என் மலர்
நீங்கள் தேடியது "General"
- தூய்மை பணியாளர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்க ேகாரி ஆலோசனை கூட்டத்தில் கோரிக்கை விடுக்கப்பட்டது.
- ஊரக வளர்ச்சித்துறை அனைத்துப்பணியாளர் சங்கத்தின் திருப்புல்லாணி ஒன்றியத்தில் நடந்தது.
ராமநாதபுரம்
ஊரக வளர்ச்சித்துறை அனைத்துப் பணியாளர் சங்கத்தின் ராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணி ஒன்றியம் சார்பில் ஒன்றியத்தலைவர் கஜேந்திரன் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடந்தது. ஓ.எச்.டி. ஆபரேட்டர்களுக்கு காலமுறை ஊதியம், தூய்மை காவலர்களுக்கு 100 நாள் பணியாளருக்கு வழங்கப்படும் தினக்கூலி தொகை ரூ.281 வழங்கப்பட வேண்டும்.
தூய்மை பணியாளருக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். கொரோனா ஊக்கத்தொகை வழங்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
செயலாளர் தர்மராசு, பொருளாளர் பானுமதி, மாவட்ட செயலாளர் குணசேகரன், பொருளாளர் ஜெயபால், ஊராட்சி செயலாளர் சங்க மாவட்ட துணைத் தலைவர் சேகு ஜலாலுதீன், பொருளாளர் மங்களசாமி மற்றும் தூய்மை பணியாளர்கள், ஓ.எச்.டி. ஆபரேட்டர்கள், தூய்மை காவலர்கள் கலந்து கொண்டனர்.
- ஈரோடு மாவட்டத்தில் பிளஸ்-1 பொதுத்தேர்வை 11 ஆயிரத்து 662 மாணவர்கள், 12 ஆயிரத்து 500 மாணவிகள் என மொத்தம் 24 ஆயிரத்து 162 மாணவ-மாணவிகள் எழுதினர்.
- இதில் மாணவர்களில் 10 ஆயிரத்து 316 பேரும், மாணவிகளில் 11 ஆயிரத்து 944 பேரும் என மொத்தம் 22,260 மாணவ -மாணவிகள் தேர்ச்சி பெற்றனர். மாணவர்களின் தேர்ச்சி விகிதம் 88.46, மாணவிகளின் தேர்ச்சி விகிதம் 95.55 என மொத்தம் 92.13 தேர்ச்சி பெற்றுள்ளனர்.
ஈரோடு:
தமிழகத்தில் பிளஸ்-1 தேர்வுகள் கடந்த மே மாதம் 10-ந் தேதி தொடங்கி 31-ந் தேதி நிறைவடைந்தது. இதையடுத்து விடைத்தாள் திருத்தும் பணிகள் தீவிரமாக நடந்து வந்தன. விடைத்தாள் திருத்தும் பணிகள் முடிவடைந்து மதிப்பெண்களை கணினியில் ஏற்றும் பணியும் முடிவடைந்தது.
இதைத்தொடர்ந்து இன்று தமிழகம் முழுவதும் காலை 10 மணிக்கு பிளஸ்-1 தேர்வு முடிவுகள் வெளியாகின. ஈரோடு மாவட்டத்தில் பிளஸ்-1 பொதுத்தேர்வை 11 ஆயிரத்து 662 மாணவர்கள், 12 ஆயிரத்து 500 மாணவிகள் என மொத்தம் 24 ஆயிரத்து 162 மாணவ-மாணவிகள் எழுதினர்.
இதில் மாணவர்களில் 10 ஆயிரத்து 316 பேரும், மாணவிகளில் 11 ஆயிரத்து 944 பேரும் என மொத்தம் 22,260 மாணவ -மாணவிகள் தேர்ச்சி பெற்றனர். மாணவர்களின் தேர்ச்சி விகிதம் 88.46, மாணவிகளின் தேர்ச்சி விகிதம் 95.55 என மொத்தம் 92.13 தேர்ச்சி பெற்றுள்ளனர்.
