search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Risk of disease transmission"

    • கால்வாய் வசதி செய்து தர வலியுறுத்தல்
    • ஆரணியில் திடீரென இடியுடன் கூடிய மழை பெய்தது

    ஆரணி:

    திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி டவுன்சு ற்றுவட்டார பகுதியில் நேற்று காலை முதலே மேகமூட்டத்துடன் காணப்பட்டன.

    திடீரென மதியம் வேலையில் ஆரணி டவுன் பகுதியில் இடியுடன் கூடிய கனமழை பெய்ந்தது.

    இதனால் பங்களா தெருவில் சாலையில் மழைநீருடன் கால்வாய் நீரும் கலந்து சாலையில் ஓடியதால் அப்பகுதி மக்கள் சிரமத்திற்கு உள்ளாகினர்.

    குடியிருப்பு பகுதியில் உள்ள சாலையில் கழிவு நீர் கலந்து வருவதால் நோய் தொற்று பரவும் அபாயமும் உள்ளது.

    இது சம்பந்தமாக ஆரணி நகராட்சி நிர்வாகத்திடம் சாலை சீரமைத்தும் கால்வாய் அமைத்து தர கோரி புகார் மனு அளித்தும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறப்படுகிறது.

    நகராட்சி நிர்வாகம் உடனடியாக சாலை சீரமைப்பு மற்றும் கால்வாய் வசதி செய்து தர வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • பல்வேறு நோய்களுக்காக வந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.
    • தினமும் ஓமலூர் அரசு மருத்துவமனைக்கு ராளமானோர் சிகிச்சைக்காக வருகின்றனர்.

    சேலம் மாவட்டம் ஓமலூரில் அரசு மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. இந்த மருத்துவமனைக்கு ஓமலூர், தாரமங்கலம், காடையாம்பட்டி, கருப்பூர் உள்ளிட்ட வட்டார பகுதிகளை சேர்ந்த 200-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் பல்வேறு நோய்களுக்காக வந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    தற்போது கடந்த 2 மாதங்களாக பெய்த தொடர் மழையின் காரணமாக ஆங்காங்கே மழை நீர் தேங்கி நிற்பதால் கொசுக்கள் உள்ளிட்டவைகள் உற்பத்தியின் காரணமாக பொதுமக்களுக்கு பல்வேறு மர்ம காய்ச்சல் மற்றும் சளி அதிகரித்துள்ளது. இதன் காரணமாக தினமும் ஓமலூர் அரசு மருத்துவமனைக்கு ஏராளமானோர் சிகிச்சைக்காக வருகின்றனர்.பாதிப்பு அதிகமாக உள்ள நோயாளிகள் உள்நோயாளிகளாக சேர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். ஓமலூர் அரசு மருத்துவமனை வளாகத்தில் ஆங்காங்கே புல், பூண்டுகள் அதிகரித்து புதர் மண்டி கிடக்கின்றன. இதனால் கொசுக்கள் உற்பத்தியாகி நோயாளிகளை கடித்து வருகிறது. இதன் காரணமாக சிகிச்சைக்கு வரும் நோயாளிகளுக்கு மேலும் தொற்று ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே உடனடியாக அரசு மருத்துவமனை நிர்வாகம் புதர் மண்டி கிடக்கும் இடங்களை சுத்தம் செய்து சுகாதார நிலையத்தை சுகாதாரமாக வைத்துக் கொள்ள வேண்டும் என அந்த பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    தொடர்ந்து இது குறித்து சமூக ஆர்வலர்கள் கூறும்போது, நோய்களை குணமாக்க அரசு மருத்துவ மனைக்கு வரும் நோயாளிகள் மேலும் பல நோய்களை உண்டாக்கி வருகிறது. இதற்கு ஒரே காரணம் சுகாதாரமாக இருக்கக்கூடிய அரசு மருத்துவமனை சுகாதார மற்ற நிலையில் இருப்ப தால்தான். உடனடியாக அரசு மருத்துவமனை நிர்வாகம் இதை கவனத்தில் கொண்டு மருத்துவமனை வளாகத்தை சுத்தம் செய்து சுகாதாரமாக வைத்துக் கொள்ள வேண்டும் என்றனர்.

