தீ விபத்தில் வீடு இழந்தவருக்கு நிவாரணம் வழங்கல்

கூரை வீடு திடீரென தீ பற்றி எரிந்து முற்றிலும் சாம்பலாகி விட்டது. அசோக்குமார் எம்.எல்.ஏ. காய்கறி, மளிகை சாமான், அரிசி ஆகிய பொருட்களுடன் ரூ.5 ஆயிரம் நிவாரணம் வழங்கினார்.
வீடு இழந்து பாதிக்கப்பட்டவருக்கு அசோக்குமார் எம்.எல்.ஏ. நிவாரணம் வழங்கினார்.
வீடு இழந்து பாதிக்கப்பட்டவருக்கு அசோக்குமார் எம்.எல்.ஏ. நிவாரணம் வழங்கினார்.
Published on

பேராவூரணி:

சேதுபாவாசத்திரம் அருகே சொக்கநாதபுரம் ஊராட்சி ஒத்தக்கடையில் கார்த்திகேயன் என்பவருக்கு சொந்தமான கூரை வீடு திடீரென தீ பற்றி எரிந்து முற்றிலும் சாம்பலாகி விட்டது.

வீட்டில் இருந்த பொருட்கள் அனைத்தும் சேதமடைந்து விட்டது. தகவலறிந்த அசோக்குமார் எம்.எல்.ஏ. சம்பவ இடத்திற்கு சென்று பார்வை யிட்டு பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு காய்கறி, மளிகை சாமான், அரிசி ஆகிய பொருட்களுடன் ரூ. 5,000-ம் நிவாரணம் வழங்கினார்.

சேதுபாவாசத்திரம் ஒன்றிய பெருந்தலைவர் முத்துமாணிக்கம், ஊராட்சி மன்ற தலைவர் ராம்பிரசாத், பொதுக்குழு உறுப்பினர்கள் அப்துல் மஜீது, தனபால், ஒன்றிய குழு உறுப்பினர் அமுதா ராஜேந்திரன், மற்றும் கிராம நிர்வாக அலுவலர் உடன் இருந்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com