இதில் 108 அரசு பள்ளிகளை சேர்ந்த 5,913 மாணவர்கள், 6,995 மாணவிகள் என மொத்தம் 12,908 பேர் பிளஸ்-1 பொதுத்தேர்வை எழுதினர். இதில் 4756 மாணவர்கள், 6475 மாணவிகள் என மொத்தம் 11,231 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவர்களின் தேர்ச்சி விகிதம் 80.43, மாணவிகளின் தேர்ச்சி விகிதம் 92.57 என மொத்த தேர்ச்சி விகிதம் 87.01 சதவீதமாகும்.
பிளஸ்-1 பொதுத்தேர்வை 78 மாற்றுத்திறனாளி மாணவ, மாணவிகள் எழுதினர். இதில் 67 மாற்றுத்திறனாளி மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெற்றனர். வழக்கம் போல் மாணவர்களை விட மாணவிகளே அதிக அளவில் தேர்ச்சி பெற்றிருந்தனர்.
மாணவ, மாணவிகளுக்கு தேர்வு முடிவுகளை எளிதில் அறியும் வகையில் பள்ளிக் கல்வித்துறை சார்பில் பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தன. மாணவ, மாணவிகள் தாங்கள் படித்த பள்ளிகளில் சென்று தேர்வு முடிவுகளை தெரிந்து கொண்டனர். மாணவர்களின் செல்போ னுக்கும் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டு இருந்தது.
இன்னும் 4 நாட்களில் தற்காலிக மதிப்பெண் சான்றுகளை அந்தந்த பள்ளியில் மாணவர்கள் பெற்று கொள்ளலாம் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
- குப்பைகளை அகற்றாமல் தீ வைத்து எரிப்பதால் நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
- இது போல் தீ வைத்து எரிக்கும் நடவடிக்கையை தடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கீழக்கரை
ராமநாதபுரத்தில் இருந்து கீழக்கரை நுழைவு வாயில் அருகில் உள்ள தில்லையேந்தல் ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியான கால்நடை மருத்துவமனை அருகில் ஆயிரக்கணக்கான மக்கள் வசித்து வருகின்றனர்.
அந்த பகுதியில் சேரக்கூடிய குப்பைகளை கீழக்கரை நுழைவாயில் அருகில் ஈ.சி.ஆர். சாலையில் சேகரித்து வைத்து அதனை அகற்றாமல் இருந்து வருவதால் அந்தப்பகுதியில் துர்நாற்றம் வீசி வருகிறது. இதனால் அவ்வழியே செல்லக்கூடியவர்கள் முகம் சுழிக்கும் நிலை நீடிக்கிறது.
மேலும் ஊராட்சி ஊழி யர்கள் குப்பைகளை அகற்றாமல் தீ வைத்து எரிக்கின்றனர். அப்போது அருகில் உள்ள மரக்கடைக ளுக்கு தீவிபத்து ஏற்படுமோ? என்ற அச்சம் ஏற்படுகிறது.
மேலும் குப்பை நெருப்பில் இருந்து உருவா கும் புகை மண்டலம் வாகன ஓட்டிகளுக்கு மூச்சுத்தி ணறலை ஏற்படுத்துகிறது.
மேலும் அந்தப்பகுதியில் வசிக்கும் குழந்தைகள் மற்றும் முதியோர்களுக்கு உடல்நலம் பாதிப்பு ஏற்படும் நிலை தொடர்ந்து வருவதால் இப்பகுதி பொதுமக்கள் நலனை கருத்தில் கொண்டு மாவட்ட நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுத்து உடனுக்குடன் குப்பைகளை அகற்ற வேண்டும். இது போல் தீ வைத்து எரிக்கும் நடவடிக்கையை தடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.






