்று அம்மாநில முதல்வர் பிரேன் சிங் அறிவித்துள்ளார்.

    மேலும் வன்முறையில் படுகாயம் அடைந்தவர்களுக்கு தலா ரூ.2 லட்சமும், லேசான காயமடைந்தவர்களுக்கு ரூ. 25 ஆயிரமும் நிவாரணம் வழங்கப்படும் என்று அம்மாநில முதல்வர் அறிவித்துள்ளார்.

    • மின்வாரிய பணி செய்து கொண்டிருக்கும் போது திடீரென மின்சாரம் தாக்கியதில் உயிரிழந்தார்.
    • குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலையும், ரூ.7.5 லட்சம் நிவாரண தொகையும் வழங்க வேண்டும்.

    சீர்காழி:

    மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே கீராநல்லூர் கிராமம் மேல தெருவை சேர்ந்தவர் அரவிந்தராஜ்(வயது22).

    இவர் மின்சார வாரியத்தில் கடந்த இரண்டரை வருடமாக ஒப்பந்த தொழிலாளியாக பணியாற்றி வந்தார்.

    இவர் சீர்காழி அருகே உள்ள பழையாறு சுனாமி நகரில் மின்வாரிய பணி செய்து கொண்டிருக்கும் பொழுது திடீரென மின்சாரம் தாக்கியதில் உயிரிழந்தார்.

    இறந்த அரவிந்த்ராஜின் உடல் சீர்காழி அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனை செய்து முடிக்கப்பட்ட நிலையில் அவரது உடலை வாங்க மறுத்து கிராம மக்கள் புதிய பேருந்து நிலையம் அருகே சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    அவரது உயிரிழப்பிற்க்கு மின்வாரிய ஊழியர்களின் அலட்சியமே காரணம் எனவும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், உரிய நிவாரணம் வழங்க வேண்டும் மற்றும் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு பணி வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மாலை 5 மணியிலிருந்து இரவு 9 மணி வரை சாலை மறியலில் ஈடுபட்டனர்.

    இந்நிலையில் தி.மு.க. அரசின் இரண்டு ஆண்டு சாதனை விளக்கப் பொதுக்கூட்டம் சீர்காழி பழைய பேருந்து நிலையத்தில் நடைபெற்றது.

    அதில் பங்கேற்ற அமைச்சர் மெய்யநாதன், சாலை மறியல் குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு நேரடியாக சென்று பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார்.

    தொடர்ந்து சீர்காழி தாலுக்கா அலுவலகத்தில் நடைபெற்ற அமைதி பேச்சு வார்த்தையில் பங்கேற்ற அவர் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலையும் ரூ.7.5 லட்சம் நிவாரண தொகையும் வழங்குவதாக உறுதியளித்தார்.

    அதனைத் தொடர்ந்து சாலை மறியலை கைவிட்டு அனைவரும் கலைந்து சென்றனர்.

    • கூரை வீடு மின் கசிவால் தீப்பற்றி முற்றிலும் எரிந்து நாசமாகிவிட்டது.
    • ரூ.5 ஆயிரம் நிவாரணம், காய்கறி மற்றும் அரிசி ஆகியவற்றை வழங்கினார்.

    பேராவூரணி:

    தஞ்சாவூர் மாவட்டம் சேதுபாவா சத்திரம் அருகே சொக்கநாதபுரம் ஒத்தக்கடையில் கூலித் தொழிலாளியான நடேசன் என்பவரின் கூரை வீடு மின் கசிவால் தீ பற்றி எரிந்து முற்றிலும் நாசமாகிவிட்டது.

    இதனை அறிந்த பேராவூரணி முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் மா.கோவிந்தராசு அறிவுறுத்தலின் படி, பேராவூரணி தெற்கு அ.தி.மு.க ஒன்றிய செயலாளர் கோவி.இளங்கோ நேரில் சென்று பாதிக்கப்ப ட்டவர்களுக்கு ஆறுதல் கூறி ரூபாய் 5000 நிவாரணத் தொகையும், காய்கறி மற்றும் அரிசி வழங்கினார்.