    • சாலை மறியலில் ஈடுபட முயற்சி
    • சார்ப்பனாமேட்டில் பொதுமக்கள் திடீர் போராட்டம்

    வேலூர்:

    வேலூர் சார்ப்பனாமேடு தேவராஜ் நகர் பகுதியில் திடக்கழிவு மேலாண்மை மையம் செயல்பட்டு வந்தது. அந்த மையத்தில் ஏற்பட்ட தீ விபத்தை அடுத்து மையத்தில் குப்பை பிரிக்கப்படும் பணி நிறுத்தப்பட்டது.

    இந்த நிலையில் கடந்த சில மாதங்களாக அந்தப் பகுதியில் குப்பை கொட்டப்பட்டு வருகிறது. இதனால் அப்பகுதி பொதுமக்கள் அவதி அடைந்தனர். குப்பை கொட்டுவதை தடுக்க வேண்டுமென்று வலியுறுத்தி இன்று அந்தப் பகுதியில் சாலை மறியலில் ஈடுபட முயன்றனர். தகவல் அறிந்ததும் தெற்கு போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பொது மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

    தொடர்ந்து குப்பை கொட்டுவதால் இப்பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசுகிறது. ரேசன் கடை அங்கன்வாடி மையம் போன்றவை செயல் படுவதால் பொதுமக்கள் மிகவும் அவதிக்குள்ளாகி உள்ளனர்.

    நோய் பரவும் அபாயமும் உள்ளது. இங்கு குப்பை கொட்டுவதை தடுக்க வேண்டும் என பொதுமக்கள் தெரிவித்தனர்.

    பேச்சுவார்த்தைக்கு பின்னர் குப்பை கொட்டுவது தடுக்கப்படும் என போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.அதைத் தொடர்ந்து பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

    • குப்பைகளை அகற்றாமல் தீ வைத்து எரிப்பதால் நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
    • இது போல் தீ வைத்து எரிக்கும் நடவடிக்கையை தடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    கீழக்கரை

    ராமநாதபுரத்தில் இருந்து கீழக்கரை நுழைவு வாயில் அருகில் உள்ள தில்லையேந்தல் ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியான கால்நடை மருத்துவமனை அருகில் ஆயிரக்கணக்கான மக்கள் வசித்து வருகின்றனர்.

    அந்த பகுதியில் சேரக்கூடிய குப்பைகளை கீழக்கரை நுழைவாயில் அருகில் ஈ.சி.ஆர். சாலையில் சேகரித்து வைத்து அதனை அகற்றாமல் இருந்து வருவதால் அந்தப்பகுதியில் துர்நாற்றம் வீசி வருகிறது. இதனால் அவ்வழியே செல்லக்கூடியவர்கள் முகம் சுழிக்கும் நிலை நீடிக்கிறது.

    மேலும் ஊராட்சி ஊழி யர்கள் குப்பைகளை அகற்றாமல் தீ வைத்து எரிக்கின்றனர். அப்போது அருகில் உள்ள மரக்கடைக ளுக்கு தீவிபத்து ஏற்படுமோ? என்ற அச்சம் ஏற்படுகிறது.

    மேலும் குப்பை நெருப்பில் இருந்து உருவா கும் புகை மண்டலம் வாகன ஓட்டிகளுக்கு மூச்சுத்தி ணறலை ஏற்படுத்துகிறது.

    மேலும் அந்தப்பகுதியில் வசிக்கும் குழந்தைகள் மற்றும் முதியோர்களுக்கு உடல்நலம் பாதிப்பு ஏற்படும் நிலை தொடர்ந்து வருவதால் இப்பகுதி பொதுமக்கள் நலனை கருத்தில் கொண்டு மாவட்ட நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுத்து உடனுக்குடன் குப்பைகளை அகற்ற வேண்டும். இது போல் தீ வைத்து எரிக்கும் நடவடிக்கையை தடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    ×