    இந்நிகழ்வில் கட்டையங்காடு ஒன்றிய கவுன்சிலர் கவிதா செல்வ குமார், சொக்கநாதபுரம் ஊராட்சி மன்ற தலைவர் ராம் பிரசாத், ஊராட்சி மன்ற துணைத் தலைவர் செல்வராசு, முன்னாள் மாநில கயிறு வாரிய தலைவர் எஸ்.நீலகண்டன் கூட்டுறவு சங்க தலைவர் வே.கூத்தலிங்கம், இளைஞரணி செயலாளர் கே.எஸ்.வினோத் மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு துணைச் செயலாளர் எஸ்.சத்யராஜா மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    • கூரை வீடு திடீரென தீ பற்றி எரிந்து முற்றிலும் சாம்பலாகி விட்டது.
    • அசோக்குமார் எம்.எல்.ஏ. காய்கறி, மளிகை சாமான், அரிசி ஆகிய பொருட்களுடன் ரூ.5 ஆயிரம் நிவாரணம் வழங்கினார்.

    பேராவூரணி:

    சேதுபாவாசத்திரம் அருகே சொக்கநாதபுரம் ஊராட்சி ஒத்தக்கடையில் கார்த்திகேயன் என்பவருக்கு சொந்தமான கூரை வீடு திடீரென தீ பற்றி எரிந்து முற்றிலும் சாம்பலாகி விட்டது.

    வீட்டில் இருந்த பொருட்கள் அனைத்தும் சேதமடைந்து விட்டது. தகவலறிந்த அசோக்குமார் எம்.எல்.ஏ. சம்பவ இடத்திற்கு சென்று பார்வை யிட்டு பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு காய்கறி, மளிகை சாமான், அரிசி ஆகிய பொருட்களுடன் ரூ. 5,000-ம் நிவாரணம் வழங்கினார்.

    சேதுபாவாசத்திரம் ஒன்றிய பெருந்தலைவர் முத்துமாணிக்கம், ஊராட்சி மன்ற தலைவர் ராம்பிரசாத், பொதுக்குழு உறுப்பினர்கள் அப்துல் மஜீது, தனபால், ஒன்றிய குழு உறுப்பினர் அமுதா ராஜேந்திரன், மற்றும் கிராம நிர்வாக அலுவலர் உடன் இருந்தனர்.

    • படைப்புழு தாக்குதல் வேகமாக பரவி நூற்றுக்கணக்கான ஏக்கரில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
    • 70 சதவீத விளைச்சல் பாதிக்கிறது.

    உடுமலை :

    உடுமலையில் பிரதான சாகுபடியான மக்காச்சோ ளத்தில் படைப்புழு தாக்கு தல் வேகமாக பரவி நூற்றுக்கணக்கான ஏக்கரில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

    அமெரிக்காவை தாயகமாகக்கொண்டு பரவிய பால் ஆர்மி வார்ம் எனப்படும் படைப்புழுவால் கடந்த சில ஆண்டுகளாக உடுமலை பகுதியில் மக்கா ச்சோள சாகுபடி கடும் சேதத்தை சந்தித்து வரு கிறது. விவசாயிகளுக்கு 2018ல் அரசு நிவாரணம் வழங்கி யது. 2019ல் நோய்தடு ப்புக்கான மருந்து களும், வேளாண்துறை வாயிலாக மானியத்தில் வழங்கப்ப ட்டது.கடந்த 2 ஆண்டுகளாக மக்காச்சோள விவசா யிகளின் பிரச்னை யை தமிழக அரசு கண்டுகொ ள்ளவில்லை. உடுமலை வட்டாரத்தில் பல ஆயிரம் ஏக்கர் மக்காச்சோள சாகுபடி படைப்புழு தாக்குதலால் பாதிக்க ப்பட்டுள்ளது.பயிரின் வளர்ச்சி தருணத்தில் மட்டு மல்லாது, மக்காச்சோள கதிர்களையும் இப்புழுக்கள் உண்பதால், 70 சதவீத விளைச்சல் பாதிக்கிறது. எனவே மக்காச்சோளம் சாகுபடி செய்து பாதித்தவ ர்களுக்கு அரசு நிவாரணம் வழங்க வேண்டும் என திருப்பூர் மாவட்ட விவசாயிகள் வலியுறுத்தி யுள்ளனர். 

    ×